போகரின் நவபாஷாண சிலை மர்மம் …ஒரு சுவாரஸ்யமான பயணம்…
தமிழ்நாட்டில் தான்.. ஆனால்,
நாம் பார்த்திராத சில இடங்கள்..
நிஜமோ, பொய்யோ –
கொஞ்சம் த்ரில் இருக்கத்தான் செய்கிறது……!!!

.
——————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to போகரின் நவபாஷாண சிலை மர்மம் …

 1. Geetha Sambasivam சொல்கிறார்:

  போகர் முதல் முதல் செய்த நவபாஷாணச் சிலைகளில் ஒன்று கொடைக்கானலில் உள்ள பூம்பாறை முருகனும் எனக் கேள்வி. அங்கேயும் அப்படித் தான் சொல்லுகின்றனர். இரண்டாவது தான் பழநிக்கோயில் சிலை எனவும் மூன்றாவதும் அங்கேயே சுற்றுவட்டாரத்தில் உள்ளதாகவும் பூம்பாறை சென்ற போது கேள்விப் பட்டோம்.

 2. புவியரசு சொல்கிறார்:

  பழனி முருகன் சிலையே 2000 ஆண்டுகள் பழமையானதாக
  இருக்கும். அப்படியானால், இந்த செய்திகள் எல்லாம்
  அதற்கும் முந்தையவையாக இருக்க வேண்டும்.
  மர்மம் தான். எங்கேயாவது எழுதி வைத்திருப்பார்கள்.
  தொடர்ந்து தேடினால் எதாவது தடயம் கிடைக்கலாம்.

 3. புதியவன் சொல்கிறார்:

  எனக்குத் தெரிந்த வரையில் பழனி முருகன் சிலையும், கொடைக்கானலில் பூம்பாறை வேலப்பர் சிலையும் ஒன்று என்றும் இரண்டுமே நவபாஷாணச் சிலைகள், போகர் செய்தவை என்றும் படித்திருக்கிறேன். பூம்பாறை வேலப்பர் கோவிலுக்கும் இரு முறை சென்றிருக்கிறேன்.

  இந்த நவபாஷாணச் சிலையில் (மார்பில்?) சந்தனம் சார்த்தியிருப்பார்கள் (பழனி) என்றும், அது மிகவும் சக்தி வாய்ந்தது (நோய்களுக்கு) என்பதனால், அரசியல்வாதிகளைக் குளிர்விக்க, அவற்றை அர்ச்சகர்கள் சுரண்டிச் சுரண்டி, (இந்தப் பிரச்சனை ஆர்.எம்.வீ அமைச்சராக இருந்தபோது பூதாகாரமானது), பிறகு தின பூஜைகளே செய்யமுடியாது ரொம்பவும் வீக்காக அந்தச் சிலை ஆகிவிட்டது எனவும் படித்திருக்கிறேன். பூம்பாறை வேலப்பர் கோவிலில் முருகன் மிக அழகு. பழனி சிலை மாதிரியே (பழனிக்குச் சென்றதில்லை, ஆனால் புத்தகங்களில் படங்களைப் பார்த்திருக்கிறேன்) இருக்கும். பூம்பாறை மிக அழகாக, கேரட் வயல்கள் சூழ இருக்கும்.

  விஜய் தொலைக்காட்சியில் இதுபோல வந்த சீரியல்களைப் பார்திருக்கிறேன். பெரும்பாலானவை நம்மால் நம்பமுடியாதபடி இருக்கும். இந்த போகர் பற்றியது நம்பக்கூடியதாக இருக்கிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.