சப்பாஷ் -அனதர் கிரேட் எஸ்கேப் ….


ரூ.411 கோடி கடன் மோசடி:
3 தொழிலதிபர்கள் வெளிநாடு தப்பிய பின்
4 ஆண்டுகள் கழித்து, சிபிஐயிடம் புகார் செய்த
எஸ்பிஐ வங்கி –

-வாங்கிய கடனைத் திரும்ப கொடுக்காததால்
வங்கிகள் வாராக்கடன் நிறுவனம் (NPA) என்று
அறிவித்தது – 2016, ஜனவரி 17-ம் தேதி;

-நிறுவனத்திற்கு நேரில் சென்று வங்கிகள்
கூட்டாக விசாரணை செய்தது – அக்டோபர் 2019;
(மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு…)

– விசாரணைக்குப் பிறகு எந்திரங்கள் எதையும்
கட்டிடத்தில் காணோம்; எல்லாவற்றையும்
ஏற்கெனவே விற்று விட்டு தப்பியோடி விட்டார்கள்
என்று –

– எஸ்பிஐ வங்கி சார்பில் சிபிஐ அமைப்பிடம்
புகார் கொடுத்தது – அதற்கும் 4 மாதங்களுக்குப் பிறகு –
2020, பிப்ரவரி 25-ம் தேதி;

– இந்த விஷயம் வெளியாகியிருப்பது அதற்குப்பிறகு
இரண்டரை மாதங்களுக்குப் பின் – எல்லாரும் கொரொனாவில்
பிஸியாக இருக்கும் தற்போது – 05/09/2020;

சப்ஆஆஆஆஆஷ்….!!!

இனி, பத்திரிகைச் செய்தி விவரமாக கீழே –

—————————-

ராம்தேவ் இன்டர்நேஷனல் எனும் நிறுவனத்தின் 3 இயக்குநர்கள்
வங்கியில் ரூ.411 கோடி கடன் பெற்று, திரும்பச் செலுத்தாமல்

வெளிநாட்டிற்குத் தப்பியுள்ளதாக எஸ்.பி.ஐ வங்கி நிர்வாகம்
சிபிஐ யிடம் புகாரளித்துள்ளது.

இதுகுறித்து எஸ்பிஐ வங்கி அளித்த புகாரில், ராம்தேவ்
இன்டர்நேஷனல் எனும் நிறுவனத்தின் 3 இயக்குநர்களான
நரேஷ் குமார், சுரேஷ் குமார், சங்கீதா ஆகியோர் பல்வேறு
வங்கிகளில் ரூ.411 கோடி கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல்

வெளிநாட்டுக்குத் தப்பியுள்ளனர்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளுக்கும், ஐரோப்பிய
நாடுகளுக்கும் பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்து வந்த
இந்நிறுவனம், இதற்காக எஸ்பிஐ வங்கியில் ரூ.173 கோடி
ரூபாயும், கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா,
ஐடிபிஐ, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, நிறுவனம் வங்கி
ஆகிய வங்கிகளில் மொத்தம் ரூ.411 கோடி கடன் பெற்றிருந்தது.

இந்த சூழலில் அந்நிறுவனம் கடன் தவணையைக் காட்டாமல்
இழுத்தடித்து வந்துள்ளது. இதனையடுத்து கடந்த 2016,
ஜனவரி 17-ம் தேதி அந்தக் கடனை என்பிஏ வாக எஸ்பிஐ
அறிவித்தது. பின்னர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர்
வரையிலான மாதங்களில் கடன் கொடுத்த
வங்கிகள் அனைத்தும் கூட்டாகச் சேர்ந்து ஹரியானாவில்
உள்ள ராம்தேவ் இன்டர்நேஷனல் நிறுவனத்தை ஆய்வு செய்தன.

ஆனால், வங்கிகள் ஆய்வு செய்வதற்கு முன்பே
தொழிற்சாலையில் உள்ள எந்திரங்கள் அனைத்தையும் பலருக்கும்
விற்பனை செய்து பணத்தைச் சுருட்டியுள்ளனர் அதன்
இயக்குநர்கள் மூவரும். இதனையடுத்து விசாரணை
தீவிரப்படுத்தப்பட்டதை அடுத்து 2020, பிப்ரவரி 25-ம் தேதி
எஸ்பிஐ வங்கி சார்பில் சிபிஐ அமைப்பிடம் புகார்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் மூவரும்
வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தற்போது சிபிஐ
விசாரணையில் தெரியவந்துள்ளது.

https://www.hindutamil.in/news/india/553613-sbi-complains-to-cbi-after-rs-411-crore-%20%20loan-defaulter-flee-country.html

https://www.ndtv.com/tamil/another-bank-defaulter-flees-country-sbi-bank-complains-to-cbi-after-4-years-2225894

.
—————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to சப்பாஷ் -அனதர் கிரேட் எஸ்கேப் ….

 1. புவியரசு சொல்கிறார்:

  ஓடிப்போனவர்களை தேடிப்பிடிக்கவோ,
  இங்கே கட்டி இழுத்து வரவோ
  இவர்களால் நிச்சயம் முடியாது.

  குறைந்த பட்சம் இந்த கூட்டுக்கொள்ளையில்,
  வங்கிகளின் மூத்த அதிகாரிகளுக்கு,
  சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்களுக்கு
  எத்தனை கோடி கிடைத்தது என்பதையாவது
  குத்து மதிப்பாக கண்டுபிடித்துச் சொல்லுமா
  நமது புத்திசாலியான புலனாய்வு அமைப்புகள். ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.