…
…
…
பிபிசி தொலைக்காட்சி பேட்டியில்
சென்னை பல்கலைக்கழகத்தின், பொருளியல்
துறைத்தலைவரும், பொருளாதார நிபுணருமாகிய
ஜோதி சிவஞானம் புலன்பெயர் தொழிலாளர்களின்
இன்றைய நிலை, மற்றும் பொதுவான பொருளாதார
நிலை குறித்து தனது கருத்தினைச் சொல்கிறார்….
……
……
.
———————————————————————————————————
//நானே உங்களைத் தள்ளிவிட்டால் நீங்களாகவே பார்த்து நின்றுகொள்ளணும்// – இப்படி நிதியமைச்சர் சொன்னாரா? அல்லது இவர் தயாரித்துப் பேசுகிறாரா? அல்லது இப்படிப் பேசும்படி எந்தக் கட்சித் தலைவர் இவருக்கு அறிவுரை சொன்னார்?
//நார்மல் சந்தர்ப்பங்களில் மீன் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுக்கணும்// – இதைக் குறை சொல்பவர், இத்தனை வருடங்கள் அவர்களுக்கு மீன் பிடிக்கக்கற்றுக்கொடுக்காதவர்களைச் சாடுவது போலத் தெரியவில்லையே. நியாயவானாக இருந்தால், காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் இதுவரை மக்களை இலவசங்களுக்கு ஏங்கும் பிச்சைக்காரர்களாக வைத்திருந்தது, ஏன் தேர்தல் வெற்றிக்கும் அவர்கள் காசு கொடுத்து திருமங்கலம் ஃபார்முலாவைக் கொண்டுவந்து மக்களை ஏழைகளாகவே வைத்திருந்தார்கள், பாஜக, இப்போது அவர்களுக்கு மீன் பிடிக்கக்கற்றுக்கொடுக்கணும் அதே சமயம் அவர்களுக்கு தற்சார்பு தகுதி அடுத்த 2-3 ஆண்டுகளுக்குள், அல்லது அடுத்த 5 ஆண்டுகளுக்குள் வரும்வரை இலவசங்களைத் தொடரணும் என்று சொல்லியிருந்தால் இவர், நேர்மையான விமர்சகர். ஆனால் இவருக்குத்தான் பாஜகவை மட்டும் குறை சொல்லணும் என்ற அஜெண்டாதானே கொடுக்கப்பட்டிருக்கு.
அரசின் பொதுக் கொள்கை என்ன? இலவசம் (மின்சாரம் அல்லது எதுவானாலும்) கிடையாது. மார்க்கெட் ரேட்டில் வாங்கிக்கொள்ளுங்க. அரசு எவ்வளவு மானியம் தருகிறதோ அதனை வங்கிக்கணக்கில் செலுத்தும். இதில் என்ன தவறு? If you dont want to account but steal, you wont like this idea. எத்தனை போலி ரேஷன் கார்டுகள் எத்தனை வருடங்களாக எத்தனை கோடிகளை ஏப்பம் விட்டிருக்கிறது? அப்போதெல்லாம் இந்தப் போலி பொருளாதார நிபுணர்கள் எங்கே போயிருந்தார்கள்? ஏழைகளுக்காக இவர்கள் மோடி அரசு வந்த பிறகுதானே நீலிக்கண்ணீர் வடிக்க ஆரம்பிக்கிறார்கள். அதற்கு முன்னால் மக்களைப் பற்றி இவர்கள் கவலைப்பட்டதுபோலத் தெரியவில்லையே.
அரசு வெளியிலிருந்து கடன் வாங்கிக்கொள்ள, மத்திய அரசு நான்கு கண்டிஷன்கள் போடுகிறது என்று இவர் கம்ப்ளெயின் செய்கிறார். அந்த கண்டிஷன்கள் போடுவதில் என்ன தவறு? எதற்காக கடந்த 40 வருடங்களாக தமிழக அரசு வெளியில் கடன் வாங்கியது? அதன் காரணம் என்ன? என்ன என்ன வளர்ச்சித் திட்டங்களை அது செயல்படுத்தியது? குப்பைத் திட்டங்களில் ஊழல் செய்ய அந்த அந்த மாநில அரசு கடன் வாங்குமாம், அதனை மத்திய அரசு கட்டுப்படுத்தக்கூடாதாம். நல்ல லாஜிக்.
இந்தப் புதுப் பொருளாதார நிபுணர்களுக்கு நாடு, அதன் நலன் பற்றியெல்லாம் அக்கறை கிடையாது. எந்தக் கட்சிக்கு சார்பாக நாம் பேசலாம், அதனால் தங்களுக்கு என்ன என்ன லாபம் கிடைக்கும்., யாருடைய ஊதுகுழலாக நாம் செயல்படணும் என்பது நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள கட்டளை இவைகளிலேயே இவர்களின் கவனம் செல்கிறது.
புதியவன்,
நான் கேள்விகளை எழுப்பிய இடத்தில், அதற்கான
விளக்கங்களைச் சொல்லாமல், நீங்கள் இங்கே வந்து
இலவச மின்சாரத்தைப்பற்றி பேசினால் –
சந்தில் சிந்து பாடுகிறதாக எனக்குத் தோன்றினால்
அதில் தவறெதுமில்லை என்று நினைக்கிறேன்.
// அரசின் பொதுக் கொள்கை என்ன?
இலவசம் (மின்சாரம் அல்லது எதுவானாலும்)
கிடையாது. மார்க்கெட் ரேட்டில் வாங்கிக்கொள்ளுங்க.
அரசு எவ்வளவு மானியம் தருகிறதோ அதனை
வங்கிக்கணக்கில் செலுத்தும். இதில் என்ன தவறு?//
நான் இதைப்பற்றி விரிவாக எழுப்பிய கேள்விகளுக்கு
பதில் சொல்ல வேண்டிய இடத்தை விட்டு, இங்கே
சந்தடி சாக்கில் இலவச மின்சாரத்தைப்பற்றி
சொல்கிறீர்கள்.
இலவசமாக கொடுப்பது யார்…?
மாநில அரசா… அல்லது மத்திய அரசா…?
எப்படிக் கொடுப்பது என்பதை, கொடுப்பவர் தானே
தீர்மானிக்க முடியும்…?
அதே போல், ரேஷனை பாஜக அரசு வந்து
சரி செய்யவில்லை. தமிழகத்தில்,7 வருடங்களுக்கு
முன்னரே, ஜெயலலிதா அவர்கள் டிஜிடல் ரேஷன்
கார்டு முறையை அமல்படுத்த ஆரம்பித்தவுடன்
போலிகார்டுகள் எல்லாம் தன்னாலேயே முடங்கி
விட்டன.
நான் எழுப்பிய வினாக்கள் கீழே –
முடிந்தால் இவற்றிற்கு விளக்கம் சொல்லுங்கள்…
(கடன் அனுமதிக்கு நிபந்தனையா …? – அரசியல் சட்டம் அனுமதிக்கிறதா…? )
———————
– இந்த விஷ(ய)த்தின் தீவிரத்தை புரிந்துகொள்ளாத
சில நண்பர்களுக்கு சில கேள்விகளின் மூலம்
நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
அந்தந்த மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு
ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மாநில அரசுக்கு,
தன் வருமானத்திலிருந்து,
தனது மக்களுக்கு,
எத்தகைய உதவிகளைச் செய்ய வேண்டும் என்று
தீர்மானிக்கவோ, செயல்படுத்தவோ உரிமை
இருக்கிறதா இல்லையா…?
( அரசியல் சட்டப்படி இருக்கிறது…)
அதில் மத்திய அரசு தலையிட்டு,
நீ பொருளாக கொடுக்கக்கூடாது;
பணமாகக் தான் கொடுக்க வேண்டும் என்று சொல்ல
அரசியல் சட்டத்தின் எந்த விதியாவது அனுமதிக்கிறதா…?
இல்லை… இல்லை… இல்லவே இல்லை.
மத்திய அரசு, தான் கொடுக்க விரும்புவதை,
தனது வருமானத்திலிருந்து பணமாகவோ,
பொருளாகவோ – எப்படி வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
அதைத்தான் இப்போது செய்து வருகிறது.
அதை விட்டு விட்டு, மாநில அரசு, தன் மாநில மக்களுக்கு
மின்சாரத்தை இலவசமாகக் கொடுக்க விரும்பினால்,
அதை மத்திய அரசு எப்படி கட்டுப்படுத்த முடியும்…?
ஒருவேளை பேச்சுக்கு மத்திய அரசின் இந்த அதிகாரத்தை
ஏற்றுக் கொண்டால் –
நாளைக்கே –
ரேஷன் கடைகளில் மக்கள் முதலில்
காசைக் கொடுத்து அரிசியை விலைக்கு வாங்கிக்
கொள்ள வேண்டும். பிற்பாடு மாநில அரசு அதற்கீடான
பணத்தை அவர்கள் வங்கிக்கணக்கில் போட வேண்டும்
என்று சொன்னால் …..?
ஏற்பீர்களா…?
ஒருவேளை யாராவது இதையும் பாஜக மோகத்தில்
ஆம் என்று சொன்னால், அத்தகையோருக்கு
இன்னொரு கேள்வி…
இப்போது தமிழகத்தில் பள்ளிப்பிள்ளைகளுக்கு
கொடுக்கப்பட்டு வரும் இலவச பள்ளி புத்தகங்கள்,
நோட்டு புத்தகங்கள், ஷூ, bag போன்றவற்றை, முதலில்
பெற்றோர்கள் காசு போட்டு வாங்க வேண்டும்…
பிறகு அரசு அவர்கள் கணக்கில் பணமாகச் செலுத்தும்
என்றால் —
எத்தனை பெற்றோர்கள் அதைச் செய்வார்கள்…?
எத்தனை பிள்ளைகள் பள்ளிப்படிப்பை
பாதியில் கைவிட நேரிடும்…?
ஒருவேளை யாராவது இதையும் பாஜக மோகத்தில்
ஆம் என்று சொன்னால், அத்தகையோருக்கு
இன்னொரு கேள்வி …
இப்போது பள்ளிகளில் போடப்பட்டு வரும் இலவச
மதிய உணவை முதலில் மக்கள் காசு கொடுத்து
வாங்க வேண்டும் –
– அரசு பிற்பாடு, அதற்கீடான பணத்தை
அவர்கள் வங்கிக்கணக்கில் போட வேண்டும் என்று
சொன்னால்…
அதையும் ஏற்பீர்களா….?
அதற்கும் ஆமென்றால் –
போதும் நண்பர்களே….
இதற்கு மேல் சொல்ல எனக்கேதும் இல்லை…
WISH YOU ALL THE BEST
——————————————
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
உங்க பாயிண்டுகள் வேலிட். ஆனால் நீங்க பள்ளிக்குழந்தைகளுக்குக் கொடுப்பதையும் (உணவு, சைக்கிள் போன்றவை), பொதுவான ரேஷன் போன்றவற்றையும் ஒப்பிடுகிறீர்கள். அதே சமயம், ஏழைகள் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளுங்கள், மானியத்தை வங்கிக்கணக்கில் சேர்க்கிறேன் என்று சொல்வது, அபத்தம்தான். நான் சொல்வது, ஏழைகளுக்கு, எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு, இருக்க உருப்படியான இடம் இல்லாதவர்களுக்கு.
‘இலவச மின்சாரம்’ – இதில் எவ்வளவு ஊழல் இருக்கிறது என்பதைப் பற்றிய செய்திகளைப் படித்திருக்கிறேன். அரசு விவசாயிகள் செக்டாருக்கு வேறு விதமாக சலுகைகள் தரணும் என்றே நினைக்கிறேன்.
மாநில அரசு எவ்வளவு வேண்டுமானாலும் கடன் வாங்கிக்கொள்ளட்டும், மத்திய அரசு மாநில மக்களைப்பற்றிக் கவலைப்படக்கூடாது என்று சொல்வது என்ன நியாயம்? இங்கு கடன் வாங்கும் பணம், இலவசத்துக்கே செலவழிக்கப்படுகிறது என்று தோன்றவில்லையா?
புதியவன்,
// மத்திய அரசு மாநில மக்களைப்பற்றிக்
கவலைப்படக்கூடாது என்று சொல்வது
என்ன நியாயம்?
இங்கு கடன் வாங்கும் பணம்,
இலவசத்துக்கே செலவழிக்கப்படுகிறது //
என்று கேட்கிறீர்கள்.
அரசியல் சட்டம் மிகுந்த யோசனை,
ஆலோசனைகளுக்குப் பிறகு
உருவாக்கப்பட்டது.
மத்திய அரசின் பொறுப்புகள்,
உரிமைகள், கடமைகள்; அதே போல்
மாநில அரசுக்கும் தீர்மானிக்கப்பட்டு
வரையறுக்கப்பட்டிருக்கிறது.
இதன் வேலையில் அதுவோ,
அதன் வேலையில் இதுவோ
தலையிடக்கூடாது;
பாகிஸ்தான் பிரதமரை, உங்கள்
மாநில முதல்வர் திருவாளர்
எட்டியூரப்பா போருக்கு அழைத்தால்
ஏற்றுக் கொள்வீர்களா ?
அரசியல் சட்டப்படி பார்த்தாலே,
மத்திய அரசு மாநில அரசுகளின்
எஜமான் அல்ல;
the powers between the Centre
and States are clearly demarcated
in the Constitution.
மாநில அரசு தனது வருவாயை
எப்படி செலவழிக்க வேண்டும்
என்று மத்திய அரசு தீர்மானிக்க
வேண்டும் என்று சொல்கிறீர்களே;
ஒரு பேச்சுக்காக, மாநிலத்தில்
பாஜகவும் – மத்தியில் காங்கிரசும்
ஆட்சியில் இருந்தால் – நீங்கள்
இப்படி பேசுவீர்களா… ?
தங்கள் மாநில வருவாயை,
தங்கள் மாநில மக்களுக்கு
எந்த விதத்தில் செலவழிப்பது
என்று தீர்மானிப்பது அந்தந்த மாநில
அரசுகளின் உரிமை.
மத்திய அரசு தனது வருமானத்தை
நியாயமான வழியில் செலவிடுவதைப்
பற்றி தீர்மானித்தால் போதுமானது.
மாநில அரசு தன் வேலையை
சரிவரச் செய்யவில்லையென்றால்,
அடுத்த தேர்தலில் அந்த மாநில
மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
உங்களுக்கும், உங்கள் கட்சிக்கும்
ஆசை இருக்கலாம் தமிழ்நாட்டில்
தாசில் பண்ண. 🙂 🙂
ஆனால், தமிழக மக்கள் அதற்கு
அதிகாரம் கொடுக்கவில்லை என்பதை
நினைவில் கொள்ள வேண்டும்.
” உங்க பாயிண்டுகள் வேலிட் ”
என்று சொன்னீர்கள்; அதோடு
முடிந்தது. மீண்டும் ஏன் மீசையில்
மண் ஒட்டவில்லையென்று
வாதம் ?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
//உங்கள் கட்சிக்கும் ஆசை இருக்கலாம் தமிழ்நாட்டில் தாசில் பண்ண.// – ஹா ஹா ஹா…. என்னுடைய கட்சி இரட்டை இலைதான். அது என்றும் மாறப்போவதில்லை (என நினைக்கிறேன்).
பாஜக, காங்கிரஸைவிட ஆயிரம் மடங்கு ஹிந்துக்களுக்கான கட்சி. அதிலும் எனக்குச் சந்தேகம் இல்லை.
//பாகிஸ்தான் பிரதமரை, உங்கள் மாநில முதல்வர் திருவாளர்
எட்டியூரப்பா போருக்கு அழைத்தால் ஏற்றுக் கொள்வீர்களா ? // – சம்பந்தமே இல்லாத பாயிண்டாக இருக்கிறது. நம்ம ஊர்லதான் இந்தக் கூத்துகள் நடக்கும் (தனியாக ஒரு கவுன்சிலர் தேர்தலில்கூட வெற்றி பெற முடியாத வைக்கோல் கோபால்சாமி, திருமா ஒரு நாட்டின் அதிபரை/பிரதமரை தரக்குறைவாகப் பேசுவது, வாய்ச்சவடாலுக்கு அழைப்பது என்பதெல்லாம்).
//மாநிலத்தில் பாஜகவும் – மத்தியில் காங்கிரசும்// – இதைத்தான் நாம் கண்டோமே.. ஜெ தலைமையிலான அரசு வேண்டுகோளை உதாசீனப்படுத்தி, மத்திய கிரிட்டிலிருந்து மின்சாரம் தர முடியாது என்று காங்கிரஸ் சாக்குப்போக்குச் சொன்னதை (திமுகவின் அழுத்தத்தால்). அப்போது அதை ஏற்றுக்கொண்டவர்கள் (நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள் என்று சொல்லவில்லை), இன்று பாஜகவைப் பற்றிப் பேசுவதை எப்படி ஏற்க முடியும்?
//உங்களுக்கும், உங்கள் கட்சிக்கும் ஆசை இருக்கலாம் தமிழ்நாட்டில்
தாசில் பண்ண// – நீங்கள் காங்கிரஸ் காரர் என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டால், நான் பாஜக (மத்தியில்) என்று ஒத்துக்கொள்வேன். நீங்கள் காங்கிரஸ் அபிமானி என்று சொன்னால், நான் பாஜக அபிமானி. நீங்க பாஜக எதிர்ப்பாளன் என்று சொன்னால் நான் ஆதரவாளன். அவ்ளோதான் விஷயம். நான் நாட்டை விற்ற, ஊழலின் கரைகாணாத உச்சத்தைத் தொட்ட காங்கிரஸ்/திமுக கும்பலுக்கு எதிர்ப்பாளன்.
புதியவன்,
மேற்கொண்டு வாதம் வேண்டாமென்று
தான் நினைத்தேன்.. ஆனால், உங்கள்
வார்த்தைகள்சவாலுக்கு அழைக்கின்ற
போது நான் எப்படி நகர்ந்து போக
முடியும்…?
// நீங்கள் காங்கிரஸ் காரர் என்று
வெளிப்படையாக ஒத்துக்கொண்டால்,
நான் பாஜக (மத்தியில்) என்று
ஒத்துக்கொள்வேன்.//
மீண்டும் மீண்டும் கதை பேசுகிறீர்கள்.
திசை திருப்புகிறீர்கள்…
கடந்த 10 வருடங்களில், நான் எந்தவொரு
இடுகையிலாவது காங்கிரசை ஆதரித்து
எழுதி இருக்கிறேனா…? இது உங்களுக்கு
நன்றாகத் தெரிந்திருந்தும், உங்கள்
பாஜக ஆதரவு முகத்திற்கு ஒரு முகமூடி
தேவைபடுவதால் இதை எழுதுகிறீர்கள்.
என் இந்த ஜென்மத்தில்,
காங்கிரஸ், பாஜக என்றல்ல –
எந்தவொரு –
அரசியல் கட்சிக்கும் நான் அடிமையாக
மாட்டேன் –
நீங்கள் எந்த கட்சி அனுதாபியாக
வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போங்கள்.
ஆனால், உங்கள் முகமூடியாக என்னை
நீங்கள் பயன்படுத்த முடியாது.
போதுமா…?
வழக்கம்போல், நான் எழுப்பிய முக்கிய
பாயிண்டுக்கு பதில் சொல்லாமலே,
திசை திருப்புகிறீர்கள்.
———————————————–
நான் எழுதியிருந்தது –
// தங்கள் மாநில வருவாயை,
தங்கள் மாநில மக்களுக்கு
எந்த விதத்தில் செலவழிப்பது
என்று தீர்மானிப்பது அந்தந்த மாநில
அரசுகளின் உரிமை. //
//அரசியல் சட்டம் மிகுந்த யோசனை,
ஆலோசனைகளுக்குப் பிறகு
உருவாக்கப்பட்டது.
மத்திய அரசின் பொறுப்புகள்,
உரிமைகள், கடமைகள்; அதே போல்
மாநில அரசுக்கும் தீர்மானிக்கப்பட்டு
வரையறுக்கப்பட்டிருக்கிறது.
இதன் வேலையில் அதுவோ,
அதன் வேலையில் இதுவோ
தலையிடக்கூடாது; //
——————————————————
தங்கள் மாநில வருவாயை,
தங்கள் விருப்பப்படி செலவழிப்பது
மாநில அரசின் அரசியல்
சட்டப்படியான உரிமை;
மத்திய அரசு தலையிடுவது தவறு….
……………..
இந்த பிரச்சினைகள் குறித்த விவாதம்
துவங்கியதே இதில் தானே…?
பின் இதைப்பற்றி சொல்லாமல்
நழுவினால் எப்படி…?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
புதியவன் சொல்கிறார்
“//உங்கள் கட்சிக்கும் ஆசை இருக்கலாம் தமிழ்நாட்டில்
தாசில் பண்ண.//
பா ஜ க தமிழ்நாட்டில் இதைத்தான் செய்கின்றது .
தேர்தலில் நின்று , ஒட்டு வாங்கி , பதவிக்கு
வந்து – என்னத்துக்கு ?
குருமூர்த்தி , எச் ராஜா ,மற்றும் பலர் .நேராக
அதிகாரம் (அ ) தாசில் செய்ய ஆசை .
இவர்கள் யாரும் தேர்தலில் நின்றதில்லை .
அப்புறம் யாரும் கேள்வியும் கேட்கக் கூடாது .
எச் ராஜா சொல்வதை பாருங்கள்