…
…
…
கடந்த 101 வருடங்களுக்கு முன், 1919-ல் – spanish flu
என்கிற தொற்று நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானவர்கள் மடிந்தனர்.
பல லட்சக்கணக்கானவர்கள் நோயால் தவித்தனர்.
பயமும், துயரும் உலகம் முழுவதையும் பாதித்தது.
இப்போது 101 வருடங்களுக்குப் பின், அதே போல்,
கொரொனா வைரசால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு
இருக்கிறது.
முன்பை விட இப்போது பயணங்கள் அதிகம், விமான
போக்குவரத்து அதிகம் என்பதால், அதிக நாடுகளில்
மிக வேகமாக பரவி விட்டது.
1919-ஆம் ஆண்டு spanish flu -வால் உலகம்
பாதிக்கப்பட்டபோது வெளியான புகைப்படங்கள்
சில கீழே –
இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால்,
இந்த 101 வருடங்களில், இந்த மாதிரி வைரஸ் கிருமிகளை
கட்டுப்படுத்தும் முறைகளில் நாம் எந்த விதத்திலும்
முன்னேறவில்லை.
அப்போதே – இதே மாதிரி –
லாக்-டவுன், கட்டாய முகக்கவசம் (மாஸ்க்),
பள்ளிகள், தேவாலயங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள்
திரையரங்கங்கள் மூடல், போக்குவரத்து நிறுத்தம்,
வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்,
10 பேருக்கும் மேல் ஒரு இடத்தில் கூடக்கூடாது
என்று எச்சரிக்கை;
கடைகளுக்கு போகாதீர்கள்; போன் மூலம்
தேவையானதை பெறுங்கள் என்று அறிவுறுத்தல்…?
பெரிதாக விஞ்ஞானத்தில் சாதித்து விட்டோம்
என்று பெருமையடித்துக் கொள்கிறோம்.
சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் ராக்கெட் விடுகிறோம்…
அடுத்து மனிதனையும் அனுப்புவோம் என்று
பீற்றல் வேறு…
இதெல்லாம் சாதனையே அல்ல – வேதனை…
எதில் கவனம் செலுத்த வேண்டுமோ – அதில் கவனம்
செலுத்தத் தவறி விட்டது மனித குலம்…..
காலமும், விஞ்ஞானமும் எந்தவிதத்தில் நம்மை
மாற்றி இருக்கின்றன….?
மனித குலம், நோயினாலும், பசி, பட்டினியாலும்
செத்து விழுந்துகொண்டிருக்கும்போது,
அணுகுண்டு வெடிப்பதும், ராக்கெட் விடுவதும்
பெருமைப்படத்தக்க சாதனைகளா…?
சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் ராக்கெட்
விட முடிந்த நம் விஞ்ஞானிகளால், ஒரு கொள்ளை
நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க வக்கில்லை;
பின் சாதனை என்று பீற்றிக்கொள்ள என்ன இருக்கிறது
இங்கே…?
லட்சக்கணக்கில் மக்கள் செத்து விழுகிறார்கள்;
இந்த நோயிலிருந்து மக்களை காப்பாற்ற வக்கில்லாத
விஞ்ஞான முன்னேற்றம் எதற்கு லாயக்கு…?
எந்த விதத்தில் உசத்தி….?
ராக்கெட் விட்டால், அணுகுண்டு வெடித்தால் –
அதனால் சாதாரண மக்களுக்கு என்ன பயன்….?
மக்களுக்கான – விஞ்ஞானத்தில்
மனித குலம் எப்போது ஈடுபாடு காட்டப்போகிறது…?
நோயில்லாத, பசி, பட்டினி இல்லாத – ஒரு உலகத்தை
உருவாக்குவதில் நாம் எப்போது அக்கரை
காட்டப்போகிறோம்…?
…….
…
…
…
…
…
…
…
…
…
.
—————————————————————————————————————————————-
இந்தச் செய்தியும் சில படங்களும் ஓரிரு மாதங்களுக்கு முன்பே வாட்சப்பில் வந்தது.
உலகின் அரசாங்கங்கள், தேவையில்லாத ஆராய்ச்சிக்கு பணத்தைச் செலவு செய்கின்றன. தேவையானவற்றை கட்டுப்படுத்தாமல், மக்களுக்குப் பயன் உள்ளதாகச் செய்வதில்லை (கல்வி, மருத்துவம் போன்றவை). இது அனேகமாக எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.
ஒரு ராக்கெட் அனுப்பும் செலவில், 50 இலவச மருத்துவமனை அமைக்கலாம் என்றால், அதனைச் செய்வதில்லை. பெர்சனலா, செவ்வாயில் தண்ணீர் இருந்தால் என்ன, வெந்நீர் இருந்தால் என்ன. அதற்கு எதற்கு இவ்வளவு செலவு செய்வது? அந்தக் காசை, வறுமைக்கோட்டுக் கணக்கிற்கே வரமுடியாத படு ஏழைகளுக்குச் செலவு செய்யக்கூடாதா?
//ஒரு கொள்ளை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க வக்கில்லை;// வைரஸை ரிலீஸ் செய்தவர்களே இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லைனு சொல்றாங்க. அமெரிக்கா போன்ற மேற்கத்தைய நாடுகளிடம் இல்லாத வசதியா? ஆனா மருந்து கண்டுபிடித்து அதை வேக்ஸின் அளவு செயலில் கொண்டுவர குறைந்தது ஒரு வருடத்துக்கு மேல் ஆகும் என்று நினைக்கிறேன். அதற்குள் புது வைரஸை கண்டுபிடித்து மார்க்கெட்டில் விடாமல் இருக்கணும்.
ஐயா, சாதாரண பாமரர்கள் புலம்புவது போல் உள்ளது நீங்கள் கூறுவது. மருத்துவ விஞ்ஞானம் வான்வெளி விஞ்ஞானத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இப்படி எடுத்துக்கொள்ளலாமா ? வான்வெளி விஞ்ஞானம் சாதித்த அளவுக்கு மருத்துவ விஞ்ஞானம் சாதிக்கவில்லை என்று ? மேலும் புதிய கிருமிகளை இனம் கண்டுகொண்ட பின்பே அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இயலும். நாம் எப்படி அடுத்த 5, 10 ஆண்டுகளுக்கு வரப்போகும் நோய்களை அனுமானிக்க முடியும் ? நமது மருத்துவத்துறையும் நல்ல முன்னேறிய நிலையில் உள்ளதென்றே நான் நம்புகிறேன்.