யாரைத்தான் நம்புவதோ …..? பாஜகவை ஆர்.எஸ்.எஸ். எதிர்க்கிறதாமே…!!!


….

……

……

இது பத்திரிகைச் செய்தி –
( https://www.patrikai.com/rss-condemned-finance-minister-for-announcing-privatisation/ )

டில்லி

நேற்று முக்கிய துறைகளைத் தனியார் மயமாக்க
உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
அறிவித்ததை ஆர் எஸ் எஸ் இயக்க துணை அமைப்பு
கடுமையாக விமர்சித்துள்ளது.

ஊரடங்கின் மூன்றாம் கட்டம் இன்றுடன் முடிவடைவதை
யொட்டி பிரதமர் மோடி கடந்த 12 ஆம் தேதி அன்று
தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

அப்போது அவர் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான நிவாரண
உதவிகள் வழங்கப்படும் எனவும் அது குறித்த விவரங்களை
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
வழங்குவார் எனவும் தெரிவித்தார். அதன்படி பகுதி
பகுதியாக நிர்மலா சீதாராமன் உதவி திட்டங்கள் குறித்து
தினமும் விளக்கம் அளித்து வருகிறார்

நேற்று நிர்மலா சீதாராமன் அளித்த விளக்கத்தில்
நாட்டின் முக்கிய 7 துறைகளைத் தனியார் மயமாக்க
உள்ளதாக அறிவித்தார். அவை,

நிலக்கரி,
தாது உற்பத்தி,
ராணுவத் தளவாட உற்பத்தி,
வான்வெளி மேலாண்மை,
விமான நிலையங்கள்,
மின் விநியோகம்,
விண்வெளி மற்றும் அணு சக்தி ஆகியவை ஆகும்.

இதற்கு ஆர் எஸ் எஸ் அமைப்பின் தொழிலாளர் பிரிவான
பாரதிய மஸ்தூர் சங்க் –
கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த பிரிவின் பொதுச் செயலர் விர்ஜேஷ் உபாத்தியாய்,
“நிதி அமைச்சர் அளித்த அறிவிப்புகளால் நேற்றைய தினம்
நாட்டுக்கு ஒரு சோக தினமாக அமைந்து விட்டது.

அரசு –
தொழிற்சங்கங்கள், சமூக பிரதிநிதிகள்,உள்ளிட்டோருடன்
பேச ஏனோ வெட்கம் கொள்கிறது.

அரசின் யோசனைகள் பலவும்
கண்டனத்துக்குரியதாக உள்ளது.
அரசுக்கு இதனால் தெரியாமல் போகிறது.
தனியார் மயமாக்கலுக்கு எப்போதுமே தொழிற்சங்கங்கள்
எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

நமது ஆட்சியாளர்களுக்குச் சீர்திருத்தம் என்றாலே –
தனியார் மயம் என்பதே கொள்கையாக உள்ளது.

ஆனால் அது தவறு என்பதை நாம் சமீப காலமாக
அனுபவித்து வருகிறோம்.

தனியார் மயமாக்கலால் வர்த்தகம் முடங்கிப் போய்
அது அரசு துறைகளையும் பாதித்துள்ளது.

இந்த தனியார் மயமாக்கல் என்பது ஊழியர்களுக்கு
எதிரான நடவடிக்கைகள் ஆகும்.

இதனால் ஊழியர்களுக்கு வேலை இன்மை,
தரமற்ற பணி கிடைத்தல்,
ஊழியர்களைப் பயன்படுத்தி லாபம் அடைதல்
என்பது பெருகி விடும்.

சமுதாயத்தில் யாரையும் கலந்தாலோசிக்காமல் அரசு தவறான
திசையில் தவறான முடிவுகள்
எடுத்துள்ளன.

சமுதாய கலந்தாய்வு என்பது ஜனநாயகத்தின்
அடிப்படையாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.

————————
இந்த நாடகம்… அந்த மேடையில்
எத்தனை நாளைய்யா .. அய்யா எத்தனை நாளைய்யா …..!!!

.
——————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to யாரைத்தான் நம்புவதோ …..? பாஜகவை ஆர்.எஸ்.எஸ். எதிர்க்கிறதாமே…!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  தொழிற்சங்கம் தொழிலாளர் நலனை (நிர்வாக, கம்பெனி நலனை அல்ல) முன்னிறுத்தி மட்டும்தான் இயங்க முடியும். இல்லாவிடில் அந்தத் தொழிற்சங்கத்தில் மெம்பர்கள் இருக்க மாட்டார்கள் (கட்சிப் பாசம்லாம் ரெண்டாம் பட்சம், முதலில் தங்களது வாழ்க்கை/வருமானம்தான் யாருக்கும் முக்கியம்). அதனால் பாரதீய மஸ்தூர் சங் எதிர்ப்பதில் வியப்பில்லை. (போனஸ் இந்த மாதிரி தொழிலாளர் நலன் சார்ந்த விஷயங்களில் ஆளும் கட்சி தொழிற்சங்கங்களும் அரசுக்கு ஆதரவா இருக்காது, குறைந்த பட்சம் வெளிப்படையாக ஆதரிக்காது) அதனால் பா.ம.சங்கத்தினர் ‘துக்க தினம்’ என்று சொன்னதில் ஆச்சர்யம் இல்லை.

  ஊழியர்களுக்கு வேலை இன்மை – உண்மைதான். 10 பேர் தேவைப்படும் இடத்தில் 100 பேர் இருக்கின்றனர்.
  தரமற்ற பணி கிடைத்தல் – நல்ல ஜோக். எந்த அரசு அலுவலகங்களிலும், துறைகளிலும் தரமான பணி கிடைத்ததாக சரித்திரம், பூகோளம், அறிவியல் கிடையவே கிடையாது
  ஊழியர்களைப் பயன்படுத்தி லாபம் அடைதல் – அதில் என்ன தவறு? கம்பெனியை, அரசுத் துறையைப் பயன்படுத்தி வேலை செய்யாமல் இதுநாள் வரை ஊழியர்கள் லாபம் அடைந்தனர். இனியாவது வேலை செய்யும் கம்பெனி/துறை லாபமடையட்டுமே.

  நான் ‘தனியார் மயமாக்குவதை’ ஆதரிக்கிறேன். அரசு அலுவலர்கள் எப்படி கடுமையாக உழைக்கின்றனர், நேர்மையாக இருக்கின்றனர், தங்கள் கஸ்டமர்களாகிய மக்களுக்காக எப்படி சேவை செய்கின்றனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த லட்சணம்தான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   இதிலும் கூட,
   முக்கியமான விஷயம் –

   பாஜக தொழிற்சங்கம் சீரியசாக
   எதிர்க்கிறதா அல்லது வேடமா…?
   – என்பது தான்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Mr.MK I endorse your view. I am skeptick about BMS

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.