யதா ப்ரஜா – ததா ராஜா …. நொந்து கொள்ளும் ஜெயரஞ்சன் ….


நீதிமன்றத்தில் மத்திய அரசு சொன்ன
பிரமாதமான பதில் குறித்து நொந்துகொள்ளும் –
பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்…..

மகராஷ்டிரா மாநிலம் அவுரங்காபத்திலிருந்து மத்திய
பிரதேசத்திற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில் தண்டவாளம்
வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தனர். சோர்வு காரணமாவும்
ரயில் வராது என்ற எண்ணத்திலும் தண்டவாளத்திலேயே
படுத்து உறங்கிய அவர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில்
16 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர்
ஆஸ்பத்திரியில் இருக்கின்றனர்.

இதுபற்றி தமிழகத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்
ஜெயரஞ்சன், “புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்த செய்தி
வெளிவந்ததும் “துரதிருஷ்டவசமானது” என தலைமை அமைச்சர்
தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கிறார்.
பிறகு இது என்ன அதிருஷ்டவசத்திலா நிகழும். இவர்களுடைய
அரசாங்கத்தில் தப்பிப் பிழைப்பதே அதிர்ஷ்டம் போல.
இதற்கு விசாரணைக் கமிஷன் அமைத்து என்ன கண்டுபிடிக்கப்
போகிறார்கள் என்று தெரியவில்லை.

உணவுத் துறையிடம் 600 லட்சம் டன் கோதுமையும், அரிசியும்
இருப்பு இருப்பதாகக் கூறுகிறோம், பல ஆயிரம் ரயில்வே
தடங்களை வைத்துள்ளோம்,

ஆனாலும் புலம்பெயர் தொழிலாளர்கள் பசியோடு
ஆயிரக்கணக்கான கி.மீ நடந்தே செல்கிறார்கள்.
இதனை மத்திய, மாநில அரசுகளும் மக்களும் பார்த்துக்
கொண்டு இருக்கிறார்கள்” என்கிறார்.

மேலும், “புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு
கொண்டு செல்ல வசதிகள் செய்துத் தர வேண்டும் என
தன்னார்வலர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். நேற்று இந்த
வழக்கு விசாரணையின்போது, “ரயில்கள்
சென்றுகொண்டிருக்கின்றன” என்று மத்திய அரசு வழக்கறிஞர்
துஷார் மேத்தா தெரிவித்தார்.

40 நாட்களாக புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையில்லாமல்
இருக்கும் நிலையில் அவர்கள் ரயிலில் செல்ல கட்டணம்
செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு சொல்கிறது என
மனுதாரர் தரப்பு சொன்னது. இதுதொடர்பாக நீதிபதி கேட்டபோது,
மத்திய அரசு பிரமாதமான ஒரு பதிலைச் சொன்னது” என்றும்
ஜெயரஞ்சன் தெரிவித்திருக்கிறார்.

அப்படியென்ன அற்புதமான பதிலைச் சொன்னார்
மத்திய அரசின் வக்கீல்…?

the central government on Tuesday –

– declined –

to give the Supreme Court

a break-up of the share of ticket fares the Centre
and states would bear for migrants travelling home
by train and also –

“what amount” was “being taken” from the workers now.

Solicitor-general Tushar Mehta’s admission that he had
“no instructions to reveal the details” –
came as the court heard a public interest plea.

Justice Kaul then asked Mehta if the Centre was actually
funding 85 per cent of the fare.

The solicitor-general said
he had “no instructions”
to reveal what proportion of the fares
would be shared by the railways and the states.
“I have not received instructions… ”

இது குறித்து ஜெயரஞ்சன் ஆற்றிய உரையின் காணொளி கீழே –

….

….

(நன்றி – மின்னம்பலம் )

.
————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

22 Responses to யதா ப்ரஜா – ததா ராஜா …. நொந்து கொள்ளும் ஜெயரஞ்சன் ….

 1. Raghavendra சொல்கிறார்:

  சார் ஒரு சந்தேகம்.
  யதா ப்ரஜா – ததா ராஜாவா அல்லது
  யதா ராஜா – ததா ப்ரஜாவா ?

 2. புதியவன் சொல்கிறார்:

  எதுக்கு வெளிமாநில தொழிலாளர்கள் இன்னொரு மாநிலத்துக்கு வருகிறார்கள்? உள்ளூர் தொழிலாளிக்குக் கொடுப்பதைவிட, மிகக் குறைவான சம்பளம், விடுமுறை கிடையாது, 8 மணி நேரத்திற்குப் பதில் 14 மணி நேரம் உழைக்கணும் என்பதால்தான். இவங்களை யார் வேலைக்கு வச்சிருக்காங்க? தமிழக தொழில் முனைவோர் பலர் மற்றும் கட்டிட காண்டிராக்டர்கள். இது 15 வருடங்களுக்கு மேலாக நடப்பில் இருக்கிறது.

  இதைபற்றி ஜெயரஞ்சன் பேசியிருப்பாரா இல்லை கவலைப்பட்டிருப்பாரா? அதற்கு அவருக்கு நேரம் கிடையாது. அவர், அவருடைய பிஸினெஸில் பிஸி.

  சரி..அது போகட்டும்… இலங்கைத் தமிழர்கள் மீது போர் நிறுத்தப்பட்டது என்று சொன்னபிறகும் குண்டு வீச்சு நடந்தபோது, கருணாநிதி என்ன சொன்னார்? மழைக்குப் பின் தூவானம், துரதிருஷ்டம் என்றெல்லாம் சொன்னார். அப்போ இந்த ஜெயரஞ்சன் எங்க இருந்தார்? ஒரு வேளை பிறக்கவே இல்லை போலிருக்கு.

  இன்றைக்கு நீலிக் கண்ணீர் வடிக்கும் ஜெயரஞ்சன், அந்த பசியால் வாடும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு இதுவரை என்ன துரும்பைக் கிள்ளிப்போட்டார்? யாரேனும் மைக்கை நீட்டணும், உடனே, உலக உத்தமர்கள், ஏழைக்கு கண்ணீர் வடிப்பவர்கள் என்ற வேடத்தில் எத்தனை எத்தனை ஜெயரஞ்சன்கள் தமிழகத்தில் உதயமாகிறார்கள். அப்பப்பா.

  1. பசியால் வாடும் ஏழைகளுக்கு அரசு உணவளிக்க வேண்டும். அதிமுக அரசு ‘அம்மா உணவகங்கள்’ மூலம் இதனைச் செய்கிறது. ஜெயரஞ்சன் இதனைப் பற்றிக் குறிப்பிட்டு எங்காவது பாராட்டியிருக்கிறாரா?
  2. அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பிறகும், வெளியில் சுற்றுகின்ற மாக்களைப் பற்றி எங்காவது ஜெயரஞ்சன் பேசியிருக்கிறாரா? அது எப்படி… பாஜகவை குறை சொல்ல வாய்ப்பிருந்தால் சொல்லுங்க. மத்தபடி வேற பிரச்சனை பற்றிப் பேச எனக்கு நேரமில்லை, கவலையுமில்லை. அந்த மாக்களையும், பாஜக அரசுதான் எம்.ஏ. வரை படிக்கவைக்கவில்லை என்று வேண்டுமானால் நான் பேசுகிறேன்.
  3. புலம் பெயரும் தொழிலாளிகள் அவரவர் ஊருக்குச் செல்வதற்கு, அவர்களுடைய சொந்த மாநிலம் 80 சதவிகித இரயில் கட்டணமும், அனுப்புகின்ற மாநிலம் 20 சதவிகித கட்டணமும் செலுத்தணும். (இந்த % மாறுதல் இருக்கலாம்). இதில் என்ன தவறு இருக்கமுடியும்? இரயில்வே கட்டணம் இலவசம், அவங்களை வீட்டுக்கு அனுப்பும் செலவும் இலவசம், வாழ்வாதாரத்துக்கு உண்டான பணமும் இலவசம் என அரசிடம் எதிர்பார்ப்பவர்கள் யாராவது, அவர்கள் வீட்டு வேலைக்காரர்களுக்கு இந்த மூன்று மாதம் இலவச சம்பளம், உணவு உதவி செய்திருக்கிறார்களா, இந்த ஜெயரஞ்சன் உட்பட? ஆத்துல போற தண்ணி அம்மா குடி ஐயா குடி என்று சொல்வதற்கு ஜெயரஞ்சன் எதற்கு?

  இதோ நானே சொல்கிறேன். இரயில்வேயில் வேலைபார்ப்பவர்களுக்கு, அவர்கள் குடும்பத்திற்கு இலவச பாஸ் கொடுப்பதுபோல, நாசிக் நோட்டு அடிக்கும் இடத்தில் வேலைபார்ப்பவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு குயர் ரூபாய் நோட்டு இலவசமா கொடுக்கணும். பெட்ரோல் கிணறுகளில் வேலைபார்ப்பவர்களுக்கு 1 பேரல் பெட்ரோல் ஒவ்வொரு மாதமும் இலவசமா கொடுக்கணும். – அது சரி..இதற்கெல்லாம் காசு யார் தருவாங்க? அதைப்பற்றிப் பேசாதீங்க. நான் தொலைக்காட்சியில் ‘உழைப்பாளர்களுக்காக வருந்துகிறவன்’ என்ற பெயர் எடுக்கணும். அம்புடுதான்.

  இதுல ‘பொருளாதார நிபுணர்’ஆம் இவர்.

 3. மனதில் ஈரம் இருப்பவர்களில் ஒருவன் சொல்கிறார்:

  அடுக்குமாடி குடியிருப்பில், வேலை செய்யாமலேயே
  2 மாதமாக தண்டச்சம்பளம் வாங்கிக்கொண்டிருப்பவர்களுக்கென்ன
  இன்னும் பெரிதாக கூட ஜால்ரா போடலாம்.
  ரெயிலில் நசுங்கி செத்துப்போன 16 பேரின் குடும்பங்களின்
  சாபம் இவர்களை யெல்லாம் சும்மா விடாது.

  • புதியவன் சொல்கிறார்:

   வருக நவீன துர்வாசரே…

   வேலை செய்யாமலேயே சம்பளமும் கிம்பளமும் அரசாங்கப் பணிகளில் மட்டும்தான் உண்டு. அதிலும் தமிழகத்தில் அது மிக மிக அதிகம்.

   முதலில் அரசுப் பணம் எப்படிச் செலவு செய்யறாங்க என்பது தெரியுமா? அதுக்கான நடவடிக்கை எடுக்கச் சொல்லும் துணிவு உங்கள்ட இருக்கா?

   முதல்ல இந்தத் தொழிலாளர்கள் எங்க வேலை பார்த்தாங்க? அந்த முதலாளிகள் (அனேகமா திமுக கும்பல்தான்) இவங்களை எதுக்கு விரட்டி விட்டாங்க, ஏன் அவர்களை இந்த கஷ்ட காலத்தில் ஆதரிக்கவில்லை? இதுக்கு முன்னால 14 மணி நேரம் அவர்களைக் கசக்கிப் பிழிந்தபோது எந்த கிரகத்தில் இவங்க இருந்தாங்க? இவங்க ஏஜெண்டுகள் யார் யார்? எப்படி இவங்களை தமிழகத்துக்குக் கொண்டு வருகிறார்கள்? எப்படி பங்களாதேஷிகள்லாம் தமிழகத்தில் பெருகி இருக்காங்க, அவங்களுக்கு மட்டும் இந்த ஊரடங்கு காலத்தில் உணவு எங்கிருந்து கிடைக்கிறது? அதையெல்லாம் கேட்காமல், எதுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கறீங்க?

   நீங்க யாருக்கு ஜால்ரா போடறீங்க? ஜெயரஞ்சன், திமுக, திருமா கும்பலுக்கா?

   • Ezhil சொல்கிறார்:

    //The RSS-affiliated workers’ organisation Bharatiya Mazdoor Sangh (BMS) says it will stage a nationwide protest on May 20 against the increasing of working hours.//

    சார், இந்த செய்திக்கு என்ன கருத்து சொல்லப்போறீங்க… வேலை நேரத்தை 8ல இருந்து 14ஆ மாத்த பல மாநிலங்கள் அதுவும் குறிப்பா பாஜக ஆளும் மாநிலங்க முடிவெடுத்திருக்காங்க. இது வரைக்கும் அரசாங்கம் எதுவும் சொல்லல.. சட்டத்தையே மாத தைரியமா முடிவெடுத்திருக்காங்க.. நீங்க என்னடான்னா பிழிஞ்சு வேலை வாங்கறானுங்கனு சொல்லுறீங்க.. அதுவும் திமுக ல மட்டும் தான் அப்படி செய்யுறாங்க.. அதிமுக, பாஜகல இருக்கிறவங்க எல்லாரோட வீட்டுல/அலுவலகத்தில்/தொழிற்சாலைகள்ல வேலைப்பார்க்கிறவங்களை எல்லாம் தெய்வமா மதிக்கிறாங்கன்ற ரேஞ்சுக்கு பேசுறீங்க… என்ன சொன்னாலும் கொஞ்ச நியாயமா சொல்ல வேண்டாமா சார் ?

    கூடவே இதையும் சேர்த்துக்கோங்க ஆதாரத்திற்கு…

    ஏப்ரல் 13: Livemint.com
    https://www.livemint.com/news/india/govt-may-increase-working-hours-beyond-8-hours-in-factories-via-executive-order-11586796525053.html

    ஏப்ரல் 14: economictimes.indiatimes.com
    https://economictimes.indiatimes.com/news/company/corporate-trends/ordinance-to-give-states-flexibility-to-raise-work-hours-of-employees/articleshow/75133228.cms

    இன்று:
    https://tamil.oneindia.com/news/delhi/bms-employees-union-calls-for-protest-on-20th-against-new-labour-laws/articlecontent-pf457383-385582.html

    நீங்க யாருக்கு ஜால்ரா போடறீங்க? … பேசத்தெரிந்த தானைத்தலைவர் மோடிக்கா இல்ல …அமித் ஷாவுக்கு (எனக்கு அவரைப்பார்த்தலே சகுனி நியாபகம் வந்திடுறார்), இல்ல ஜால்ரா தட்டி காசை காப்பாத்தது துடிக்கும் அடிமைகள் நிறைந்த அதிமுக கும்பலுக்கா?

 4. Gopi சொல்கிறார்:

  வெளியில் சவடாலாக 85 % மத்திய அரசு கொடுக்கிறது
  என்று சொல்லும் மந்திகள், அதையே கோர்ட்டில் கூற
  தயக்கம் ஏன்?
  வெளியில் இஷ்டத்திற்கு பொய் சொல்லலாம்;
  கோர்ட்டில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்
  அதானே வித்தியாசம் ?
  மஹாராஷ்டிர அரசு 4 கோடி ரூபாய் ரெயில்வேக்கு
  கொடுத்ததாக சொல்கிறதே; அதை மறுக்க ஏன் முடியவில்லை ?
  நிஜம் என்பதால் தானே ?

 5. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  புதியவன் கேட்கிறார்
  “எதுக்கு வெளிமாநில தொழிலாளர்கள் இன்னொரு மாநிலத்துக்கு வருகிறார்கள்?
  உள்ளூர் தொழிலாளிக்குக் கொடுப்பதைவிட, மிகக் குறைவான சம்பளம்,
  விடுமுறை கிடையாது, 8 மணி நேரத்திற்குப் பதில் 14 மணி நேரம் உழைக்கணும் ”

  அவர்களுக்கு வேறு வழி இல்லை .
  வேலையில்லா திண்டாட்டம் .
  ஒன்று பட்டினி கிடக்க நேரும் – இல்லை இது மாதிரி வேலை !
  மோடி இரண்டு கோடி வேலை வாய்ப்பு தருவதாக
  சொல்லி பதவிக்கு வந்தார் .

  இவர்கள் வேலை இல்லாமல் ஒன்றரை மாதமாக பட்டினி .
  வேலை கிடையாது ; பணமும் இல்லை ;இவர்கள் எங்கு போவார்கள் ?

  பா ஜ க செய்தது மடத்தனம் . ஜெயரஞ்சனை நொந்து என்ன பயன் ?

 6. shan சொல்கிறார்:

  எனக்கு புரிந்த வரையில் யாரும் தண்டவாளத்தில் தலையையும், காலையும் வைத்து அசதியில் தூங்குவார்கள் என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை.
  யாரும், எந்த நிலையிலும், இதற்க்கு துணிய மாட்டார்கள். இதில் ஒருவர் மட்டும் தப்பித்து கொண்டார் என்பதும் சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.
  மேலும் இவர்களுக்கு வக்காலத்து வாங்குவது நமது அறிவின்மையே.

  நம்மை போன்ற அறிவாளர்கள் மற்றும், media களை பின்பற்றி மேலும் மேலும் இலவசமாக அரசு இவர்களுக்கு கொடுத்து கொண்டே இருக்க வேண்டும் என்று நிர்பந்திப்பது கடைசியில் , விலைவாசி உயர்வில் தான் கொண்டு விடும்.அதற்க்கு நாம் தான் அந்த சுமையை சுமக்க வேண்டி இருக்கும்.
  அரசாங்கம் ஒன்றும் தனது பாக்கெட்டிலிருந்து நமக்கு கொடுக்க போவதில்லை.எல்லோரும் நினைப்பது போன்று இது அவர்கள் பணம் இல்லை.தானமாக கொடு. கொடு என்று கேட்டு கொண்டே இருப்பதற்கு. இது நமது பணம் ஆகும்.நாம் பாடு பட்டு கட்டிய வரி பணம்களே. இதை அரசாங்கம் இலவசம் என்ற பேரில் வீசி எறிய வில்லை என்று சந்தோச படுங்கள்.
  நாளை எல்லாம் அடங்கிய பிறகு, இது போன்ற இலவசங்களால் ஏற்படும் கடன் சுமையை சமாளிக்க
  petrol, toll charges, income tax போன்றவற்றை ஏற்ற போவது உறுதி.அப்பொழுது கூக்குரலிடுவதால் ஒரு பயனும் இல்லை. இப்பொழுதே நாம் இது போன்ற இலவசம் இலவசம் என்ற கூக்குரலை நிறுத்துவது நல்லது.

  இந்த பாதிப்பிற்கு நீங்களும் நானும் தான் கடைசியில் வரிச்சுமையை ஏற்க போகிறோம்.இதில் என்ன ஒரு பேரானந்தம்.

  • புதியவன் சொல்கிறார்:

   ஷான்… உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இருக்கிறது.

   இலவசம், ரேஷன் இவைகளுக்குத் தகுதியானவர்கள் என்னைப் பொறுத்த வரையில் அன்னாடங்காச்சிகள்தான். இதில் குறவர், காட்டுவாசிகள் போன்ற பலரும் அடங்குவர். எந்த அரசு ஊழியருக்கும் ரேஷன் கொடுப்பது பெரிய தவறு. தொலைக்காட்சி, ஃப்ரிட்ஜ் இருக்கும் யாருக்கும் ரேஷனோ, இலவசமோ கிடையாது என்று சொல்லும் துணிபு அரசுக்கு வரணும்.

   ‘கோவில்கள்’ profit centerஆக கருதப்படுகின்றன. அரசு ஊழியர்கள் அனேகமாக எல்லோரும், 90% வருமானத்தையும் சம்பளமாக முழுங்கி, வேலை எதையும் பார்ப்பதற்கு மக்களிடம் காசு வாங்குகிறார்கள். இலவசங்கள் மக்களுக்குக் கொடுத்து தாங்கள் கமிஷன் அடித்தால் அதுவே சிறந்த அரசு என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

 7. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  புதியவன் கேட்கிறார்
  “முதலில் அரசுப் பணம் எப்படிச் செலவு செய்யறாங்க என்பது தெரியுமா?”

  முதலில் அரசுக்கு பணம் என்பது மக்கள் கொடுக்கும்
  வரியில் இருந்து வருகிறது .
  1991 வரை பெரும்பாலும் மக்கள் திட்டம் என்று சொல்லி\
  செலவு செய்தார்கள் – செலவு செய்யும் பணம் நடுவில்
  கொஞ்சம் /நிறைய காணாமலும் போகும் .

  91 பிறகு அரசு திட்டங்கள் தீட்டி செலவு செய்வதை நிறுத்தி
  விட்டது . எல்லாம் தனியார் மயம் ! IMF போட்ட கண்டிஷன் .

  வரும் வரியை என்ன செய்வது ? ஆஸ்பத்திரி , காலேஜ் , ரோடு
  எல்லாம் தனியார் கையில் கொடுத்தாகி விட்டது .

  வேற வழியில்லாமல் அவ்வளவு பணத்தையும் தூக்கி
  அரசு ஊழியர் சம்பளம் என போட்டார்கள் .
  இப்போது ஒன் ரேங்க் ஒன் பென்சன் என்று கொடுக்க
  போகிறார்கள் – அரசு கஜானா காலி !

 8. நவீன துர்வாசன் தான் சொல்கிறார்:

  புதியவன்

  மனசாட்சி இல்லாத ஜால்ரா என்பதை விட
  துர்வாசம் பட்டம் மேல் தான்.
  16 பேர் ரெயிலில் அரைபட்டு நசுங்கிச் செத்ததை
  கேட்டால், மீண்டும் மீண்டும் பாஜகவுக்கு
  வக்காலத்து வாங்கும் புத்தி போக மாட்டேனெங்கிறதே.
  காண்டிராக்டில் வேலைக்கு அழைத்து வந்தவன்
  எவனாக இருந்தால் எனக்கென்ன – உம்மைப்போல்
  பாஜக வெறி பிடித்து அலைபவன் போல் திமுக வெறி
  பிடித்து அலைபவன் நானல்ல.
  செத்துப்போனவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்க
  வக்கில்லை; உமக்கெல்லாம் மறுமொழி என்ன
  வேண்டிக்கிடக்கிறது. மாட மாளிகைகளில்,
  அடுக்கு மாடிகளில் குடியிருந்து டார்ச் அடித்துக்கொண்டு
  இருப்பவர்களுக்கும், மணி அடித்துக் கொண்டிருப்பவர்களுக்கும்
  இறைவன் ஒரு நாள் ஆப்பு வைப்பான்.
  தனக்கு வரும்போது தெரியும் துன்பம் என்ன இழப்பு என்ன
  என்பதெல்லாம்.

 9. நவீன துர்வாசன் தான் சொல்கிறார்:

  புதியவன்,

  // எப்படி பங்களாதேஷிகள்லாம் தமிழகத்தில்
  பெருகி இருக்காங்க, //

  இதைத் தடுக்க வேண்டிய உங்க ஜால்ரா தலைவர்கள்
  ஒழுங்கா தங்கள் வேலையை பார்த்திருந்தா
  அவங்க இவ்வளவு தூரம் எப்படி வந்திருப்பாங்க ?
  வந்திருந்தாலும் எப்படி தொடர்ந்து தங்கி இருப்பாங்க ?
  தங்கள் கடமையை ஒழுங்காச் செய்யாமல்,
  பணக்கார பிசினஸ்மேங்களை தப்பி ஓடச்செய்வதில்
  தானே அவர்களின் அக்கரையும் ஆர்வமும் இருக்கு ?

  • புதியவன் சொல்கிறார்:

   உங்களுக்கு இது எப்படி நடக்கிறது என்பது தெரியவில்லை. அதனால் விளக்கிப் பயன் இல்லை.

 10. நவீன துர்வாசன் சொல்கிறார்:

  புதியவன்

  //எதுக்கு வெளிமாநில தொழிலாளர்கள்
  இன்னொரு மாநிலத்துக்கு வருகிறார்கள்? //

  தமிழரான நீங்கள் ஏன் கர்நாடகாவிற்கும்
  வெளிநாடுகளுக்கும் போனீங்க ?
  பொழைப்பு தேடித்தானே ?
  ஒங்களுக்கு ஒரு நியாயம் –
  சோத்துக்கு இல்லாதவனுக்கு வேறு நியாயமா ?

  • புதியவன் சொல்கிறார்:

   பொழைப்பைத் தேடிப் போவது தவறல்ல. அப்படி போகக்கூடாது என்றால், நீங்களும் நானும் கிராமத்தில்தான் இருக்கணும். வேலைக்குக்கூட பக்கத்தில் இருக்கும் ஊருக்குப் போகக்கூடாது. சென்னை, ‘ஆதி குடி’களுக்குத்தான் சொந்தமாக இருந்திருக்கணும். இப்போது போல, ஐந்தில் ஒருவர் வெளியூரைச் சேர்ந்தவராக இருக்க முடியாது (அதுவும் பெற்றோர் சென்னை என்று வைத்துக்கொண்டால். ஒரிஜினல் சென்னை என்றால் இரண்டில் ஒன்றுகூட தேறாது)

   ஆனால், திரும்பி வருவதற்கு அரசு பணம் தரணும் என்று எதிர்பார்ப்பது தவறு. இது கூட உங்களுக்குப் புரியவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

 11. துர்வாசன் தான் சொல்கிறார்:

  //திரும்பி வருவதற்கு அரசு பணம் தரணும் என்று
  எதிர்பார்ப்பது தவறு. இது கூட உங்களுக்கு
  புரியவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. //

  திரும்ப வருவதற்கு காசு கொடு என்று எந்த
  முட்டாளும் சாதாரணமாகக் கேட்க மாட்டான்.
  3 மணி நேர அவகாசத்தில், நாட்டையே பூட்டு போட்டு
  முடக்கி விட்டு, எங்கும் நகரக்கூடாது என்று சொல்லி,
  50 நாட்கள் கையில் இருக்கிற காசையெல்லாம்
  காலியாக்க வைத்த கையாலாகாத
  கபோதிகள், அவர்களை ஆதரிக்கும் ஜால்ராக்கள்
  வேண்டுமானால் கேட்கலாம்.

 12. துர்வாசன் சொல்கிறார்:

  புதியவன் – //உங்களுக்கு இது எப்படி நடக்கிறது
  என்பது தெரியவில்லை. அதனால்
  விளக்கிப் பயன் இல்லை.//

  தப்பாகச் சொன்னதை எப்படி வாபஸ்
  வாங்குவது என்று உங்களுக்கு புரியவில்லை
  என்று சொல்லுங்கள்.

  பங்களாதேஷிகள் எப்படி தமிழ்நாட்டுக்கு
  வந்தார்கள்? அதை தடுத்திருக்க வேண்டியது
  யாருடைய பணி ? அதைச் செய்யாமல் விட்டது
  யாருடைய தோல்வி ?

  பதில் சொல்ல முடியவில்லையென்றால்,
  தோல்வியை ஒப்புக்கொண்டு ஓடவும்.
  எனக்கு புரியாது என்று எந்த ஜால்ராவும் சர்டிபிகேட்
  கொடுக்கத் தேவையில்லை;

 13. துர்வாசன் சொல்கிறார்:

  shan என்னும் பரமார்த்த குருவும், புதியவன் என்னும்
  அவரது சூப்பர் சீடனும் சொல்வதை அனைவரும் அறிக:

  பரமார்த்த குரு shan :
  // எனக்கு புரிந்த வரையில் யாரும் தண்டவாளத்தில் தலையையும், காலையும் வைத்து அசதியில் தூங்குவார்கள் என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை.
  யாரும், எந்த நிலையிலும், இதற்க்கு துணிய மாட்டார்கள். இதில் ஒருவர் மட்டும் தப்பித்து கொண்டார் என்பதும் சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.
  மேலும் இவர்களுக்கு வக்காலத்து வாங்குவது நமது
  அறிவின்மையே. //

  அவரது சீடர் புதியவன்:
  ஷான்… உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இருக்கிறது.

  Well Done Boys.

 14. Ezhil சொல்கிறார்:

  கா.மை சார், புதியவன் சாரின் இந்த பாஜக அபிமான கருத்துக்கு எந்த விதமான பதிலும் சொல்லவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது..

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   எழில்,

   பெரும்பாலும் என் கருத்துகளை இடுகையில்
   சொல்லி விடுவதால், பின்னூட்டம் / மறுமொழி
   பகுதிகளை, வாசக நண்பர்கள் பங்கெடுக்க
   என்று விட்டு விடுகிறேன்…

   அவசியம் நேரும்போது மட்டும் நான் எழுதினால்
   போதும்; மற்றபடி வாசக நண்பர்களே பதில் சொல்லும்
   பொறுப்பை ( இப்போது நீங்கள் செய்யவில்லையா…
   அது மாதிரி…) ஏற்றுக்கொள்வார்கள் என்று
   விட்டு விடுகிறேன்…

   மறுமொழி /பின்னூட்டங்களில், வாசக நண்பர்களே
   விவாதம் செய்வது lively யாக இருக்கும்
   என்பது என் கருத்து.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 15. Ezhil சொல்கிறார்:

  புதியவன் சார் – ஆமாம், எதுக்கு ட்ரைன்ல கூட்டிக்கிட்டு போக சலுகை கொடுக்கணும்? அப்படியே வெளிநாட்டில இருந்து கூட்டிகிட்டு வர்றதுக்கு விமானம் அனுப்புறாங்களே.. அதுக்கும் காசு எவ்வளோ வாங்குறாங்கனு கேளுங்க… வெளிநாட்டில இருக்கிறவன் கண்டிப்பா கத்தை கத்தையா வச்சிருப்பான்.. அவனை மட்டும் எதுக்கு நம்ம வரிக்காசை கொட்டி கூட்டிக்கிட்டு வந்து சொகுசா எதோ பள்ளிக்கூடத்திலையோ இல்ல கல்லூரியையோ தங்க வைக்கணும்? அவன் மறுபடியும் வைரஸை கொண்டு வந்து பரப்பவா ?

  கூடவே வரி எங்கேயெல்லாம் அனாவசியமாக செலவாகுது? பாராளுமன்றத்தில் கேன்டீன்ல எவ்வளோ காசுன்னு உங்களுக்கே தெரியும்.. இதுல புது பாராளுமன்றம் கட்ட 20,000 கோடி ஒதுக்கீடு. இந்த மாதிரி நெருக்கடியான நேரத்தில கூட அதை ரத்து செய்யணும் னு நம்ம ஜி க்கு தோணவே இல்லை.. என்னே ஒரு தானைத்தலைவன்யா…

  நாட்டில உள்ள 90% எம்.பிக்கள் கிட்ட எவ்வளோ பணம் இருக்கும்னு எல்லாருக்கும் தெரியும்.. அப்புறம் அவங்களுக்கு எதுக்கு போனுக்கு செலவு, பெட்ரோலுக்கு செலவு, விமானத்துக்கு செலவுனு அலவன்ஸ்? அவன் என்ன காசு இல்லாமையா இருக்கான்? எதுக்கு அரசியல்வியாதிகளுக்கு செலவு பண்றங்க.. இவ்வளோ இருக்கு.. ஆனால் சம்பந்தமே இல்லாம தொகுதி நிதியை நிறுத்தி வச்சிருக்காங்க… இதையெல்லாம் நீங்க கேட்டீங்களா? இல்ல கண்ணை மூடிக்கிட்டீங்களா…

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   எழில்,

   நன்றாகவே கேட்கிறீர்கள். தொடர்ந்து கேளுங்கள்.
   இப்படித்தான் பின்னூட்டங்களில் ஒவ்வொருவரும்
   கேள்வி கேட்க வேண்டும் – confront செய்ய
   வேண்டும். அப்போது தான் இதயம் இல்லாமல்
   தவறுகளை தொடர்ந்து ஆதரித்து
   எழுதுபவர்களுக்கு அடுத்தமுறை எழுதும்போது
   கொஞ்சமாவது யோசிக்கத் தோன்றும்…

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.