…
…
…
ஆனந்த் ஸ்ரீநிவாசனின் இந்த பேட்டியை
பார்க்கும்போது தான் அநியாயமாக
நினைவிற்கு வந்து தொலைகிறது…
ஆமாம் – நம்ம ஊர் அரசுகள் எல்லாம் கருப்புப்பணத்தை
ஸ்விஸ் வங்கிகளிலிருந்து கொண்டு வருவது
பற்றி ஒரு காலத்தில் சீரியசாக பேசிக்கொண்டிருந்தார்களே…
அதெல்லாம் யாருக்காவது நினைவிருக்கிறதா…?
மக்களின் மறதி….
அரசியல்வாதிகளின் வரப்பிரசாதம்…!!!
பாக்கியம்…!!!
எதிர்கால முதலீடு…!!!
” நமாமி ஸ்விஸ் பேங்க் பாத பங்கஜம்…”
(என்ன – ஒன்றும் புரியவில்லையா…?
அதான் இந்த திட்டத்தின் பெயர்… 🙂 🙂 🙂
இப்படி புரியாதபடி பெயர் வைப்பது தானே
இன்றைய நடைமுறை…? )
……………
……………
.
———————————————————————————————————————————-
ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது மிக மிக ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கம்.
இதனை பாஜக வெறும் அரசியல் பிரச்சாரமாகத்தான் செய்துள்ளது. அவர்களுக்கு கருப்புப் பணத்தை ஒழிக்கும் எண்ணமோ அல்லது திண்ணமோ இல்லை திருடர்களைக் காட்டிக்கொடுக்கும் எண்ணமோ சட்டத்தின் முன் நிறுத்தும் எண்ணமோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவர்கள் இதுவரை செய்தது எல்லாமே (இந்த கருப்புப் பண விஷயத்தில்) வெறும் அரசியல்தான். (இதற்கு உதாரணங்கள் ஏராளம். ஏராளம். In fact, ஊழல்வாதிகளை தப்புவிப்பதே பாஜக அரசுதான். உதாரணம் லலித் மோடி. ஒரு பானைக்கு ஒரு சோறு பதம்)
அருமையாக நெற்றிப்பொட்டில் அடிப்பது போல ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லியிருக்கிறார். பகிர்வுக்கு நன்றி.