திருவாளர் டி.ஆர்.பாலுவிடம் – உண்மையைச் சொன்ன அதிகாரி ….!!!


திமுக முக்கியத் தலைவர்களில் ஒருவரான
டி.ஆர்.பாலு, செய்தியாளர்களிடம் தலைமைச் செயலாளர்
மீது புகார் பத்திரிகை வாசித்திருக்கிறார்….

முதலில் – வெளிவந்திருக்கும் பத்திரிகைச் செய்தி –

https://tamil.oneindia.com/news/chennai/dmk-mps-gave-one-lakh-greivances-to-cheif-secretary-shanmugam-385424.html

ஊரடங்கு காலத்தில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட
ஒரு லட்சம் மனுக்களை தலைமைச் செயலாளர்
சண்முகத்திடம் வழங்குவதற்காக திமுக எம்.பி.க்கள்
டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன்,
கலாநிதி வீராசாமி ஆகிய நான்கு பேரும் தலைமைச்
செயலகம் சென்றனர். இவர்களுக்கு மாலை 5 மணிக்கு
தலைமைச் செயலாளர் நேரம் ஒதுக்கியிருந்ததால் அந்த
நேரத்தில் அவரை சந்தித்து மனுக்களை அளித்துவிட்டு
அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்களில் நிறைவடைந்த
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி.க்கள்
நால்வரும் தலைமைச் செயலாளர் சண்முகம் மீது
பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் அனுப்பி வைத்துள்ள
பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை
என புகார் கூறிய டி.ஆர்.பாலு,
தாங்கள் அளித்த மனுக்கள் மீது என்ன நடவடிக்கை

எடுக்கப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு தலைமைச்
செயலாளரிடம் இருந்து சரியான பதிலில்லை எனக்
கூறினார்.

மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக ”உங்களை போன்ற
ஆட்களுக்கு வேறு வேலையில்லை” என தலைமைச்
செயலாளர் கூறியது அதிர்ச்சி அளித்ததாக தயாநிதி
தெரிவித்தார்.

அரசு செய்ய வேண்டிய பணிகளை அரசு தான் செய்ய
வேண்டும் என்றும், அதற்காகத் தான்,
ஒரு லட்சம் மனுக்களை தலைமைச் செயலாளரிடம்
வழங்கி அதன் மீது நடவடிக்கை எடுக்க
வலியுறுத்தியதாகவும் டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்தார்.

ஆனால் மனுக்களை பெற்றுக்கொண்ட தலைமைச்
செயலாளர் தங்களிடம் ஆட்கள் இல்லை என
சாதாரணமாக கூறியதாக பாலு புகார் கூறினார்.

————————————-

நமக்கு சில கேள்விகள் எழுகின்றன….

1) தாங்கள் அளித்த மனுக்கள் மீது என்ன நடவடிக்கை
எடுக்கப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு

– தலைமைச் செயலாளர் தங்களிடம்
ஆட்கள் இல்லை என சாதாரணமாக கூறியதாக
பாலு புகார் கூறினார்….

கொரோனா காரணமாக ஊழியர்கள் எல்லாரும் வீட்டில்
அடைபட்டுக் கிடப்பது மகா கனம் பொருந்திய பாலு
அவர்களுக்கு தெரியாதா…?

கொரோனா காலத்தில், நோய்ப் பரவலைத் தடுப்பதிலும்,
பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியமான
வேலைகளை கவனிக்கவுமே பணிக்கு வருகின்ற
அரசுப் பணியாளர்களுக்கு நேரம் போதவில்லை.

இந்த லட்சணத்தில் ஒரு லட்சம் மனுக்களை
வேலைமெனக்கெட்டு, திரட்டிக்கொண்டுவந்து கொடுத்து,
உடனேயே, இதில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்
என்று பதில் வேறு கேட்டால் –
வேறு என்ன பதில் கிடைக்கும்…?

( குறைந்த பட்சம் ஒரு லட்சம் மனுக்களை படித்தாவது
பார்க்க அவகாசம் வேண்டாமா…? என்கிற சாதாரண
அறிவு கூட எம்.பி.யாகி விட்டால் காணாமல் போய்விடுமா..?)

மேலும், யாரை வைத்துக் கொண்டு அரசு வேலை
செய்ய முடியும் ?

பாராளுமன்ற உறுப்பினர் என்றால் common sense
இருக்கக்கூடாது என்று எங்காவது விதி இருக்கிறதா என்ன..?
கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா…?

2) “உங்களைப் போன்றவர்களுக்கு வேறு வேலை இல்லை”
என்று தலைமைச்செயலாளர் கூறினார் என்று வேறு புகார்.

-உண்மையைச் சொன்னதற்கு தலைமைச் செயலாளரை
மக்கள் மனதாரப் பாராட்டுவார்கள்.

பின் என்ன…. இந்த ஊரடங்கு காலத்தில், மெனக்கெட்டு
ஆட்களைத் தேடித்தேடி ஒரு லட்சம் மனுக்களை ஒருவர்
பெற்று வந்தார் என்றால், அவருக்கு வேறு வேலை எதுவும்
இல்லையென்று தானே அர்த்தம்…?


மிக நேர்மையாக, வெளிப்படைத்தன்மையுடன்
நடந்துகொண்ட தலைமைச் செயலாளருக்கு இந்த தளத்தின்
சார்பில் நமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும்
தெரிவித்துக் கொள்கிறோம்.

.
————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to திருவாளர் டி.ஆர்.பாலுவிடம் – உண்மையைச் சொன்ன அதிகாரி ….!!!

 1. M.Subramanian சொல்கிறார்:

  நீண்ட இடைவெளிக்குப் பின்
  ஒரிஜினல் கே.எம். சார் 🙂 🙂

 2. புவியரசு சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  இவர்களே ஈ.பெடிஷன் மூலம் பெடிஷன்
  கொடுக்கச் சொல்லி இவர்கள் கட்சிக்காரர்களுக்கு
  மாவட்ட செயலாளர்கள் மூலம் சொல்லி
  இருக்கிறார்கள்.
  அப்படி வந்த பெடிஷன்களைத்தான் ப்ரிண்ட்
  எடுத்துக்கொண்டு போய் த.செயலாளரிடம்
  கொடுத்திருக்கிறார்கள்.
  இவர்களை அவர் “வேலையில்லாத வெட்டி”
  என்று சொன்னதே அவர் காட்டிய பெருங்கருணை.

  டெஸ்பாட்ச் க்ளார்க்கிடம் கொடுத்து விட்டு
  போங்கள் என்று சொல்லாமல்,
  பெருந்தன்மையுடன் வாங்கிக்கொண்டதே
  பெரிசு.

 3. natchander சொல்கிறார்:

  Stalin should have stopoed the d m k team from goung to secretariat at this crucial koranba time
  But stalin has no stuff,
  Earlier he had demandrd from govt to sanction one crore relief,

 4. susil சொல்கிறார்:

  திராவிட (மு) கழகத்தில் இருப்பதற்கான முதல் தகுதியான, ” மேல்மாடி காலி ” , திரு பாலு அவர்களிடம் இருப்பதை இந்த நிகழ்ச்சி மூலம் புரிந்திருக்கும்.

 5. புதியவன் சொல்கிறார்:

  தலைமைச் செயலாளர் ‘சின்னப் பயலே சின்னப் பயலே’ பாடலை மனதில் பதிந்துவைத்திருப்பார் எனத் தோன்றுகிறது.

  வேலையத்த வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
  வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே

  //உரிய மரியாதை அளிக்கவில்லை// – அது என்ன மரியாதை? போனவங்கள்ல 50% மேல பலவித குற்றச்சாட்டுகள் இருக்கின்றன (ஊழல்). அவங்களுக்கு என்ன மரியாதை வேண்டிக்கிடக்கு?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   சாராய(தொழிற்சாலை) முதலாளிகளுக்கும்,
   2ஜி கொள்ளையர்களுக்கும், அடிபணியாத,
   அஞ்சாத சிங்கமாக நின்ற அந்த IAS அதிகாரிக்கும்,
   அவரைப் போன்ற மற்ற அதிகாரிகளுக்கும்
   நமது ஆதரவு உற்சாகம் அளிப்பதாக இருக்கும்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 6. புதியவன் சொல்கிறார்:

  //எங்களைப் பார்த்து அவர் எப்படி இதைக் கூறலாம்//

  கவுண்டமணியின், ‘என்னைப் பார்த்து ஏண்டா இந்தக் கேள்வி கேட்ட’ கரகாட்டக்காரன் மொமெண்ட்.

 7. Arul சொல்கிறார்:

  this is a DMK political stunt and oneidia website is the supporter of DMK. This is based on the “ondrinaivom VAA” DMK plan to show that they are helping people. But DMK party men not ready to help and simply collected the information and handed over to Collector and took photographs as well. Their plan backfired to them.

 8. tamilmani சொல்கிறார்:

  ஊழல் பெருச்சாளிகள் பெட்டிஷன் கொடுத்தால் உடனே கைகட்டி வாய் பொத்தி ஆகட்டும் அய்யா என்று கூறவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் போலும்.
  அவனவன் கொரோனா பயத்தில் 24 நேரம் கூட போதாமல் வேலை செய்யும்போது வேலை இல்லாத வெட்டி பந்தாக்கள் அரசியல் செய்வது தமிழகத்தில் மட்டுமே . இது கூட 350 கோடி வாங்கிய அந்த பிரஷாந்த் கிஷோர் ஐடியாவாக இருக்கும் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.