…
…
…
…
நீண்ட நாட்களாகவே விகடனை “திமுகவின்
ஊதுகுழல்” என்று தான் சொல்வார்கள்…
எல்லாரும் நினைப்பது போல் தான் அதுவும்
நடந்து கொண்டது….கொண்டிருக்கிறது.
நேற்று, ஒரு காணோளி பார்த்தேன்.
சென்ற ஆகஸ்டிலேயே வெளியிட்டிருக்கிறார்கள்.
ஆனால் யார் கண்ணிலும் பட்டதாகத் தெரியவில்லை;
வெளியிடப்பட்டு, பின் எதன் காரணமாகவோ
அமுக்கப்பட்டு விட்டது போல் தோன்றுகிறது.
நேற்று நாம் தமிழர் கட்சியின் ஒரு பிரிவின் தயவால்
வெளியிடப்பட்டு பார்க்கக் கிடைத்தது.
தலைப்பு : “திமுகவின் டாப்-5 ஊழல்கள்” …!!!
திமுகவின் எதிரிகள் கூட மறந்து விட்ட
“அந்த” பெரிய பெரிய ஊழல்களையெல்லாம்
பட்டியல் போட்டு, பழைய புகைப்படங்களுடன்
சீரியசாக ஒரு காணொளி …!
…
….
ஒருவேளை த.மா.வின் விளையாட்டோ என்று
யோசித்தால், அதில் அவர்கள் தந்தையின்
விஷயமும் வருகிறது.
திமுகவின் 40-45 ஆண்டுக்கால, அரதப்பழசான அந்த ஊழல்
விவகாரங்களையெல்லாம், விகடன் இவ்வளவு காலம் கழித்து,
வெளிக் கிளப்புவதன் நோக்கம், பின்னணி, எதிர்பார்ப்பு என்ன…?
இதன் பின்னால் யார் இருக்கிறார்கள்…?
-what was the provocation…. ?
விகடன் ஏன் இப்படி ஒரு வீடியோவை
வெளியிட்டது; அதுவும் கடந்த ஆகஸ்டில்… ?
இது குறித்து மேல் விவரங்கள்
தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்.
அந்த காணொளி கீழே –
……
……
.
—————————————————————————————————————————————-
So happy you are
After watching the video, I am getting the feeling that it doesn’t seem to be accusing DMK.
Rajs,
ரொம்ப அவசரப்படுகிறீர்களே…!!!
நான் விகடன் திமுகவை குற்றம் சாட்டுகிறது
என்று இடுகையில் எங்காவது சொல்லி
இருக்கிறேனா…? மீண்டும் ஒரு முறை
இடுகையை படித்துப் பாருங்கள்.
நான் என்ன சொல்லி இருக்கிறேன்…?
// திமுகவின் 40-45 ஆண்டுக்கால,
அரதப்பழசான அந்த ஊழல்
விவகாரங்களையெல்லாம், விகடன்
இவ்வளவு காலம் கழித்து,
வெளிக் கிளப்புவதன் நோக்கம்,
பின்னணி, எதிர்பார்ப்பு என்ன…?
இதன் பின்னால் யார் இருக்கிறார்கள்…?
-what was the provocation…. ?
விகடன் ஏன் இப்படி ஒரு வீடியோவை
வெளியிட்டது; அதுவும் கடந்த
ஆகஸ்டில்… ?//
-இவ்வளவு தானே…?
நீங்கள் ஏன் திமுகவுக்காக இவ்வளவு
பதட்டப்படுகிறீர்கள்….
ஒருவேளை நீங்கள் திமுக அனுதாபியாக
இருந்தால், நீங்களே சொல்லுங்களேன்…
திமுகவுடன் நல்ல உறவுடன் இருந்த
விகடன் ஏன் இப்படி ஒரு வீடியோவை
வெளியிட்டது ?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Rajs,
Your response just Shows
that you are NOT happy…!!! 🙂 🙂
About me, it only shows that I am interested
in finding out the background…
.
with all best wishes,
Kavirimainthan
I explained the background Vikatan is not accusing DMK
My Dear Friend Rajs,
You are not addressing my question….
“Why Vikatan has raked up this old issue now….?”
Thro’ my article
I needed an explanation for this only…
If you have any answer/ explanation
for this – then please give.
.
-with all best wishes,
Kavirimainthan
Vikatan is trying to portrait DMK as a victim
.
🙂 🙂 🙂
.
Aiadmk never took up any case agaibst DMK,, seriously,,
Even during jaya regime jaya ignored d mks misrule
Never put much cases
But d m k
A venemous party, was keen to target jaya,,,finally succeeded, even!!
And the huge pressure ,,, that jeya had undergone had resulted in her early death ,
True !!!
Funny explanation for J’s passing away. DMK and ADMK are just the same except for their leaders even that is blurring these days.
DMK and ADMK are the same except for their leaders even that is blurring these days.
விகடன் எதற்காக போன வருடம் இதை வெளியிட்டது
என தெரியவில்லை .
K M சார் சொல்வது போல் இதில் சொல்லப்பட்ட
பல ஊழல்கள் பற்றி யாருக்கும் ஞாபகம் இருக்காது
2G வேண்டுமானால் தெரியும் .
வீடியோ தி மு க விற்கு ஆதரவாக உள்ளது .
தி மு க மேல் சொல்லப்பட்ட ஊழல்களை ( 50 வருடமாக )
பட்டியலிட்டு பின் எதுவும் நிரூபிக்க படவில்லை
என முடிக்கிறது . – வஞ்சப்புகழ்ச்சி ?
விகடன் எப்போது திமுகவின் ஜால்ரா ஆனதோ அப்போதே அதன் வீழ்ச்சி
தொடங்கி விட்டது. கோபுலு, பரணீதரன் ,சாவி ,வாசன் , பாலசுப்ரமணியன் காலத்தில் அதன் சர்குலேஷன் நல்ல நிலையில் இருந்தது. கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள் வெளியான காலத்தில் அதிகம் பிரதிகள்
விற்றன . நாவலை படித்து பிறகு அந்த பக்கங்களை கிழித்து பைண்ட் செய்து தலைமுறை தலைமுறையாக வாசகர்கள் மறுவாசிப்பு செய்தார்கள்.ஜெயகாந்தனின்
நாவல்களும் விகடனுக்கு பெருமை சேர்த்தன. எப்போது ஒரு பத்திரிகை
பணத்துக்காக நடுநிலை தவறுகிறதோ அப்போதே அது பொதுவான வாசகர்களை இழக்கிறது. இது பத்திரிகை மட்டுமல்ல மற்ற நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
உதாரணம் ஹோட்டல் சரவண பவன். எப்படி இருந்த ஹோட்டல் இப்போது தரம் தாழ்ந்து சுவை குன்றி காலி ஆக இருக்கிறது. ஒரு காலத்தில் டேபிளில் இடம் பிடிக்க காத்திருக்கவேண்டும்.
ஹோட்டல் சரவணபவன் – இதற்கு நான் மிகுந்த ரசிகன் (ஒரு காலத்தில்). தினமும் 10 3/4க்கு மதிய உணவு கிட்டத்தட்ட ரெடியாகும் சமயம் போய் சாப்பிட உட்கார்ந்துவிடுவேன். (கூட்டம் வருவதற்கு முன்னால் சாப்பிட உட்கார்ந்துடணும் என்பது என் எண்ணம்). அவங்க பூஜை முடிந்து பிரசாதத்தோடு சாப்பாடு போடுவாங்க. நான் சென்னையை விட்டுச் செல்லும்வரை ருசியில் ஒரு மாற்றமும் இல்லை. அனேகமா எல்லா பிராஞ்சுகளிலும் சாப்பிட்டிருக்கிறேன். எந்த நாடு சென்றாலும், அங்கு சரவண பவன் ஹோட்டல் இருந்தால், பயணம் செய்து (லண்டன்ல, சரவண பவன் ஹோட்டலுக்குப் போக ட்யூப் இரயில் பயணிக்கணும்) அங்கு போய் சாப்பாடு சாப்பிடுவேன். இவங்க, ருசியில், வெளிநாட்டில் காம்ப்ரமைஸ் பண்ணிக்கொண்டார்கள், முதலில் துபாயில்-மலையாளிகளைக் குறிவைத்து டேஸ்ட் மாறியது. பஹ்ரைன், ஓமான், கத்தார் – இங்கெல்லாம் சொல்லிக்கொள்ளும்படி ருசி இல்லை. இடையில் இந்தியா வரும்போது செல்வேன். உணவின் தரம் குறைந்துகொண்டே வந்தது. கடந்த சில வருடங்களில் சரவணபவன் என் லிஸ்டிலேயே இல்லை.. ‘பேர் இருக்கு, நான் போடுவதுதான் உணவு’ என்ற ஆட்டிடியூட் சரவணபவனுக்கு வந்து 5 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
நான் சுஜாதா சாரை முதன் முதலில்
நேரில் பார்த்து பேசியது, டாக்டர் ராதாகிருஷ்ணன்
சாலையில் (ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண
மண்டபம் அருகே )இருக்கும் சரவண பவனில் –
நின்றுகொண்டே காப்பி சாப்பிடும்போது தான்..!!!
so அப்படி இப்படியென்று பேச்சு கடைசியில்
சரவண பவனில் வந்து நிற்கிறது… 🙂 🙂
ஆனந்தவிகடனில் ஆரம்பித்து சரவண பவனில் முடிந்தது.
காரணம் எப்போது ஆனந்த விகடன் டிவி சீரியல் பக்கம்
போனதோ அதற்கு சன் டிவியின் “கல்யாண குணங்கள் ” தொற்றி
கொண்டன . தரம் தாழ்ந்தது. சரவண பவன் நிர்வாகத்தையும்
அந்த குடும்பமே கைப்பற்றிவிட்டது என ஒரு வதந்தி உலவுகிறது.
முன்பெல்லாம் வீட்டிலே ஆனந்தவிகடன் வந்து விழுந்தால்
நீ முந்தி நான் முந்தி என்று குடும்ப உறுப்பினர்களிடம்
சண்டையே நடக்கும். இப்போது அதை யாரும் புரட்டி பார்ப்பது
கூட கிடையாது. புதுக்கருக்கு அழியாமல் அப்படியே கிடக்கிறது. அதேபோல் இப்போது மழைக்கு கூட மக்கள் சரவணா பவன் பக்கம் ஒதுங்குவதில்லை