…
…
…
கம்போடியாவில் 1200 ஆண்டுகளுக்கு முன்பே பல்லவ
மன்னர்களின் ஆட்சி பற்றிய விவரங்களெல்லாம்
-இந்த விமரிசனம் தளத்தில் 4-5 ஆண்டுகளுக்கு முன்பு
ஒரு இடுகைத் தொடர் வந்தது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.
( ….. மறைந்த 1200 வருட ரகசியங்கள் வெளிவருகின்றன ….etc. )
பல்லவர்களின் ஆட்சி எவ்வளவு தொலைவில் எல்லாம் விரிந்து
பரந்து இருந்தது என்பதற்கு இன்னொரு சாட்சியாக தற்போது
ஒரு வாரத்திற்கு முன்பு,
– வியட்நாமில் ஒரு பழமையான சிவலிங்கம் கண்டு
பிடிக்கப்பட்டிருக்கிறது…
அது 1100 ஆண்டுகள் பழமையானது என்று தொல்பொருள்
ஆராய்ச்சியினர் உறுதிப்படுத்துகின்றனர்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிவலிங்கம் தொடர்பான
புகைப்படங்கள் மற்றும் செய்தி கீழே –
…தமிழர்கள் பெருமை கொள்ள வேண்டிய செய்தி….
——————————————————————
இது குறித்த செய்தி –
( https://www.dinamalar.com/news_detail.asp?id=2547854 )
புதுடில்லி: வியட்நாமில் இந்திய தொல்பொருள் ஆய்வு
மையம் (ஏ.எஸ்.ஐ) மேற்கொண்ட ஆய்வில், 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள மை சன் பகுதியிலுள்ள சாம் கோயில், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாகும்.
கெமர் பேரரசின் மன்னர் இரண்டாம் இந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலில், இந்திய தொல்லியல் துறை ஆய்வு
மேற்கொண்டது. அப்போது, 9ம் நூற்றாண்டை சேர்ந்த
ஒரே கல்லால் செய்யப்பட்ட சிவலிங்கம் மண்ணுக்குள்
இருந்த கண்டெடுக்கப்பட்டது.
……………
……………
……………
.
————————————————————————————————————————————