…
…
…
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள
உணவுப் பயிர்கள் நாசம்…
லட்சக்கணக்கான விவசாயிகளின்
வாழ்வாதாரம் உருக்குலைந்து போனது …
இந்தப் பூச்சிகளின் படையெடுப்பை தடுக்க வக்கில்லாத
விஞ்ஞானம் என்ன விஞ்ஞானம்….?
ஏற்கெனவே சொன்னதைத் தான்
மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது…
மக்களை கூண்டோடு அழிக்க அணுகுண்டு
தயாரிக்க முடியுமாம் ….
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை
முன்கூட்டியே கண்டுபிடித்து அழிக்க முடியுமாம்…
ஆனால் கண்டம் விட்டு கண்டம் தாண்டி,
பாலைவனங்களையும் தாண்டி,
நாடு நாடாக படையெடுத்து வரும் –
இந்த சின்னஞ்சிறிய பூச்சிகளை அழிக்க
வழி கண்டுபிடிக்க முடியவில்லையாம்…
இவர்கள் சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் போய்
என்னத்தை …………………..போகிறார்கள்….?
விஞ்ஞான வளர்ச்சி எதை நோக்கி இருக்க வேண்டும்…?
……
…..
….
.
————————————————————————————————————————————-
Which is the natural predator of these locusts? Birds?
Was it because of the reduction in bird population?
கார்த்திக்,
நண்பர்கள் மெய்ப்பொருள், புதியவன் ஆகியோரின்
பின்னூட்டங்கள் இவற்றிற்கான பின்னணியை
ஓரளவு விளக்குகின்றன என்று நினைக்கிறேன்.
இந்த வெட்டுக்கிளிகளுக்கான pre-dator
யார், எது என்பதை கண்டுபிடிப்பதில் தான்
நமது மக்களின் சாமர்த்தியம் இருக்கிறது.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
வெட்டுக்கிளிகள் பாலைவனத்தில் உருவாகின்றன .
சாதாரணமாக அங்கு மழை கிடையாது
மழை பெய்தால் முட்டை போட ஆரம்பித்து விடும் .
சமயத்தில் கோடிக்கணக்கில் உருவாகவும் கூடும்
முட்டை பொரித்து வெட்டுக்கிளிகள் பறக்க தொடங்கும் .
இவை காற்று போகும் திசையில் போகின்றன .
சிறு பூச்சியாய் இருந்தாலும் ஆயிரக்கணக்கான கி மீ பறக்க கூடும் .
கோடிக்கணக்கில் வரும் போது பஞ்சம் வர வாய்ப்பு உள்ளது .
அரேபியாவில் 3- 4 மாதம் முன்பு மழை பெய்தது .
தொடர்ந்து பருவக் காற்று வீசவே இவை வந்து விட்டன .
ஈரான் பாகிஸ்தான் இந்தியா போன்ற நாடுகளில் இந்த
தடவை பாதிப்பு உள்ளது .
ஆப்பிரிக்காவில் இதனால் பல முறை பஞ்சம் ஏற்பட்டுள்ளது .
பைபிளில் கூட இதை பற்றிய கதை உள்ளது .
மெய்ப்பொருள்,
உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
//இந்த சின்னஞ்சிறிய பூச்சிகளை அழிக்க வழி கண்டுபிடிக்க முடியவில்லையாம்…// – இயற்கையை வெல்ல முடியாது. இயற்கை விதிகளில் மனிதன் கை வைத்தால் அது அவனுக்குத்தான் பிரச்சனையை உண்டாக்கும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனக்கென்னவோ இதனை அழிக்கின்ற பறவைகளோ, ஊர்வன/விலங்குகளோ அழிக்கப்பட்டிருக்க வேண்டும் இல்லாவிடில் குறைவான எண்ணிக்கையாகி இருந்திருக்கவேண்டும். இருந்தாலும் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.
நான் சில வருடங்களுக்கு முன்பு, தாம்பரம் அருகிலுள்ள ஊரில், பத்து இருபது பெரிய வெட்டுக்கிளிகளை (படத்தில் உள்ளவற்றை) ஒரு சீசனில் பார்த்திருக்கிறேன். (இந்தப் பிரச்சனை ஆப்பிரிக்க நாடுகளில் உண்டு என்று எப்போதோ படித்திருக்கிறேன். அதனால்தான் இவைகளைப் பார்த்த உடன் எவ்வளவு இருக்கு என்பதை கவனித்தேன். அவை இருந்த இடத்தில் ஊமத்தம் செடிகள் நிறைய இருந்தன) என் ஊகம் சரியாக இருந்தால், இவைகள் தமிழகத்துக்கும் அந்நியம் கிடையாது. ஏதோ ஒன்று இவைகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்கிறது என்றே நினைக்கிறேன்.
இயற்கையில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ப்ரிடேடர் (அழித்தொழிக்கும் விலங்கு) உண்டு. மான்கள் வகை விலங்குகள் (பீஸ்ட், எருது…) பல்கிப் பெருகும் இயல்புடையன. அதனை கண்ட்ரோலில் வைத்திருக்க அதன் ப்ரிடேடர்களான சிங்கம், சிறுத்தை, புலி (நாய்கள், முதலைகள் போன்றவை) உதவுகின்றன. ஆனால் இந்த ப்ரிடேடர்கள் அளவுக்கு அதிகமாக இருக்காது. இத்தனை சதுர கிலோமீட்டர்களில் கையளவு எண்ணிக்கையில்தான் இருக்கும். மனிதன் மான் வகைகளை அழித்தொழிக்க ஆரபித்தால் சிங்க இனம் அழிந்துவிடும். சிங்க இனத்தை அழிக்க ஆரம்பித்தால், மான் வகைகள் பல்கிப் பெருகி, தாவரங்களை அழித்துவிடும். நம் வயல்களிலும் இது போல எலிகள், பாம்புகள் காம்பினேஷன் இருக்கும்.
பர்மாவிலிருந்து வந்த கப்பலிலிருந்து அமெரிக்காவில் இறங்கிய பர்மீஸ் பைத்தான் (ரொம்ப காலம் முன்பு), அளவுக்கு அதிகமாக இனப்பெருக்கம் செய்து, அதனை அழிக்கவே முடியாத அளவு பல்கிப் பெருகிவிட்டது. அவ்வப்போது பர்மீஸ் பைத்தானை அழிக்க (பிடிக்க) எடுக்கும் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியடைகின்றன. இதனால்தான் ஒவ்வொரு நாடும், உயிரினங்கள், தாவரங்கள் பிற நாடுகளிலிருந்து வந்துவிடக்கூடாது என்று தற்காலங்களில் ஜாக்கிரதையாக இருக்கின்றன.
புதியவன்,
உங்கள் விரிவான பின்னூட்டம்
பல தகவல்களை தருகிறது. நன்றி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இதன் தொடர்பான ஒரு செய்தி. மும்பையில் ஸோராஷ்டிரர்கள் உண்டு. (பார்சிக்கள்). அவர்கள் பெர்ஷியாவிலிருந்து வந்தவர்கள். அவங்களோட பழக்கம், இறந்த மனிதனின் உடல்கூட பிற விலங்குகளுக்கு உணவாகணும் என்பது. அதனால் அவர்கள் மும்பையில் (?) டவர் ஆஃப் சைலன்ஸ் (என்று நினைவு) என்ற இடத்தில் சடலத்தை விட்டுவிட்டு வந்துவிடுவார்கள். அங்கு வல்லூறுகள் சடலத்தை சாப்பிட்டுவிடும். ஆனால் கெமிக்கல் உரங்களால், வல்லூறுகளின் உணவு (மற்ற இறைச்சிகள்) பாழாகி, வல்லூறுகள் 90%க்கும் மேலே இறந்துவிட்டன. அதனால் சடலத்தைச் சாப்பிட வல்லூறுகள் அனேகமாகக் கிடையாது. இருந்தாலும் பழைய பழக்கம் என்பதால் இன்னும் சடலத்தை அங்கே கிடத்திவிட்டு வருவது தொடர்கிறது என்று நினைக்கிறேன்.
திருநெவேலி பக்கம்லாம், வயல்வெளிகளில் மயில்கள் சிந்திக்கிடக்கும் தானியங்கள், புழு பூச்சிகளை உண்ணும். பாம்பையும் உண்ணும். ஒவ்வொரு உயிரினமும் இன்னொரு வகையை உண்ணும், இன்னொரு உயிரினத்தால் உண்ணப்படும். இந்த சுழற்சியை நாம் தடுத்தால் அது வேறு வகையில் வெளிப்படும். (ஆஸ்திரேலியாவில் கரும்பு பயிரிடுபவர்களால் உள்ளே நுழைந்த பெரிய அளவு தவளை பல்கிப் பெருகி பெரிய தலைவலியாக இன்றும் ஆஸ்திரேலியாவிற்கு இருக்கிறது)
இந்த வெட்டுக்கிளிகளே ஒரு காரணத்துக்காகத்தான் படைக்கப்பட்டிருக்கும். இவைகளைத் தின்பது பச்சோந்தி வகைகள் போன்றவை எனத் தோன்றுகிறது.
இந்த மாதிரி பிரச்சனைகளை அரசாங்கத்தால் தீர்க்க முடியும்னு நான் நினைக்கலை. நம் வாழ்க்கைமுறைப் பிரச்சனை இது.
ஈழத்தில் (யாழ்ப்பாணத்தில்) புலுணி என்றொரு பறவை இனம் இருந்தது, அவையின் இயற்கை உணவு புழு பூச்சிகள். ஆனால் இன்று அவை அரிதாகிவிட்டது.
1972 அளவில் (ஸ்ரீமா பண்டாரநாயக்கா பிரதமர்) உள்ளூர் உற்பத்திகளை கூட்ட “‘தன்னிறைவு” எனும் கொள்கையின்கீழ் விவசாயத்தில் பூச்சிகொல்லிகள், உரம், சூழலுக்கு ஒவ்வாத அன்னிய விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
பூச்சிகொல்லிகளை உபயோகித்ததால் இறந்த (நச்சூட்டப்பட்ட) பூச்சி புழுக்களை உண்ணவேண்டிய நிலைக்கு உள்ளான புலுணி இனங்கள் அழிய ஆரம்பித்தன. 1984 அளவில் காண்பதே அரிதாகிவிட்டது. இப்போது எப்படியோ தெரியாது.
போர்க்காலத்தில் விவசாயம் குறைந்தது, ஸ்ரீலங்கா அரசின் பொருளாதாரத்தடையால் பூச்சிகொல்லிப்பாவனை மிகக்குறந்து புலுணி இனம் மீழத்தொடங்கியது. போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டது, மீண்டும் பூச்சிகொல்லிப்பாவனை !!!!
அதேபோல செண்பகம் பறவைகளும் அரிதாகிவிட்டன, விடுதலைப் புலிகள்செண்பப்பறவையை தேசியப்பறவையாக அறிவித்து அவை பாதுகாப்புக்குரியவையாக அறிவித்தனர்.