திருவாளர் டி.ஆர்.பாலு – உரிமைப்பிரச்சினை என்று சொல்லி கொலைத் தண்டனை வாங்கிக் கொடுத்து விடுவாரோ…?


இந்த விஷயம் குறித்து திருவாளர் பாலு கூறிய புகாரும்,
அதையடுத்து தலைமைச் செயலாளர் கொடுத்துள்ள
விளக்கமும் செய்தித் தளங்களில் வந்துள்ளபடி
கீழே தரப்பட்டுள்ளன.

தலைமைச் செயலாளர் மீது திருவாளர் பாலு சொன்ன
புகாரிலிருந்து ஒரு பகுதி…

( https://tamil.samayam.com/latest-news/state-news/t-r-baalu-condemns-chief-secretary-shanmugam-for-insulting-dmk-mps/articleshow/75728698.cms )
—————–

அரசு நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய
ஒரு லட்சம் மனுக்களை தலைமைச் செயலாளரிடம்
அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்.
ஆனால் தலைமை செயலாளர் சண்முகம் உரிய கவனம்
செலுத்தாமல் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி
பார்ப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.
….
மேலும் கலாநிதி வீராசாமி வேண்டுகோளின்படி
தொலைக்காட்சியின் இரைச்சல் ஒலியை குறைக்கச்
சென்ற ஊழியரையும் தடுத்துவிட்டார். இவற்றையெல்லாம்

பொறுத்துக் கொண்டு (….??? )
மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க
வலியுறுத்தினோம். இதற்கான காலக்கெடுவின் விவரம்
பற்றி கேட்டோம். அதற்கு எப்போது நடவடிக்கை
எடுக்க முடியும் என்று சொல்ல முடியாது என்றார்.

மேலும் எடுத்தெறிந்து பேசும் விதமாக
“This is the problem with you people” என்று பொறுப்பற்ற
முறையில் உரத்த குரலில் கூறினார்.
”என்ன வெளியில் போய் பிரஸ்ஸை பார்க்க போகிறீர்களா?

அவர்களிடம் எதை வேண்டுமானாலும் சொல்லிக்
கொள்ளுங்கள் என்று இறுமாப்புடன் கூறினார்.
….

அவர் தனது செயலுக்கு உடனடியாக வருத்தமும்
மன்னிப்பும் கேட்க வேண்டும். இல்லையெனில்
இந்தப் பிரச்சினையை நாடாளுமன்ற உரிமைக்குழுவிற்கு
எடுத்துச் சென்று தலைமை செயலாளர் மீது உரிய
நடவடிக்கை எடுக்கப்படும்.

————————————————————–

அடுத்து தலைமைச் செயலாளர் இந்த சம்பவம் குறித்து
வெளியிட்டுள்ள விவரமான அறிக்கையிலிருந்து –

————
“டி.ஆர்.பாலு தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள்
என்னை சந்திக்க வருவதாக கடிதம் தரப்பட்டது. எதிர்க்கட்சித்
தலைவர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளவன்.
அவரை அவமதிக்கும் எண்ணம் எனக்கு எள்ளளவும் இல்லை
என்பதால்தான் கடுமையான கொரோனா தடுப்புப்
பணிகளுக்கு இடையிலும் நேற்று மாலை 5 மணிக்கு அவரை
சந்திக்க நேரம் ஒதுக்கினேன்.

அந்த சமயத்தில் மத்திய நிதியமைச்சரின் கொரோனா
பாதிப்புக்கான நிவாரண திட்ட அறிவிப்புகள் தொலைக்
காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டு இருந்தது. அதை
நானும் நிதித் துறைச் செயலாளரும் பார்த்து குறிப்பு
எடுத்துக்கொண்டிருந்தோம்.

அப்போது டி.ஆர்.பாலு எம்.பி உள்ளிட்டோர் நுழைவு
வாயிலுக்கு வந்துவிட்டனர் என்ற தகவல் கிடைத்தவுடன்
நிதித் துறைச் செயலாளரிடம் குறிப்பு எடுக்கக் கூறிவிட்டு,
எனது இருக்கையிலிருந்து எழுந்து வந்து இவர்களுக்காக
காத்திருந்தேன். அவர்கள் வந்தவுடன் வரவேற்று சோபாவில்
அமர வைத்தேன்.

——–


…..

அதே சமயம் சுமார் 15-20 நபர்கள் பெரிய பெரிய மனுக்கள்
அடங்கிய கட்டுக்களை எனது அறைக்குள் கொண்டு
வந்தனர்.

கொரோனா நோய் தொற்று பரவி வரும்
நிலையில் இத்தனை நபர்கள் எனது அறைக்குள் வந்தது
எனக்கு அதிர்ச்சியைத் தந்தாலும் –
————

– மனுக்கட்டுக்களை அப்படியே வையுங்கள் என்றும்,
புகைப்படம் எடுப்பதை தவிர்க்கவும் கூறினேன்.
தேவைப்பட்டால் செய்தியாளர்களுக்கு செய்தியை மட்டும்
தெரிவித்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன்.

———
எனினும், சிலர் போட்டோவும்
வீடியோவும் எடுத்தனர்.
———

அனைவரும் சோபாவில் அமர்ந்தபிறகு அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டிய ஒரு லட்சம் மனுக்களை ஒப்படைப்பதாகத்
தெரிவித்து, உங்கள் பதிலை தெரிவியுங்கள், எதிர்க்கட்சித்
தலைவரிடம் தெரிவிக்கிறேன் என்றார் டி.ஆர்.பாலு.

நான் இவற்றின் மீது முறையான விரிவான நடவடிக்கை
எடுப்பதாகக் கூறினேன் எனத் தெரிவியுங்கள் என்றேன்.

எத்தனை நாட்களுக்குள் மனுக்களை அலுவலர்களுக்கு
அனுப்புவீர்கள் என்று கேட்டார். ஒரு லட்சம் மனுக்கள்
உள்ளன, அவற்றை அலுவலர் வாரியாக பிரிக்க வேண்டும்,

கொரோனா காலத்தில் குறைந்த அளவிலான பணியாளர்களே
உள்ளனர்.

அதனால் தேதியை குறிப்பிட இயலாது என்று சொன்னேன்.
அவர் தேதியைக் குறிப்பிடுங்கள் என்று மீண்டும் கேட்டார்.

அதேபோல தயாநிதி மாறனும் கேட்டார். நான் தேதியை
தெரிவிக்க இயலாது, விரைவாக நடவடிக்கை எடுக்க
உறுதியளிக்கிறேன் என்றேன்.

நாங்கள் மக்கள் பிரதிநிதிகள் என்பதால் அந்த பொறுப்பு
எங்களுக்கு உள்ளது என்றார்கள். நானும் அரசு
அலுவலர்தான், நாங்களும் கடமை உணர்வோடும்
அர்பணிப்போடும் பணியாற்றி வருகிறோம் என்றேன்.

பணியாளர்கள் குறைவாக உள்ளதால் தேதியை உறுதியாக
சொல்ல முடியாது என சொன்னதாக எதிர்க்கட்சித்
தலைவரிடம் சொல்லவா என டி.ஆர்.பாலு கேட்டார்.

அதற்கு அப்படி சொல்ல வேண்டாம், விரைவில்
நடவடிக்கை எடுக்கிறேன் எனச் சொல்லுங்கள் என்று
கூறச் சொன்னேன்.

உடனே, அலுவலர்கள் இல்லை என்பதால் நடவடிக்கை
எடுக்கவில்லை என தெரிவிக்கிறோம் என்று சொன்னார்.

நான், இதுதான் உங்களிடம் உள்ள பிரச்சினை. எங்களின்
சங்கடங்களை புரிந்துகொள்வதில்லை என ஆங்கிலத்தில்,
‘this is problem with you people , you don’t understand our
difficulties’ எனக் கூறி நீங்கள் எதை வேண்டுமானாலும்
பத்திரிகைகளில் கூறிக்கொள்ளுங்கள், எனக்கு
ஆட்சேபனையில்லை எனத் தெரிவித்தேன்.

மற்றபடி அவர்களை அவமதிக்கும் எண்ணம் எதுவும்
இல்லை” என்று நீண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

——

”மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புகளை நிதிச்செயலாளர்
டிவியில் பார்த்து குறிப்பெடுத்துக்கொண்டு இருந்தார். இதனால்
எங்கள் பேச்சுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை.

நான் ஒரு சாதாரணமான அரசு ஊழியன் ; அரசியல்வாதியல்ல,

மக்களுக்கு பணியாற்றுவது தான் என் வேலை;
யாரையும் உதாசீனப்படுத்த வேண்டும் என எந்தக்காலத்திலும்
நினைத்தது இல்லை”. ”இத்தகைய சூழலில் பத்திரிகையில்
திரித்து பேசுவது மன வேதனை அளிக்கிறது. யார்
உண்மையை பேசுகிறார்கள்? யார் திரித்து பேசுகிறார்கள்?
என்பதை எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும், மக்களும்
புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.”

—————————————————–

இந்த விஷயத்தில் இந்த தளம் சொல்வது –

1) கொரோனா வியாதி படு தீவிரமாக பரவும் காலத்தில் –
தலைமைச் செயலாளரின் அறையில் திடீரென்று
முன்னேற்பாடுகள் எதுவுமின்றி –

15-20 பேர்களை அழைத்துக்கொண்டு நுழைந்ததும்,

லட்சக்கணக்கில் மனுக்கள் அடங்கிய பண்டல்களை
தொற்று நோய் பரவும் விதத்தில் உள்ளே கொண்டு
வந்ததும்,

-பொறுப்பற்ற செயல்…

இதன் மூலம் தலைமைச் செயலாளரின் அறையையே
தொற்று நோய் பரவக்கூடிய அபாயத்திற்கு உள்ளாக்கி
விட்டனர் திருவாளர்கள் பாலுவும் அவருடன் வந்த
கூட்டமும்…. நாளையே, இந்த அலுவலகத்தில் பணிபுரியும்
யாருக்கும் கொரொனா வந்தால் அதற்கு முழுக்க முழுக்க
பொறுப்பேற்க வேண்டியவர்கள் திரு.பாலுவும் அவருடன்
வந்த கூட்டமும் தான்.

கொரானா சமயத்தில், குறைந்த பட்சம் 5 அடி இடைவெளி
விட வேண்டும் என்பதை எம்.பி. என்பதற்காக
தளர்த்தி விட முடியுமா…? எம்.பி. என்பதற்காக கொரோனா
இவருக்கு விதிவிலக்கு கொடுக்குமா…?

2) அவர்கள் உள்ளே நுழைந்த நேரத்தில், மத்திய நிதி
அமைச்சர் பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுக்
கொண்டிருந்தது உண்மை. நிதிச்செயலர் குறிப்பெடுத்துக்
கொண்டிருந்தார் என்பதும் உறுதியாகிறது.
அவர்களை தங்கள் வேலையைச் செய்ய விடாமல் இந்த
கூட்டம் தொந்திரவு செய்திருக்கிறது.

3) லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் அடங்கிய
பண்டல்களை நோய் பரவும் விதத்தில் அபாயகரமான
விதத்தில் உள்ளே கொண்டு வந்திருக்கின்றனர்.

4) தலைமைச் செயலரை மிரட்டும் விதத்தில் பேசி
இருக்கின்றனர். எப்போது நடவடிக்கை எடுப்பார் என்று
உடனடியாக பதிலளிக்கச் சொல்லி வற்புறுத்தி
இருக்கின்றனர். அவர் பணி செய்ய ஆட்கள் இல்லை
என்பதை எடுத்துக்கூறியும் விடாமல் வற்புறுத்தி
இருக்கின்றனர். வெளியில் பத்திரிக்கையாளர்களைச்
சந்தித்து சொல்வோம் என்று வேறு மிரட்டி இருக்கின்றனர்.

——

குதிரை குப்புறத்தள்ளியதோடு நில்லாமல்,
குழியையும் பறித்த மாதிரி –
இப்போது பாராளுமன்ற சபாநாயகரிடம் உரிமை மீறல்
புகார் கொடுப்போம் என்று வேறு மிரட்டுகின்றனர்.
உரிமை மீறல் புகார் கொடுத்து, சிரச்சேதம்
செய்து விட முடியுமா…?

——-

வரம்பு மீறும் அரசியல்வாதிகளிடமிருந்து
அரசு ஊழியர்களை காப்பாற்ற வேண்டிய கடமை
தமிழக அரசுக்கு இருக்கிறது…

கொரொனா தடையுத்தரவு அமலில் இருக்கும் காலத்தில்,
20 பேர் கும்பலாகச் சேர்ந்து வந்ததற்காகவும்,
குறைந்த பட்சம் 5 அடி இடைவெளி என்கிற விதியை
மீறியதற்காகவும்,

தலைமைச் செயலரின் அலுவலகத்தில் பணிபுரிவோர்
கொரோனா நோயால் தாக்கப்படும் அபாயத்திற்கு
உள்ளாக்கும் விதத்தில், ஏராளமான பண்டல்களை
எந்தவித நோய்த் தொற்று பாதுகாப்பு முறைகளையும்
கையாளாமல் முன்னறிவிப்பின்றி உள்ளே கொண்டு
வந்ததற்காகவும்,

( விதிகளை மீறியதற்கான புகைப்பட ஆதாரங்கள் மேலே
தரப்பட்டிருக்கின்றன. புகைப்படத்தில் குறைந்த பட்சம்
20 பேரை, மிக நெருக்கத்தில் இருப்பதை காணலாம்…!!!)

( தலைமைச் செயலரின் அறையில் பொருத்தப்பட்டிருக்கும்
CCTV வீடியோ பதிவில், இதற்குத் தேவையான மற்ற
ஆதாரங்களும் கிடைக்கும்…கொரோனா உத்திரவுகள்
மீறப்பட்டிருப்பதை, தலைமைச் செயலகத்தின் நுழைவு
வாயிலில் பொருத்தப்பட்டிருக்கும் CCTV வீடியோவும்
உறுதி செய்யும்…)

மூத்த அரசு ஊழியரை பயமுறுத்தியும், அவதூறாகவும்
பேசியதற்காகவும்,

திருவாளர் பாலு மற்றும் அவரது அடியார் கூட்டத்தின்
மீது தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

சாராயத் தொழிற்சாலை முதலாளிகளின் பயமுறுத்தல்களிலிருந்து
அரசு ஊழியர்களை காக்க வேண்டியது மிகவும் அவசியம்
என்பதால் –
பொதுமக்களில் யாரேனும் கூட இது குறித்து
நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்து
உரிய நடவடிக்கை கோரவும் முடியும் என்பதையும்
இந்த தளத்தின் சார்பாக தெரிவிக்க விரும்புகிறோம்.

.
————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to திருவாளர் டி.ஆர்.பாலு – உரிமைப்பிரச்சினை என்று சொல்லி கொலைத் தண்டனை வாங்கிக் கொடுத்து விடுவாரோ…?

 1. M.Subramanian சொல்கிறார்:

  Bold and Authentic write up.
  You are taking up an issue which the living media
  should have taken up; but failed.
  Please go ahead; We are with you.

 2. புவியரசு சொல்கிறார்:

  டி,ஆர்.பாலுவும், தயாநிதிமாறனும் மக்களவை
  சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நேற்று (மே 14)
  கடிதங்கள் எழுதியுள்ளனர்.
  அதில், “பொதுமக்களின் நலம் சார்ந்த கோரிக்கை
  மனுக்களை அளிக்கப் போனபோது தமிழகத்தின்
  தலைமைச் செயலாளர் கே. சண்முகம் எங்களை
  அவமதித்துவிட்டார்.

  நானும் தயாநிதிமாறனும் நாடாளுமன்ற
  உறுப்பினர்கள் மட்டுமல்ல… மத்திய
  அமைச்சர்களாகவும் பதவி வகித்துள்ளோம்.
  என் அரசியல் வாழ்க்கையில் உயர் பதவியில்
  இருக்கும் எத்தனையோ அதிகாரிகளை
  சந்தித்திருக்கிறேன். ஆனால் சண்முகத்தைப் போல
  யாரும் நடந்துகொண்டதில்லை.

  மக்கள் நலனுக்காக பேசப் போன நாடாளுமன்ற
  உறுப்பினர்களை அவமதித்த தலைமைச்
  செயலாளர் சண்முகம் நாடாளுமன்ற
  ஜனநாயகத்துக்கும் அவமரியாதை இழைத்திருக்கிறார்.

  எனவே அவர் மீது உரிமை மீறல் நடவடிக்கை
  எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்
  டி.ஆர்.பாலு. இதேபோல தயாநிதிமாறனும் கடிதம்
  எழுதியுள்ளார்.

  -minnambalam செய்தி :https://www.minnambalam.com/politics/2020/05/15/15/dmk-seek-privilege–against-chief-seceratary-k.shanmugam-letter-to-parliament-speaker

 3. natchander சொல்கிறார்:

  Even the respected TATA was threatened by dayanidhi maran when he was the telecom minister,
  CHO SIR had rwported this ,,in his thuglak issue !!
  D m k leaders are nororious,, in their behaviour
  All know that,,!!!

 4. tamilmani சொல்கிறார்:

  இன்னும் எதிர்க்கட்சி யாக இருந்தாலும் தங்கள் என்னவோ ஆட்சிக்கு
  வந்து விட்டோம் என்ற பாவனையில் தலைமை செயலரை மிரட்டி
  இருக்கிறது இந்த திருட்டு கும்பல். இந்த அராஜகம்தான் மக்களை
  திமுகவிடம் இருந்து தனிமை படுத்தி இருக்கிறது. எதாவது செய்து
  மீடியா வெளிச்சத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு
  இருக்கிறது . உடன்பிறப்புகள் தோள்கள் தினவெடுத்தாலும் கோரோனோ
  ஊரடங்கால் ஒன்று செய்ய முடியாத நிலைமை. கொரோனவை காரணம்
  காட்டி தேர்தல் தள்ளிப்போய் விடுமோ என்ற அச்சம் வேறு.

 5. புதியவன் சொல்கிறார்:

  ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள இந்த டி.ஆர்.பாலுவையும் மாறனையும் தேர்ந்தெடுத்த மக்கள்தான் வெட்கப்படவேண்டும்.

  பிரதமரையே மிரட்டியவர் இந்த டி.ஆர்.பாலு. அதனால்தான் 2009ல், நான் பிரதமர் என்றால், டி.ஆர்.பாலுவுக்கு அமைச்சர் பதவி கிடையாது என்று திட்டவட்டமாகச் சொன்னவர் மன்மோகன் சிங். தன்னுடைய மகனின் மின்சார உற்பத்தி தொழிலுக்கு அரசுக்கு பரிந்துரைத்து தவறான வழியில் டீசல் வாங்கிக்கொடுத்தவர் இந்த டி.ஆர்.பாலு. கேடி பிரதர்ஸின் தகிடுதத்தம் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இவர்களுக்கு மற்றவரைக் குற்றம் சாட்ட எந்த உரிமை இருக்குன்னு தெரியவில்லை.

  அது இருக்கட்டும்… சபாநாயகர் என்ன முடிவை மேற்கொள்கிறார் என்று பார்ப்போம். மதிமுக எம்.பிக்களைக் கணக்குக் காண்பித்து அமைச்சரான ஒருவர், திமுகவில் ஹிந்தி தெரியும் என்ற காரணத்துக்காக அமைச்சரான ஒருவர்.. இப்போ எம்.பி. ஆகியும் பிரயோசனமில்லாமல் இருக்கிறோமே என்ற விரக்தி. கொரோனா நிவாரண நிதிக்கு ஐந்து பைசா கொடுக்க மனமில்லை. லட்சம் மனுவாம், கட்டுகளை அடியாட்களோடு கொண்டுபோய் மிரட்டுவார்களாம். தலைவர்கள் எவ்வழி, திமுக தொ(கு)ண்டர்கள் அவ்வழி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.