…
…
…
…
…
…
..
…
…
…….
இவர் அரசியல் சட்டம் படித்திருப்பாரா…???
….
…..
உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி
எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது-
யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
பதிவு: மே 25, 2020 19:37 PM
லக்னோ,
உத்தரப் பிரதேச மாநில தொழிலாளர்களை பிற
மாநிலங்களில் வேலைக்கு எடுக்கும் போது உத்தரப்
பிரதேச மாநில அரசிடமிருந்து முன் கூட்டியே
அனுமதி பெற வேண்டும் என்று அம்மாநில
முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்திருக்கும்
பேட்டியில் கூறியதாவது:-
உத்தரப்பிரதேச தொழிலாளர்கள் மாநிலத்திற்குள்
வேலை வாய்ப்பை பெறுவதற்கான ஏற்பாடுகள்
செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கான உத்தரவை
நான் அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளேன்.
மற்ற மாநிலங்களுக்கு உத்தரப்பிரதேச தொழிலாளர்கள்
தேவைப்பட்டால் அவர்கள் எங்களிடம் அனுமதி
பெற வேண்டும்.
சில கேள்விகள் இவர் முன் வைக்கப்படுகின்றன …..
1) இவர் அரசியல் சட்டம் படித்திருப்பாரா…?
இந்திய அரசியல் சட்டம், இந்தியர்கள் யாராக இருந்தாலும்,
எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பணிபுரியவோ,
வியாபாரம் செய்யவோ, சொத்துக்களை வாங்கவோ,
நிரந்தரமாக தங்கியிருக்கவோ உரிமை அளிக்கிறது என்கிற
விஷயம் இவருக்கு தெரியுமா இல்லையா…?
என்ன தான் முதல்வராக இருந்தாலும், இவர் போடும்
சட்டத்தின் மூலம் –
அரசியல் சட்ட விதிகளை எல்லாம் மாற்ற
முடியாது என்கிற விஷயம் இவருக்கு தெரியாதா …?
2) கொரொனா பாதிப்பிற்குப் பிறகு, இதுவரை 23 லட்சம்
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உத்திரப் பிரதேசத்திற்கு
திரும்பி இருக்கிறார்கள். இன்னும் பல லட்சக்கணக்கானவர்
வரவிருக்கின்றனர்; வந்துகொண்டிருக்கின்றனர்.
இவர்கள் அத்தனை பேருக்கும் இவரால் வேலை கொடுக்க
முடியுமா…?
3) இவர் அதிகாரிகளுக்கு உத்திரவுபோடுவதன் மூலம்
மட்டும் இத்தனை லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகி
விடுமா…?
4) உத்திரப்பிரதேசத்திலேயே தங்களுக்கு வேலை
கிடைக்குமென்றால், மொழி தெரியாத, தொலை தூர
மாநிலங்களுக்கு, குறைந்தசம்பளத்தில் கூலி வேலை செய்ய
பிள்ளை குட்டிகளோடு பயணம் செய்ய இந்த புலம்
பெயரும் மக்கள் எல்லாம் முட்டாள்களா…? அல்லது
பைத்தியக்காரர்களா..?
5) இந்த வாய்ச்சவடால் எல்லாம் எதற்காக…?
– பாவம் பிள்ளை குட்டிகளோடு நூற்றுக்கணக்கான
கிலோமீட்டர் தூரம் – பசி, தாகத்துடன் நடந்து வந்து
குவாரண்டைனில் கிடக்கும் அந்த புலம் பெயர்ந்த
தொழிலாளர்களை இன்னமும் ஏமாற்றவா….?
இந்த மக்களை சற்றும் அறியாத,
அவர்கள் பாஷை கூட புரியாத – அயல் மக்களுக்கு கூட
அவர்கள் நிலையைக் கண்டு – கண்களில் நீர் வருகிறது.
போதும்….தயவுசெய்து, உங்கள் வாய்ச்சவடாலை எல்லாம்
தேர்தல் நேரத்து கூட்டங்களுக்காக ஒதுக்கி வைத்து விட்டு –
இந்த அப்பாவி மக்களுக்கு சோறு போடுங்கள்,
இருக்க இடம் கொடுங்கள்; கையில் கொஞ்சம் காசு
கொடுங்களய்யா ….
உங்களுக்கு புண்ணியமாய்ப் போகும்.
.
——————————————————————————————————————————–
This is ONE of your BEST ARTICLES Sir.
6-7 ஆண்டுகளாக இங்கே சந்நியாசிகள்
மிகச்சிறந்த நடிகர்களோடு போட்டி
போடுகிறார்கள். அரசியல்வாதிகளோ
மிகச்சிறந்த பொய்யர்களோடு பொட்டி
போடுகிறார்கள். சந்நியாசியும் அரசியல்வாதியுமாக
ஒருவரே இருந்தால் கேட்க வேண்டுமா ?
தன்னுடைய உத்தர பிரதேச மாநிலத்தில் வேலை கொடுக்க வக்கில்லாத
இந்த சாமியார் அரசிடம் இனிமேல் உத்தரவு வாங்கித்தான் தொழிலாளர்கள்
வேறு மாநிலத்துக்கு இடம் பெயரவேண்டுமாம். இத்தனை நாள் இது
இவருக்கு தெரியாதா ? விவசாய கூலி மிகவும் குறைந்து சம்பளம் கட்டுப்படியாமல்தானே
இத்தனை பேர், மொழி தெரியாத மாநிலங்களுக்கு குடும்பத்துடன் வந்து
இப்போது கஷ்டப்படுகிறார்கள். உ பி மாநிலம் மட்டுமல்ல ,பீகார் ,ஜார்க்கண்ட் ,
ஒரிசா ,மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஒரு தொழில் வளர்ச்சியும் இல்லை.
///…உ. பி முதல்வர் கூறுவது சரியே. அவருக்கு உரிமை இருக்கிறது. வெளி மாநிலத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பது குறித்து ஏற்கனவே Inter State Migrant Labour Act 1978 என்று ஒன்று உள்ளது. அதன்படி, ஒரு மாநிலத்தின் அனுமதியின்றித் தொழிலாளர்களை வேறு மாநிலத்திற்கு வேலையில் எடுப்பது குற்றம்….///
– got the above reply from a civil service man (IAS), when i posted your article in one of my goups as link to your blog, Sir.
பொன்னிவளவன்,
உங்களுக்கு பதில் அளித்தவர் சரியான
புரிதல் இல்லாதவராக இருப்பார்…
இந்த மாதிரி, quora போன்ற தளங்களில்
வரும் விளக்கங்கள் எல்லாம் முற்றிலும் சரியானது
என்று எடுத்துக் கொள்ள கூடாது.
அங்கே பதில் அளிப்பவர்கள் அனைவரும்
நிபுணர்கள் அல்ல. நம்மைப்போன்ற
சாதாரணமானவர்களே.
அவர்களுக்குத் தெரிந்ததை சொல்கிறார்கள்
என்கிற அளவில் தான் அதை எடுத்துக்கொள்ள
வேண்டும்.
யாராவது உ.பி. மாநிலத்திற்குப் போய்,
அங்கேயிருந்து, வெளிமாநிலத்திற்கு
ஆள் எடுத்தார்கள் என்றால், அதை
கட்டுப்படுத்த உ.பி.அரசால் முடியும்.
ஆனால், ஒரு தொழிலாளி தன்னிச்சையாக
சென்னை வந்து, எதாவது ஒரு கடையில்,
கம்பெனியில், வேலைகேட்டு, கொடுத்தால் –
அதைத்தடுக்க உ.பிரதேசத்திலிருந்து
எந்த கொம்பராலும் தடுக்க முடியாது.
இந்தியாவிற்குள் எந்த மாநிலத்தில்
வேண்டுமானாலும் போய் தங்கலாம்,
வேலை செய்யலாம், வியாபாரம் செய்யலாம்,
தொழில் செய்யலாம், சொத்து வாங்கலாம்
என்பது அரசியல் சட்டம் இந்திய மக்களுக்கு
கொடுத்திருக்கும் அடிப்படை உரிமை.
இதற்கு மாறாக இயற்றப்படும் எந்த
சட்டமும் செல்லுபடி ஆகாது.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
உ.பி முதல்வர் கூறுவதன் சட்ட பாயிண்டுகள் (validity) தெரியவில்லை. ஆனால் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. (உ.பி. இருக்கும் லட்சணத்தில் இவங்களுக்கெல்லாம் வேலை கொடுப்பது இருக்கட்டும், இருக்கின்றவர்களுக்கே வேலை இல்லை) எதுக்கு இன்னொரு மாநிலம் வெளி மாநிலத் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கிறது (ஏஜெண்டுகள் மூலமாக). வெளிமாநில தொழிலாளின்னா லீவு போட மாட்டான், 16 மணி நேரம் உழைப்பான், கொடுத்த காசை வாங்கிக்கிட்டு சும்மா இருப்பான் என்ற ஒரே காரணம்தான். நம் மாநில மக்கள்னா சட்டம் பேசுவாங்க, குறிப்பிட்ட மணி நேரங்கள்தாம் வேலை வாங்க முடியும்., டபக்குனு லீவு போட்டுடுவாங்க இந்த migration for jobஐ முறைப்படுத்துவதன் மூலம் தொழிலாளர்களுக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்கும். ஆனால், competency என்பது முக்கிய criteriaஆக மாறும்போது அவங்களை அழைத்து வேலை கொடுக்கும் நிலை எப்படி இருக்கும்னு தெரியலை.
பிலிப்பைன்ஸ், அவங்க நாட்டு மக்கள் வெளி நாட்டுக்கு வேலைக்குப் போவதை முறைப்படுத்தியிருக்காங்க. அதன்படி குறைந்த பட்ச ஊதியம், செல்லும் இடத்தின் (கம்பெனி) க்ரெடிபிலிட்டி எல்லாவற்றையும் செக் பண்ணறாங்க. அவங்க எம்பஸியும் தன் நாட்டு மக்களுக்காக நிறைய உதவிகள் செய்யறாங்க, கடுமையா கண்காணிக்கறாங்க (நம் இந்திய எம்பஸிகள், எனக்குத் தெரிந்து எதற்கும் உபயோகமற்றவை. அவங்கள்லாம், ராஜாக்கள் மாதிரி இருப்பாங்க, நாம் அங்க போகும்போது நமக்கு உதவிகரமாக இருக்க மாட்டாங்க.. பிலிப்பைன்ஸ்ல நான் ரெசிடென்ஸ் பிலிப்பினோக்களுக்கு ஏர்போர்ட்டில் தனி வரிசை என்றெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பாங்க-நாட்டுக்கு பணம் அனுப்பறாங்கன்னு. இந்தியாவில் அந்த மாதிரி எதையும் செய்வது கிடையாது. இந்தியாவுக்குத் தெரிந்ததெல்லாம் அரசியல் வி.ஐ.பிக்களுக்கு சலாம் போடுவது ஒன்றுதான் )
//பிலிப்பைன்ஸ், அவங்க
நாட்டு மக்கள் வெளி நாட்டுக்கு
வேலைக்குப் போவதை
முறைப்படுத்தியிருக்காங்க. //
வழக்கம்போல் குழப்பபறீங்களே சார்.
வெளிநாட்டுக்கு வேலைக்கு போவதை
பற்றி இங்கே யார் பேசினார்கள் ?
உ.பி.மக்களை மற்ற மாநிலங்கள்
வேலைக்கு வைத்துக்கொள்வதைப்பற்றி
தானே இங்கே விவாதம் ?