இந்தியப் பிரதமர் இந்தி பேசும் மக்களுக்கு மட்டும் தான் பிரதமரா…..?( மேலேயுள்ள படத்தில் எழுதியிருப்பது ஹிந்தியா அல்லது ஆங்கிலமா…?
அதன் அர்த்தம் என்ன ….சொல்லுங்கள் பார்ப்போம் ..!!!
சரியான பதிலைச் சொல்வோர்க்கு ………………………தரப்படும்.)

———————————————–

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு உரை
நிகழ்த்தும்போது இந்தியிலேயே நிகழ்த்துகிறார். இந்தியா
முழுவதும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த செய்தியாளர்கள்
சந்திப்பு என்பது இந்தியிலேயே நடக்கிறது.

முக்கியமான இந்த காலகட்டத்தில் இந்தி தெரியாத மாநில
மக்களுக்கு இந்தத் தகவல்கள் தேவையில்லையா?

கொரோனா நோய்த் தொற்று தொடர்பாக முதன்முதலாக
மார்ச் 19ஆம் தேதி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு
உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, தனது பேச்சை
இந்தியிலேயே பேசினார். ஆனால், அவர் பேசும்போது கீழே
அந்தந்த மாநில மொழிகளில் சப் – டைட்டில் வெளியிடப்பட்டது.

இதற்குப் பிறகு, மார்ச் 24ஆம் தேதியன்று இரவு 8 மணியளவில்
மீண்டும் உரையாற்றிய பிரதமர் அன்று நள்ளிரவு 12 மணி
முதல் ஊரடங்கு அமலுக்கு வருவதாக அறிவித்தார். ஆனால்,
இதைப் புரிந்துகொள்ள இந்தி பேசாத மாநிலங்களில்
இருப்பவர்கள் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
அவரது உரை இந்தியில் இருந்ததோடு, சப் – டைட்டிலும்
தரப்படவில்லை. செய்தி முகமைகள் இதனை மொழி
பெயர்த்து, ஊடகங்களுக்கு அனுப்பும்வரை, பிரதமர் உரையின்
முழுமையான அம்சங்கள் யாருக்கும் தெரியவில்லை.

மே 12ஆம் தேதி பிரதமர் மோதி பேசும்போதும் இதே நிலைதான்.

அவர் பேசி முடித்து, பத்து பதினைந்து நிமிடங்களுக்குப்
பிறகுதான் அவர் பேசியதன் முழுவிவரம் இந்தி பேசாத
மக்களுக்குத் தெரியவந்தது.

இது மட்டுமல்ல. இந்தியாவில் கொரோனா தொற்று எந்த
அளவுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்து தினசரி
செய்தியாளர் சந்திப்புகளை ஐசிஎம்ஆர் அதிகாரிகளும்
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும் நடத்துகின்றன.
இதில் பெரும்பாலும் மத்திய சுகாதாரத் துறையின் இணைச்
செயலாளர்தான் தகவல்களை ஊடகங்களுக்கு அளிக்கிறார்.
30 நிமிடங்களுக்கு நீடிக்கும் இந்த செய்தியாளர் சந்திப்பு
முழுக்கவும் இந்தியில்தான் நடக்கிறது.

இந்தத் தகவல்களும் ஆங்கிலத் தொலைக்காட்சிகள்
அளிக்கும் சின்னச் சின்ன துணுக்குகளாகவே மக்களை
சென்றடையும். முழுமையான தகவல்கள் இந்தி
தெரியாதவர்களுக்குக் கிடைக்காது.

இந்திய அரசியல் சாசனத்தின் எட்டாவது பட்டியல்,
22 மொழிகளை இந்தியக் குடியரசின் அதிகாரப்பூர்வ
மொழிகளாகப் பட்டியலிடுகிறது.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,
இந்தியே பெரும் எண்ணிக்கையிலான (பெரும்பாலான அல்ல…
பெரும் எண்ணிக்கையிலான மட்டுமே…..)
மக்களால், அதாவது 43.63 சதவீதம்
மக்களால் பேசப்படுகின்றன.

தமிழ், தெலுங்கு, வங்கம், மராத்தி ஆகியவை
தலா ஐந்து சதவீத மக்களுக்கு மேல் பேசப்படுகின்றன.
(இதுவே 20 சதவீதத்திற்கு மேல் ஆகிவிடுகிறது)

பிரதமர் மோதி தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரசாரத்திற்கு
வரும்போது சில சமயங்களில் ஆங்கிலத்திலும் சில
சமயங்களில் இந்தியிலும் பேசியிருக்கிறார்.

“சமீப காலத்தில் எந்த இந்தியப் பிரதமரும் இப்படி
இந்தியில் மட்டுமே முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட
தில்லை. இதற்கு முன்பாக கடந்த ஆட்சிக் காலத்தில்
பல முறை நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றி
யிருக்கிறார். அப்போது சில சமயங்களில் ஆங்கிலத்திலும்
பேசியிருக்கிறார்.

இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தியும்
ஆங்கிலமும் இருக்கின்றன.

அதில் ஒரு மொழியை மட்டுமே தொடர்ந்து தேர்வுசெய்வது,
அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

இந்தி பேசாத மக்களுக்காகவே கூடுதலாக ஒரு மொழி
அலுவல் மொழியாக வைக்கப்பட்டிருக்கிறது. அதைப் பேசவே
மறுப்பதென்பது இந்தித் திணிப்புதான்,” என்கிறார் தன்னாட்சித்
தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளரான ஆழி செந்தில்நாதன்.

ஆனால், தமிழக பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளரான
நாராயணன் திருப்பதி இதனை மறுக்கிறார். “அவர்
ஆங்கிலத்தில் பேச வேண்டுமென்பதை நான் ஏற்கவில்லை.

எல்லா மொழிகளிலும் மொழிபெயர்ப்பு வேண்டுமென்பதை
ஏற்கிறேன். பிரதமர் கால அவகாசம் கொடுத்துப்பேசியிருந்தால்,
மொழிபெயர்ப்பு சாத்தியமாகியிருக்கும். அவர் சற்று நேரத்திற்கு
முன்புகூட பேசியிருக்கலாம்.( 12 மணி நேரத்திற்கு முன்னதாகவே
பிரதமர் இரவு 8 மணிக்கு பேசுகிறார் என்று அறிவிக்கப்பட்டு விட்டது)
அதனால், சப் – டைட்டில் சாத்தியமில்லாமல்
போயிருக்கலாம்,” என்கிறார் அவர்.

இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பத்தில் ஒருவர் பேசப்
பேச உடனடியாக ‘சப் – டைட்டில்’ கொடுக்க முடியும்.

நாடாளுமன்றத்தில் பேசும்போது உடனடியாக மொழிமாற்றம்
செய்கிறார்கள். எல்லா மொழிகளிலும் உடனடியாக
மொழிமாற்றம் செய்து நேரலையே தர முடியும்.
தொழில்நுட்பம் அதற்கு உதவும் எனச் சுட்டிக்காட்டுகிறார்
செந்தில்நாதன்.

“கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை
மகாராஷ்டிராவிலும் தமிழ்நாட்டிலும், குஜராத்திலும்தான்
அதிகமாக இருக்கிறது.

இந்த மூன்று மாநிலங்களிலும்
பேசப்படாத ஒரு மொழியில் பிரதமர் பேசுவது, அவருக்கு
ஆங்கிலத்தில் பேச விருப்பமில்லை என்பதையே
காட்டுகிறது” என்கிறார் செந்தில்நாதன்.

“இந்தியாவில் எல்லா மொழி பேசுபவர்களும் சமமான
அந்தஸ்துடையவர்கள். கொரோனா பரவிவரும் இந்த
காலகட்டத்தில் தகவல்களும் வெளிப்படைத்
தன்மையும்தான் மிக முக்கியம்.

ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான
வித்தியாசமே அதுதான்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு இந்தி
தெரியாது. இருந்தபோதும் தொலைபேசியில் வரும்
கொரோனா தொடர்பான அறிவுறுத்தல்கள், ரயில்வே
அறிவிப்புகள் எல்லாமே இந்தியில்தான் உள்ளன.
கொரோனா தொடர்பான தினசரி தகவல்களும் தில்லியில்
இருந்தபடி இந்தியிலேயே தரப்படுகின்றன” எனச்
சுட்டிக்காட்டுகிறார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த
மொழியுரிமைப் போராட்டக்காரரான கார்கா சாட்டர்ஜி.

“பிரதமரின் நோக்கம் என்னவாக இருந்தாலும், அவர்
பேசுவது எதுவுமே நமக்கு புரியவில்லை.

அவரது உரை இந்தி பேசும் மக்களுக்காக மட்டும்தானா?
இந்தி பேசுபவர்கள் இந்தியாவைவிட்டு தனியாக
பிரிந்துசென்றுவிட்டார்களா?

இந்தி பேசும் பகுதியைச் சேர்ந்தவர்கள், இந்தி பேசாத
மக்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்துகிறார்கள்.

அந்த இரண்டாம் தர குடிமக்களின் வாழ்க்கையோ
உயிரோ யாருக்கும் முக்கியமில்லை. இந்தி பேசுபவர்களுக்கு
எல்லாமே அவர்களது மொழியில் கிடைக்கிறது. இது
சரியானதுதானா?” எனக் கேள்வியெழுப்புகிறார் கார்கா.

“இந்த விவகாரத்தை அரசிடமும் சொல்வோம். தவிர,
இனி பிரதமர் பேசினால், உடனடியாக அதன் மொழி
பெயர்ப்பு ஊடகங்களைச் சென்றடையச் செய்வோம்”
என்கிறார் நாராயணன்.

மத்திய அரசின் ஒரே மொழியாக இந்தி உருவெடுத்து
வருவதோடு, எந்த ஒரு திட்டத்திற்கோ, நிகழ்வுக்கோ
பெயர்சூட்டும்போதும் –

‘ஜனதா கர்ஃப்யூ’,
“ஆத்மநிர்பார் பாரத் அபியான்”,
‘ஸ்ரமிக்’ ரயில்கள்,
‘வந்தே பாரத்’ என இந்தி அல்லது வடமொழிப் பெயர்களே

சூட்டப்படுகின்றன.

.
( நன்றி – முரளிதரன் காசி விஸ்வநாதன்
பிபிசி தமிழ் -https://www.bbc.com/tamil/india-52650429 )

—————————————

மோடிஜி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள
திட்டங்கள்-யோசனைகளின் பெயர்கள்…..
नरेंद्र मोदी सरकार द्वारा शुरू की गई योजनाएं
————————-

प्रधानमंत्री सुकन्या समृद्धि योजना
प्रधानमंत्री मुद्रा योजना
प्रधानमंत्री जन धन योजना
प्रधानमंत्री आवास योजना
प्रधानमंत्री जीवन ज्योति बीमा योजना
आयुष्मान भारत
सांसद आदर्श ग्राम योजना
प्रधानमंत्री फसल बीमा योजना
प्रधानमंत्री सुरक्षा बीमा योजना
अटल पेंशन योजना
प्रधान मंत्री नेशनल नुट्रिशन मिशन / राष्ट्रीय पोषण मिशन
प्रधानमंत्री ग्राम सिंचाई योजना
प्रधानमंत्री गरीब कल्याण योजनाएं
प्राइम मिनिस्टर इम्‍प्‍लॉयमेंट जनरेशन प्रोग्राम
प्राइम मिनिस्टर रिसर्च फेलोशिप स्कीम
ऑपरेशन ग्रीन्स मिशन
सोलर चरखा स्कीम
प्रधानमंत्री जन औषधि योजना
प्रधान मंत्री कौशल विकास योजना
स्त्री स्वाभिमान
साइबर सुरक्षित भारत प्रोग्राम
जीएसटी ई-वे बिल
कुसुम स्कीम
गोबर धन स्कीम
नेशनल हेल्थ प्रोटेक्शन स्कीम
उजाला स्कीम
खेलो इंडिया स्कूल गेम्स २०१८
सोशल सिक्योरिटी स्कीम
स्कीम फॉर एडोलसेंट गर्ल्स (साबला)
फेम इंडिया स्कीम
मार्केट एश्‍योरेंस स्कीम
अटल भूजल योजना
कंडोनेशन ऑफ डिले स्कीम
सृष्टि स्कीम
लिवेबिलिटी इंडेक्स प्रोग्राम
मेक इन इंडिया
स्वच्छ भारत अभियान
किसान विकास पत्र
सॉइल हेल्थ कार्ड स्कीम
डिजिटल इंडिया
स्किल इंडिया
बेटी बचाओ, बेटी पढ़ाओ योजना
मिशन इन्द्रधनुष
नेशनल बायोफ्यूल पॉलिसी 2018
दीन दयाल उपाध्याय ग्राम ज्योति योजना
दीन दयाल उपाध्याय ग्रामीण कौशल्या योजना
पंडित दीनदयाल उपाध्याय श्रमेव जयते योजना
अटल मिशन फॉर रेजुवेनशन एंड अर्बन ट्रांसफॉर्मेशन (अमृत योजना)
स्वदेश दर्शन योजना
प्रधानमंत्री भारतीय जन औषधि परियोजना
पिल्ग्रिमेज रेजुवेनशन एंड स्पिरिचुअल ऑग्मेंटेशन ड्राइव (प्रसाद योजना)
नेशनल हेरिटेज सिटी डेवलपमेंट एंड ऑग्मेंटेशन योजना (ह्रदय योजना)
स्मार्ट सिटी मिशन
गोल्ड मोनेटाईजेशन स्कीम
स्टार्टअप इंडिया, स्टैंड अप इंडिया
डिजिलॉकर
इंटीग्रेटेड पावर डेवलपमेंट स्कीम
उड़ान स्कीम
नेशनल बाल स्वछता मिशन
वन रैंक वन पेंशन (OROP) स्कीम
श्यामा प्रसाद मुखेर्जी रुर्बन मिशन
ड्राइविंग ट्रेनिंग सेंटर स्कीम
राइज स्कीम
सागरमाला प्रोजेक्ट
‘प्रकाश पथ’ – ‘वे टू लाइट’
उज्वल डिस्कॉम एश्‍योरेंस योजना
विकल्प स्कीम
नेशनल स्पोर्ट्स टैलेंट सर्च स्कीम
राष्ट्रीय गोकुल मिशन
पहल – डायरेक्ट बेनिफिट्स ट्रांसफर फॉर LPG (DBTL) कंज्‍यूमर्स स्कीम
नेशनल इंस्टीटूशन फॉर ट्रांसफॉर्मिंग इंडिया (नीति आयोग)
प्रधानमंत्री खनिज क्षेत्र कल्याण योजना
नमामि गंगे प्रोजेक्ट
सेतु भारतं प्रोजेक्ट
रियल एस्टेट बिल
आधार लिंकिंग
क्लीन माय कोच
राष्ट्रीय ग्राम स्वराज अभियान – Proposed
प्रधानमंत्री उज्ज्वला योजना
प्रधानमंत्री ग्रामीण आवास योजना (इंदिरा आवास योजना का बदला हुआ नाम)
उन्नत भारत अभियान
टीबी मिशन 2020
धनलक्ष्मी योजना
नेशनल अप्रेंटिसशिप प्रमोशन स्कीम
गंगाजल डिलीवरी स्कीम
प्रधान मंत्री सुरक्षित मातृत्व अभियान
विद्यांजलि योजना
स्टैंड अप इंडिया लोन स्कीम
ग्राम उदय से भारत उदय अभियान
सामाजिक अधिकारिता शिविर
रेलवे यात्री बीमा योजना
स्मार्ट गंगा सिटी
मिशन भागीरथ (तेलंगाना में)
विद्यालक्ष्मी लोन स्कीम
स्वयं प्रभा
प्रधान मंत्री सुरक्षित सड़क योजना (आने वाली योजना)
शाला अश्मिता योजना (आने वाली योजना)
प्रधानमंत्री ग्राम परिवहन योजना (आने वाली योजना)
राष्ट्रीय स्वास्थ्य सुरक्षा अभियान – National Health Protection Mission (आने वाली
योजना)
राईट टू लाइट स्कीम (आने वाली योजना)
राष्ट्रीय संस्कृति महोत्सव
डिजिटल ग्राम – (आने वाली योजना)
ऊर्जा गंगा
सौर सुजाला योजना
एक भारत श्रेष्ठ भारत
शहरी हरित परिवहन योजना (GUTS)
500 और 1000 के नोट बंद
प्रधान मंत्री युवा योजना
भारत नेशनल कार असेसमेंट प्रोग्राम (NCAP)
अमृत OR AMRIT (अफोर्डेबल मेडिसिन एंड रिलाएबल इम्प्लांट्स फॉर ट्रीटमेंट)
राष्ट्रीय आदिवासी उत्सव
प्रवासी कौशल विकास योजना
प्रधानमंत्री रोजगार प्रोत्साहन योजना
गर्भवती महिलाओं के लिए आर्थिक सहायता योजना / प्रधान मंत्री सुरक्षित मातृत्व अभियान
वरिष्ठ नागरिकों के लिए Fixed Deposit स्कीम – वरिष्ठ पेंशन बीमा योजना 2017
प्रधानमंत्री ग्रामीण डिजिटल साक्षरता अभियान
यूनिवर्सल बेसिक इनकम स्कीम – विचाराधीन
जन धन खाता धारकों के लिए बीमा योजना
महिला उद्यमियों के लिए स्टार्ट-अप इंडिया योजना
मछुआरों के लिए मुद्रा लोन योजना
ग्रीन अर्बन मोबिलिटी स्कीम
राष्ट्रीय वयोश्री योजना
MIG के लिए प्रधानमंत्री आवास योजना लोन स्कीम (PMAY)
व्यापारियों के लिए भीम आधार एप
भीम रेफेरल बोनस स्कीम और कैशबैक स्कीम
शत्रु सम्पति कानून
ट्रिपल तलाक कानून
पॉवेरटेक्स इंडिया स्कीम
भारत के वीर पोर्टल
खाद्य संसाधन उद्योग के लिए सम्पदा योजना
विदेश में काम करने वाले भारतीय मूल के वैज्ञानिकों के लिए वज्रा योजना
प्रधानमंत्री वय वंदन योजना
प्रधानमंत्री ग्राम परिवहन योजना
मुस्लिम लड़कियों के लिए शादी शगुन योजना
संकल्प से सिद्धि
प्रधान मंत्री सहज बिजली हर घर योजना
पॉवरलूम (विद्युत से चलने वाला करघा) उद्योग के लिए सौर ऊर्जा योजना
राष्ट्रीय उच्चतर शिक्षा अभियान
राइज योजना – सभी सरकारों उच्च शिक्षा संस्थानों में बुनियादी ढांचे के विकास के लिए
योजना
नार्थ ईस्ट स्पेशल इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट स्कीम (NESIDS)
नमो योजना केंद्र योजना – सेवा/सहायता केंद्र
स्कीम फॉर कैपेसिटी बिल्डिंग इन टेक्सटाइल सेक्टर – स्किल डेवलपमेंट
कृषि में मशीनरी के उपयोग को बढ़ावा देने के लिए योजना
गर्भवती महिलाओं और बच्चों के लिए प्रधानमंत्री राष्ट्रीय पोषण मिशन
प्राइम मिनिस्टर रिसर्च फेलोशिप स्कीम
प्रधानमंत्री रोजगार निर्माण कार्यक्रम (PMEGP)
आयुष्मान भारत योजना – राष्ट्रीय स्वास्थ्य संरक्षण मिशन और स्वास्थ्य और कल्याण केंद्र
स्त्री स्वाभिमान योजना
क्रेडिट गारंटी फण्ड फॉर एजुकेशन लोन (CGFEL) & सेंट्रल सेक्टर इंटरेस्ट सब्सिडी (CSIS)
स्कीम
प्रधान मंत्री महिला शक्ति केंद्र (PMMSK) योजना
ड्राइवर्स के लिए ड्राइविंग ट्रेनिंग सेंटर योजना
GST E-Way Bill
ग्रैच्युटी भुगतान के लिए संशोधित बिल 2018
जैविक खेती पोर्टल
wep.gov.in – महिला उद्यमिता मंच
Nasscom FUTURESKILLS Platform
ऑपरेशन ग्रीन्स मिशन

(https://www.indiatv.in/paisa/my-profit-here-are-the-schemes-started-by-narendra-modi-government-to-bring-positive-changes-in-india-587046 )

.
———————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

23 Responses to இந்தியப் பிரதமர் இந்தி பேசும் மக்களுக்கு மட்டும் தான் பிரதமரா…..?

 1. புவியரசு சொல்கிறார்:

  உலகத்திலேயே,
  தனது நாட்டின் தலைவர்/ பிரதமர்
  தொலைக்காட்சியில் பேசும்போது,
  பரவசத்துடன் அவர் முகத்தை மட்டும் பார்த்துக்
  கொண்டு, அவர் என்ன பேசுகிறார் என்றே
  புரியாமல் சந்தோஷிக்க வேண்டிய
  பாக்கியம் இந்தி பேசாத இந்தியர்களுக்கு
  மட்டுமே கிடைக்கிறது.
  வாழ்க இந்தி’யா. வளர்க மத்திய அரசின்
  ஒரே மொழிப் பாசம்.

 2. Ezhil சொல்கிறார்:

  எனக்கு ஒரு சந்தேகம் சார்.. தன்னோட தாய்மொழியான குஜராத்தி மேல கூட இவ்வளோ ஆர்வமா இருப்பாரான்னு தெரியல… இல்ல இந்தி தான் என் தாய்மொழி, சமஸ்கிருதம் தான் என் தெய்வ மொழின்னு மாறிட்டாரா ?

 3. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  முதலில் திரு மோடி பேசுவது இந்தி இல்லை .
  உ- ம் ஸுகன்யா ஸம்ருத்தி யோஜனா – இது சமஸ்க்ரிதம் .

  முதலில் இந்தி என்று ஒரு மொழியே கிடையாது .
  இந்துஸ்தானி என்றுதான் இருந்தது அதை
  அந்நிய மொழி i .e . முஸ்லீம்கள் பேசும் மொழி .என்றார் .
  தேவநாகரி எழுத்தில் எழுதுவது இந்தி என ஆரம்பித்தார்கள் .
  இந்தி – இந்து – இந்தியா என்பது கொள்கை .

  100 வருடங்களுக்கு முன் உருது மொழியை இந்து /முஸ்லீம்
  என அனைவரும் பயன்படுத்தினர் . இன்று கூட
  பழைய கோர்ட் ரெகார்ட்கள் , பத்திரம் உருதுவில்தான் இருக்கும் .

  பேச்சுமொழியில் உள்ள சொற்களை விடுத்து
  சமஸ்க்ரித சொற்களை புகுத்தினர் – ஷுத் ஹிந்தி !
  இந்தி இலக்கண நூல் 1950 பிறகுதான் வெளிவந்தது .

  மொழிக்கு மத முத்திரை குத்தி அது கடைசியில்
  இந்தியா பாகிஸ்தான் என்று முடிந்தது .

  இந்தி தேச ஒற்றுமைக்கு அவசியம் என்று சொல்கிறார்கள் .
  ஏற்கனவே ஆங்கிலம் இருக்கும் போது புதிதாக ஒரு மொழி எதற்கு ?

  அவுர் தகனிகி பாஷா இந்தி மே நஹி ஹை !
  இந்தியில் விஞ்ஞான சொற்கள் கிடையா .

  • புதியவன் சொல்கிறார்:

   //இந்தியில் விஞ்ஞான சொற்கள் கிடையா .// – உண்மைதான். விஞ்ஞானச் சொற்கள் தமிழிலும் வேறு இந்திய மொழிகளிலும் இல்லை. இல்லை.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    நான் உங்கள் கூற்றை கடுமையாக எதிர்க்கிறேன்.
    மறுக்கிறேன்….

    தமிழில் விஞ்ஞானச் சொற்கள் இல்லை என்பது
    தவறான புரிதல்.
    உங்களுக்கு நிலவரம் தெரியவில்லை;
    நீங்கள் பல ஆண்டுகள் பின் தங்கி இருக்கிறீர்கள்.
    உங்களுக்கு தெரியாததெல்லாம் இல்லாததாகி விடாது.

    பாஜக ஆதரவு என்கிற நிலையில் நீங்கள் ஹிந்தியை
    ஆதரிக்கவே செய்வீர்கள் என்பதை நான் அறிவேன்.
    ஆனால், தமிழை மட்டம் தட்டும் அளவிற்கும்
    போகிறீர்கள் என்பது வருத்தம் அளிக்கிறது.

    .
    -காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    கா.மை. சார்…… மிகுந்த அடக்கத்துடன் சொல்லிக்கறேன்.. எனக்குத் தமிழ் ஆர்வமும், மொழிப் புரிதலும் அதிகம்.

    இங்கு மெய்ப்பொருள், ஆங்கிலத்தில்தான் விஞ்ஞானச் சொற்கள் உண்டு, அதனால் அந்த மொழியைத்தான் உபயோகிக்கணும் என்ற த்வனியில் சொல்லியிருந்தார். ஃப்ரான்ஸ், சைனா, ரஷ்யா, ஜப்பான் போன்ற பல நாடுகளில், அவர்கள் மொழியிலேயே அறிவியல் பட்ட மேற்படிப்பு படிக்க இயலும், வேலை பார்க்க இயலும்.

    தயவு செய்து ஒரு இந்திய மொழியில் அறிவியல்/மருத்துவ/பொறியியல் பட்டமேற்படிப்பு படித்தவர் வேலையில் இருக்கிறாரா என்பதை நீங்களே ஆராய்ந்து தெளிந்துகொள்ளுங்கள். எந்தக் காரணத்தினால் நான் ‘பல ஆண்டுகள் பின் தங்கி இருக்கிறேன்’ என்று அனுமானித்தீர்கள் என்பதையும் தெளிவுபடுத்துங்கள்.

    கடவுச்சீட்டு, பரப்புரை, அவதானித்தல் போன்ற பல தமிழ் வார்த்தைகளை நீங்களோ நானோ அல்லது இத் தளத்தைப் படிப்பவர்களோ நம் இளமைக்காலத்தில் கேள்விப்பட்டிருக்கிறோமா? ஆனால் இலங்கையில் இது பலப் பல தசாப்தங்களாக வழக்கத்தில் இருக்கிறது. இன்றும் இலங்கைத் தமிழர்கள் உபயோகிக்கும் அறிவியல் தமிழ்ச் சொற்களை, வேலை/தொழிலுக்கான தமிழ்ச்சொற்களை நாம் அறிந்ததும் இல்லை, உபயோகித்ததும் இல்லை.

    இது, வெறும் ‘ஹிந்தியில்’ பேசுவதாலோ இல்லை ‘தமிழில்’ பேசுவதாலோ நடந்துவிடாது. நம் மொழியை வளர்க்கணும், நம் மொழியிலேயே அனைத்து கலைச்சொற்களும் உபயோகித்து நம் அறிவை விருத்தி செய்துகொள்வது மட்டுமல்ல, வேலை பார்க்கும் நிலைமையும் வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்டது.

    எனக்கு ஹிந்தி தெரியாது என்பது உங்களுக்குத் தெரியும். எனக்கு தமிழ் கொஞ்சம் அதிகமாகத் தெரியும் என்பதையும் இதன்மூலம் சொல்லிக்கொள்கிறேன்.

    பாஜக ஆதரவு என்பது, காங்கிரஸ் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் ‘ஹிந்து’ எதிர்ப்பு, ஹிந்துக்களின் பாரம்பர்யத்தைக் குலைத்தல், அவர்களின் நம்பிக்கைகளை அழித்தல், எள்ளிநகையாடுவது என்ற நிலையிலிருந்து ‘ஹிந்து ஆதரவு’ என்ற நிலையில் இருப்பதால்தான். அது தவிர, பாஜக பல விஷயங்களில் ஊழல் காங்கிரஸ், திமுக , பச்சோந்தி கம்யூனிஸ்ட் கும்பல்களைவிட மேம்பட்டிருக்கிறது என்பதாலும்தான். இங்கேயே நிறைய தடவை எழுதியிருக்கிறேன், டிமானிடைசேஷன், ஊழல் பெருச்சாளிகளை காராக்கிரகத்தில் முற்றிலும் அடைத்துவைக்காதது, நேர்மையான அரசியலை மேற்கொள்ளுவது போன்ற விஷயங்களிலும், தங்கள் கொள்கைகளுக்கு மாறாக நடக்கும் கட்சிக்காரர்களை அடக்காதது, வெளிப்படையாக கட்சிக்காரர்களின் ஊழல்/தவறான போக்கு தெரியும்போது உடனடி நடவடிக்கை எடுக்காதது, பேச்சில் அத்துமீறும் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காதது (அந்த விஷயம் ஆறி ஓரிரு மாதங்கள் கழித்து, மோடி அவர்களோ இல்லை அவரது சகாக்களோ ‘இது மாதிரி செயல்படுவது அத்ருப்தி அளிக்கிறது’ என்று பேச்சுவாக்கில் சொல்வது) போன்ற விஷயங்களில் பாஜகவை எனக்குப் பிடிக்கவில்லை. பாஜக இந்த விஷயங்களில் காங்கிரஸைவிட மாறுபட்டு இல்லை (காங். மாதிரி வெளிப்படையாக ஊழலை ஆதரிக்கவில்லை, திருடர்களுக்கு பதவி கொடுக்கவில்லை என்பதுதான் வித்தியாசம்)

    அதனால் எனக்கு கண்ணைமூடிக்கொண்டு பாஜகவை ஆதரிக்கவோ இல்லை எதிர்க்கவோ அவசியம் இல்லை.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     புதியவன்,

     நீங்கள் சில விஷயங்களில் மிகவும் வல்லவர்
     என்பது எனக்கு நன்கு தெரியும் –
     நிறைய அனுபவப்பட்டு விட்டேன்…!!!

     விஷயத்தை திசை திருப்புவதும் அதில் ஒன்று.

     ஹிந்தியையும், தமிழையும் – ஒரே நோக்கில்
     வைத்து நீங்கள் எடைபோட்டது நிச்சயமாக
     ஏற்கமுடியாதது.
     ஏதோ நண்பர் மெய்ப்பொருளுக்கு பதில்
     சொன்ன வேகம் என்று நீங்கள் சொல்லி
     இருந்தால் விஷயம் முடிந்தது.

     ஆனால் நீங்கள் மேலும் திசை திருப்புகிறீர்கள்.

     //ஃப்ரான்ஸ், சைனா, ரஷ்யா, ஜப்பான் போன்ற
     பல நாடுகளில், அவர்கள் மொழியிலேயே அறிவியல்
     பட்ட மேற்படிப்பு படிக்க இயலும், வேலை பார்க்க
     இயலும்.

     தயவு செய்து ஒரு இந்திய மொழியில் அறிவியல்/
     மருத்துவ/பொறியியல் பட்டமேற்படிப்பு
     படித்தவர் வேலையில் இருக்கிறாரா என்பதை
     நீங்களே ஆராய்ந்து தெளிந்துகொள்ளுங்கள்.//

     வாதத்திற்கு பதில் சொல்லலாம்.
     ஆனால் விதண்டாவாதத்திற்கு…..?

     தெரியாதவர்களுக்கு சொல்லலாம்…
     ஆனால் தெரிந்துகொண்டே அடம் பிடிப்பவர்களுக்கு…?

     நீங்கள் உதாரணம் காட்டும் எந்த நாட்டின் சரித்திரத்தில்,
     அந்நிய மொழி ஆட்சிமொழியாக இருந்திருக்கிறது…?
     200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் ஆங்கிலம் தான்
     ஆட்சிமொழியாக இருந்தது. எனவே, கிட்டத்தட்ட
     படித்தவர்கள் அனைவருக்கும் இந்தியாவில் ஓரளவு ஆங்கிலம்
     நிச்சயம் தெரியும்.

     இங்கே 200 ஆண்டுகளாக ஆட்சிமொழியாக
     இருந்த ஒன்றை ஏன் அகற்ற வேண்டும்.
     ஹிந்தி வெறி/ ஆர்.எஸ்.எஸ்.வெறி
     என்பதைத்தவிர வேறு என்ன
     காரணம் இருக்க முடியும்….?

     ஆங்கிலம் ஒரு உலக மொழி.
     மேற்படிப்புக்கு, ஆராய்ச்சிகளுக்கு,
     வேலை வாய்ப்புக்கு – எல்லாவற்றிற்கும் ஏற்றது.
     எனவே, ஏற்கெனவே ஆங்கில அறிவு உள்ள மக்கள்
     தாய்மொழியில் அறிவியலோ, மருத்துவமோ –
     படிப்பது நேரத்தையும், வாய்ப்பையும் வீணடிக்கும் செயல்
     என்று கருதுகிறார்கள்.

     அது சரி, தாய்மொழியிலேயே படித்த ஜப்பானியரும்,
     சீனரும் இன்று ஆங்கிலத்தை விழுந்து விழுந்து கற்பது ஏன்…?

     இதற்கு மேல் உங்களுக்கு தெரிந்த விஷயத்தையே
     நான் மீண்டும் இங்கே சொல்லி நேரத்தையும், எனெர்ஜியையும்
     வீணடிக்க விரும்பவில்லை;

     எது எப்படி இருந்தாலும் சரி –
     ஹிந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழி என்று
     சொல்லும் எவரையும் நான் ஏற்க மாட்டேன்.

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 4. புதியவன் சொல்கிறார்:

  ஹிந்தியில் மட்டும் மோடி அவர்கள் பேசுவது, காரணமாக (அஜெண்டா) இருக்கும் என்று தோன்றுகிறது. உடனுக்குடன் ஆங்கிலத்தில் மற்றும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதால் இதற்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதில்லை. இந்தியாவின் மொழியைத்தானே அவர் பேசுகிறார்.

  நம் தமிழக எம்.பிக்களில் எத்தனை பேருக்கு தேசிய மொழி தெரியும்? தெரியாமல் இருப்பதால், அவர்களால் நமக்கு ஒரு பயனும் இல்லை என்று சொல்லமுடியுமா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   // இந்தியாவின் மொழியைத்தானே அவர் பேசுகிறார். //

   சட்டப்படியே, ஆங்கிலமும் இந்திய மொழிகளில்
   ஒன்று என்பதை முதலில் அறியுங்கள். இந்திய
   மாநிலம் ஒன்றின் ஆட்சிமொழி கூட ஆங்கிலம் தான்.

   மத்திய அரசின் அலுவல்களில், இந்தியோடு கூட,
   ஆங்கிலமும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது தான்
   இன்றுவரையுள்ள அதிகாரபூர்வமான நிலை.

   // தமிழக எம்.பிக்களில் எத்தனை பேருக்கு
   தேசிய மொழி தெரியும்? //

   மிகவும் வருத்தத்தோடு பதிகிறேன்…
   எது தேசிய மொழி …?

   அரசியல் சட்டம் அங்கீகரித்திருக்கும் அத்தனை
   மொழிகளும், ( என் தாய்மொழி தமிழ் உட்பட )
   இந்தியாவின் தேசிய மொழிகள் தான்.

   உங்கள் பாஜக பாசம் – கண்களை மறைப்பதோடு;
   அறிவையும், சிந்திக்கும் திறனையும் கூட
   பாதிக்கிறதோ என்று அஞ்சுகிறேன்.

   .
   -காவிரிமைந்தன்

  • Ezhil சொல்கிறார்:

   புதியவன் சார், எல்லாமே மொழி தான்.. யாருக்கு எப்போ தேவையோ அப்போ எப்படினாலும் கத்துக்கலாம்.. ஆனா அதுக்காக தாய்மொழியை விட்டுக்கொடுக்க கூடாது.

   //இந்தியாவின் மொழியைத்தானே அவர் பேசுகிறார்// ஆமா சார். அப்போ அடுத்த உரையை முழுக்க தமிழ்ல பேச சொல்லுங்க. இப்படி இன்னும் இருக்கும் 4 வருடமும் ஒவ்வொரு தேசிய மொழில உரையை நடத்த சொல்லுங்க.. அடுத்த தேர்தல்ல நானே பாஜகக்கு ஓட்டு சேகரிக்குறேன்.

  • புதியவன் சொல்கிறார்:

   //மத்திய அரசின் அலுவல்களில், இந்தியோடு கூட, ஆங்கிலமும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது தான் இன்றுவரையுள்ள அதிகாரபூர்வமான நிலை.// – இதைப்பற்றி முன்னமே நான் குறிப்பிட்டிருக்கிறேன். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு (மோடி காலத்தில்) எங்கும் ஹிந்தியின் ஆதிக்கம் அதிகமாகிறது. நானே என்னுடைய வெளிநாட்டு எம்பஸி அனுபவத்தை இங்கு சொல்லியிருக்கிறேன். Suddenஆ அலுவலர்கள் ஹிந்தியில் மட்டும் பேசியதை. ஆனால் இங்கு நாம் விவாதிப்பது பிரதமர் மோடி ஹிந்தியில் பேசுவதை. அவரது தாய்மொழி குஜராத்தி. ஆனால் அவர் இந்தியப் பிரதமர் என்பதால் ஹிந்தியில் பேசுகிறார். அதில் என்னால் தவறு காண இயலவில்லை. உடனுக்குடன் அது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறதே.

   சரி… நம் விவாதத்தை விட்டுவிடுவோம். நம் தமிழக எம்பிக்கள் எவ்வளவு தமிழ் ஆர்வம் மிக்கவர்கள், மொழிப்பற்றில் ஊறியவர்கள், தமிழிலேயே நனைந்து தெளிந்தவர்கள். மொழிப்போர் தியாகிகள் என்று அவர்களையே அவர்கள் குறிப்பிட்டுக்கொள்வார்கள். அவர்கள் ஒரு முறையாவது இதனைப் பற்றி (பிரதமர் ஹிந்தியில் பேசுவது, திட்டங்களுக்கு ஹிந்தி/சமஸ்கிருத பெயர்கள் வைப்பது) கடந்த 6 ஆண்டுகளில் பேசியிருக்கிறார்களா? எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்களா? இல்லை வெளிநடப்பு செய்திருக்கிறார்களா? கொஞ்சம் விசாரித்து விவரத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். நம் ரெப்ரெசெண்டேடிவ் களான அந்த 39 எம்பிக்கள் (சரி.. திமுக கூட்டணியின் 38 எம்.பிக்கள்) இதனை ஒரு விஷயமாகவே எண்ணாதபோது, நாம் மாத்திரம் ஏன் இதை மிகப் பெரிய விஷயமாக விவாதிக்கிறோம்? 38லயும், மிகுந்த அனுபவம் மிக்க எம்.பிக்களும் இதனைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசினதாகவே தெரியவில்லையே.

   நீங்கள் எழுதியதற்கு, பாஜக எதிர்ப்பு மனநிலை காரணம் என்றால், இதனைத் தவறாக எண்ணாததற்கு பாஜக ஆதரவு மனநிலைதான் காரணம் என்று ஒத்துக்கொள்கிறேன். அப்படி இல்லை நாட்டின் மீதான அக்கறை காரணம் என்றால், நானும் அதே மனநிலையில்தான் என் கருத்தை எழுதியிருக்கிறேன்.

   • Ezhil சொல்கிறார்:

    நாடாளுமன்றதில்ல கேக்கலைனா வேற யாரும் கேக்க தேவையில்லைனு சொல்லவரீங்களா சார்.. அதெப்படி சரி ஆகும் ? 38 பேர்னு மட்டும் ஏன் சொல்றீங்க 39 சீட் இருக்கும்போது? வசதியா தேனில இருந்து போன தங்கமகனை மட்டும் விட்டுட்டு பேசுறீங்க.. அந்த தங்கமகன் தான் சமஸ்க்ரிதம் ஒரு இனிமையான மொழி அதை கத்துகிறதுக்கு தமிழ் மக்கள் ஆர்வமா இருக்காங்கனு 8 கோடி மக்கள் சார்பா பேசுனாரு. சமஸ்கிருதம் பேசுனா வாய் இனிக்கலாம், மணக்கலாம்.. ஆனால் தேவையில்லாமல் ஒரு மாநிலத்தையே இழுத்து பேசுறதுக்கு இவருக்கு யாரு அனுமதி கொடுத்தது? அதுக்கு நீங்க எதுவும் சொன்னீங்களா?

    இப்போ தான் ட்விட்டர் ல ஒரு போஸ்ட் பார்த்தேன். என்னோட தாய்மொழியான மைதிலி அதுவும் ஒரு அலுவல் மொழி, ஆனால் ஆரோக்கியசேது ஆப் ல இல்லைனு.. அதுக்கு தெலுங்குக்காரர் ஒருத்தர் “நீங்க இப்படியே ஹிந்தி ய தூக்கிப்பிடிச்சுக்கிட்டு இருந்தீங்கன்னா உங்க மைதிலி காணமத்தான் போகும்னு” போட்டிருக்கார் . இதுவும் கூட தப்புனு தான் சொல்லவர்றீங்களா சார்?

    இந்திய பிரதமர் இந்தில தான் பேசணும்னு எதாவது சட்டம் இருக்கா? இந்த மனநிலை தப்பு இல்லையா. மன்னிக்கவும் சார் எனக்கு இது தப்பா தான் படுது.

    • புதியவன் சொல்கிறார்:

     எழில் – விவாதம் நீண்டுகிட்டே போகும். தேனி எம்.பி. பேசியது எல்லாம், அவரது முன்னேற்றத்துக்கு. அதிமுக கட்சி கொள்கைகளைப் பேசலை (இப்போ அதிமுக தலைவர்கள், நிர்வாகிகளில் யார்தான் அதிமுக கட்சி கொள்கைகளைப் பற்றிக் கவலை கொள்கிறார்கள் என்று சொன்னீர்களானால் அதுவும் சரிதான்). அவர் பாஜக ஜால்ராவாக பேசும்போது அவர் பேசியதைக் கண்டுகொள்ளவேண்டிய அவசியமில்லை. நாளைக்கே மந்திரி பதவி கிடைக்கும்னா, அவர் பாஜகவுக்கு தாவிவிடுவார் (இதைப்பற்றியும் நிறைய செய்திகள் அப்போ வந்தன) I just ignored him. நான் ‘அதிமுக’வின் தூண் என்று நம்பியிருந்த ஓபிஎஸ் அவர்களின் மீதான நம்பிக்கையும் பிறகு சிதறினதை அறிவேன். I dont like their BJP பாசம். அவ்ளோதான்.

     பாஜக ஹிந்தியைத் தூக்கிப்பிடிக்குது. இது வெளிப்படையாகத் தெரியுது. ஒரு மொழியைத் தூக்கிப்பிடித்தால், மற்ற பெரும்பான்மை மொழிக்காரர்களிடமிருந்து இயல்பான எதிர்ப்பு வெளிப்படும்.

     இந்த இடுகை பிரதமர் மோடி, ஹிந்தியில் பேசுவது பற்றி. இதனை அவர் ஆரம்பத்திலிருந்து செய்துவருகிறார், அவருடைய தாய்மொழி குஜராத்தி என்று இருந்தபோதும். இதில் நான் பெரிய குற்றம் காணவில்லை. அவர் ஆங்கிலத்தில் பேசினால்தான் மற்றவர்களுக்குப் புரியும் என்பதையும் நான் ஏற்கவில்லை. அவர் என்ன சொல்கிறார் என்று தெரியவேண்டும் என்று நாம் விரும்பினால், நாம் எப்படியும் அறிந்துகொள்வோம் (எல்லா தமிழ் ஊடகத்திலும் உடனுக்குடன் தமிழில் முக்கியக் கருத்தை அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே போடறாங்க. நானும் அப்படித்தான் அறிந்துகொண்டேன்). அவர் சொல்வது எனக்குத் தேவையில்லை என்று நினைத்தால், அவர் என்ன மொழியில் பேசினால்தான் என்ன?

 5. Jksmraja சொல்கிறார்:

  நம் தமிழக எம்பி களில் எத்தனை பேருக்கு தேசிய மொழி தெரியும் ? எது சார் , தேசிய மொழி. கொஞ்சம் விளக்குங்களேன் .

  KM சார் ,
  நான் சில பேரை ஆர்வத்தில் பின்னூட்டம் போடுகிறார்கள் என்று நினைத்திருந்தேன் .
  இப்பொழுது தான் புரிகிறது பணத்திற்க்காக பின்னூட்டம் போடுகிறவர்கள் விமரிசன தளத்திற்குள்ளும் புகுந்து விட்டார்கள் என்பது .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Jksmraja,

   மன்னிக்கவும். நான் புதியவனை நன்கு உணர்வேன்.
   பணத்திற்காக பின்னூட்டம் என்கிற வார்த்தையை
   தயவுசெய்து பயன்படுத்த வேண்டாம்.

   இது அவரது பாஜக பாசத்தின் வெளிப்பாடு –
   இப்படியெல்லாம் எழுத வைக்கிறது.

   .
   -காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   நன்றி கா.மை. சார்.

   பணத்துக்காக இடுகை என்பது இந்திய அளவில் திமுகவினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம். அந்த வியாதி வேறு எந்தக் கட்சிக்கும் இன்னும் பரவவில்லை. ஆரம்பித்த புதிதில் 200 ரூபாய் வாங்கிக்கொண்டு தங்கள் பிளாக்குகளில் பலர் திமுகவை ஆதரித்து, தளபதியை ஆதரித்து என்றெல்லாம் இடுகை போடுவார்கள். தேர்தல் நேரத்தில் பணம், இடுகையின் வருகையைப் பொருத்து அதிகமாகுமாம். இந்த விஷயம் எல்லோருக்கும் தெரிந்ததும், திமுகவைப் பாராட்டி ஒரு இடுகை ஒருவர் எழுதினாலே, இவரும் 200 ரூபாய் ஆசாமி போலிருக்கு என்று எல்லோரும் நினைக்க ஆரம்பித்துவிட்டனர்.

   நான் நினைத்த கருத்தை இன்னொருவர் எழுதவில்லை என்றால், ‘அவர் விலைபோய்விட்டார்’ என்று எண்ணுவதும் ஒரு வியாதிதான். அது குறிப்பிட்ட சிலருக்குத்தான் இருக்கிறது. (இவங்க தேசவிரோதிகள், பாகிஸ்தானுக்கு அடிமையானவங்க, பயங்கரவாதிகள் என்று ஒட்டு மொத்தமா சிலரை எழுதுபவர்களும் அப்படிப்பட்ட வியாதியஸ்தர்கள்தாம்)

   • Ezhil சொல்கிறார்:

    மன்னிக்கவும் சார். இந்த வியாதி எல்லா கட்சிலயும் இருக்கு.. பாஜகவிலும் இப்படி சமூக வலைத்தளங்கள்ல போஸ்ட் போடுறதுக்கு காசு கொடுக்குறாங்க. அப்படி ஒரு பக்தாள்க்கு வெறும் 2 ரூபாய் அக்கௌன்ட் ல கிரெடிட் ஆகியிருக்கு. அதோட ஸ்க்ரீன்ஷாட்டே நெட்டுல சுத்திக்கிட்டு இருக்கு. இது எந்த அளவுக்கு உண்மைன்னு கேட்டீங்கன்னா 200 ரூபாய் அளவுக்கு உண்மை தான். திமுகவிலே இருக்கிற காசுக்கு 200 ரூபா கொடுக்கிறாங்கன்னா, பாஜக கிட்ட இருக்கிற கஜானாவுக்கு வெறும் 2 ருபாய் கம்மி தானே.. ?

  • புதியவன் சொல்கிறார்:

   @மெய்ப்பொருள் – கா.மை. சார் இதனைப் பற்றி ஒரு இடுகை போடவேண்டும் (எப்போ வசதியோ அப்போ) என நான் எதிர்பார்க்கிறேன். நீங்கள் எழுதியுள்ளது பற்றி எனக்கு சந்தேகம் உண்டு. (Fake news are produced and forwarded in whatsapp by vested interest groups என்று). நானே ஒரு சில ஃபார்வர்ட் களை, வெரிஃபை செய்து அவை முழுக்க முழுக்க ‘தயாரிக்கப்பட்ட’ செய்திகள் என்று கண்டுகொண்டிருக்கிறேன். அப்படி வெரிஃபை செய்யாமல் படித்தால், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ, சமூகத்தின் மீது தவறான அபிப்ராயம் ஏற்படும்படியாகவோ நம் மனநிலையை அத்தகைய ‘செய்திகள்’ மாற்றும்.

   பொதுவா வாட்சப்பில் வரும் ஃபார்வார்டுகளில் 90% உண்மை கிடையாது. அனேகமா ஃபார்வர்ட் பண்ணுபவர்கள், கிளிப்பிங் தயார் செய்யறவங்க, மீம்ஸ் போடறவங்க எல்லாரும் வேலையற்ற வீணர்கள்தாம் என்பது என் அபிப்ராயம்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    புதியவன்,

    நீங்கள் இந்த விஷயத்தில் நிறைய ஆராய்ச்சி
    செய்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது…

    நான் உங்கள் வழியாகவே உறுதி செய்து
    கொள்வதற்காக கேட்கிறேன்…

    எந்த கட்சிக்கு ஆதரவாக, அல்லது
    எந்தவித பிரச்சாரங்களை மேற்கொள்ளும்
    forward செய்திகள் அதிக அளவில்
    பரப்பப்படுகின்றன என்று சொல்ல முடியுமா…?

    உங்களிடமிருந்து, நியாயமான -வெளிப்படையான
    பதிலை எதிர்பார்க்கிறேன்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • Manivannan சொல்கிறார்:

     சித்த மருத்துவம் தமிழில் படித்து மருத்துவர்களாக வேலை செய்கிறார்கள். இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகரிக்க பட்ட மருத்துவ படிப்பு. B.S.M.S (Bachelor of Siddha Medicine and Surgery)

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      நன்றி மணிவண்ணன்.

      உங்கள் பதிலை நான் நண்பர் புதியவனுக்கு
      சமர்ப்பணம் செய்கிறேன்.

      புதியவன்,

      நினைவுபடுத்துவதற்கு மன்னிக்கவும்….

      கூடவே, மேலே நான் கேட்டுள்ள
      தகவலையும் தருவீர்கள் என்று
      நம்புகிறேன்.
      ( …எந்த கட்சிக்கு ஆதரவாக, அல்லது
      எந்தவித பிரச்சாரங்களை மேற்கொள்ளும்
      forward செய்திகள் அதிக அளவில்
      பரப்பப்படுகின்றன என்று சொல்ல முடியுமா…?

      உங்களிடமிருந்து, நியாயமான -வெளிப்படையான
      பதிலை எதிர்பார்க்கிறேன்…)

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

     @ மணிவண்ணன்…. நான் பாளையங்கோட்டையில் இருந்தவன், சித்தா கல்லூரிக்குப் பலமுறை சென்றிருக்கிறேன். அங்கு வைத்தியத்தில் பல சித்தர் பாடல்கள், மருந்து தயாரிக்கும் முறையை விளக்குவதும் அவர்களுக்குப் பாடத்தில் உண்டு. அங்கு படித்த பலர் என் நண்பர்களாக இருந்திருக்கின்றனர், தமிழ் ஆர்வத்தால் அவர்கள் பாடத்தையும் நான் படித்து அர்த்தம் காண முனைந்திருக்கிறேன். ஆனால் இது எனது ஆதங்கத்துக்கான பதில் அல்ல.

     @ கா.மை. சார்… நேற்று இதற்கான பதிலைச் சொல்லியிருந்தேன். (ஒரு ஆதாரமும் இணைத்திருந்தேன்…அதனால் இருக்கும்) பதில் வெளிவரவில்லை. காரணத்தை அஸ்யூம் செய்துகொண்டேன் (not at your end).

     ‘அதிக அளவில்’ என்று ஒப்பிட முடியாது. வெளிப்படையாக இங்கு எழுதுவது தளத்தின் நோக்கத்துக்கு இடையூறாகிவிடும். ஹிந்து எதிர்ப்பு, கோவில்கள் பற்றி ஒரு சார்பான இடுகைகள், எப்படி தன் மதத்தை வளர்ப்பது, இந்து பாரம்பர்யத்தை கிண்டல் செய்வது என்று இரு மதங்களைச் சேர்ந்தவர்கள், அவர்கள் இன்ஸ்டிடியூட்ஸ் செய்வது மிக அதிகமாக ஃபார்வர்ட் ஆகிக்கொண்டிருந்தது. இப்போது ஒரு கட்சியின் ஒரு பிரிவு, ‘தயாரிக்கப்பட்ட ஸ்டாடிஸ்டிக்ஸ், செய்திகள்’ நிறைய ஃபார்வர்ட் செய்து இந்துக்களை ஒருங்கிணைக்க முனைகிறது. மற்ற இருவர், நேரடியாக வெறுப்புணர்வைக் கக்கும் வாட்சப் தகவல்கள்னா, இவங்க, மறைமுக இந்து ஒருங்கிணைப்பு செய்யறாங்க. வாட்சப் அட்மின்கள் பலர் இதற்காக நியமிக்கப்படுகிறார்களோ என்றும் தோன்றுது.

     எது அதிகம் என்பது எந்த எந்த மதத்தைச் சேர்ந்தவர்களின் வாட்சப் குழுமத்தில் நாம் இருக்கிறோம் என்பதைப் பொறுத்தது. இதனை ரொம்பவும் வெளிப்படையாக இங்கு எழுதுவதும், ஆதாரங்கள் போடுவதும் சரியாக இருக்காது. சமீபத்தில் கொரோனா பரப்பும் திட்டத்தோடு தங்கியிருந்தவர்களை காவல்துறை பிடித்தபோது சாதாரண வாட்சப் குழுமங்களிலும் ‘அவர்களைப்’ பற்றிய தீவிரமான செய்திகளெல்லாம் வந்தது. வதந்திகளுக்கு வாட்சப் மிக முக்கிய காரணியாக விளங்குகிறது என்பது மட்டும் எனக்குப் புரிகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.