…
…
…
எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், இயக்குநர்,
திரைப்பட கதை, வசனகர்த்தா, மேடை நாடகப்புலி
என்று பல வகையில் புகழ் பெற்ற மறைந்த
திரு.க்ரேசி மோகன், (அக்டோபர், 1952 -ஜூன் 2019 )
அடிப்படையில் – இவை எதற்குமே
தொடர்பில்லாத எஞ்சினீரிங் படிப்பு படித்த பட்டதாரி.
இவர் எழுதிய நாடகங்கள் – 30
பணியாற்றிய திரைப்படங்கள் -40
எழுதிய சிறுகதைகள் -100-க்கும் மேல்…
மிகச்சிறப்பான காமெடி சென்ஸ் உள்ள இவரை
விரும்பாதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள்.
சென்னைக்கு வெளியே இவரது குழுவினர்
அதிகம் புகழ் பெறாத நிலையில் – 1978-லேயே,
திருச்சிக்கு அழைத்து வந்து இவரது
“Crazy Thieves in Paalavakkam” -நாடகத்தை
எங்கள் மன்றத்தின் சார்பாக போட்டதிலிருந்தே,
இவரை தூரத்திலிருந்தே ரசித்துக் கொண்டிருந்தேன்.
க்ரேசி மோகன் குழுவினரின் நாடகம் ஒன்றினை
யூ-ட்யூபில் நேற்று பார்த்தேன்….
கொஞ்ச நேரத்துக்காவது –
பிரச்சினைகளை மறந்து மனம் விட்டுச் சிரிக்க வைக்கும்
ஒரு நகைச்சுவை நாடகம் …
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில்
மகிழ்ச்சி அடைகிறேன்….
….
….
.
———————————————————————————————————