…
…
…
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்….”
ராகம்….சாருகேசி
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று…
கண்ணதாசனின் மயக்கும் வார்த்தை ஜாலம்…
கே.வி.எம். அவர்களின் அற்புதமான ட்யூன் –
படம் -ராணி சம்யுக்தா
பாடியவர் – பி.சுசீலா
பாடலாசிரியர் – கவிஞர் கண்ணதாசன்
இசையமைப்பாளர் – கே.வி.மஹாதேவன்
….
….
.
—————————————————————————
இந்தப் பாடலைக் கேட்டதில்லை.
நல்ல பாடலாக இருந்தாலும், அதுவும் ஹிட்டாக ராசி வேணும் போலிருக்கு. படம் ஹிட் ஆகலையோ?
புதியவன்,
“ராணி சம்யுக்தா” எம்ஜிஆர் படமாக
இருந்தாலும் கூட ஓடவில்லை.
அதனால் இந்தப்பாடல் நன்றாக இருந்தும்
கூட பலருக்குத் தெரியவே இல்லை.
பொதுவாக இரண்டு வகை இருக்கிறது.
failure படத்தில் ஒன்றிரண்டு பாடல்கள்
மட்டும் நன்றாக இருந்தால் அதன் விதியும்
failure தான்.
ஆனால், படம் சுமாராக இருந்தால் கூட,
அத்தனை பாடல்களும் நன்றாக இருந்தால்,
பாடல்கள் காரணமாகவே படம் ஹிட் ஆகி விடும்…
இதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.
இந்த தலைப்பில் எழுதலாம் என்று தோன்றியது
என் அதிருஷ்டம் தான். பல பழைய
பாடல்களை இதற்காகத் தேடி, கேட்டு வருகிறேன்.
எனக்கு இது மிகவும் பிடித்த வேலை… 🙂 🙂
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அந்தத் தலைப்பில் எழுத முடியாதபடி முதலில் இரண்டு விதிவிலக்குகள் சட் என்று நினைவுக்கு வந்ததை எழுதுகிறேன்.
சங்கமம் படம் – ஏ.ஆர். ரஹ்மானின் அனைத்துப் பாடல்களும் பயங்கர ஹிட். படம் ஃப்ளாப்.
நிழல்கள் – இளையராஜா இசையமைப்பில் பாடல்கள் செம ஹிட். படம் ப்ளாப். இதே கதைதான் காதல் ஓவியம் படத்துக்கும்.
பாடல்கள் காரணமாகவே படம் ஹிட் ஆனது இளையராஜாவின் இசையில் ஏகப்பட்ட படங்கள் (அதிலும் 80களில்). எனக்குத் தெரிந்து எம்.எஸ்.வியின் இசையில் ஒரே ஒரு படம்-இளையராஜா மாதிரி புது இசையைக் கையாண்டிருப்பார்.