அரங்கநாதர் இதைத் தாங்குவாரா…?


….

யாருக்காக…?
இதெல்லாம் யாருக்காக…?

காசுக்காக –
எல்லாம் காசுக்காக…

அரங்கனை எதிரில் வைத்துக்கொண்டே,

இவர்கள் தெரிந்தே செய்யும் பாவத்துக்காக –
அரங்கனே இவர்களை மன்னித்தருளும் …

…..

……

.
———————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to அரங்கநாதர் இதைத் தாங்குவாரா…?

 1. புவியரசு சொல்கிறார்:

  வெட்கக்கேடு.
  இத்தனை ஆண்டுகளாக
  பரம்பரை பரம்பரையாக இவர்கள்
  பிழைப்பிற்கு வழி செய்ததும்
  பெருமை தேடித் தந்ததும்,
  அரங்கனின் ஆலயப்பணியா
  அல்லது கோவில் குங்குமத்தை அழித்த
  கோமகனின் லஞ்சக்காசா ?

 2. Gopi சொல்கிறார்:

  // இவர்கள்
  பிழைப்பிற்கு வழி செய்ததும்
  பெருமை தேடித் தந்ததும்,
  அரங்கனின் ஆலயப்பணியா
  அல்லது கோவில் குங்குமத்தை அழித்த
  கோமகனின் லஞ்சக்காசா ?//

  நல்ல கேள்வி நண்பரே.
  அந்தக் காசை இவர்கள்
  வாங்கிக்கொண்டதே பாவம்.
  அதற்கு வாழ்த்துப்பா பாடியது
  அதைவிட பெரும்பாவம்.
  இவர்கள் மீண்டும் கோயிலுக்குள் சென்று
  அதே ஊ.வாயால்
  ரங்கனைப் பாடினால், அது கொடிய பாவம்.

 3. புதியவன் சொல்கிறார்:

  ஒன்றுமில்லாதவராக இருந்தபோதும், அரசன் கூப்பிட்டு தன்னைப் பாடினால் என்ன என்னவோ செல்வங்கள் தருவதாகச் சொன்னபோதும், ‘நிதி சால சுகமா’ என்று பாடியது ஒரு காலம்.

  இப்போதுள்ள காலத்தில் அரசியல்வாதிகளைப் பகைத்துக்கொள்ள முடியாத காலம். கோவிலில் வேலை செய்பவர்களை, அவர்கள் பெயர் வெளியே வராது என்று சொல்லிப் பேட்டி எடுத்தால் உண்மை நிலவரம் புரியும்.

  ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுங்கள் என்று ஒரு புறம் அழுத்தம், இன்னொருபுறம் ஸ்டாலின் குங்குமத்தை அழித்து, திராவிடச் சிந்தனையைச் செயல்படுத்தியது போல நாடகம். திருச்சியில் பழைய அரசியல்வாதி நேருவைப் பகைத்துக்கொள்ள இயலாது.

  திருமா பேச்சிய பேச்சுக்களுக்கு, அவர் சிதம்பரம் கோவில் அர்ச்சகர்களிடம், உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்டபோது, சாதாரண மானமுள்ள மனிதன், ‘எங்கள் வாக்கு கேட்க வெட்கமாயில்லை. இடத்தைக் காலி செய்யுங்கள்’ என்று சொல்லியிருப்பான். ஆனால் அவர்கள், திருமாவிடம் சிரித்துப் பேசி, தாங்கள் வாக்களிப்போம் என்றனர். சிதம்பரம் கோவிலைப்பற்றி திருமா பேசாத பேச்சா.

  அரசியல்வாதிகளைப் பகைத்துக்கொள்ள இந்தக் காலத்தில் இயலவில்லை. அவர்களால் பெரிய பிரச்சனைகளை கோவிலில் வேலை செய்பவர்களுக்குக் கொண்டுவந்துவிட முடிகிறது. அதனால் முகஸ்துதி அவசியமாகின்றது.

  இவர்களின் முகஸ்துதிகளால் அரசியல்வாதிகளுக்குப் பெருமை சேர்வதில்லை. கசாப்பு கடைக்காரனை, வள்ளலார் பக்தர்கள், ‘ஜீவ காருண்யம் மிக்கவனே’ என்று பாராட்டுப்பத்திரம் வாசித்தால், அதனால் கசாப்பு கடைக்காரனுக்கு என்ன பெருமை?

  • kavi சொல்கிறார்:

   நல்லா பேசுறிங்க புதியவன்.

   இந்த வீடியோ பார்த்து இதுக்கும் ஏதாவது சொல்லுங்க பார்ப்போம்

   • புதியவன் சொல்கிறார்:

    அந்த வீடியோவைப் பார்த்தேன். அவங்க நேச்சர் தெரியாம எழுத விரும்பலை (உண்மையைச் சொன்னா நான் வட நாட்டு கோவில்களில் கொடுக்கும் குங்குமத்தை அவர்களை-பண்டாக்கள் பூச விடுவதில்லை. அனுமார் கோவில்களில் அவங்க செந்தூரம் பூசினாங்கன்னா அடுத்த வாய்ப்பில் அழித்துவிடுவேன். தென்னக கோவில்களில் குங்கும்ம் கையில் வாங்கிக்கொண்டாலும், குவாலிட்டி பற்றி நம்பிக்கை வந்தால் மட்டும்தான் நன்றாக இட்டுக்கொள்வேன். இல்லைனா பட்டும் படாமலும்தான். கலப்படக் குங்கும்ம் இட்ட இடத்தைக் கருப்பாக்கும்)

    • mekaviraj சொல்கிறார்:

     யார் நேச்சர் தெரியல ? அப்போ இங்க உள்ளவங்க நேச்சர் நல்லா தெரியுதா ??

     தென்னக கோவில்களில் குங்கும்ம் கையில் வாங்கிக்கொண்டாலும், குவாலிட்டி பற்றி நம்பிக்கை வந்தால் மட்டும்தான் நன்றாக இட்டுக்கொள்வேன் ??
     -> நல்ல வாய் சார் உங்களுக்கு 🙂 🙂

     (அனுமார் கோவில்களில் அவங்க செந்தூரம் பூசினாங்கன்னா அடுத்த வாய்ப்பில் அழித்துவிடுவேன். )
     உங்களுக்கு வந்தா ரத்தம் ஸ்டாலினுக்கு வந்த தக்காளி சட்னி. அவ்ளோதான் விஷயம்.

     • புதியவன் சொல்கிறார்:

      மெகாவிராஜ் – ஸ்டாலின் எங்க எப்படி பேசறாருன்னுலாம் நீங்க காணொளிகள் பார்ப்பதில்லை போலிருக்கு. செய்திகளும் படிப்பதில்லை போலிருக்கு. அவர் இஸ்லாமிய திருமணங்களில், கூட்டங்களில் இந்துக்களின் பழக்கவழக்கங்களைப் பற்றி என்ன பேசினார், என்பதைக் கேட்டிருக்கிறீர்களா? திமுகவின் அடிப்படை வாக்குகள், நாத்திகர்கள், சிறுபான்மையினர் வாக்குகள். அதனை நிலைநிறுத்திக்கொள்ளத்தான் ஸ்டாலின் எப்போதும் முனைந்திருக்கிறார். இந்துப்பழக்கவழக்கங்கள் மீது அவ்வளவு வெறுப்புள்ளவராகக் காட்டிக்கொள்பவர், எதற்காக கோவிலுக்கு மெனெக்கெட்டுப் போகணும்? அங்கு போகும்போதே குங்குமம் வேண்டாம் என்று சொல்லிடலாமே? இவர் நெத்தியைக் கான்பிப்பாராம். சிரிப்பாராம், பிறகு அழிப்பாராம். அது தக்காளிச் சட்னியாம்.

      செந்தூரம்னா என்னன்னு தெரியுமா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   .
   //திருமா பேச்சிய பேச்சுக்களுக்கு, அவர் சிதம்பரம்
   கோவில் அர்ச்சகர்களிடம், உங்களுக்கு உறுதுணையாக
   இருப்பேன் எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்டபோது,
   சாதாரண மானமுள்ள மனிதன், ‘எங்கள் வாக்கு கேட்க
   வெட்கமாயில்லை. இடத்தைக் காலி செய்யுங்கள்’
   என்று சொல்லியிருப்பான். ஆனால் அவர்கள்,
   திருமாவிடம் சிரித்துப் பேசி, தாங்கள் வாக்களிப்போம்
   என்றனர். சிதம்பரம் கோவிலைப்பற்றி திருமா
   பேசாத பேச்சா. //

   .
   உங்கள் எழுத்து, விளக்கம் எனக்கு
   கல்கியின் பொன்னியின் செல்வனில்
   வரும் ஆழ்வார்க்கடியான் பாத்திரத்தை
   நினைவுபடுத்துகிறது.

   ஸ்ரீரங்கம் பட்டர்கள் சிலரின்
   செயலைப்பற்றி இங்கே பேசும்போது,
   நீங்கள் சிதம்பரம் தீட்சிதர்களை
   காட்டி, அவர்களும் தானே
   சாக்கடையில் புரண்டார்கள் என்று
   கேட்கிறீர்கள்.

   ஆத்திரத்தில், அவசரத்தில்
   எழுதும்போது-பேசும்போது,
   சில சமயம் இப்படித்தான்
   ஆகிவிடுகிறது இல்லையா…?

   ஆக மொத்தம் –
   வைணவர்களைப் பற்றி மட்டும்
   எழுதுகிறீர்களே, சைவர்கள்
   செய்யவில்லையா என்று
   கேட்கிறீர்கள்…

   ஆக, உங்கள் கவலை அது மட்டுமே
   என்று தெரிகிறது….. 🙂 🙂

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Ezhil சொல்கிறார்:

    சார் என்னே ஒரு எடுத்துக்காட்டு… அதுவும் அந்த ஆழ்வார்க்கடியான்… பிரமாதம் போங்க…

   • புதியவன் சொல்கிறார்:

    அட ஆண்டவா… இப்படியா புரிந்துகொண்டீர்கள்?

    கோவிலில் இருக்கும் அர்ச்சகர்கள் வலுவிழந்தவர்கள். அவர்களால் அதிகாரிகள், அரசியல்வாதிகள் செய்யும் செயலைத் தட்டிக் கேட்க முடியாது. இது சாத்தியம் இல்லை. அதனால் மனத்தில் என்ன நினைத்துக்கொண்டாலும், வெளிப்படையாக இவர்களிடத்தில் அவர்கள் சிரித்துப்பேசித்தான் ஆகணும். வேறு வழியில்லை. பிராமணர்கள் இதில் ஒன்றும் செய்ய இயலாது. (அதீதப் புகழ்ச்சி தேவையில்லை… அதைக் கேட்க அசிங்கமாகத்தான் இருக்கு. இது, அவங்களுக்குள்ளேயே போட்டியாக, உன்னைவிட நான் அவனுக்கு ஐஸ் வைக்கிறேன்பார் என்பதாக நடந்திருக்கலாம்.)

    அதிகாரிகள், அரசுப் பணியாளர்கள், நீதித்துறையினர், காவல்துறையினர் இவர்களில் வெகு ஒருசிலர் மட்டும், டிரான்ஷ்ஃபர் பண்ணினாலும் கவலையில்லை என்று நேர்மையின்பக்கம் நிற்பார்கள்.

    நிற்க.. ன்னொரு விஷயத்தையும் பதிவு செய்ய எண்ணுகிறேன். தென் மாவட்ட கோவில்களில் நிர்வாக நடைமுறை ரீதியாக அல்லது உள்ளூர் பிரச்சனையோ அல்லது நியாயமில்லாத எந்தப் பிரச்சனையும் வந்தால், அவை ஜெகத்ரட்சகன் அவர்களின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டால் வழக்கு ரீதியாகவோ இல்லை மற்ற முறைகளிலோ அதனை உடனே தீர்த்துவிடுகிறார், நிறைய உதவிகள் செய்கிறார் எனக் கேள்விப்பட்டேன். அரசியல்வாதிக்கு இன்னொரு பக்கமும் இருக்கு என எனக்கு அது உணர்த்தியது.

 4. tamilmani சொல்கிறார்:

  கே என் நேரு திருச்சியின் முக்கிய அரசியல் பிரமுகர் .
  அவரை அந்த அந்தணர்கள் பகைத்து கொள்ள இயலாது . ஆனால் அனைவரையும்
  காத்து ரட்சிக்கும் அந்த அரங்கன் புகழ் பாடும் அவர்கள் கடவுள் பக்தி
  இல்லாத தனி மனிதர்களுக்கு துதி பாடுவது ஆத்திக நெஞ்சங்களை
  நெருடவே செய்கிறது. செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்ய
  பிரமுகர்கள் கோவிலை நாடுவது சகஜம் . அவர்களை அந்த ஆண்டவர்க்கு எதிரில் பட்டர்கள் உபசரிப்பது சகிக்கவில்லை .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.