…
…
…
தமிழக அரசுக்கு வருமானம் இல்லை;
அன்றாடச் செல்வுகளை சமாளிக்கவே திண்டாடுகிறது
என்பது நமக்கு நன்றாகவே புரிகிறது.
எனவே தான் பெட்ரோல், டீசலுக்கு வரி போட்டதை
நாம் எதிர்க்கவில்லை.
கொரோனா ஒரு அரக்கன் என்றால், “சாராயம்” இன்னொரு
கொடிய அரக்கன்….
ஒரு அரக்கனை ஒழிக்க தீவிரமாக அரசு செயல்பட்டு
வருவதை நாம் உணர்கிறோம்… அதன் முயற்சிகளை
மனமாற பாராட்டுகிறோம். முழுவதுமாக ஆதரிக்கிறோம்.
ஆனால், அதே சமயம் ஒன்றரை மாதங்களாக
உறங்கிக் கிடக்கும் இன்னொரு அரக்கனான “சாராயத்தை”
எழுப்பி விடும் முயற்சியாக “டாஸ்மாக்” கடைகளை
திறப்பதை நம்மால் ஏற்க முடியவில்லை.
குடிப்பழக்கத்தை விட விரும்பியும், விடுபட முடியாமல்
தவித்த பலர், இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக
தங்களால் இந்த கொடிய பழக்கத்திலிருந்து வெளிவர முடியும்
என்று நம்பத் தொடங்கி இருக்கிறார்கள்.
தமிழக அரசு அந்த சூழலை, அவர்களை – கெடுத்து விடக்கூடாது.
இன்னும் குறைந்த பட்சம் 2 மாதங்கள் சாராயக் கடைகள்
மூடியே இருக்குமானால், பெரும்பாலான மக்கள் இந்த
கொடிய பழக்கத்திலிருந்து தன்னாகவே வெளிவந்து
விடுவார்கள்.
சாராயப் பழக்கத்தை தமிழகத்திலிருந்து அடியோடு ஒழித்துக்கட்ட
கடவுளாக, இயற்கையாக – பார்த்து கொடுத்திருக்கும்
அபூர்வமான வாய்ப்பு இது…. தமிழக மக்களும், தமிழக அரசும்
இதை, இந்த வாய்ப்பை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ல
வேண்டும்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளத் தவறினால்,
எதிர்காலம் தங்களைச் சபிக்கும் என்பதை தமிழக அரசு
உணர வேண்டும்.
மக்களின் ஆரோக்கியமும், பெண்கள், குழந்தைகளின் நலனும்,
மொத்தத்தில் குடும்பங்களில் நிம்மதியும் மிக மிக அவசியம்.
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை இப்போது திறப்பதன் மூலம்,
தனது நற்பெயருக்கும், மக்களின் நலனுக்கும் விரோதமாகச்
செயல்படுகிறது என்பதை உணர வேண்டும்.
அரசுக்கு வருமானம் தேவையென்றால் –
வேறு எந்த பொருளுக்கு வேண்டுமானாலும்,
எத்தகைய வரிகளை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளட்டும்.
ஆனால், மதுவின் மூலம் வரும் வருமானம் வேண்டாம்.
அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
குறைந்த பட்சம், தற்போதைக்கு தள்ளிப்போட வேண்டும்.
இது அவசியம்… மிக மிக அவசியம்.
இதுவே தான் இன்று பெரும்பாலான
தமிழக பெண்களின், தாய்மார்களின் கவலையாக –
– கோரிக்கையாக இருக்கும்.
.
—————————————————————————————————————-
அன்புக்குரிய அய்யா , வணக்கங்கள். டாஸ்மாக் இப்பொழுது அல்ல , எப்பொழுதுமே திறக்கக்கூடாது.
வருக அப்பண்ணஸ்வாமி,
என் விருப்பமும் அதுவே தான்.
இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு,
தமிழக அரசு சாராயக்கடைகளுக்கு ஒரு முடிவு
கட்டி விட வேண்டும்…
வேறு எதற்கு வேண்டுமானாலும் வரியை
உயர்த்திக் கொள்ளட்டும். நாம் மட்டுமல்ல
மிகப்பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அரசு, அப்படியே டாஸ்மாக்கைத் திறக்காமல் விட்டிருந்தால், கள்ளச்சாராயத்துக்கு எதிரா கடுமையான நடவடிக்கைகளும் தொடர்ந்திருந்தால், 3-6 மாதங்களில் குடிகாரர்கள் குறைவதற்கு வழிவகுத்திருக்கலாம்.
அரசுக்கு இது பெரும் வருமானம் மட்டுமல்ல. அரசியல் முதலைகளுக்கும் மிகப்பெரிய வருமானம் தரும் தொழில் இது. திமுக முக்கிய அரசியல்வாதிகள், சாராயச் சக்கரவர்த்திகள். (தினகரன் கும்பல்களும்) இதில் பெரும் பங்கு (ஷேர்) திமுக தலைமைக்கும் உண்டு. பலப்பல வருடங்களுக்கு முன்பு ‘மது ஒழிப்பு’ என்று தென் தமிழகத்தில் குரல் கொடுத்த வைகோ, திமுக அடிமை ஆன பிறகு அதைப்பற்றியே பேசுவதில்லையே. அதனால் மதுவை ஒழிப்பது என்பது மிகவும் கடினம். பாமக மதுஒழிப்புக்கு ஆதரவு தருவதற்கு (ஆரம்பத்திலிருந்தே) முக்கியக் காரணம், அவங்க சாராய ஆலைகளுக்கு ஓனராக இல்லாததுதான். மற்றபடி மக்கள் நலன் காரணம் என்பதை நான் நம்பவில்லை (அன்புமணி ராமதாஸ் அவர்களின் தொழில், மருத்துவம் இல்லை, ரியல் எஸ்டேட். இப்படி பினாமிகளில்தான் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் சம்பாதிப்பது). அரசு மது ஒழிப்புக்கு பந்தல்கால் போட்டால், அரசுக்கு எதிர்ப்பு மிகவும் அதிகரிக்கும். (குடிகாரர்கள் 60% ஆண்கள். அவங்க வாக்கு எதிர்கட்சிக்குப் போகும். 60% பெண்களின் வாக்கு பிரியும். மதுவிலக்கினால் மக்கள் வாக்கு பெருகும் என்றால் அரசியல் கட்சிகள் அதனைத்தான் செய்யும்.)
பெங்களூரில் நேற்று மதுக்கடைகள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டது. ஒரு தெருவில் 3 தனியார் கடைகள் இருக்கின்றன. இன்னும் இரண்டு கடைகள் திறக்கவில்லை. ஒவ்வொரு கடைக்கும் குறைந்தபட்சம் 150-200 பேர் அதிகாலையிலேயே வரிசையில் நின்றிருந்தனர் (தமிழகம் போன்று அடித்துப்பிடித்து கும்பலாக இல்லை). இருந்த போதிலும், கடந்த 40 நாட்களாக ஆட்கள் நடமாட்டம் அனேகமாக இல்லை என்று இருந்த ஒரு தெருவிலேயே திருவிழாக்கூட்டம் ரொம்பவும் களேபரமாக இருந்தது (வரிசை, முகக் கவசம் போன்றவற்றுடன். பத்தாதற்கு, கடையில் ஒருவர்பின் ஒருவர்தான் வாங்க இயலும். வாங்குபவருக்கு டெம்பரேச்சர் டெஸ்ட், ஸானிடைசர் வழங்குவது போன்றவையும் நடந்துகொண்டிருந்தன)
புதியவன்,
பங்களூரில், பொதுவாக குடிகாரர்கள் அல்லாத
பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் சாராயக்கடைகளை
திறந்ததை எப்படிப் பார்க்கிறார்கள்…?
சகஜமாக ஏற்றுக்கொள்கிறர்களா ?
நான் மீடியாவில் பார்த்த வரையில்,
சீரியசாக யாரும் எதிர்ப்பதாகத் தெரியவில்லை..
அப்படித்தானா… ?
தமிழ்நாடில் மட்டும் தான் மதுவுக்கு எதிர்ப்பா…?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
தமிழ்நாட்டில் ‘மதுவுக்கு எதிர்ப்பு’ கிடையாது. ‘எதிர்கட்சிகள்’ மட்டும்தான் எதிர்க்கின்றன. பாமக மட்டும்தான் மது எதிர்ப்பு என்று பலப்பல வருடங்களாகச் சொல்லிவருகின்றது. அந்தக் கட்சியும், ‘மது ஒழிப்பு’ கொள்கையை ஆட்சி ஏற்ற ஒரே வாரத்தில் நிறைவேற்ற ஒப்புக்கொள்ளும் கட்சியுடன் மட்டும்தான் கூட்டு என்று சொல்லாது. மக்கள் ‘மது கூடாது’ என்று சொல்வதுபோலத் தெரியலை. இந்த இடத்துல வேண்டாம், இன்னொரு இடத்துக்கு மாத்துங்க என்று வேணும்னா சொல்வாங்களா இருக்கும்.
இங்கு ‘மது குடிப்பது’ என்பது சகஜமான ஒன்றாகவே ஆகிவிட்டதாக நான் நினைக்கிறேன். ஹைகிளாஸ், உயர் மத்தியதர வர்க்கம் ஆகியவற்றில் Barக்குச் செல்வது சோஷியல் டிரிங்கிங் என்றெல்லாம் பல தசாப்தங்களாக இருக்கு, அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனை எதிர்ப்பது, வாக்கு வங்கியை இழக்க ஏதுவாகும் என்பதால்தான் நான் இதனைப் பற்றி மீடியாக்களில் பெரிதாகக் காணவில்லை. இரண்டாம் நாள், நியூஸ் 7 சேனல் இதனைப் படம்பிடித்துக்கொண்டிருந்தார்கள்.
‘ மெட்ராஸ் ‘ உயர்நீதிமன்றத்திற்கு
உளமார்ந்த நன்றிகள்…. இன்று,
தற்காலிகமாகவேனும்
மதுக்கடைகளுக்கு தடை விதித்ததற்காக.
நிரந்தர மூடுவிழா நடைபெறும் நாளும் வந்தால்,
தமிழகத்திற்கு அது ஒரு திருப்புமுனையாக
இருக்கும்.
அதற்கு காரணமாக யார் இருந்தாலும்,
அவர்கள் சரித்திரத்தில் இடம் பெறுவார்கள்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
டாஸ்மாக் எஃபெக்ட் – இன்று பார்த்த ஒரு வீடியோ காட்சி –
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானமழிந்து மதிகெட்டு போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு
அவ்வையார் பாடலை,
அகத்தை மறந்து அதிகம் குடிப்பாயால்
மானமழிந்து மதிகெட்டு போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு
என்று எல்லா டாஸ்மாக் குடிகாரர்களுக்கும் புதிய ஒளவையாராக நான் எழுத வேண்டியதுதான்.
ஆனால் குடிப்பவர்கள் தங்களையும், தங்களைச் சார்ந்தவர்களையும் அழிக்கிறார்கள். இந்த சிகரெட் பிடிப்பவர்கள், ஏஜென்சி எடுத்து விற்பவர்கள் தங்களையும், அப்பாவிகளையும்கூட அழிக்கும் அதர்மத்தைச் செய்கிறார்கள் வைகோவின் மகன் துரை வையாபுரி போல