ஒரு வழியாக – மத்திய அரசு ரொக்க உதவி செய்யும் முடிவிற்கு வந்து விட்டதா….?


இரண்டு மாதங்களுக்கு மேலாக எந்தவித வருமானமும்
இல்லாத, ஏழை, நடுத்தர மக்கள் மத்திய அரசு
ரொக்கமாக நிதியுதவி செய்து உதவ வேண்டும் என்று
எதிர்பார்க்கிறார்கள். பலமுறை வேண்டுகோள்கள்
விடப்பட்டு விட்டன.

பல பொருளாதார நிபுணர்களும், பொருளாதாரத்தில்
தேக்கத்தைப் போக்க, மக்களிடம் வாங்கும் சக்தியை
உருவாக்க, அவர்கள் வங்கிக்கணக்கில் ரொக்கமாக
பணத்தைப் போட்டு உதவுவது தான் ஒரே வழி என்று
திரும்பத் திரும்ப கூறி வருகிறார்கள்.

எதிர்க்கட்சிகளும் இதே கோரிக்கையைத் தான் திரும்பத்
திரும்ப வைக்கின்றன.

இதுவரை கொள்கை ரீதியாக –

பணமாக உதவி செய்வது என்பதை ஏற்றுக்கொள்ளாத
மத்திய அரசு, வங்கிக்கடன்களின் மூலமே
பொருளாதாரத்தை உந்தி விடலாமென்று கூறி வந்தது….

கடைசியாக, மக்களின் குரல் மகேசனின் குரலாக
மத்திய அரசிடம் போய்ச்சேர்ந்து விட்டதாக அறிகுறிகள்
தெரிகின்றன.

ஏழை மக்களின் வங்கிக்கணக்குகளில் ரொக்கமாக பணம்
போட மத்திய அரசு முயற்சிகளை மேற்கொள்வது போல்
அறிகுறிகள் தெரிகின்றன.

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேட்டின்
தலையங்கம் இதை மறைமுகமாக வெளிப்படுத்துகிறது….

(டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், அரசின்
உள்வட்டங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்
அடிப்படையில் இதை எழுதி இருக்கிறது
என்பது குறிப்பிடத்தக்கது….!!!)

வருகிற நாட்களில் மேற்கொண்டு விவரங்கள் வெளிவரும்
என்று எதிர்பார்க்கலாம்…..!!!

—————–

டைம்ஸ் ஆஃப் இந்தியா தலையங்கத்திலிருந்து
சில பகுதிகள் –

Times of India Editorial

https://timesofindia.indiatimes.com/blogs/toi-editorials/move-to-ubi-covid-crisis-strengthens-the-case-for-cash-transfers-to-replace-messy-indirect-subsidies/

——————

Move to UBI: Covid crisis strengthens the case
for cash transfers to replace messy indirect subsidies
May 27, 2020

…..
The lockdown has shown up the severe limitations in India’s
state capacity, worst affected by which have been migrant workers.
Not only have many of them been deprived of their livelihood,
the state had very limited means to step into the breach.
The current situation however provides an opportunity
to rethink the way government engages its citizens.
….
the Economic Survey three years ago said that there were
950 ongoing central government schemes but just 11 get half the
allocation. This gigantic programme, which costs about 5% of GDP,
needs an overhaul. The way forward should be the introduction of
a universal basic income or at least a targeted basic income
to begin with. Nobel Laureates Abhijit Banerjee and
Esther Duflo too have mooted the idea of UBI to tide over India’s
current economic crisis….

…..
UBI at this stage would go some way towards overcoming the
demand shock the economy has suffered, thus boosting the economy
as a whole.

….
Cash provides poorer citizens with agency, and is an
ideal replacement. UBI is today possible because communications
technology has made banking almost universal.

UBI today is within striking distance as farmers have been brought
into the direct cash transfer net. The scheme clearly has traction.
Now, it should be extended to urban poor in a much bigger way to
transform India, enabling it to move from mai baap sarkar and
patronage driven ‘feudal socialism’ to a modern social democracy –
not to mention being able to tide over crises such as the
current Covid induced one.

.
———————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to ஒரு வழியாக – மத்திய அரசு ரொக்க உதவி செய்யும் முடிவிற்கு வந்து விட்டதா….?

 1. shan சொல்கிறார்:

  ஒரு வேளை , இது நடை பெரும் பொழுது , இதனால் மேற்கொண்டு ஏற்படும் நிதிச்சுமையை சமாளிக்க , மேலும் வரிகள் உயர்த்த படும். ஆதலால், நாம் இப்பொழுதே, அதற்க்காக மனதளவில் தயாராகி கொள்வது உத்தமம். அரசாங்கத்தை அப்பொழுது குற்றம் சொல்வதில் எந்த பயனும் ஏற்பட போவதில்லை.

 2. Devan சொல்கிறார்:

  shan

  You better Dig a Deep Well
  and Jump into that. Will go
  Direct to the Hell.

  • shan சொல்கிறார்:

   இது வரை, நேரடியாக பண உதவி ஏதும் செய்திராத நிலையிலேயே , நிதி சுமையை சமாளிக்க TOLL, PETROL,DIESEL வரிகளை உயர்த்தியதை தாங்கள் இன்னும் உணராமலிருப்பது எனக்கு ஆச்சரியத்தையே அளிக்கிறது. ஒருவேளை இந்த வரிகளுக்கு தாங்கள் அப்பாற்பட்டவராக இருக்கலாம். தாங்கள் இன்னும் சிறிது மாதம் பொறுமையாக உயிருடன் இருந்தால், நான் கூறும் கூற்றின் உண்மையை கண்டு அதற்க்கு பிறகு தாங்களும் என்னுடன் கிணற்றில் குதிக்கலாம்.
   இதை கூட கணிக்க தெரியாத , அறியாமை நிலையில் தாங்கள் இருப்பது , எனக்கு வேதனையாக இருக்கிறது.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    shan,

    உங்களைப் போன்ற மனிதர்களும் இந்த
    மண்ணில், அதுவும் தமிழ் மண்ணில்
    இருக்கிறார்கள் என்பதை அறிய வெட்கமாக,
    வேதனையாக, அருவருப்பாக இருக்கிறது எனக்கு.

    75 நாட்களுக்கும் மேலாக, வாடகை
    கொடுக்க வழி இல்லாததால் இருக்கும்
    இடத்தை விட்டு விரட்டப்பட்டு, வருமானம்
    இல்லாததால், சோற்றுக்கு வழியின்றி,
    பட்டினியோடும், பசியோடும்
    பிள்ளை குட்டிகளோடு பரிதவிக்கும்
    அப்பாவிகளுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்
    என்று சொன்னால் –

    அது உங்களுக்கு வெறுப்பாக இருக்கிறதா…?
    வேதனையாக இருக்கிறதா…?
    எரிச்சலாக இருக்கிறதா…?

    உங்களை மனிதராகவே நினைக்கத்
    தோன்றவில்லை எனக்கு.
    அரக்கர் வழியில் வந்தவர் போலும்.

    சுயநலவாதியான, மனிதாபிமானமற்ற
    அரக்கர்களுக்கு இங்கே இடமில்லை;
    இன்னுமொரு முறை இங்கே இதே கருத்தை
    வலியுறுத்துவீகளானால், இந்த தளத்தில்
    உங்கள் பின்னூட்டம் போடும் உரிமை
    தடை செய்யப்படும் என்பதை அறிக.

    உங்களைப் போன்றவர்களின் எழுத்து
    இங்கே இடம் பெறுவதே எனக்கு
    அருவருப்பாக இருக்கிறது.

    .
    -காவிரிமைந்தன்

 3. bandhu சொல்கிறார்:

  நிதிச்சுமையை தாங்கும் சக்தியை கடந்த சில வருடங்களாக உலக பெட்ரோல் மார்க்கெட்டில் மிகக் குறைந்த விலைக்கு வாங்கி இந்தியாவில் அதிக விலைக்கு விற்கும் பெட்ரோலிய பொருட்களில் வாங்கிய வரி கொடுத்திருக்கும். இந்த வேலையை அரசு எப்போதோ செய்திருக்க வேண்டும்.

  சோசலிசம் என்றால் முகம் சுளிக்கும் அமேரிக்கா இது தான் வழி என்று ஏழை மற்றும் மத்திய வர்க்க மக்களுக்கு நேரடியாக பணம் கொடுத்திருக்கிறது. சோசலிசம் பேசும் நம் அரசு தயங்குகிறது!

 4. Devan சொல்கிறார்:

  shan

  திமிர் பிடித்த மண்டக்கனம் பிடித்தவர்களை
  திருத்த யாரால் முடியும் ?
  அவர்களே தோண்டும் கிணற்றில் குதித்து
  தொலைந்தால் தான் விடியும்.

  உலகச்சந்தையில் ஏற்கெனவே பெட்ரோல்,
  டீசல் விலை அதல பாதாளத்திற்கு சரிந்து
  6 மாதங்கள் ஆயிற்றூ. நூறு ரூபாய்க்கு
  விற்றது 20-25 ரூபாய் என்கிற அளவீற்கு
  வந்து விட்டது. ஆனால், நம து ஆட்சியாளர்கள்
  அந்த விலைக்குறைப்பின் பலனை மக்களுக்கு
  தராமல் தாங்களே அடித்துக் கொண்டு
  போகிறார்கள். கோடி கோடியாக அநியாயமாக
  மறைமுகமாக வரிபோட்டு கஜானாவில்
  குவித்துக் கொண்டு போகிறார்கள்.
  இந்த விஷயம் உங்களுக்கு தெரியாதா அல்லது
  தெரிந்தே வேண்டுமென்று கொள்ளைக்காரர்களுக்கு
  வக்காலத்து வாங்குகிறீர்களா ?

  மக்களை ஏமாற்றி பறித்த பணத்திலிருந்து
  கொஞ்சமாவது எடுத்து பசித்து வாடும் அந்த
  அப்பாவி மக்களுக்கு கொடுப்பது கூட உமக்கு
  பொறுக்க முடியவில்லையா ?

 5. புதியவன் சொல்கிறார்:

  //இரண்டு மாதங்களுக்கு மேலாக எந்தவித வருமானமும் இல்லாத, ஏழை, நடுத்தர மக்கள் மத்திய அரசு ரொக்கமாக நிதியுதவி செய்து உதவ வேண்டும் என்று
  எதிர்பார்க்கிறார்கள்// ஆமாம்.இந்த எதிர்பார்ப்பில் தவறில்லை. அரசு நிச்சயம் உதவி செய்யணும். ஆனால் ‘ஏழை/நடுத்தர’ மக்களை எந்த கிரைடீரியா கொண்டு கணிப்பார்கள் என்பது தெரியவில்லை.

  ஆட்டோ, டிரான்ஸ்போர்ட் ஓட்டுநர்கள், அதுசார்ந்த தொழிலாளிகள், நிறைய முறைசாரா தொழிலாளிகள் இந்த லாக்டவுனினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதில் ஐயமில்லை. நிறைய பேர், காய்கறி, பழங்கள் விற்க ஆரம்பித்தார்கள் (இங்கு). (அதுவும் சுலபமில்லை. கையில் 1000 ரூபாயாவது முதல் வேண்டும். அதையும் வட்டிக்கு வாங்கணும்). இதுல ‘ஏழை’, ‘நடுத்தர’ மக்கள்னு எப்படி பிரிக்க முடியும்னு தெரியலை. ரேஷன் கடையில் வாங்கும் மக்களில் பலர் 50″ தொலைக்காட்சி வைத்துள்ளார்கள், கேபிள் கனெக்‌ஷன் இருக்கு. யாருக்கு அவசியத் தேவையோ அவர்களை உதவி சென்று அடைய வேண்டாமா? யார் யாருக்கு வாடகை கட்ட முடியவில்லையோ அவர்களுக்கு அரசாங்கம் இரண்டு மாத வாடகை கொடுக்கும் என்று சொன்னால், வீடு உள்ளவர்களும் கியூவில் வந்து நிற்பார்களே.

  ஆனால் அமெரிக்காவில் 500 பேர்களுக்கும் குறைவானவர்கள் வேலை பார்த்தால் அந்த கம்பெனிகளுக்கே அரசாங்கம் உதவி செய்திருக்கிறது. ஆனால் நம்ம நாட்டில், அரசுப் பணம் இலவசமா வருதுன்னா எல்லோரும் போய் கியூவில் நிற்பார்களே. இதற்கு நீங்க என்ன தீர்வு அல்லது ஆலோசனை சொல்வீங்க?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   //ஆனால் ‘ஏழை/நடுத்தர’ மக்களை
   எந்த கிரைடீரியா கொண்டு கணிப்பார்கள்
   என்பது தெரியவில்லை.//

   அரசாங்கத்தை விட நீங்கள் அதிகம்
   கவலைப்படுகிறீர்கள் போலிருக்கிறதே.

   உங்கள் கேள்வியில், உதவி செய்ய வேண்டும்
   என்கிற நோக்கத்தை விட, அய்யோ கொடுத்து
   விடப்போகிறார்களே என்கிற எண்ணம் தான்
   விஞ்சியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

   க்ரைடீரியாவை கண்டுபிடிப்பது அரசாங்கத்தின்
   வேலை; அங்கே உள்ள அதிகாரிகளும்,
   நிபுணர்களும் எதற்காக இருக்கிறார்கள்…?

   20 லட்சம் கோடி என்று போலி புள்ளிவிவரங்கள்
   தயாரிக்க மட்டும் தானா…?

   மனமிருந்தால் மார்க்கமா இல்லை …?

   அவற்றையும் மீறி,
   தகுதியில்லாத சிலருக்கும் உதவி கிடைத்தால்
   கிடைத்துவிட்டுப் போகட்டுமே. உதவி கிடைக்க
   வேண்டியவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்
   அல்லவா…?

   Please have a Positive Look
   and have sympathy on the sufferers.

   By God’s Grace, you are in a
   good position….
   Thank God for that.

   Those who are Happy and settled
   should Pray and Wish that others
   should also be happy and peaceful
   like them.

   “கருணை உள்ளங்கள் தான்
   கடவுளுக்குப் பிடித்த இடம்…”

   .
   -காவிரிமைந்தன்

 6. Devan சொல்கிறார்:

  புதியவன்

  // இதற்கு நீங்க என்ன தீர்வு அல்லது
  ஆலோசனை சொல்வீங்க? //

  இதற்கு ஒரு வழிவகை கண்டுபிடிக்க
  வக்கற்றவர்கள் பதவியை விட்டு விலகி
  “புல்” பிடுங்கப்போகலாம் என்று சொல்வேன்.

 7. Devan சொல்கிறார்:

  புதியவன் – நீரும், தோழர் shan-ம்
  அந்தக் கூட்டத்துடன் சேர்ந்தே அந்த
  வேலையைச் செய்யலாம்.

 8. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  இது போல அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று
  டைம்ஸ் தலையங்கம் சொல்கிறது .
  அரசு அது போல் செய்யும் என தோன்றவில்லை .

  நிதின் கட்கரி சொல்வதை பாருங்கள்
  https://www.dinamalar.com/news_detail.asp?id=2547249

 9. bandhu சொல்கிறார்:

  ஏழைகள் யார் என்று கண்டுபிடிப்பது எளிதில்லை. ஆனாலும் கண்டு பிடிக்க முடியும்.

  ரேஷனில் அரிசி வாங்குபவர்கள் என்பது ஒரு யுக்தி. மொத்த மக்கள் தொகையில், யாரெல்லாம் கார் வைத்திருக்கிறார்களோ , யாரெல்லாம் அரசு ஊழியர்களோ , யாரெல்லாம் குறிப்பிட்ட அளவு வீட்டு வரி செலுத்துகிறார்களோ, யாரெல்லாம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமான வரி செலுத்துகிறார்களோ அவர்களை தவிர மற்றவர்களுக்கு பணம் கொடுக்கலாம்.

  இதில் ஒரு 20% மக்கள் ஏழையில்லாமல் இருக்கலாம். அதனால் என்ன. 80% ஏழைககளுக்கு பணம் செல்கிறதே!

  மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!

 10. Gopi சொல்கிறார்:

  மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!

  YOU ARE RIGHT Mr.Bandu.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.