கடன் அனுமதிக்கு நிபந்தனையா …? – அரசியல் சட்டம் அனுமதிக்கிறதா…?


மாநில அரசுக்கு, தனது கடன் வரம்பை
அதிகரித்துக் கொள்ள அனுமதி கொடுக்க வேண்டுமானால்,

விவசாயிகளுக்கான இலவச மின்விநியோகத்தை
தமிழக அரசு நிறுத்த வேண்டுமென்று
மத்திய அரசு நிபந்தனை விதிப்பது,

நியாயப்படி சரியா..?
தர்மப்படி சரியா…?
மாநில அரசின் அதிகாரங்களில் குறுக்கிடல் அல்லவா…?

இது அரசியல் சட்டப்படி செல்லுபடியாகுமா…?

இது குறித்த அரசியல் சட்ட விதி – மத்திய அரசு,
தான் சொல்வதையெல்லாம் மாநில அரசு
கேட்கவேண்டுமென்று கண்டிஷன் போட்டு –
அனுமதி கொடுக்கலாமென்று சொல்லவில்லையே…?

அரசியல் சாசன விதிகளுக்கு முரணானது என்று
யாராவது நீதிமன்றத்திற்கு சென்றால்….?

….

….

பின் குறிப்பு –

சாதாரணமாக மத்திய அரசுக்கு எதிராக கருத்து எதையும்
தெரிவிக்கும் வழக்கம் இல்லாத தமிழக முதல்வர் கூட –
இந்த விஷயத்தில் தன் எதிர்ப்பைக் காட்டியுள்ளார்.

“தமிழ் நாடு குறிப்பாக மின் விநியோகத்தில் ஏற்கெனவே
செய்துள்ள சீர்திருத்தங்கள், அரசியல் ரீதியாக முக்கியமானவை.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து
செய்வதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது.

மேலும், மானியம் வழங்குவதை மாநில அரசிடமே விட்டுவிட
வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யும்
யோசனையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

இது எங்களுடைய நிலைப்பாடு என்பதால் மானியம் வழங்கும்
விவகாரத்தை மாநில அரசுகளிடமே ஒப்படைத்து விட வேண்டும்”
என்று வலியுறுத்தி இருக்கிறார்.

மத்திய அரசு, இதை வலியுறுத்துவதன் மூலம் ஒரே ஒரு விஷயம்
தான் உறுதியாகிறது.

கொரோனா விஷயத்தில், மத்திய அரசு நேரடியாக மக்களுக்கு
இலவச உதவிகளைச் செய்யாது.
மாநில அரசுகளையும் செய்ய விடாது.

அதை மீறி, கடன் வாங்கியாவது மாநில அரசுகள்
மக்களுக்கு உதவி எதுவும் செய்ய நினைத்தால், தன்னுடைய
தயவு இல்லாமல் அதைச் செய்ய முடியாது.

அப்படி செய்யப்படும் உதவிகளுக்கு பதிலாக இலவச மின்சாரம் ரத்து
என்கிற தண்டனையை மக்கள் அனுபவிக்க வேண்டும்.

மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் இந்த உத்திரவை
எத்தனை மாநிலங்கள் ஏற்கப்போகின்றன…?
ஒருவேளை பாஜக ஆளும் மாநிலங்கள் ஏற்கலாம்.

ஏற்கட்டும்… விளைவுகளை அனுபவிக்கட்டும்.
முன்பு மொரார்ஜி தேசாய் சொன்னது
நினைவிற்கு வருகிறது.

“விநாசகாலே விபரீத புத்தி…”

இதன் அர்த்தம் நம்மை விட, மத்தியில் இருப்பவர்களுக்கு
நன்றாகவே புரியும்.

———————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to கடன் அனுமதிக்கு நிபந்தனையா …? – அரசியல் சட்டம் அனுமதிக்கிறதா…?

 1. K. Ganapathi Subramanian சொல்கிறார்:

  Dear sir,
  Whether the state has authority to borrow money beyond a limit without consent or permission from Central govt is a separate question. The central government utilising this opportunity to insist on the state to remove free electricity scheme also seems arm twisting.
  But , as you may remember very well, Jayalalitha actually introduced the scheme of fixing electricity Meters for all farm lands, farmers paying the charges upfront and government reimbursing it thru bank account in 2001. This was a first Direct Benefit Transfer scheme by any government if my memory is right. This in my oinon, definitely helps every body as the farmers may be indirectly forced to use energy efficient motors, pumpsets and will also help control the pilferage of electricity to some extent. She withdrew the scheme, when she lost the MP election in 2004.
  K. Ganapathi Subramanian

 2. paiya சொல்கிறார்:

  இலவச மின்சாரத்தை
  தடை செய்கிறதா மத்திய அரசு.??

  உண்மையில் அப்படி ஒரு திட்டம்
  மத்திய அரசுக்கு இல்லவே இல்லை.

  அப்படி என்றால் உண்மைதான் என்ன.??

  அதற்கு முன்பு இலவச
  மின்சாரம் ஏன் கொடுக்கப்பட்டது.??

  பாசனங்களில் ஆற்று வாய்க்கால் பாசனம் உண்டு அடுத்து கிணற்று பாசனம் உண்டு.

  ஆற்று நீர் செல்ல முடியாத இடங்களின் கிணறுகள் தோண்டப்பட்டு அதில் இருந்து
  நீர் இறைத்து விவசாயம் செய்வர்.

  அவ்வகை மக்களுக்கு நீர் இறைக்கும் மின் மோட்டாருக்கு இலவசமாக தமிழக அரசு மின் வினியோகம் செய்து வந்தன.

  இதுவரைக்கும் சரி.

  ஆனால் ஒரு கட்டத்தில் இலவசமாக மின்சாரம் பெரும் விவசாயிகள் தங்கள் நிலத்து இறைத்தது போக அருகில் இருக்கும் வயலுக்கு இலவச மின்சாரத்தை பயன்படுத்தி நீர் இறைத்து வந்தனர்.

  இலவசமாக பெறக்கூடிய மின்சாரத்தை ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் ஓட்டினால் இவ்வளவு என்று…

  வருவாய் ஈட்டுவதில் முனைப்பு காட்டியதாலும் கணக்கு வழக்கில்லாமல் மின்சாரம் விரையம் ஆனதாலும்…

  அந்த இழப்பை சரி கட்ட பொதுமக்களாகிய நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு கட்டணம் உயர்த்த வேண்டிய கட்டாயம்.

  தற்பொழுது மின்சார வரைவு கொள்கையில் முதற்கட்டமாக மத்திய அரசு இலவச மின்சாரம் பெறுபவர்களுக்கு மீட்டர் பொறுத்த வலியுறுத்துகிறது.

  அடுத்து மீட்டர் பொருத்தப்பட்ட விவசாயிடம் இருந்து அவர் பயன்படுத்திய மின்சாரத்திற்கு உண்டான கட்டணத்தை வசூல் செய்து மீண்டும் அவர் வங்கி கணக்கிலேயே வரவு வைக்க வேண்டும் என்பதே திட்டம்.

  எங்கே தங்கள் மின்சார திருட்டு குட்டு வெளிப்பட்டு விடுமோ இவ்வளவு நாள் திருடி சம்பாதித்த தொகை இனி பெற முடியாது என்கிற ஆயாசத்தால் மத்திய அரசு இலவச மின்சாரத்தை தடை செய்கிறது என்று வெற்று கூச்சல் விடுகின்றனர்.

  இதை ஒழுங்கு படுத்துவதன் மூலம்
  ஒரு விவசாயி என்ன HP மோட்டார் பயன்படுத்துகிறார்…

  அதன் மூலம் அவர் நிலத்திற்கு உண்மையில் பயன் படுத்தும் மின்சாரம் எவ்வளவு என்கிற உண்மை தெரிய வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.

  எப்படி கேஸ் சிலிண்டர் மானியத்திற்கு ஆதார் மூலம் உண்மை பயனாளர் கண்டறிய பட்டு அவர்கள் அனைவர்க்கும் மானிய தொகையை…

  அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தி கோடி கணக்கான போலி கணக்குகளை ஒழித்து விரயத்தை தடுத்தார்களோ…

  அது போலவே இலவச மின்சாரத்திலும் போலிகளை கண்டறிந்து விரையத்தை தடுக்கவே இந்த திட்டம்.

  இலவசம் மின்சாரத்திற்கு
  தடை என்பது வெற்று கூச்சல்.!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   இந்த விஷ(ய)த்தின் தீவிரத்தை புரிந்துகொள்ளாத
   சில நண்பர்களுக்கு சில கேள்விகளின் மூலம்
   நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

   அந்தந்த மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு
   ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மாநில அரசுக்கு,

   தன் வருமானத்திலிருந்து,
   தனது மக்களுக்கு,
   எத்தகைய உதவிகளைச் செய்ய வேண்டும் என்று
   தீர்மானிக்கவோ, செயல்படுத்தவோ உரிமை
   இருக்கிறதா இல்லையா…?
   ( அரசியல் சட்டப்படி இருக்கிறது…)

   அதில் மத்திய அரசு தலையிட்டு,
   நீ பொருளாக கொடுக்கக்கூடாது;
   பணமாகக் தான் கொடுக்க வேண்டும் என்று சொல்ல
   அரசியல் சட்டத்தின் எந்த விதியாவது அனுமதிக்கிறதா…?

   இல்லை… இல்லை… இல்லவே இல்லை.

   மத்திய அரசு, தான் கொடுக்க விரும்புவதை,
   தனது வருமானத்திலிருந்து பணமாகவோ,
   பொருளாகவோ – எப்படி வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
   அதைத்தான் இப்போது செய்து வருகிறது.

   அதை விட்டு விட்டு, மாநில அரசு, தன் மாநில மக்களுக்கு
   மின்சாரத்தை இலவசமாகக் கொடுக்க விரும்பினால்,
   அதை மத்திய அரசு எப்படி கட்டுப்படுத்த முடியும்…?

   ஒருவேளை பேச்சுக்கு மத்திய அரசின் இந்த அதிகாரத்தை
   ஏற்றுக் கொண்டால் –

   நாளைக்கே –

   ரேஷன் கடைகளில் மக்கள் முதலில்
   காசைக் கொடுத்து அரிசியை விலைக்கு வாங்கிக்
   கொள்ள வேண்டும். பிற்பாடு மாநில அரசு அதற்கீடான
   பணத்தை அவர்கள் வங்கிக்கணக்கில் போட வேண்டும்
   என்று சொன்னால் …..?

   ஏற்பீர்களா…?

   ஒருவேளை யாராவது இதையும் பாஜக மோகத்தில்
   ஆம் என்று சொன்னால், அத்தகையோருக்கு
   இன்னொரு கேள்வி…

   இப்போது தமிழகத்தில் பள்ளிப்பிள்ளைகளுக்கு
   கொடுக்கப்பட்டு வரும் இலவச பள்ளி புத்தகங்கள்,
   நோட்டு புத்தகங்கள், ஷூ, bag போன்றவற்றை, முதலில்
   பெற்றோர்கள் காசு போட்டு வாங்க வேண்டும்…
   பிறகு அரசு அவர்கள் கணக்கில் பணமாகச் செலுத்தும்
   என்றால் —

   எத்தனை பெற்றோர்கள் அதைச் செய்வார்கள்…?
   எத்தனை பிள்ளைகள் பள்ளிப்படிப்பை
   பாதியில் கைவிட நேரிடும்…?

   ஒருவேளை யாராவது இதையும் பாஜக மோகத்தில்
   ஆம் என்று சொன்னால், அத்தகையோருக்கு
   இன்னொரு கேள்வி …

   இப்போது பள்ளிகளில் போடப்பட்டு வரும் இலவச
   மதிய உணவை முதலில் மக்கள் காசு கொடுத்து
   வாங்க வேண்டும் –
   – அரசு பிற்பாடு, அதற்கீடான பணத்தை
   அவர்கள் வங்கிக்கணக்கில் போட வேண்டும் என்று
   சொன்னால்…

   அதையும் ஏற்பீர்களா….?

   அதற்கும் ஆமென்றால் –
   போதும் நண்பர்களே….
   இதற்கு மேல் சொல்ல எனக்கேதும் இல்லை…

   WISH YOU ALL THE BEST

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. புவியரசு சொல்கிறார்:

  பாஜக அரசு என்ன செய்தாலும்
  யோசிக்காமலே ஜால்ரா அடிப்பது
  இதுபோன்ற சிலருக்கு வாடிக்கையாகி
  விட்டது. தலைவர் பெரைச் சொன்னாலே
  உணர்ச்சி வசப்பட்டு பக்திப்பரவசமாகி
  விடுபவர்கள் நியாயங்களை பார்ப்பது
  எங்கே ? போதை தலைக்கேறி
  உளற ஆரம்பித்து விடுபவர்கள் எல்லாம்
  விஷயம் தெரிந்து தான் பேசுகிறார்களா ?
  நிச்சயமாக இல்லை; பாஜக அட்மினால்
  ஃபார்வர்டு செய்யப்படும் உருவாக்கப்பட்ட
  செய்திகளை தங்கள் சுயபுத்தியை
  பயன்படுத்தி ஆராயாமலே எல்லா
  இடத்திலும் மீண்டும் மீண்டும் கொண்டு
  செல்கிறார்கள். இவர்கள் கொரோனாவை
  விட மோசமான கடத்திகள்.

  தோழர் பையா போன்றவர்கள் முதலில்
  செய்தியை தெளிவாக புரிந்து கொள்ள
  வேண்டும். அது உருவான பின்னணியை
  தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு
  கருத்து சொல்ல முற்பட வேண்டும்.
  மத்திய அரசு இதற்கான சட்டத்தையே
  இன்னமும் நிறைவேற்றவில்லை.
  இன்னமும் பாராளுமன்றத்தில்
  விவாதிக்கப்படாத, நிறைவேற்றப்படாத
  ஒரு சட்டத்தை அமல்படுத்தினால் தான்,
  மாநில அரசுகளின் கடன்வரம்பை உயர்த்த
  முடியும் என்று மத்திய அரசு
  சொல்வது எந்த விதத்தில் நியாயம் ?

  மாநில அரசுகள் மத்திய அரசின்
  அடிமைகளா ? இதுவரை மாநில
  அரசுகளின் பொறுப்பில் இருந்துவந்த
  மின்சாரத்தை மத்திய அரசு தன் வசம்
  எடுத்துக்கொள்ள துடிப்பது ஏன் ?
  அதையும் முற்றிலுமாக தனியார்
  வசமாக்கி அடானிக்கும் அம்பானிக்கும்
  தாரை வார்க்கத்தானே ? வார்த்த்து
  எல்லாம் போதாதா ? மக்களை மொட்டை
  அடித்தது போதாதா ?

  தற்போது மாநில அரசுகள் கொரொன
  காரணமாக வருமான இழப்பைச்
  சந்தித்து வரும் வேளையில், கொரோனா
  தடுப்பு நடவடிக்கைகளையும்,
  மக்களுக்கு உதவிகளையும்
  செய்ய முடியாமல், கடன் வரம்பை
  உயர்த்த மத்திய அரசின் அனுமதியை
  கோரினால், இன்னும் உருவாக்கவே படாத,
  நிறைவேறாத ஒரு சட்டத்தை
  அமல்படுத்தினால் தான் அனுமதி தருவேன்
  என்று சொன்னால் அது இப்போதைக்கு
  நடக்கக்கூடிய காரியமா ?
  இன்றைய பசிக்கு சமைக்க அனுமதி
  கேட்டால், அடுத்த வருடம் சாப்பிட
  வழிசொல்லும் மத்திய அரசின் போக்கை
  புரிந்துகொள்ள இயலாமல் பாஜக
  மோகம் தோழர் பையா போன்ற சிலரின்
  கண்களை மறைக்கிறது. மோகம் தலைக்கேறி
  நிற்கும்போது புத்தி தெளிவாக இருக்காது.
  இப்படித்தான் கண்களை மூடிக்கொண்டு
  தனக்கு வரும் மெசேஜுகளையெல்லாம்
  யோசிக்காமலே கண்கண்ட இடங்களில்
  எல்லாம் கொரொனாவைப்போல் பரப்பும்.

 4. Gopi சொல்கிறார்:

  இப்டியும் சொல்லலாம் சார்;

  “கல்யாணமே ஆகல்லையாம்; ஆனால்,
  பொறக்கப்போற பிள்ளைக்கு இவர் சொல்ற
  பேரைத்தான் வைக்கணுமாம் ”

  இது எப்பூடி சார் ? 🙂

 5. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  மின்வாரியங்களை தனியார் மயம் ஆக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது .
  நிலக்கரி சுரங்கம் – Ditto
  அரசு நிறுவனங்கள் – Ditto
  கொரோனவை ஒழிக்க தனியார் மயம்தான் ஒரே வழி
  அரசு சொன்னால் சரியாத்தான் இருக்கும் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.