நானே வருவேன் – மிக சுவாரஸ்யமான ஒரு கலப்பு ….!!!




1966-ல், புகழ்பெற்ற வில்லன் நடிகர், தயாரிப்பாளர்
பி.எஸ்.வீரப்பா “யார் நீ” என்கிற பெயரில் ஒரு சஸ்பென்ஸ்
படம் தமிழில் எடுத்திருந்தார்….வேதா இசையமைப்பு…
ஜெயசங்கர், ஜெயலலிதா ஆகியோர் நடித்த அந்தப்படம்
ஹிட் ஆயிற்று.

இது 1964-ல் ஹிந்தியில் எடுக்கப்பட்ட “வோ கௌன் தீ…”
(அவள் யார்…!!! ) படத்தை அடிப்படையாகக் கொண்டது.
மனோஜ் குமார், சாதனா நடித்தது. இசை மதன்மோஹன்.

இதில் ஒளிவு மறைவு எதுவுமில்லை. ஹிந்தி படத்தை
தழுவி தான் எடுக்கிறோம் என்று முதலிலேயே சொல்லி
விட்டார்கள்.

தற்போது ஒரு காணொளி ஒன்று நண்பர் ஒருவர் மூலம்
கிடைத்தது…ஹிந்தியில் லதா மங்கேஷ்கர் பாடி ஹிட்டான
அதே பாடல் தமிழில் சுசீலா பாட “நானே வருவேன்”
என்று அதே ட்யூனில் வெளியானது. வேடிக்கை
என்னவென்றால், தமிழிலும் இந்தப்பாடல் ஹிட்’டானது.

நண்பர் அனுப்பிய காணொளியில், ஒரே ஃப்ரேமில்,
ஹிந்தி பாடலை ஒரு பாதியிலும், தமிழ்ப்பாடலை
இன்னொரு பாதியிலும் பதிவு செய்திருக்கிறார்கள்.
இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க…!!!

பாடல், ராகம் – அதே தான் ஓகே.

ஆனால், கேமிரா கோணங்களிலும்,
நடிகர்களின் தோற்றத்திலும் கூட அப்படியே
அமைந்திருப்பது தமாஷாக இருக்கிறது.

கேமராமேனும் சரி, டைரக்டரும் சரி – கொஞ்சம் கூட
சுய கற்பனையை பயன்படுத்தவில்லை.
ஃப்ரேமுக்கு ஃப்ரேம் அதையே அப்படியே
எடுத்திருக்கிறார்கள்….

பாருங்களேன்… தமாஷான ஒரு அனுபவம்…

…….

…….

.
—————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.