ஜெ.கே……. “ திமிர்ந்த ஞானச் செருக்கு ”


காலையில் பதிந்த இடுகையோடு – அதே சூட்டில்,
திரு.ஜெயகாந்தன் பற்றி நான் படித்ததை வைத்து,
இன்னொரு இடுகையையும் போடத் தோன்றுகிறது.

—————————————-

“ திமிர்ந்த ஞானச் செருக்கு ”

பாரதியார் பயன்படுத்திய
வித்தியாசமான வார்த்தை இது .

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவது இல்லையாம்”

பெண்களை போற்றி இப்படி பாடியிருப்பார் பாரதியார்.

சரி ,
அதென்ன திமிர்ந்த ஞானச்செருக்கு?

அகராதியில் தேடிப் பார்த்தேன்.

செருக்கு என்னும் சொல் இழிசொல்லாகப் பயன்பட்டாலும்,
ஞானச் செருக்கு என்னும் சொல் உயர்வுச்சொல்லாகவே

பயன்படுத்தப்படுகிறதாம்.

எந்தவொரு சூழ்நிலையிலும்
தான் கொண்ட லட்சியத்திலிருந்தும் ,
தன்னுடைய உயர்ந்த சிந்தனைகளில் இருந்தும் ,
சற்றும் கீழே இறங்காத குணம்தான் –
திமிர்ந்த ஞானச்செருக்காம்.

இந்த “திமிர்ந்த ஞானச்செருக்கு” ,
இந்தப் பாடலை எழுதிய பாரதியாருக்கு
நிறையவே இருந்தது .

பாரதிக்குப் பின் ?
எனக்குத் தெரிந்து
அது ஜெயகாந்தனிடம் மட்டுமே இருந்தது .

பிஸியாக எழுதிக் கொண்டிருந்த ஜெயகாந்தன்,
திடீர் என எழுதுவதை நிறுத்திக் கொண்டார் .

“ஏன் எழுதவில்லை ?” என எவராவது
அவரிடம் போய்க் கேட்டால், “இதுவரை
நான் எழுதியதை எல்லாம் முதலில் படியுங்க”
என்பாராம்.

இன்னும் விடாமல் எழுதச் சொல்லி
வற்புறுத்தினால் ,
“உங்க அம்மாதான் உன்னைப் பெத்துப்போட்டா.
அதுக்காக இன்னும் பெத்துக் குடுன்னு
கேட்டுட்டே இருப்பியா?” என்பாராம் கோபமாக !

வந்தவர் வாயடைத்துப் போவாராம்.

ஜெயகாந்தனின் “திமிர்ந்த ஞானச்செருக்கு”க்கு
இன்னொரு உதாரணம்.

ஒரு கால கட்டத்தில் எம்.ஜி.ஆருக்கும்,
ஜெயகாந்தனுக்கும் இடையே தீவிரமான
பனிப்போர் நடந்து கொண்டிருந்தது.

காரணம் ஜெயகாந்தன் எழுதிய ‘சினிமாவுக்குப்
போன சித்தாளு’. கதை வெளிவந்த காலத்தில்,
அது எம்.ஜி.ஆரை மறைமுகமாகத் தாக்கி
எழுதப்பட்டதாகவே பரபரப்பாக பேசப்பட்டது.

ஒருநாள் எம்.ஜி.ஆர். வீட்டிலிருந்து
அழைப்பு வந்தது ஜெயகாந்தனுக்கு !

“என்ன ?” என்றார் ஜெயகாந்தன்.

“தலைவர் உன்னைப் பார்க்கணும்னு சொல்றார்.”

ஜெயகாந்தன் சொன்ன பதில் :

“சரி , வரச் சொல்..! ”

பதில் இல்லை எம்.ஜி.ஆர். தரப்பிலிருந்து !

“திமிர்ந்த ஞானச்செருக்கு” !

( நன்றி – John Durai Asir Chelliah )

.
———————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to ஜெ.கே……. “ திமிர்ந்த ஞானச் செருக்கு ”

 1. natchander சொல்கிறார்:

  TRUE
  JAYAKANTHAN HAD THAT GUTS,,, !!!
  HE HAD EVEN BRUSHED ASIDE KALAIGNAR KARUNANIDHIS INVITATION TO SEE HIM,,,, IN HIS HOUSE !!
  HE NEVER WENT TO MAGAZINES OFFICES TO PRESENT HIS NOVELS OR STORIES,, !!
  HE HAD HIS THOROUGH CONFIDENCE IN HIM !!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.