1980 -களின் கனவுக்கன்னிகள் – இது சிரிப்பு பூமி (9) ..!!!


1980-களில் நடிக்க வந்த திரைப்பட நட்சத்திரங்கள் கடந்த
10 வருடங்களாக, வருடத்துக்கு ஒரு முறை எதாவது ஒரு
இடத்தில் சந்தித்து தங்களின் நட்பை கொண்டாடி புதுப்பித்துக்
கொள்கின்றனர். அப்படி நடந்த ஒரு நிகழ்வின்
ஹைலைட்ஸ் வீடியோவை தெலுங்கு நடிகர் சீரஞ்சிவி
இப்போது சமூக வெளியில் பகிர்ந்துள்ளார்….!

அவர்களின் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில்,
நாமும் பங்குகொள்வோமாக… 🙂 🙂 🙂

( அந்தக் காலத்திய கனவுக்கன்னிகள், கனவுக்கண்ணன்கள் –
இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பதை
கண்டபிறகாவது, சிலருக்காவது – நட்சத்திரங்களின்
மீதான மோகம் தெளியுமென்று …….. நம்புவோமாக ..!!! )

…..

…..

.
——————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to 1980 -களின் கனவுக்கன்னிகள் – இது சிரிப்பு பூமி (9) ..!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  //அந்தக் காலத்திய கனவுக்கன்னிகள், கனவுக்கண்ணன்கள் – இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பதை கண்டபிறகாவது, சிலருக்காவது – நட்சத்திரங்களின்
  மீதான மோகம் தெளியுமென்று// – கா.மை. சார்… ரொம்பத்தான் உங்கள் எதிர்பார்ப்பு இருக்கிறது.

  நான் அவ்வப்போது பத்திரிகைகளில் (குமுதம் போன்றவற்றில்) வரும் இந்த நட்சத்திர கூடல்களைப் பற்றிப் பார்ப்பேன் படிப்பேன். அட… இந்த நடிகைகளையா அப்போ ‘கனவுக்கன்னி’யாக நினைத்தோம் என்று தோன்றும். அப்புறம் மனது, ‘அவங்க பழசாப் போயிட்டாங்க. Anyway இப்போ நம்ம கனவுக்கன்னி ஸ்ரீதிவ்யா.. போன்றவங்கதானே’ என்று சொல்லிக்கொள்ளும் (அப்போ நம் வயது நம் மனதுக்குத் தோன்றாது)

  பொத்திவச்ச மல்லிகை மொக்கு – மண்வாசனை ரேவதி, அலைகள் ஓய்வதில்லை – ஆயிரம் தாமரை மொட்டுக்களே ராதா… இவர்களெல்லாம் நான் கல்லூரி படித்தபோது கனவுக்கன்னிகள். (அப்போ வந்த படங்கள்ல, சிலர், ‘கனவுக்கன்னி’யாக இருந்ததில்லை.. ஒரு தலை ராகம் ரூபா, பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா போன்றவர்கள்) பிற்காலத்தில் அவங்களைப் பார்க்கும்போது, இவங்களா அப்போ கனவுக்கன்னிகளாக இருந்தாங்க என்று தோன்றும். பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் வரும் வசனம் நினைவுக்கு வரும். டாக்டர், ஸ்ரீதேவியைப் பார்த்துச் சொல்லுவார், ‘நான் விரும்பினது உன்னை அல்ல, உன் பதினாறு வயசை’ என்று.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   பொதுவாக எல்லாரையும் வயதாகி விட்டதால்,
   மோசமான தோற்றத்தைப் பெறுகிறார்கள் என்று
   சொல்ல முடியாது.

   கொஞ்ச நாட்கள் முன்பு, முன்னாள் ஹிந்தி நாயகி
   வஹீதா ரெஹ்மானை ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன்.
   இப்போது அவருக்கு 75-80 வயதிருக்கலாம்.
   நரைத்த தலையுடன், ஆனால் முகத்தில் அதே பொலிவுடன்
   காட்சி அளிக்கிறார்.

   இது போல் இன்னும் சிலரையும் கூடச் சொல்லலாம்.
   உடலை பருக்க விடாமல் பார்த்துக்கொண்டு,
   செயற்கை மேக்கப் இல்லாமல், வயதுக்குத் தகுந்த
   தோற்றத்துடன் இருந்தால், அவர்களைப் பார்க்கும்போது,
   இப்போது இந்த கனவுக்கன்னிகளை நினைப்பது போல்
   நினைக்கத் தோன்றுவதில்லை.

   மேக்கப் எல்லாம் திரைப்படத்துடன் வைத்துக்கொள்ள
   வேண்டும். வெளியில் நார்மலாக இருந்தால், அதுவே
   அவர்களது மதிப்பைக் கூட்டும் என்பது என் கருத்து.

   தமிழ்நாட்டில், திரை நட்சத்திரங்கள் மட்டுமல்ல.
   அரசியல்வாதிகள் பலரும் மேக்கப்புடன் தான் வளைய
   வருகிறார்கள். இல்லையெனில் 70-80 வயதானாலும்,
   கருப்புத்தலையுடன் உலவ முடியுமா…? 🙂

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.