…
…
காசு சம்பாதிக்கும் வழி என்று நினைத்து விடாதீர்கள்…
இது கல்விச் சேவை….!!!
கொரோனா காலத்தில், ஒரே நாளில்
150 பேரை வீட்டுக்கு அனுப்பிய “தரமான” நிறுவனத்தின் சேவை…
.
ரூபாய் 1500/- மதிப்புள்ள ஆலோசனை –
உங்களுக்காக ரூபாய் 700/- க்கே…!!!
முந்துபவர்களுக்கே முன்னுரிமை …
நீங்கள் செலுத்தும் 700 ரூபாய்(பிச்சைக்) காசுக்கு,
ஏதேனும் ஒருவருடன் மட்டுமே கலந்துரையாடல்
செய்ய முடியும்….!!!
ஒன்றுக்கு மேற்பட்டவரிடம் கலந்துரையாடல் செய்ய
தனித்தனியே ரூபாய் 700- கொடுத்து முன்பதிவு
செய்ய வேண்டும்….
முந்துங்கள் – முந்துபவர்களுக்கே முன்னுரிமை …
………….
….
…
…
…
…
இது வேற…
நீங்கள் வாங்கப்போகும் கார்களின் டிசைன் பற்றி
தெரிந்துகொள்ள என்று ஸ்ஸ்ஸ்ஸ்பெஷலாக ஒரு கோர்ஸ்…
கட்டணம் வெறும் 950 ரூபாய் மட்டுமே…!
உங்கள் கார் கனவுகளின் குறுக்கே
கொரோனா வந்துவிட அனுமதிக்காதீர்கள்…
உடனே முந்துங்கள்…!!!
முந்துபவர்களுக்கே முன்னுரிமை…!!!
….
….
.
————————————————————————————————————————————
இந்த விளம்பரங்களையெல்லாம் பார்த்தாலே
எரிகிறது.
மக்களிடம் ஆர்வத்தை தூண்டி விட்டு,
அவர்களின் பலவீனத்தை எக்ஸ்ப்ளாயிட்
செய்கிறது இந்தக் கூட்டம்.
சட்டத்தில் மாட்டிக்கொள்ளாமல்
எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்று
யோசித்து திட்டம் போடவே இவர்கள்
தனி டீம் வைத்திருப்பார்கள் போலிருக்கிறது.
I never go into book stall establsihed by Vikatan group in book exhibition becasue most of the books are very highly priced and not worth the amount. the golden era of vasan and balasubramanian is over and now it has become the mouthpiece of a political party.
உண்மை
என்னுடைய தொலைக்காட்சிக்கு படம் விற்பனை செய்யலையா? விளம்பரங்கள் கொடுக்கலையா? சினிமா விமர்சனம் என்ற பெயரில் உங்கள் படத்தை ஓடவிடாமல் என்னால் செய்யமுடியும்.
கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வைத்திருப்பவரா? எங்களிடம் விளம்பரம் செய்யலைனா, ஏதேனும் ஸ்கேண்டலில் சிக்கவைத்துவிடுவோம்..
நீங்கள் சாமியாராக இருந்தாலும் சரி… எங்களுக்கு விளம்பரம் கொடுக்கணும், இல்லைனா கட் தரணும். செய்யலைனா சந்தி சிரிக்க வைத்துவிடுவோம்.
கல்வியாளர்கள் ஆலோசனை கூறுவார்கள். அதற்கான ஸ்பான்ஸர்ஷிப்பை நாங்கள் கல்லூரிகளிடமிருந்து கறந்துவிடுவோம். உங்களுக்கும் அது இலவசம் இல்லை. அதன் மூலமாகவும் நாங்கள் சம்பாதிப்போம்.
கார் பயிலரங்கம் – யார் யார் ஸ்பான்ஸர் செய்திருக்கிறார்கள், பயிலரங்கத்தில் விளம்பரங்கள் வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள். இதுவும் காசு சம்பாதிக்க வழி.
ஆனால் நேர்மையாக சம்பாதிப்பது, படிப்பவர்களை, பார்ப்பவர்களை ஏமாற்றிச் சம்பாதிப்பது என்பது வேறு வேறு. துரதிருஷ்டவசமாக அனேகமாக எல்லா மேகசின்களுமே ‘விளம்பரம், ஸ்பான்ஸர்ட்’ என்பவைகளை மிகக் குறைந்த படிக்க முடியாத எழுத்திலோ அல்லது வாசகர்களுக்குப் புரியாத இண்டிகேஷனிலோ போட்டுவிடுவார்கள். நாம் இந்தப் பத்திரிகை ஆசிரியர்களே ஆராய்ந்து நமக்கு உண்மையைச் சொல்லுகிறார்கள் என்று நம்புவோம். இந்த ஃப்ராடை விகடன் முதலில் ஆரம்பித்தது. முதலில் சொன்ன ஃப்ராடுகளை யார் செய்தார்கள் என்பது உங்கள் எல்லோருக்குமே தெரியும்.