…
…
…
ஒரு காணொளி கிடைத்தது.. கீழே –
திருவாளர் வைரமுத்து இதைப் பேசியது
எப்போதோ – தெரியவில்லை…!!!
தன்னம்பிக்கையா, தற்பெருமையா அலட்டலா, திமிரா…???
“கருவாயன்” – தேவையா …?
அவமரியாதையான சொல்லை ஏன் கூற வேண்டும் பொதுவிழாவில்…?
இளையராஜா அவர்களுடன் ஏற்பட்ட மோதலுக்கு
முந்தைய காலமா… அல்லது பிந்தைய காலமா…?
விவரம் தெரிந்தவர் சொல்லலாம்.
…….
…….
.
———————————————————————————————————————————–
திமிர்
இது பச்சைத் திமிர் அல்லாமல் வேறேன்ன ?
இவர் தமிழ்த்திரையுலகில் நுழைந்தது 1980-ல்.
ஏற்கெனவே அங்கே கோலோச்சிக் கொண்டிருந்தவர்கள்
கண்ணதாசனும், வாலியும்; அதற்கு முன் புதுமைப்பித்தனும்.
பாரதிராஜாவிடம் இவர் சொன்னாராம்
தமிழ்த்திரையுலகில் பாடல்கள் துறை தான் சரியில்லை;
வாய்ப்புக் கொடு; நான் மாற்றிக் காட்டுகிறேன் என்று,.
ஆக கண்ணதாசன், வாலி, புதுமைப்பித்தன் ஆகியோர்
உதவாக்கரைகள் என்கிறாரா இந்த – வை ?
ஏன் சார் “முக்காபலா முக்காபலா” பாடல்
எழுதி தமிழுக்கு சேவை செய்தவர்
இந்த ஆசாமி தானே ?
ஐயோ… அது வாலி. இன்னொன்று, நாம் பாடலை மட்டும் பார்த்து, இவர்தான் எழுதினார் என்று சொல்ல முடியாது. பல சமயம் அது கூட்டு முயற்சி அல்லது மற்றவர்களுடன் ஒத்துப்போவதாக அமைந்துவிடும். வாலியே பலமுறை சொல்லியிருக்கிறார். இ.ராஜா பல்லவி சொல்லி தான் பிறகு சரணம் எழுதியிருக்கிறேன், நான் எழுதிய பாடலை பிறகு தன் அனுமதியோடு ஒரு சில வரிகள் வார்த்தைகள் மாற்றியிருப்பார்கள் என்று. ஏன்.. கமலஹாசன் ஒரு க வி தை எழுதி வாலியிடம் காண்பித்தபோது, அதுவே ஓகே..அதையே வைத்துக்கொள் என்று சொன்னவர் வாலி. திரையுலகில் ரொம்பவும் அட்ஜஸ்டபிளாகவும், மற்றவர்களையும் பாராட்டுவதாகவும் இருந்தால்தான் காலம் தள்ள முடியும். வைரமுத்து மாதிரி திமிரோடும், அரசியல் ப்ரோக்கர் என்ற நிலையில் மிரட்டுவதாகவும் இருந்தால், யாருமே மனதுக்குள் வையும் நிலைதான் இருக்கும்.
திமிர். தற்பெருமை. கவியரசரை பெயரிலாவது முந்த கவிப்பேரரசு பட்டம்.. கண்ணதாசன் பற்றி புகழ இளையராஜா, வாலி பற்றி புகழ இளையராஜா.. இவரை பற்றி புகழ இவரே சொல்ல வேண்டியிருக்கிறது! இவர் தான் ரஹ்மானை புகழ்ந்து கொண்டே இருக்கிறார். அவர் இவரை புகழ்வது போல தெரியவில்லை!
உலக மனித குலத்தை மொத்தமாக அழிக்க வெறும் 1 கிராம் எடையுள்ள கரோனா வைரஸ் போதுமென்று படித்தேன். இவ்வளவு மேலோட்டமான வாழ்க்கையில் திமிர் / தற்பெருமை.. எல்லாம் எதற்கு?
வைரமுத்து சந்தர்ப்பவாதி, அரசியல் ப்ரோக்கர் (கருணாநிதியிடம் நெருக்கமாக இருந்து பலன்கள் பெற்றவர், திரையுலகினருக்கு, அரசியல் ப்ரோக்கராக இருந்தவர்). அதைத் தவிர, தன்னை கூட்டங்களுக்கு அழைப்பவர்களிடம், பணம் பெற்றுக்கொள்வது மட்டுமல்ல, தன் புத்தகங்கள் 500-1000 என்று வாங்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துபவர். கருணாநிதியின் காலைப்பிடித்து பத்மஸ்ரீ வாங்கியவர் இவர். கருணாநிதியின் அருகாமையில் இருக்கும் இவரைப் பற்றித்தானோ கண்ணதாசன் முன்னமேயே எழுதியிருப்பாரோ ‘பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா செளக்கியமா’
ஒரு படத்தில் தான் ஒருவனே அனைத்துப் பாடல்களையும் எழுதணும் என்று இவர் நெருக்குவார் (அதற்கு அரசியல் தொடர்புகள் உதவிசெய்யும்). அப்படி ஒரு தடவை நடக்கவில்லை என்பதற்காக ரஜினியை கேவலமாக விமர்சித்தவர் வைரமுத்து. பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டவர் இவர். இவர் செய்த மற்றவற்றை இங்கு எழுதுவதைத் தவிர்க்கிறேன்.
இவரை திரையுலகில் யார் பாராட்டறாங்க என்று பாருங்க. எல்லாம் இவரோட சமூக ஆட்கள்தான்.