…
…
…
அரசியல்வாதிகளைக் கேட்க முடியாது…
திசை திருப்புவதில் …
கைகாட்டி விடுவதில் …
அடுத்தவர் மேல் பழிபோடுவதில் வல்லவர்கள் அவர்கள் …
இங்கே பிறந்ததே இவர்கள் செய்த பாவமா…?
கடவுளைத் தான் கேட்க வேண்டும்…
எங்கே இருக்கிறார் அவர்…?
……
…………
………
……….
…………
.
——————————————————————————————————————————-
இந்த கொடுமைகளுக்கு காரணமானவர்களை
அந்தக் கடவுளே மன்னிக்க மாட்டார்.
நடு ராத்திரி டிமானடைசேஷன்
நடு ராத்திரி லாக்-டவுன் என்று
ஏசி மாளிகையில் உட்கார்ந்துகொண்டு
இரக்கமில்லா உத்திரவுகளைப்
பிறப்பிக்கும் மனிதர்களை இந்த
மக்களும் என்றும் மன்னிக்க மாட்டார்கள்.
ஏன் தற்பொழுது அரசியல் பதிவுகளை குறைத்து கொண்டுள்ளீர்கள். நேர்மையான உங்கள் கருத்துக்களை படிக்கவே உங்கள் தளம் வருவேன்.
நெல்ல பழனி,
உங்கள் நல்லெண்ணங்களுக்கு நன்றி.
அரசியல் எங்கே போகிறது.
எழுத இப்போது மனம் வரவில்லை.
முதலில் மக்களின் கொரோனா வேதனைகள்
குறையட்டுமே.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Very pathetic. வாக்களிக்கும் மக்களாக (ஒருங்கிணைந்து வாக்களிக்கும்) இல்லாவிட்டால் எந்த அரசுக்கும் அவர்களைப்பற்றிக் கவலை இல்லை போலிருக்கு. நடந்து சென்றார்கள் என்பது மிகுந்த வருத்தத்தை வரவழைக்கிறது. ‘திரும்பிப்போ’ என்று சொன்ன அரக்கர்களிடம் மனித மனத்தை எதிர்பார்க்க முடியுமா? படிப்பறிவில்லாததால் அந்த மக்களை இந்தச் சமுதாயம் விலக்கிவிடணுமா? யாருக்காக அவர்கள் வேலை செய்தார்களோ, அவர்களுக்குப் பொறுப்பு கிடையாதா? இதற்கு பேசாமல், இன்னொரு மாநிலத்துக்குச் செல்லவேண்டுமானால் விசா வேண்டும் என்று சொல்லிவிடலாமே.
இந்த மனிதர்கள் தங்க வீடோ, சேமிப்போ இல்லாமல் இன்னொரு மாநிலத்தில் குழந்தைகளோடு காலத்தை ஓட்டியிருக்கிறார்கள் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது (குறவ இனத்தவர்கள்கூட எங்காவது தங்குவதற்கு டெண்ட் போட்டிருப்பார்கள்)
எதெதெற்கோ இலவசங்களை வழங்கும் அரசுகள், இவர்களை அவரவர் ஊர்களுக்கு அனுப்ப முடியாதது லாஜிஸ்டிக்ஸ் காரணமாகவா அல்லது இதனை அரசு அதிகாரிகள் அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்லவில்லையா?
இந்த லாக்டவுனில், தற்செயலாகச் சென்ற இடங்களில் அகப்பட்டுக்கொண்டவர்கள் அனேகர். எப்படியோ அங்கேயே இருந்து உணவு உண்டு காலம் செல்கிறது (எனக்குத் தெரிந்தவர்கள் மிடில் கிளாஸ்), மனக் கஷ்டங்கள் இருந்தபோதும். ஆனால் அதற்கும் கீழ்த்தட்டில் இருப்பவர்களால் அப்படி காலம் தள்ளுவது அனேகமாக இயலாது இந்த நிலையை எப்படி சமாளித்திருக்கலாம் என்பதற்கு யாராவது யோசனை சொல்லுங்களேன் (அதாவது நீங்கள் முடிவெடுக்கும் இடத்தில் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று). அப்படிச் சொல்லும்போதே, தலைவர் இறந்தால், மக்கள் அன்று வீடு திரும்பிய பிறகுதான் அவர்களது இறப்புச் செய்திகளை அரசு அறிவிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளணும். அதாவது எந்த அரசும் வேண்டுமென்றே எதையும் செய்யாது.
கடவுளும் இல்லை யாரும் இல்லை… பிறப்பதே சாபக்கேடு தான் அதுவும் இந்த திருநாட்டில் …
புதியவன் சார் – // அதாவது எந்த அரசும்
வேண்டுமென்றே எதையும் செய்யாது.//
கே.எம்.சார் மொழியில்இதற்கு ஒரு “சப்பாஷ்”
// நீங்கள் முடிவெடுக்கும் இடத்தில்
இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் //
கே.எம்.சார ஏன் புதிதாக கேட்கிறீர்கள்.
ஏகப்பட்ட பேர் ஆலோசனைகள்
சொன்னார்களே; அதெல்லாம் உங்கள் அரசின்
பார்வைக்கு போகவில்லையா ?
ஏன், உங்கள் பார்வையிலும் படவில்லையா ?
இப்போது தான் பிறந்தவரைப்போல்
புதிதாக கேட்கிறீர்கள் ?
முன்னால் பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்
என்பதை பற்றி கட்சிகள் கவலைப்பட்டன
மக்களை பற்றி யாரும் கவலை கொள்வதில்லை .
சாதாரண மக்களால் என்ன செய்து முடியும் ?
நியூஸ் பேப்பர் , டீ வி போன்றவை பெரும்பாலும்
செய்திகளை திரித்துக் கொடுக்கின்றன .
மிஞ்சி போனால் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்யலாம் .
144 தடை உத்தரவு போட்டு , சட்டம் – ஒழுங்கு என்று
சொல்லி , மாட்டை அடிப்பது போல் அடிக்கலாம் .
ஒன்று இரண்டு நாளில் எல்லாம் அடங்கி விடும் .
மக்களை திசை திருப்ப ஏதாவது பரபரப்பை
உண்டாக்க வேண்டும் – அப்புறம் தேர்தல் வரும் போது
மார்க்கெட்டிங் செய்தால் போச்சு !
ஜக்கி சத்குரு ஆகும் போது , the possibilities
are limitless – எதுவும் பண்ணலாம் .
மெய்ப்பொருள்,
கொஞ்சம் திருத்திக் கொள்ளலாமா…?
” ஜக்கி ” என்பதற்கு பதிலாக
“ஜக்கியே…” … 🙂 🙂
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
புதியவன் சொல்கிறார்
“இந்த மனிதர்கள் தங்க வீடோ, சேமிப்போ இல்லாமல்
இன்னொரு மாநிலத்தில் குழந்தைகளோடு காலத்தை
ஓட்டியிருக்கிறார்கள் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது”
நகரங்களில் வீடு விலை தாறுமாறாக ஏறியிருக்கிறது .
இவர்களுக்கு வீடு எங்கிருந்து கிடைக்கும் ?
கட்டிட வேலை செய்பவர்கள் அங்கேயே தங்கிக்
கொள்வார்கள் . மற்றவர்கள் முதலாளி (அ ) கங்காணி
ஏற்பாடு செய்யும் இடத்தில ஒண்டிக்கொள்வார்கள் .
இல்லாவிடில் குப்பத்தில் தங்குவார்கள் .
வேலை இல்லை என்று இடத்தை விட்டு போகச்
சொல்லிவிட்டார்கள் .
தங்க இடம் இல்லை ; சாப்பாட்டிற்கு வழி இல்லை ;
என்ன செய்வார்கள் ?
இதில் போலீஸ் சட்டம் – ஒழுங்கு என்று
இவர்களை அடித்திருக்கிறது .
ஏன் நடந்து போனார்கள் என தெரிகிறதா ?
இதில் உச்ச நீதி மன்றம் தன் மாட்சிமையை நிலை நாட்டியது !
புதியவன் கேட்கிறார்
“எதெதெற்கோ இலவசங்களை வழங்கும் அரசுகள்,
இவர்களை அவரவர் ஊர்களுக்கு அனுப்ப முடியாதா ?”
யோசிக்காமல் எடுத்த முடிவு – நாடு முழுவதும் ஊரடங்கு !
அரசு அதிகாரிகள் சொல்லவில்லையா ? சொன்னாலும் யார் கேட்கிறார்கள் ?
இந்த நிலையை எப்படி சமாளித்திருக்கலாம் ?
கங்காணி /முதலாளி அல்லது அரசு
அரிசி , பருப்பு, மளிகை சாமான் ஏற்பாடு செய்யணும் .
இரண்டாவது இடத்தை காலி செய்ய சொல்லி இருக்க கூடாது .