இதைப்பார்த்த பிறகு உணர்ச்சி வசப்படாமல் இருக்க முடியுமா…?


இந்தக் காட்சியைப் பார்த்து விட்டு உணர்ச்சி வசப்படாமல் இருக்க
எத்தனை பேரால் முடியும்….?

சாதாரணமாக சினிமாவைப் பார்த்து விட்டு உணர்ச்சி
வசப்படுபவர்களைப் பார்த்து சிரிப்பவன் நான். முதல் தடவை
இந்தப் படத்தைப் பார்க்கும்போது எனக்கு வயது 17-18.
அப்போது இந்தப்படம் என்னை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.

ஆனால், பிற்பாடு – 35 வயதில் 2-வது முறை பார்த்தபோது,
இடைவேளைக்குப் பின்னால், என்னால் துக்கத்தை கட்டுப்படுத்திக்
கொள்ளவே முடியவில்லை…

மிகச்சிறப்பான கதையமைப்பையும், மிகப்பொருத்தமான
வசனங்களையும் கொண்ட படம் இது. இதில் பரிதாபம்
என்னவென்றால் முக்கிய கதாபாத்திரங்கள் அத்தனை பேரும்
நல்லவர்களே… ஆனால், அத்தனை பேரும் துன்பப்படுகிறார்கள்.

ஆரூர் தாஸ் இந்தப் படத்திற்கான கதை, வசனத்தை
எழுதியபோது அவருக்கு வயது 28 தான் என்று தெரிந்தபோது
என்னால் நம்பவே முடியவில்லை; என்னவொரு அனுபவ
முதிர்ச்சி…! இந்தப் படத்தில் நடிக்கும்போது சிவாஜிக்கு வயது 32.
சாவித்திரிக்கு 24.

இன்றைய இளைஞர்களால் இதை ரசிக்க முடிகிறதோ இல்லையோ,
முந்தைய, அதற்கு முந்தைய தலைமுறைகளால் மறக்க முடியாத
படம் “பாசமலர்…”

உருவாக்கிய ஆரூர் தாஸ் அவர்களின் பேட்டியுடன்,
படத்தின் இறுதிக் காட்சி கீழே –

…..

…..

.
————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to இதைப்பார்த்த பிறகு உணர்ச்சி வசப்படாமல் இருக்க முடியுமா…?

 1. புவியரசு சொல்கிறார்:

  இன்று ஜெயா டிவியில் பாசமலர் போட்டார்கள்.
  இந்த இடுகை அதன் விளைவா சார் 🙂

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புவியரசு,

   ஆம். அது தான் காரணம்.

   படம் துவங்கி ஒரு மணி நேரத்திற்குப்பின்
   தான் தெரிய வந்தது. கொஞ்ச நேரம் பார்த்தேன்.
   இடைவேளைக்குப் பிறகு பார்த்து,
   மனதை துன்புறுத்திக் கொள்ள விருப்பமில்லை.
   எனவே 15-20 நிமிடம் பார்த்து விட்டு
   அகன்று விட்டேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. shan சொல்கிறார்:

  ஆரூர்தாஸ் அவர்களின் பேட்டி கண்ணீரை வரவழைத்தது என்பது தான் நிஜம். அருமையான மலரும் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.