…
…
…
இந்த நபரை அந்த தங்கக் கிரீடம், தங்கக் காருடன் – கிட்னாப் செய்து
கொண்டு போனால் மொத்தமாக என்ன கிடைக்கும் என்று
நினைக்கிறீர்கள்…?
……..
………………………
…
நீங்கள் என்ன நினைத்தீர்களோ –
ஆனால், என் நினைவிற்கு வருவது இது தான்….
தங்க கிரீடம், கார் – இருந்தாலும்,
இல்லாவிட்டாலும் –
…………………………
IPC section -363- விதிகளின் கீழ் –
கிட்னாப்பிங் குற்றத்திற்கு –
மொத்தமாக-
– 7 வருடங்கள் வரை சிறைவாசமும்
கூடவே அபராதமும். 🙂 🙂 🙂
.
————————————————————————————————————–
காமை சார்… சந்தனம் மிஞ்சியது என்றால் கு.. யில் பூசிக்கவா முடியும்?
எனக்கு இவர்களைப் பார்க்க சிரிப்புதான் வரும். நான் இருந்த நாட்டில், நகைக்கடைகள், வெளியே கண்ணாடி போட்டு புது புது நகைகள், பெரிய பணக்காரர்களுக்கு மட்டும் உரிய நகைகள் – புல்லட் ப்ரூஃப் உடை மாதிரி இருக்கும், இவைகளையெல்லாம் வெளியில் நடந்து போகும் மக்களும் பார்க்கும்படி வைத்திருப்பார்கள் (நம்ம ஊர் மாதிரி இல்லை. அங்க திருடணும்னு நினைக்கக்கூட முடியாது). ஒரு தடவை துபாயில் மோதிரம், யானையின் கால்களுக்குப் போடுவது போலச் செய்துவைத்திருந்தார்கள்.
என்னுடைய கம்பெனியில் வேலை பார்த்த சூப்பர்வைசர் (மிடில் லெவலுக்கும் கீழான வேலை-சம்பளத்தில்) கழுத்துக்கு ஒரு விரல்கடை தடினமுள்ள சங்கிலி செய்துபோட்டுக்கொண்டிருந்தார்-அவர் இலங்கையைச் சேர்ந்த தமிழர். அங்கெல்லாம் அப்போ தங்கம் வாங்குவது, நாம் சம்பாதிக்கும் பணத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. அவரே மாதம் 70 கிராம் தங்கம் அவர் சம்பளத்தில் வாங்கிவிடலாம். எனக்கும் அது மாதிரி ஒரு நகை போட்டுக்கலாம் என்று ஆசை வந்தது என்ற உண்மையும் சொல்லணும்.
சதாம் ஹுசைனுக்கு ஏதோ ஒரு அல்லக்கை, அவரது மாளிகையில் தங்க டாய்லட் வைத்ததைப் போன்றது இந்த தங்கக் கார் மற்றும் தங்க ‘வளைகாப்பு’.
ஒரு தடவை விமானப் பயணத்தில், ஒரு பெண், விரல் நகங்களிலிருந்து ஆரம்பித்து கை மூட்டு வரை தங்கத்தில் சங்கிலிகள் செய்துபோட்டிருந்தார் – சென்னை வரும் பயணத்தில்தான், எதேச்சையாக அவரது கறுப்பு உடையிலிருந்து கையை வெளியே எடுத்தபோது தெரிந்தது. அது இருக்கும் 500 கிராமுக்கு மேல் (ஒரு கைக்கு. அதற்கு மேலும் இருக்கலாம்)
புதியவன்,
என்னைப் பொருத்தவரையில், தங்கம், நகை
என்பதெல்லாம் பெண்களுக்கு மட்டும் தான்…
முடிந்தபோதெல்லாம் மனைவிக்கும், பெண்களுக்கும்
சிறிய சிறிய அளவில் வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.
இரண்டு காரணங்கள் –
ஒன்று – அவர்களின் சந்தோஷத்தைப் பார்க்க…
இரண்டு – ஒருவகையில் சேமிப்பு…
( நான் ஓய்வுபெறும் காலம் வரையில் என்னால்
ஐந்து ரூபாய் கூட பணமாகச் சேர்த்து வைக்க
முடியவில்லை; வீட்டுப் பெண்களின் நகைகள்
எனக்கு ஒருவித தன்னம்பிக்கையையும்,
பலத்தையும் தந்தன. ஆனால், நான் எதையும்
பயன்படுத்திக் கொண்டது கிடையாது …! )
நான் எளிமையில் தான் பலமாக உணர்கிறேன்.
‘
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்