கன்சல்டேஷன் என்கிற மண்ணாங்கட்டி, புண்ணாக்கு எல்லாம் – எதற்காக…?.

அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர்
நேற்று கலந்தாலோசனை நிகழ்த்துகிறார்…

லாக் டவுன் தொடர்பான ஆலோசனைகளை
கேட்கிறார்.

தமழ்நாடு உட்பட 5-6 மாநில முதல்வர்கள்
மே 31-ந்தேதி வரை தங்கள் மாநிலத்திற்கு
ரெயிலோ, விமானமோ – விட வேண்டாம் என்று
வலியுறுத்திக் கூறுகிறார்கள்.

குறிப்பாக தமிழக முதல்வர் சென்னைக்கு
வேறு எங்கிருந்தும், ரெயிலோ, விமானமோ
விட வேண்டாம். இப்போது சென்னையில்
கொரோனா நிலவரம் மிகவும் தீவிரமாகிக்
கொண்டிருப்பதால் எங்களால் சமாளிப்பது
மிகவும் கடினம் என்று தெளிவாகவும்,
விளக்கமாகவும், உறுதியாகவும் கூறுகிறார்.

இத்தனைக்குப் பிறகும், டெல்லியிலிருந்து
சென்னைக்கு நேற்று மாலை 6 மணிக்கே
ரிசர்வேஷன் துவங்கப்பட்டு விட்டது.
(மீட்டிங் முடிவடைவதற்கும் முன்னரே…)

இது என்ன ஜனநாயகம்…?
மாநிலத்தின் மீது மத்திய அரசு இத்தகைய
முடிவுகளை எப்படி திணிக்கலாம் …?

சென்னைக்கு புதிதாக யாரும் வரவேண்டாம்
என்று மாநில அரசு உறுதியாகத் தெரிவித்திருக்கும்
நிலையில் – இவர்கள் இஷ்டத்திற்கு பிற
இடங்களிலிருந்து மக்களை கொண்டு வந்து
குவிப்பார்கள் என்றால் –

பிறகு இது என்ன ஃபெடரல் அமைப்பு…?
இது என்ன ஜனநாயகம்…?
பின் எதற்காக இந்த கன்சல்டேஷன்…மண்ணாங்கட்டி,
புண்ணாக்கு எல்லாம்…?

தாங்களே தங்களுக்கு தோன்றியதை இஷ்டம்போல்
செய்து தொலைக்க வேண்டியது தானே ?

எங்களை, சொந்த ஊருக்கு போக விடுங்கள்
என்று சொல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை
கொண்டு விட வக்கில்லாத அரசு, வருமானம்
கருதி, மாநில அரசுகளின் விருப்பத்திற்கும் எதிராக,
ப்ரிமியம் ரெயில்களை மட்டும் ஓட்டுவது
எதில் சேர்த்தி…..?

லாக் டவுன் பீரியடில்,
சென்னைக்கு ரெயில் விடுவது என்று முடிவு செய்தது யார்..?
ரெயில்வே அமைச்சரா – பிரதமரா…?
எந்த அடிப்படையில்…?
மாநில அரசின் சம்மதத்தைப் பெற்றதா…?

மாநில அரசுகளைக் கேட்காமலே, ரெயில்வே நிர்வாகமே
இத்தகைய முடிவை எடுக்க முடியுமா…?

குறைந்த பட்சம், ஆலோசனையில், மாநிலங்கள் என்ன
கருத்து கூறுகின்றன… அதன் மீது மத்திய அரசு என்ன முடிவு
எடுக்கிறது என்பது அறிவிக்கப்படும் வரையாவது
காத்திருக்க வேண்டாமா…?

அல்லது குறைந்தபட்சம் ஆலோசனை நடந்து முடியும்
வரையிலாவது காத்திருந்தார்களா…?

இது தான் ஜனநாயகமா…?
இது தான் ஃபெடரல் ஆட்சி முறையா…?

.
—————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to கன்சல்டேஷன் என்கிற மண்ணாங்கட்டி, புண்ணாக்கு எல்லாம் – எதற்காக…?

 1. Gopi சொல்கிறார்:

  நீங்களாவது கேட்டீங்களே; நன்றி சார்.
  மீடியாவுல ஒருத்தராவது கேட்டார்களா ?
  முதுகெலும்பில்லாத கோழைகள்.

 2. புதியவன் சொல்கிறார்:

  நீங்க சொல்கிற பாயிண்ட் சரியானது. ஆலோசனை கேட்டபிறகு, காரணத்தை மாநில அரசுக்குத் தெரிவித்துவிட்டு ரயில் விட்டிருந்தால் அர்த்தம் இருந்திருக்கும்.

  அது இருக்கட்டும் ஒரு புறம். நம் மாநிலத்துக்குள் வருபவர்கள், எங்கேயோ தவித்துக்கொண்டிருக்கும் தமிழர்கள்தானே. அவர்கள் சார்பாக, அவர்களை கன்சல்ட் செய்யாமல் தமிழக முதல்வர் முடிவெடுத்தது சரியா? நான் இன்னொரு மாநிலத்தில் 45 நாட்களாக மாட்டிக்கொண்டிருக்கிறேன், தமிழகம் வரத் துடிக்கிறேன். கொரோனா இல்லை என்று இரயில் நிலையத்தில் தெரிந்தால், வர விடுவதற்கு என்ன தடை? இதுமாதிரி தமிழகத்திலேயே உறவினர் வீட்டில் மாட்டிக்கொண்டு ஒரு மாதத்துக்கும் மேலாக அல்லல் படுபவர் அனேகம். அவர்களுக்கு என்ன தீர்வு?

  ஆனால் ‘வருமானம் கருதி’ என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழகத்து மக்கள்தான் ‘எதுவும் ஓசில கிடைக்கணும்’ என்று எதிர்பார்க்கிறார்கள். வாக்களிக்கணுமா, காசு கொடு என்று இப்போது சிறுபான்மையாக ஆனால் தேர்தலில் தாக்கத்தை உருவாக்குபவர்களாக இருக்கும் சதவிகிதம் அதிகமாகிக்கொண்டே போவது தமிழகத்துக்கு நல்லதல்ல.

 3. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  லாக்டௌன் செய்வதற்கு எங்கு அதிகாரம் இருக்கிறது ?
  நாடு தழுவிய அடைப்பு செய்யப்பட்டது .
  எந்த சட்டத்தின் படி என்று கேட்டால் பதில் இல்லை !

  போலீஸ் கைது செய்ய / வண்டியை பிடுங்க
  எந்த சட்டத்தில் இடம் இருக்கிறது ? 144 என சொல்ல வேண்டாம் .
  144 நாடு முழுவதும் போட முடியுமா ?

  இது விதண்டாவாதம் இல்லை –
  மாநில அரசு அதிகாரங்கள் எல்லாம் மத்திய அரசு
  எடுத்துக் கொண்டது . ரெட் ஆரஞ்சு க்ரீன் என
  டில்லியில் இருந்து கலர் அடித்தார்கள் .

  தெலுங்கானா முதல்வர் , கேரளா முதல்வர்
  போன்றவர்கள் தங்கள் அதிகாரம் பறிக்கப்பட்டதை
  பற்றி புகார் சொன்னார்கள் .

 4. shan சொல்கிறார்:

  கரோனாவிற்கு இது வரை எந்த மருந்தும் கண்டு பிடிக்க படவில்லை.மேலும் ஒரு வேளை கண்டு பிடிக்க பட்டாலும் அது செயலுக்கு வர அடுத்த ஆண்டு இறுதி வரை காலம் ஆகலாம் .ஆக இப்படி இருக்கையில், மாநிலங்கள் எந்த பயனை கருத்தில் கொண்டு, lock down தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதன் பயன் என்று எதை நினைத்து கொண்டு இருக்கிறார்கள் .

  அடுத்த வாரம் வரை , தொடர வேண்டிய அவசியம் எனில் lockdown முடிவு பெற்ற வுடன், மீண்டும் இந்த எண்ணிக்கை புயல் வேகத்தில் அதிகரிக்க தான் போகிறது.

  ஒரு வேளை அடுத்த மாதம் வரை என்றாலும், lockdown முடிவு பெற்ற வுடன், மீண்டும் இந்த எண்ணிக்கை புயல் வேகத்தில் அதிகரிக்க தான் போகிறது.

  எனவே இந்த நோயை கட்டு படுத்த வேண்டிய முனைப்பு மட்டுமே, குறிக்கோளாக இருந்தால் இந்த lockdown ஐ மருந்து கண்டு பிடிக்கும் வரையில் தொடருவது தான் அர்த்தமுள்ள செயல் முறையாகும்.
  ஆனால் அது நிச்சயம் சாத்தியம் இல்லாதது,

  எனவே ட்ரம்ப் ன் அணுகு முறையே சரியானது. மருந்தே இல்லாத நோய்க்கு lock down போன்ற கட்டு பாடுகளால் எந்த பயனும் இல்லை.

  மக்களுக்கு போதுமான ஒழுக்க விதிகளை மட்டும் கற்று கொடுத்து நாட்டை வழி நடத்தி செல்ல வேண்டியது தான்.

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  தமிழகத்தின் நிலையை
  மிகத்தெளிவாக விளக்கியிருக்கும்
  முதல்வருக்கு பாராட்டுகள்.

  ———————-

  மத்திய உள்துறை மற்றும் ரயில்வே துறை
  அமைச்சருக்கு இன்று முதல்வர் எடப்பாடி
  பழனிச்சாமி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
  அதில், கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும்
  வரை, சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும்
  ரயில்களை இயக்க வேண்டாம் என்று மறுபடி
  வலியுறுத்தி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

  ராஜ்தானி அதே நேரம், வரும் 14 மற்றும் 16ம்
  தேதிகளில் டெல்லியில் இருந்து சென்னைக்கு
  ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுவதாக
  ஏற்கனவே அறிவிக்கப்பட்டதாகமும், அவ்வாறு
  இயக்கக்கூடிய அந்த ரயிலில் வரக்கூடிய
  பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை
  செய்யப்பட்டு நோய்கள் இல்லாதவர்கள் மட்டுமே
  தமிழகத்திற்குள் அனுப்ப முடியும் என்றும் தனது
  கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  பிசிஆர் டெஸ்ட் குறிப்பிட்ட இந்த ரயில்
  குளிர்சாதன வசதி கொண்டது என்பதால்,
  நோய் பரவல் எளிதாக ஏற்படும் வாய்ப்பு
  இருக்கிறது ன்பதற்காக, இந்த முன்னெச்சரிக்கை
  நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று
  முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

  Read more at: https://tamil.oneindia.com/news/chennai/two-trains-from-delhi-to-chennai-will-operating-on-may-14th-and-16th/articlecontent-pf456660-385324.html

 6. R.Gopalakrishnan சொல்கிறார்:

  This called passing on the buck. that is: 1. the state CMs shuold decide whether the lock down,
  should be totally or partially 2,For 20lac crores the FM WILL DECIDE..

 7. tamilmani சொல்கிறார்:

  ஒவ்வொரு நாளும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வட மாநில ரயில்கள் ஒவ்வொன்றிலும் கிட்டத்தட்ட 4000 பயணிகள் மார்ச் 20 வரை இறங்கினார்கள்.
  அப்படி வந்திறங்கிய இரண்டொரு நாட்களில் lockdown ஆரம்பித்து விட்டது .
  இவர்கள் சென்னையில் கட்டிட தொழில் , உணவகங்கள் , கடைகள் போன்ற நிறுவனங்களில் 10000 வரை சம்பாதித்து தன் செலவு போக தங்கள் குடும்பத்துக்கு அனுப்புபவர்கள். இவர்கள் தங்கள் ஊரில் இருந்தால் ஆயிரம் ருபாய் கூட கிடைக்காது.அவர் மாநிலங்களில் ஒரு வேலையும் இல்லை. இவர்கள் இப்போது கிட்டத்தட்ட 3000 கி மீ பயணம்
  செய்து தங்கள் ஊர்களுக்கு திரும்பவேண்டும். முதலில் இவர்களை அவர்களது ஊருக்கு திருப்பி அழைத்து கொள்ள அந்தந்த மாநில அரசுகள்தான் முயற்சி எடுக்கவேண்டும் இவர்கள் கிளம்பினாலே சென்னையின் floating population நன்கு குறையும். தமிழர்கள் பலர் வட மாநிலங்களில் மாட்டி கொண்டுள்ளனர். அவர்கள் தமிழகம் திரும்பவேண்டும் .எப்போது கடல் அலை ஓய்வது எப்போது குளியல் போடுவது என்ற நிலைமைதான் இப்போது. போதிய
  பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ரயில்கள் இயக்கப்படுவது மிகவும் அத்தியாவசியம் . இந்த வெயில் காலத்தில் பலர் குடும்பத்துடன் நடை பயணம் மேற்கொள்வது சுதந்திர காலத்து பிரிவினையை நினைவூட்டுகிறது அதுதான் மத்திய சுகாதார செயலர்
  கொரோனவுடன் வாழ பழகி கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.
  முழுக்க நனைந்தபின் முக்காடு எதற்கு?
  .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.