ஜெயரஞ்சன் கேள்விகளுக்கு பாஜக பதிலளிக்குமா ….


இந்த காணொளியில் (7 நிமிடங்கள்…)
பொருளாதார நிபுணர் திரு.ஜெயரஞ்சன்
சில கேள்விகளை எழுப்புகிறார்….

மத்திய அரசு, தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை
என்று சொல்லி விட்டதால், இந்த சந்தேகங்களை
தீர்த்து வைக்கும் பொறுப்பை பாஜக தலைமை தானே
மேற்கொள்ள வேண்டும்…?

பாஜக விளக்கம் கொடுக்குமா….?

….

.
——————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to ஜெயரஞ்சன் கேள்விகளுக்கு பாஜக பதிலளிக்குமா ….

 1. M.Subramanian சொல்கிறார்:

  பிஎம் கேர் என்ற பெயரில் பிரதமர்
  மோடியால், கொரோனா நிதிக்காக
  உருவாக்கப்பட்ட அமைப்பு
  பொது அமைப்பு அல்ல என்றும்,
  அதன் கணக்கு வழக்குகளை
  வெளிப்படையாக தெரிவிக்க முடியாது
  என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

  The Prime Minister’s Citizen Assistance and Relief
  in Emergency Situations Fund என்ற நிதியமைப்பு
  கடந்த மார்ச் 28ஆம் தேதி தொடங்கப்பட்டது.
  ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதி என்ற
  பொது அமைப்பு இருக்கையில் இது எதற்கு
  என்ற கேள்விகள் எழுந்தன. ஆனாலும்
  பிஎம் கேர்ஸ் அமைப்புக்கு நிதிகள் குவிந்தன.

  இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச்
  சட்டத்தின்கீழ், பிஎம் கேர் அமைப்புக்கு வந்துள்ள
  நிதி பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்க பிரதமர்
  அலுவலகம் மறுத்துள்ளது.

  “நம்மிடம் பிரதமரின் தேசிய நிவாரண நிதியம்
  (பி.எம்.என்.ஆர்.எஃப்) இருக்கும்போது, ​​மற்றொரு
  நிதியத்தைக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
  எனவே இந்த புதிய அறக்கட்டளையின் அமைப்பு
  மற்றும் குறிக்கோள்கள் குறித்து அறிந்துகொள்ள
  நான் ஆர்வமாக இருந்தேன். எனவே தகவல்
  அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதுபற்றிய
  விவரங்களைக் கேட்டு விண்ணப்பித்தேன்”
  என்கிறார் பெங்களூரு அஸிம் பிரேம்ஜி
  பல்கலைக்கழகத்தில் சட்ட மாணவராக
  இருக்கும் கந்துகுரி.

  தகவல் கேட்டு 30 நாட்களுக்குள்
  அவருக்கு எந்தப் பதிலும் கிடைக்காதபோது,
  ​​அவர் மீண்டும் முறையிட்ட நிலையில்,
  அவருக்கு மே 29ஆம் தேதி பிரதமர்
  அலுவலக அதிகாரியிடம் இருந்து
  தகவல் கிடைத்தது.

  அதில், “தகவல் அறியும் உரிமைச்
  சட்டம், (2005) பிரிவு 2 ஹெச்சின்படி
  பிஎம் கேர் நிதியம் என்பது ஒரு பொது
  அமைப்பு அல்ல. இருப்பினும்,
  தொடர்புடைய தகவல்களைப் பொறுத்தவரை,
  pmcares.gov.in என்ற இணையதளத்தில்
  காணப்படலாம்” என்று கூறப்பட்டிருக்கிறது.

  இதுகுறித்து கந்துகுரி மேல் முறையீடு செய்யத்
  திட்டமிட்டுள்ளார். “பிரதமரின் பெயரால்
  உருவாக்கப்பட்டுள்ளது. மக்களுக்கானது
  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரும்,
  அமைச்சர்களும் இந்த அறக்கட்டளையில்
  இடம் பெற்றுள்ளார்கள். இது எல்லாமே இது
  பொது அமைப்பு என்பதை நிரூபிக்கின்றன.
  ஆனால் எப்படி பொது அமைப்பு அல்ல என்று
  கூற முடியும்? இதுகுறித்து நான் மேல்
  முறையீடு செய்வேன்” என்கிறார்
  அந்த சட்ட மாணவர்.
  – பத்திரிகைச் செய்தி

 2. புதியவன் சொல்கிறார்:

  ஜெயரஞ்சன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் துணையை நாடலாமே . தான் இவ்வளவு பணம் பி.எம். நிதியத்துக்கும், இந்த புதிய நிவாரண அமைப்புக்கும் கொடுத்திருக்கிறேன், எனக்கு அவற்றின் கணக்கு வழக்குகள் வேண்டும் என்று சொல்லலாமே. அல்லது இவ்வளவு கோடிகள் கொடுக்கப் போகிறேன், எனக்கு அதன் செயல்முறை பற்றி விளக்கம் தரவும் என்று பப்ளிக்காக விளம்பரம் கொடுக்கலாமே, பிரதமமந்திரி அட்டென்ஷன் என்று போட்டு. இவர் யூ டியூபில் போடுவாராம்…உடனே பிரதம மந்திரி இவருக்கு விளக்கம் கொடுக்கணுமாம். இவர் இது மாதிரித்தான் எல்லோரையும் முன்னால் கேள்வி கேட்டிருக்கிறாரோ? நாட்டில் எத்தனை அறக்கட்டளைகள் (இவரும் வச்சிருந்தாலும் வச்சிருப்பார்) பல்லாயிரம் கோடிகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இல்லை இது மத்திய அரசின் நிதி இணையம் என்றால், இருக்கவே இருக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ப்ராசஸ் (process of escalation)

  இவருக்கு பி.எம். ஆஃபீஸில் இருந்து ‘தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி’ விளக்கம் வரலைனா, மேல் முறையீடு செய்யலாமே. இப்படி நான் மேல் முறையீடு செய்திருக்கிறேன், அதுவும் ரிஜெக்ட் ஆனால் நான் உச்ச நீதி மன்றத்தை நாடுவேன் என்று நமக்கு அப்டேட் தெரிவிக்கலாமே.

  கவுண்டமணி பாஷையில், ‘நாட்டில் இந்த திடீர் ‘அறிஞர்’கள் தொல்லை தாங்கலைடா சாமி.

  • R KARTHIK சொல்கிறார்:

   ஏன் இந்த பதட்டம் அய்யா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   நீங்கள் மிகவும் அவசரமாகவும்
   முழு தகவல்களையும் அறியாமலும்
   பதிலெழுத முனைந்திருக்கிறீர்கள்
   என்று எண்ணுகிறேன். பாஜகவை
   யாரும் குறைகூறி விடக்கூடாதே
   என்று அவ்வளவு பதட்டமா ?

   // ஜெயரஞ்சன், தகவல் அறியும்
   உரிமைச் சட்டத்தின் துணையை
   நாடலாமே //
   -என்று கேட்கிறீர்கள்….

   //இது மத்திய அரசின் நிதி இணையம்
   என்றால், இருக்கவே இருக்கு தகவல்
   அறியும் உரிமைச்சட்டத்தின் ப்ராசஸ்//

   // இவருக்கு பி.எம். ஆஃபீஸில் இருந்து
   ‘தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி’
   விளக்கம் வரலைனா, மேல் முறையீடு
   செய்யலாமே.//
   -என்று வேறு அட்வைஸ் செய்கிறீர்கள்.

   இது மத்திய அரசின் நிதி இணையம்
   அல்ல என்று மத்திய அரசே
   விளக்கம் அளித்திருப்பதை பார்க்கும்
   அளவிற்கு கூட பொறுமை இல்லையா ?

   பின் தகவல் பெறும் உரிமை
   எப்படி வரும்…?

   எனக்கு ஒரு முக்கியமான விளக்கம்
   தேவைப்படுகிறது…
   உங்களால் சொல்ல முடியுமானால்
   சந்தோஷமே…

   இதை பொதுத் தணிக்கைக்கு உட்படுத்த
   முடியாது. இதன் ஆடிட்டர்களை
   இந்த நிறுவனமே தீர்மானித்துக் கொள்ளலாம்
   என்கிற கண்டிஷன் ஏன்..?
   இதன் பின்னணி என்ன…?
   பொதுத் தணிக்கைக்கு அஞ்சுவானேன்…?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    கா.மை. சார்…. படித்துவிட்டுத்தான் எழுதுகிறேன். ஜெயரஞ்சகன், யார் அவருக்கு இதனைக் கேள்வி கேட்குமாறு உத்தரவிட்டிருக்கிறாரோ, அவரிடமே பணம் பெற்று உச்சநீதிமன்றம் செல்லலாமே. இவர் இதுவரை எந்த விஷயத்துக்கு எந்தக் கட்சிகளைக் கேள்விகேட்டிருக்கிறார் பொ ரு ளாதார நிபுணர்? இவர் கேள்விகளே உள்நோக்கமுடையவை என்னும்போது இவருக்கு எதற்கு பதில் சொல்லணும்?

    பாஜகவோ அல்லது இது தொடர்புடையவர்களோ பதில் சொன்னால் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் இதைக் கேட்க ஜெயரஞ்சனுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது (அவ்வப்போது பசி அரசைக் கேள்விகேட்பது போல. They are not fit to ask these questions) or they dont deserve to be answered)

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


     புதியவன்,

     நீங்கள் இந்த இடுகையை பார்த்தவுடன்
     மிகவும் பதட்டத்துடன் பாஜகவுக்கு
     ஆதரவாக எழுதியதால், நான் உங்களை
     கேட்டது இது தான் –

     //இதை பொதுத் தணிக்கைக்கு உட்படுத்த
     முடியாது. இதன் ஆடிட்டர்களை
     இந்த நிறுவனமே தீர்மானித்துக் கொள்ளலாம்
     என்கிற கண்டிஷன் ஏன்..?
     இதன் பின்னணி என்ன…?
     பொதுத் தணிக்கைக்கு அஞ்சுவானேன்…?//

     இதற்கு பதில் சொல்வதை நீங்கள்
     தவிர்க்கிறீர்கள் என்பது புரிகிறது. ஆனால்,
     தொடர்ந்து கண்களை மூடிக்கொண்டு,
     பாஜக செய்வதை ஆதரிக்கிறீர்கள்.

     பல சமயங்களில் நீங்கள் மிக நன்றாக,
     பொருளடங்கிய பின்னூட்டங்களை
     எழுதுகிறீர்கள்.

     ஆனால், பாஜக என்று வரும்போது
     சறுக்குகிறீர்கள்.

     தயவுசெய்து, பாஜக அபிமானி என்பதற்காக
     அவர்கள் செய்யும் எல்லாவற்றிற்கும்
     வக்காலத்து வாங்குவதை தவிருங்கள்.

     நல்லதை நல்லது என்றும்
     கெட்டதை கெட்டது என்றும் கூறினால்,
     உங்கள் மீதுள்ள நம்பிக்கைத்தன்மை கூடும்.

     இந்த வலைத்தளத்தின் மூலம் கிடைத்த
     ஒரு நல்ல நண்பர் என்கிற முறையில்
     உங்களிடம் இதைக்கூற எனக்கு உரிமை
     இருக்கிறது என்று நம்புகிறேன்.

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 3. Ramnath சொல்கிறார்:

  மிஸ்டர் புதியவன்
  உங்களுக்கேன் இவ்வளவு பதட்டம் ?
  பாஜக தலைமையே கீப் கொயட்டாக
  இருக்கும்போது.
  வீரமணியின் நினைவு வருகிறதே.
  “ராஜாவுக்கு மிஞ்சிய ராஜவிசுவாசம் ” 🙂

  மேலே நண்பர் சுப்ரமணியன் எழுதி யிருப்பதை
  பார்க்கவில்லையா ?

  //அவருக்கு மே 29ஆம் தேதி பிரதமர்
  அலுவலக அதிகாரியிடம் இருந்து
  தகவல் கிடைத்தது.
  அதில், “தகவல் அறியும் உரிமைச்
  சட்டம், (2005) பிரிவு 2 ஹெச்சின்படி
  பிஎம் கேர் நிதியம் என்பது ஒரு பொது
  அமைப்பு அல்ல. இருப்பினும்,
  தொடர்புடைய தகவல்களைப் பொறுத்தவரை,
  pmcares.gov.in என்ற இணையதளத்தில்
  காணப்படலாம்” என்று கூறப்பட்டிருக்கிறது.//

  தகவ்வல் அறியும் உரிமைச்சட்டத்தின்
  கீழ் இது வராது என்று சொன்னபிறகு
  எப்படி தகவலைப் பெற முடியும் ?

 4. Ramnath சொல்கிறார்:

  மிஸ்டர் புதியவன்,
  அரசு சார்ந்த நிதியமைப்பு இல்லையென்றால்
  அது அரசின் வெப்சைட்டில் வெளியிடப்பட
  வேண்டிய அவசியம் என்ன ?
  அதன் தணிக்கையாளர்களை, அதன் நிர்வாகிகளே
  தீர்மானித்துக் கொள்ளலாம் என்கிற கண்டிஷன்
  எதற்கய்யா ?
  ” The PM CARES Fund will be audited by one or more
  qualified independent auditor(s) who will be appointed
  by the Trustees.”
  சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டியது
  அவசியம். கே.எம்.சார் பாஜக தலைமை
  தெளிவுபடுத்துமா என்றூ தான் கேட்டிருக்கிறார்.
  நீங்களே பாஜக சார்பாக பேச முற்பட்டிருப்பதால்
  இந்தக் கேள்விக்கு நீங்களே பதில் சொல்லலாம்.

 5. M.Subramanian சொல்கிறார்:

  INFORMATION IS KNOWLEDGE
  இந்து தமிழ் திசை செய்தியிலிருந்து –

  https://www.hindutamil.in/news/opinion/columns/557280-pm-cares-fund.html

  Updated : 01 Jun 2020 10:27 am

  பிரதமர் நிவாரண நிதிகள் இரண்டு தேவையா?

  கரோனா நிவாரணத்துக்காக மார்ச் 28-ம் தேதி உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் என்ற பிரத்யேக நிவாரண நிதி அமைப்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. இதையடுத்து, 1948-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் பிரதம மந்திரியின் தேசிய நிவாரண நிதி அமைப்பு தற்போது செயல்படுகிறதா என்று கேள்விகள் எழுந்துள்ளன. பிஎம் கேர்ஸுக்கு முன்பாகவே செயல்பட்டு வரும் பிரதமரின் தேசிய நிவாரண நிதி அமைப்பு எப்படிச் செயல்பட்டு வருகிறது?

  இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நடைபெற்ற பிரிவினையில் பாதிக்கப்பட்ட அகதிகளின் உதவிக்காகத் தொடங்கப்பட்டதுதான் பிரதமரின் தேசிய நிவாரண நிதி அமைப்பாகும். தற்போது இந்தியாவெங்கும் நடைபெறும் இயற்கைப் பேரிடர்களில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காகவும், பெரிய விபத்துகள், அமிலவீச்சுத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் இந்த அமைப்பு பிரதமர் அலுவலகத்திலிருந்து செயல்பட்டு வருகிறது.

  இந்த நிதி அமைப்பு, பிரதமர், துணைப் பிரதமர், நிதி அமைச்சர், காங்கிரஸ் தலைவர், டாடா அறக்கட்டளை நிர்வாகிகள், தொழில்துறை சார்ந்த பிரதிநிதி ஆகியோர் கொண்ட கமிட்டியால் அப்போது நிர்வகிக்கப்பட்டு வந்தது. 1985-ம் ஆண்டு, இந்தக் கமிட்டி மொத்தமும் சேர்ந்து நிவாரண நிதியை நிர்வகிக்கும் உரிமையை பிரதமரிடமே ஒப்படைத்தது. தற்போதைய சூழ்நிலையில் நிதி விநியோகம் மொத்தமும் பிரதமரின் முடிவை நம்பியே உள்ளது. பிரதமர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் செயலர் கௌரவ அடிப்படையில் இந்த நிதியை நிர்வகிப்பார்.

  2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 3 ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவழிக்கப்படாத நிதியாக இருந்தது. பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவுவதற்காக திரட்டப்பட்ட இந்த நிதியே செலவழிக்கப்படாத நிலையில், பிஎம் கேர்ஸ் என்னும் புதிய நிதி அமைப்பு எதற்கு என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் அப்போது கேள்வி எழுப்பினார்கள்.

  பிரதமரின் நிவாரண நிதியைப் போன்றே மாநில முதலமைச்சர்களுக்கும் நிவாரண நிதி அமைப்பு உண்டு. கோவிட்-19 நிவாரண நடவடிக்கைகளுக்காக அரசுக்குப் பெரிய செலவினங்கள் சுமையாக மாறிய நிலையில் மாநில அரசுகளும் இந்த நிவாரண நிதிக்கு கோரிக்கை விடுத்தன.

  பிஎம் கேர்ஸ் ஈர்த்த நிதி

  பிஎம் கேர்ஸ் நிவாரண நிதி தொடங்கப்பட்டு 45 நாட்களுக்குள் பெருந்தொகையில் நன்கொடைகளை ஈர்த்தன. பிரதமர் இந்த நிவாரண நிதி குறித்து ட்வீட் செய்த முதல் அரைமணி நேரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 25 கோடி ரூபாயை வழங்குவதாக அறிவித்தார். முதல் ஒரு வார காலத்திலேயே 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நன்கொடை வசூலானது.

  அதைத் தொடர்ந்து பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் பிஎம் கேர்ஸ்-க்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. சில இடங்களில் தங்களின் ஒப்புதல் இல்லாமலேயே சம்பளத்திலிருந்து இந்த நன்கொடைக்காகப் பிடிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. பாதுகாப்புத் துறை அமைச்சகம், ராணுவம், கடற்படை, விமானப்படை, டாடா குழுமம், ரிலையன்ஸ் குழுமம் ஆகியவை இதில் அடங்கும். கரோனா பேரிடர் காலத்தில் பொருளாதார இழப்பு என்று சம்பளத்தைப் பிடித்து ஆட்குறைப்பு செய்து நிறுவனங்களும் பிஎம் கேர்ஸ்-க்கு தாராளமாக நன்கொடைகளை வழங்கின. பல நாட்கள் ஊரடங்கால் தகரக் கொட்டகைகளில் அடைபட்டு ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களிடம் பயணக் கட்டணத்தை வசூலித்த ரயில்வே துறையும் 151 கோடியை பிஎம் கேர்ஸ்-க்கு வழங்கியது.

  அயல்நாட்டு நிதியைப் பெற முடியும்

  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நன்கொடையாக வசூலிக்கப்பட்ட தொகை, நன்கொடை கொடுத்தவர்களின் பெயர்கள், செலவு விவரங்கள் ஆகியவற்றைத் தர முடியாது என்று கூறியுள்ள நிலையில், அதன் விவரங்கள் எதுவும் பிஎம் கேர்ஸ் இணையதளத்திலும் தெளிவாக இல்லை.

  பெருநிறுவனங்களில் உள்ள கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்ஸிபிளிட்டி என்று சொல்லப்படும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதிகளை அரசுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற விதியும் பிஎம் கேர்ஸ் நிதிக்குத் தளர்த்தப்பட்டுள்ளது. 1948-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதமர் நிவாரண நிதி, முதலமைச்சர்கள் நிவாரண நிதிக்குப் பெருநிறுவனங்கள், தங்கள் நிதியை இப்படியாக அளிக்க முடியாது. அத்துடன் அயல்நாட்டிலிருந்து வரும் நிதியையும் பெறுவதற்கான விதிவிலக்கையும் பிஎம் கேர்ஸ் பெற்றுள்ளது. இயற்கைப் பேரிடர்கள் சார்ந்து மாநில முதலமைச்சர்கள் யாரும் தங்கள் நிவாரண நிதிக்கு வெளிநாட்டு நிதியைப் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

 6. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  வருமான வரி சட்டம் ,ஷரத்து 80 G கீழ் , தொண்டு
  நிறுவனங்களுக்கு தானம் கொடுக்கும் போது
  100 % வரை வருமான வரி விலக்கு பெறலாம் .

  தொண்டு நிறுவனங்கள் வருமான வரி துறை
  மூலம் இந்த வரி விலக்கை பெற முடியும் .
  அரசு / அரசு சார்ந்ததாக இருக்க வேண்டியதில்லை .

  PMCare மேற்படி 80G கீழ் வருகிறது .
  PMO சொல்வது போல் RTI சட்டம் கீழ் வராது .
  வருட கணக்கை CAG தணிக்கை செய்ய வேண்டாம் .

  சட்டப்படியே – ஆனால் .வெளிப்படையாக ஒன்றும் இல்லை .
  ஏன் இப்படி மறைக்க வேண்டும் ?

 7. Ezhil சொல்கிறார்:

  கா.மை சார்,
  நான் சில தினங்களாக பின்னூட்டம் இடுவதையே தவிர்த்து விடுகிறேன். ஏனென்றால், பாஜக (அ) மத்திய அரசு சார்ந்த எந்த ஒரு விஷயம் என்றாலும் திரு.புதியவன் சார் அவர்கள் தன்னுடைய பின்னூட்டத்திலேயே அதை மடை மாற்றி காங்கிரஸ், திமுக மேல பழி சுமத்தி அல்லது அவர்களை உள்ளே இழுத்து திசை திருப்பி விடுவார். நாமும் சிலபல நேரங்களில் அதை அறியாமல் எடுத்த விஷயத்தையும் இடுகையின் நோக்கத்தையும் விடுத்து அவர் காட்டின பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிடுவோம். அவருக்கு சில விஷயங்களில் சரியான பதில் இல்லையென்றாலோ இல்லை மற்றவர்கள் சரி என்று சொன்னாலும் தானும் சரி என்று சொல்லக்கூடாது என்று கருதியே வேறு விஷயத்திற்கு மாற்றி விடுவார்.

  @புதியவன் சார்:
  இது எனக்கு தங்களைப்பற்றி தோன்றியது.. இதை முன்னொரு இடுகையிலேயே உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து தோன்றியது.. தவறென்று உங்களுக்கு தோன்றினால் மன்னித்துவிடுங்கள் ஏனென்றால் உங்களை விட வயதில் மிக சிறியவன் நான்.. எனக்கு எப்படி நீங்கள் திமுகவையும், சுடாலினையும், காங்கிரஸ், பசியையும் உள்ளே இழுக்கும்போது தோன்றுகிறது என்றால் அவர்களை ஊறுகாய் போல பயன்படுத்துகிறீர்கள். தேவையோ தேவையில்லையோ உங்கள் வாதத்திற்கு அவர்கள் மிகவும் உதவுகிறார்கள். எனக்கும் திமுக மீதோ, காங்கிரஸ் மீதோ எந்த ஒரு நல்லெண்ணமோ இருந்ததில்லை.. அவர்கள் மீது நீங்க கூறும் அத்தனை தவறுகளையும் நான் ஆமோதிக்குறேன்.. ஆனால் அதற்காக பாஜக செய்வனவற்றை சரி என்று கண்ணை மூடிக்கொண்டு நீங்க கூறுவது மிகவும் தவறு.. உங்களை சங்கி என்று கூறுவது எவ்வளவு தவறு என்று நினைக்கின்றீர்களா எவ்வளவோ தவறு நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு பாஜகவை ஆதரிப்பது. வெகு சில நேரங்களில் நீங்க பாஜகவின் தவறுகளை ஒத்துக்கொள்கிறீர்கள் என்பது ஆறுதலான விஷயம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   எழில்,

   நண்பர் புதியவன் உங்களுக்கு பதில் எழுதுவார்
   என்று காத்திருந்தேன். இதுவரை எழுதாததால்,
   என் நிலையை விளக்கி விடுகிறேன்.

   நண்பர் புதியவன் அவர்களை நான் பல
   ஆண்டுகளாக இந்த தளத்தில் பார்த்துக்
   கொண்டிருக்கிறேன். அவரது அணுகுமுறை
   நமக்கு புதியதில்லை. பலமுறை இதை நானே
   இங்கேயே வெளிப்படையாக சுட்டிக்காட்டி
   விட்டேன்.

   ஆனால், அவருக்காக நீங்கள் பின்னூட்டம்
   எழுதுவதை தவிர்த்து விட்டேன் என்று கூறினால்,
   அதை நான் ஏற்க மாட்டேன். அது சரியான
   அணுகுமுறை அல்ல.

   நீங்கள் உங்கள் நிலை சரி என்று நினைத்தால்,
   அவரது அணுகுமுறை தவறு என்று
   உங்களுக்குத் தோன்றினால் –

   question him…
   confront him with your questions…
   corner him –
   எதையாவது சொல்லிவிட்டு தப்பிப்போக
   அனுமதிக்காதீர்கள் …

   நான் நண்பர் புதியவனுடைய பின்னூட்டங்களை
   எப்படி அணுகுகிறேன் என்று பார்க்கிறீர்கள்
   அல்லவா…? நான் மிகவும் வெளிப்படையாகவே
   அவருக்கு பதிலளிக்கிறேன்.

   இங்கே தளத்தில் -வேறு சில நண்பர்கள் கூட,
   விடாப்பிடியாக அவரைத் தொடர்வதை,
   தொடர்ந்து கேள்வி கேட்பதை பார்க்கிறேனே.

   இது வெறும் விவாதக்களமே…
   இங்கே நடப்பது கருத்து மோதல்களே…
   எனவே இங்கே நடக்கும் கருத்து மோதல்களை –
   அந்த விதமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
   இவை தனிப்பட்ட மோதல்கள் அல்ல –

   இதில் மரியாதைக்குறைவாக எதையும்
   கூறுவதைத் தவிர்க்க வேண்டும் – அவ்வளவே.

   நான் சொல்வதை நீங்கள் சரியான முறையில்
   புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

   நீங்கள் புதியவன் பற்றி கூறியுள்ளவற்றையும் –
   நான் இங்கே எழுதுவதையும் –
   நண்பர் புதியவன் அவர்களும் எதிர்காலத்தில்
   எழுதும்போது கருத்தில் கொள்வார்
   என்று நம்புகிறேன்.

   இந்த விமரிசனம் தளத்தை நடத்திச்செல்வது
   நான் ஒருவன் மட்டுமே அல்ல… இங்கு பங்கு
   கொள்ளும் ஒவ்வொருவரும், ஒவ்வொரு
   விதத்தில், இந்த தளத்தை மேலேற்றிச்
   செல்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Ezhil சொல்கிறார்:

    நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன் சார். எல்லாரோடும் நானும் சேர்ந்து அவரிடம் கேள்வி கேட்பது ஒரு வகையில் அவரை கார்னர் செய்வதைப்போல உணர்கிறேன். அதனாலேயே தவிர்த்து வந்தேன்.. இனி முடிந்தவரை புதியவன் சாருடன் மோதிப்பார்க்கலாம் கருத்து சண்டையில்…

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


     எழில்,

     இந்த தளம் ஒரு விவாதக் களம்
     என்கிற உணர்வுடன் எழுத வேண்டும்.
     அவ்வளவே…
     எதையும் தனிப்பட்ட முறையில்
     எடுத்துக் கொள்ளக் கூடாது.

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.