…
…
…
உத்திரப் பிரதேசத்து வாரணாசியிலிருந்து,
பீகாரின் அராரியா நகருக்கு, ( 600 கி.மீ.) –
கண் தெரியாத தாயையும்,
கால் உடைந்துபோன தந்தையையும், –
ஒரு 3 சக்கர வண்டியில் அழைத்துச் செல்லும்
11 வயதுப் பையனின் சாகசம்…
……..
……..
தேசிய நெடுஞ்சாலையில் –
காரில் அவனைக் கடந்து சென்ற சிலர்,
காரை நிறுத்தி வீடியோ எடுத்து, கொஞ்சம் பணமும்
கொடுத்து விட்டு சென்றிருக்கின்றனர்.
அவர்கள் எடுத்த காணொளி இது….!
இந்தப் பொடியனின் தன்னம்பிக்கையையும்,
தைரியத்தையும், விடாமுயற்சியையும்
பார்க்கும்போது, எதிர்கால இந்தியாவைப்பற்றி
நாம் கவலை கொள்ளத் தேவையில்லை
என்றே தோன்றுகிறது.
கொரோனாவால் அதிக பட்சம் நம்மை
என்ன செய்துவிட முடியும்..?
இதே நம்பிக்கையும், முயற்சியும், உழைப்பும்
நம் மக்கள் அனைவரிடமும் இருந்தால் –
பத்தே மாதங்களில் மீட்டெடுக்கலாம்
இந்தியப் பொருளாதாரத்தை…
.
——————————————————————————————————————————–
// இதே நம்பிக்கையும், முயற்சியும், உழைப்பும்
நம் மக்கள் அனைவரிடமும் இருந்தால் –
பத்தே மாதங்களில் மீட்டெடுக்கலாம்
இந்தியப் பொருளாதாரத்தை… //
ஆம். அரசியல்வாதிகளையும், ஏமாற்றும் அரசுகளையும்
தூர ஒதுக்கி விட்டு, மக்கள் தங்களைத் தாங்களே
நம்பி செயல்பட்டால், நிச்சயம் முடியும்.
மனதை மயக்கும் நெகிழச்செய்யும் காணொளி. அந்தப் பையன் வாழ்க்கை நல்லா இருக்கட்டும்.
இந்த அரசியல்வாதிகளை விடுங்கள். நம் வாழ்க்கை நம் கையில்தான். அவங்களை நம்பி இல்லை.