மந்திரக்கோல் மைனரும் – கலைஞரும்- ஒரு சுவாரஸ்யமான நடந்த சம்பவம்…!!!


கையில் மந்திரக்கோலுடன் ( 🙂 ) மைனர் …!!!

…….

மீண்டும் திமுகவில்
சேர்ந்த பிறகு –
கலைஞருடன்
மந்திரக்கோல் மைனர்…!!!
கலைஞர் -13 லட்சம் கிடைத்த மகிழ்ச்சி … 🙂 🙂

….

1977-ல் எம்ஜிஆர் முதல்வராகி சில மாதங்கள் கழித்து….
நடந்த விஷயம் இது.

“பார்த்தாயா உடன் பிறப்பே. நம்மீது ஊழல் குற்றச்சாட்டை
வைத்த நடிகரின் ஆட்சியில் –
– நாளெல்லாம் ஊழல்,
– நாடெல்லாம் ஊழல்” என்று முரசொலியில் தீட்டிவிட்டார்
கலைஞர்.

அப்போது திமுகவில் இருந்து அதிமுகவிற்கு தாவி
விட்டிருந்தார் நாஞ்சில் மனோகரன். எம்.ஜி.ஆருக்கு
ஆதரவாக அதற்கு பதில் அளித்த நாஞ்சில் மனோகரன்,

எம்ஜிஆரின் ‘தென்னகம்’ நாளேட்டில், ரத்தத்தின் ரத்தமே,
பார்த்தீர்களா, பொன்மனச் செம்மல் ஆட்சியில் ஊழல்
நடக்கிறதாம் என்று விமர்சித்து,
– ‘அரசியல் அசிங்கம் நீ.
தமிழகத்தின் களங்கம் நீ’
-என்று கலைஞரை சாடி முடித்திருந்தார்.

அடுத்த நாள் முரசொலியில் எழுதிய கலைஞர்,
“உடன் பிறப்பே. நாளேட்டை பார்த்தாயா.
அந்த ‘மந்திரக்கோல்’ (நாஞ்சில் மனோகரன்) என்ன
எழுதியிருக்கிறதென்று! என தொடங்கி, சத்தியவாணி
முத்துவின் வீட்டு தாழ்வாரத்தில் முடங்கிக்கிடந்து,
அங்கு மிஞ்சியதைத் தின்று வளர்ந்த ’மந்திரக்கோல்
மனோகரனுக்கு’ இன்று அண்ணா நகரில் பத்து லட்சம்
ரூபாயிலான பங்களா…… கதவும் சன்னலும் சந்தனத்தால்
இழைக்கப்பட்டது. எப்படி வந்தது அந்த வசதி”
என்று இறங்கி அடித்திருந்தார்.

அடுத்த நாள் ‘தென்னகம்’ நாளேடு சூடாகியிருந்தது.
கலைஞரை கடுமையாக விமர்சித்திருந்த நாஞ்சில்
மனோகரன்,
– “ஏ கருணாநிதியே. நான் குடியிருக்கும் வீடு பத்து
லட்சமா? சவால் விடுகின்றேன். அந்த தொகைக்கே
நான் விற்க தயார். நீ வாங்க தயாரா.” என்று
தாக்கி விடுகிறார்.

மறுநாள், முரசொலி கொதித்தது. ‘பார்த்தாயா உடன்
பிறப்பே. மந்திரக்கோல் சவால் விடுகிறது. அந்த
சவாலை ஏற்போம். ‘அனுப்பு பணத்தை…….
வாங்குவோம் வீட்டை’ என்று சூடாக சாடி முடிக்கின்றார்
கலைஞர். ( மந்திரக்கோல் சாக்கில் 10 லட்சம் வரும்படிக்கு
ஏற்பாடாகி விட்டது…!!! )

அடுத்தடுத்த சில நாட்களில் இருந்து உணர்ச்சி வசப்பட்ட
அப்பாவி திமுக தொண்டர்கள் பணத்தை அனுப்பத்
தொடங்கினார்கள். யார் யார், என்ன தொகை என்ற
பட்டியல் நாள்தோறும் முரசொலியில் வந்தது.
குறிப்பிட்ட தொகை பத்து லட்சத்தை தாண்டி 13 லட்சம்
வரை சேர்ந்தது. கொஞ்ச காலம் நகர்ந்தது. அதற்குள்
அரசியல் களமும் மாறியது.

கருத்து வேறுபாடு என்று எம்ஜிஆரிடம் இருந்து பிரிந்த
நாஞ்சில் மனோகரன் மீண்டும் திமுக-வில் கலைஞரிடம்
வந்து சேர்ந்தார்.

அண்ணாநகர் வீட்டை விற்பதாகச் சொன்ன நாஞ்சில்
மனோகரனும், வீட்டை வாங்கிவிடுவதாகச் சொல்லி
தொண்டனிடம் நிதி வசூல் செய்த கலைஞரும் –
ஒரே மேடையில்….. 🙂 🙂 🙂

வழக்கம் போல் கலைஞர், ‘அருமைச் சகோதர்,
வித்தகர், அப்படி இப்படி என்று நாஞ்சில் மனோகரனை
உயர்த்திப் பேச,

-பணத்தை அனுப்பிய அந்த இளிச்சவாய் தொண்டர்கள்
வழக்கம்போல் விசிலடித்து ஆராவராரம்
செய்துகொண்டிருந்தார்கள்.
அந்த பணம் என்ன ஆனது என்று கேட்கிறீர்களா …?
வேறு என்ன ஆகும்…?
கலைஞரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது…!!!

நாஞ்சில் மனோகரன்
“போன மச்சான் திரும்பி வந்தான்” என்று திரும்ப வந்ததில் –
கலைஞருக்கு லாபம் 13 லட்சம்…

அரசியல்வாதிகளுக்கு பணம் பண்ண
சொல்லிக்கொடுக்க வேண்டுமா என்ன ?
அதிலும் ஆசான் கலைஞருக்கு ..!!!

( நன்றி – மூலம் – திருச்சி வேலுசாமியின்
‘அரசியல் ஆடுகளம்’ (அனுபவம்) புத்தகம் ..)

.
———————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to மந்திரக்கோல் மைனரும் – கலைஞரும்- ஒரு சுவாரஸ்யமான நடந்த சம்பவம்…!!!

 1. tamilmani சொல்கிறார்:

  1977லேயே பதிமூன்று லக்ஷம் அவர் மக்கு உடன்பிறப்புகளிடம்
  அடித்திருக்கிறார் . இது தவிர பிறந்தநாள் அன்று அறிவாலயத்தில்
  பெரிய உண்டி ஒன்று உண்டு.வாழ்த்து சொல்ல வருபவர்கள்
  திருப்பதியில் உண்டி காசு போடுவது போல போடவேண்டும். இப்படி
  சேர்த்து வைத்த பணம்தான் நமக்கு நாமே , ஒன்றிணைவோம் வா
  போன்ற திட்டங்களில் தேர்தலுக்காக முதலீடு செய்யப்படுகிறது.

  • புதியவன் சொல்கிறார்:

   தமிழ்மணி – நீங்கள் ஒன்று புரிந்துகொள்ளவில்லை. கருணாநிதியிடம் போன பணமும் ஆனை வாயில் போன கரும்பும் திரும்ப வெளியில் வந்ததாக சரித்திரம் பூகோளம் எதுவும் இல்லை. புதிய செலவுகளுக்கு புதிதாக கலெக்ட் செய்வாரே தவிர அவர் செலவழிக்கமாட்டார்.

   இல்லாவிட்டால், திமுக பத்திரிகை என்று தொண்டர்கள் ஏமாளியாக நினைத்துக்கொண்டிருந்த முரசொலிக்கு எம்.டி. ஆக உதயநிதி இருப்பாரா? திமுக சொத்துக்களுக்கு ஸ்டாலின், அவர் மகன் போன்றவர்கள் காப்பாளராக இருப்பார்களா?

   கருணாநிதியின் தந்திரம், எல்லாவற்றையும் தன் உறவினர்கள் பெயரில் கிரயம் செய்து, தனக்கு ஒன்றுமில்லை என்று காண்பித்தது. அதைத்தான் கேடி சகோதரர்களும் பின்பற்றுகிறார்கள், சொந்தமா அவர்களிடம் கார் கிடையாது, அவ்வளவு ஏழை.

 2. Ezhil சொல்கிறார்:

  கா.மை. சார், இந்த மாதிரி பழசை எல்லாம் எடுத்து கொடுத்தீங்கன்னா, எங்களை மாதிரி சரித்திரம், விவரம் தெரியாத ஆட்கள் தெரிந்துகொள்ள பேருதவியாக இருக்கும்…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.