…
…
பழைய கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தது.
எம்.ஆர்.ஆர்…எம்.ஜி.ஆரை சுட்ட
“அந்த” சம்பவம் குறித்தது.
காலம் எல்லாவற்றையும் ஆற்றி விடுகிறது.
சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்டு,
எம்.ஆர்.ராதா சிறையிலிருந்து வெளிவந்தபிறகு,
பழைய விரோதத்தைத் தொடராமல்,
அவர்கள் இருவரும் சகஜமாகப் பழகினர்.
இருவருமே, பட உலகில் தொடர்ந்து நடித்து
வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தின் மூலம் –
திமுக தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆட்சியைப்பிடிக்க
எம்.ஆர். ராதாவும் – மறைமுகமாக உதவியிருக்கிறார்…!!!
இதை யாராவது நினைத்தார்களா என்று தெரியவில்லை;
நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள கீழே பதிகிறேன்.
(நன்றி – குமுதம் )
————————————————————
…
…
…
…
.
—————————————————————————————————————————————————–
அதன் பின் சேர்ந்து நடித்தார்களா?
rathnavelnatarajan,
மன்னிக்கவும்.
நான் தவறான தகவலை தந்து விட்டேன்.
இப்போது சரி செய்து விட்டேன்.
இருவரும் தொடர்ந்து தமிழ்ப்பட உலகில்
பணியாற்றி வந்தனர் என்றிருந்திருக்க வேண்டும்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது அந்தச் சம்பவம். கோபம் ஒரு மனிதனை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். எம்.ஜி.ஆரைப் பகைத்துக்கொள்ள விரும்பாமல் எம்.ஆர்.ராதாவை சிறையிலிருந்து வரவேற்க குறிப்பிடத்தக்க யாரும் போகவில்லை. தமிழகத்தில் திராவிட உணர்வு பெருக முழு முதல் காரணமான எம்.ஆர்.ராதாவின் (பெரியாரே இதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்) புகழ் நிலைக்க, அவருக்கு அரசு விருதுகள், மரியாதைகள் என்று எதுவுமே, இந்தச் சம்பவத்தால் கொடுக்கப்படவில்லை.
எம்.ஆர்.ராதா என்பவர் திராவிட உணர்வைத் தட்டி எழுப்பியவர், பட்டி தொட்டியெல்லாம் திக கருத்துகள் பரவக் காரணமாக இருந்தவர் என்பதெல்லாம் மறைந்து, எம்ஜிஆரைச் சுட்டவர் என்ற ஒரு பெயரே நிலைத்துவிட்டது.
ராதாரவி, எம்.ஆர்.ராதாவுடன் அவர் நாடகத்தில் பணியாற்றினார். அவருக்கு சம்பளம் 10 ரூபாய். ஒரு தடவை அவர் அம்மா முன்னிலையில் ராதாரவி நல்ல மூடில் இருக்கும்போது ‘நைனா சம்பளம் பத்தலை 3 ரூபாய் ஏத்தித் தரணும்’ என்று கேட்டதற்கு எம்.ஆர்.ராதா சட் என்று சொன்னாராம், “அப்போ. …நீ நின்னுக்கோ. வேற ஆளைப் போட்டுக்கறேன்’ என்றாராம். ஆனால் எம்.ஆர்.ராதா குணவான் (கோபக்காரர், அடுத்தவங்களை நையாண்டி செய்வார்) என்றுதான் புத்தகங்களில் படித்திருக்கிறேன்.