…
…
…
1955-56 – எனக்கு 12-13 வயது இருக்கும்போது
மஹாராஷ்டிராவில் உள்ள புனா-கர்க்கியிலிருந்து,
தமிழ்நாட்டில் கோயம்புத்தூருக்கு அருகே இருக்கும்
சூலூர் என்கிற கிராமத்தருகே ( ? ) உள்ள விமானப்படைத்
தளத்திற்கு என் அப்பாவிற்கு மாற்றலாகி விட்டது.
நாங்கள் குடும்பத்துடன் குடிபெயர்ந்தோம்.
——–
தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி….!!! ( பகுதி -12 ) .. நினைக்கத் தெரிந்த மனமே…- பார்க்க
—–
எனக்கு முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலை….
பிறந்ததிலிருந்து முதல் முறையாக, வடக்கேயிருந்து,
தமிழ்நாட்டில் வசிக்க வந்திருக்கிறேன். ஆனால்,
சூழ்நிலை தான் புதிதே தவிர, தமிழ்நாட்டின் – சினிமா,
அரசியல், பத்திரிகைகள் குறித்தெல்லாம் அப்போதே நான்
ஓரளவு அறிந்தே இருந்தேன்….!!! கர்க்கியில் இருக்கும்போது,
கிடைக்கும் எந்தவொரு தமிழ் பத்திரிகை, சினிமா,
தமிழ் வார, மாத இதழ்களையும் விட மாட்டேனே…!
அப்போது தமிழ்நாட்டில் திமுக பரபரப்பாக
வளர்ந்து வந்த சூழ்நிலை.
திமுக முக்கியமாக வளர்ந்ததே,
அடுக்கு மொழியும், அலங்கார வார்த்தைகளும் நிறைந்த,
கவர்ச்சிகரமான மேடைப்பேச்சு மற்றும் திரைப்படங்கள்
மூலமாகத் தான்.
திரையுலகில், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி
ஆகியோர் கதை, வசனங்களுக்காகவும்,
எம்.ஜி.ஆர்.,சிவாஜி, கே.ஆர்.ராமசாமி, போன்றவர்கள்
நடிப்புக்காகவும் பரபரப்பாக பேசப்பட்ட காலம் அது…
இவர்கள் அனைவரின் புகழும் திமுகவின்
மீது மக்கள் மையல் கொள்ள பெரிதும் உதவியது.
1955-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தான்
நான் முதல் முறையாக அறிஞர் அண்ணா அவர்களை
நேரில் பார்க்க ஒரு வாய்ப்பு கிட்டியது…. சூலூரில்,
சந்தைத்திடலில் நடந்த ஒரு திமுக பொதுக்கூட்டம்..
அவரது கரகரத்த குரலை, கவர்ந்திழுக்கும் பேச்சை,
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கேட்க முடிந்தது.
இந்த இடுகையின் அடுத்த கட்டத்திற்கு போகும் முன்,
அண்ணா எழுதிய சில திரைப்படங்களைப் பற்றி அவசியம்
எழுத வேண்டுமென்று தோன்றுகிறது.
கருணாநிதி நிறைய படங்களுக்கு கதை, வசனம் எழுதினார்.
ஆனால், அண்ணா கதை, வசனம் என்று முழுவதுமாக
பங்கேற்ற படங்கள் மூன்றே 3 தான்….
நல்லதம்பி(1949), வேலைக்காரி(1949), ஓர் இரவு ( 1951)…
அண்ணாவின் வேறு பல கதைகள் படமாகி இருக்கின்றன.
ஆனால், அவற்றிற்கு – அண்ணா – வசனம் எழுதவில்லை.
அண்ணா முதன் முதலில் கதை, வசனம் எழுதிய
படமான “நல்ல தம்பி”யை தயாரித்தவர் நடிகர் கலைவாணர்
N.S.கிருஷ்ணன்.
…
…
…
அண்ணாவின் நண்பரொருவர் சென்னையில் வெளிவந்த
Mr. Deeds Goes to Town என்கிற ஆங்கிலப் படத்தை பார்த்து
விட்டு, அந்த படத்தை, அவரது நண்பர் NSK படமாக
எடுத்தால் நன்றாக இருக்குமென்றும், அண்ணா அந்தக்கதையை
NSK -வுக்காக தமிழ்நாட்டின் கிராமிய சூழ்நிலைக்கேற்ப
பின்னணியை மாற்றி படமெடுக்க உதவவேண்டுமென்று
வற்புறுத்தினார். அண்ணாவும் அந்தப் படத்தை ஒருமுறை
பார்த்துவிட்டு, தமிழ்நாட்டு சூழ்நிலைக்கேற்ப மாற்றி,
கதை, வசனத்தோடு N.S.கிருஷ்ணனுக்காக எழுதிக் கொடுத்தார்.
அதில் கதாநாயகியாக நடிக்க பானுமதி ஒப்பந்தம்
செய்யப்பட்டிருந்தார்… ஆனால், படமெடுக்கத் துவங்கிய பிறகு
NSK, தனது துணைவியான T.A.மதுரம் அவர்களுக்கு வாய்ப்பு
கொடுக்க நினைத்து, பானுமதியின் முக்கியத்துவத்தை
குறைத்து, புதிதாக மதுரத்திற்காக ஒரு பாத்திரத்தை உருவாக்கி,
அதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து, கதையை
கன்னாபின்னாவென்று மாற்றி விட்டார்.
கூடவே, விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி, கிந்தனார்,
என்று கதாகாலட்சேபம் வகையறாக்களையும்
சேர்த்துக்கொண்டார்.
இறுதியில் படம் வெளிவரும்போது, அண்ணா எழுதிய
திரைக்கதை, வசனம் சிதைந்து, காணாமல் போயிருந்தது.
படம் வசூலில் படுதோல்வியானது…
இந்த படத்தை தயாரிப்பதில் தனக்கு உதவியவர்களுக்கு
உதவும் விதமாக, உடனேயே “தம்பித்துரை” என்கிற பெயரில்,
அடுத்து மீண்டும் அண்ணாவின் கதை வசனத்தில் படம்
எடுப்பதாக அறிவித்தார் NSK …
ஆனால், தனது முதல் படம் NSK-யால் சிதைக்கப்பட்டதைப்
பார்த்து, நொந்து நூலான அண்ணா- NSK-வுக்காக இனியும்
ஒரு கதை பண்ண தான் தயாரில்லை என்று மறுத்து விட்டார்.
இறுதியில் “தம்பித்துரை” கைவிடப்பட்டது.
ஆக, அண்ணாவின் முதல் படம் சிதைக்கப்பட்டு, தோல்வியில்
முடிந்தது…
ஆனால் அவரது அடுத்த படமான “வேலைக்காரி”
சூப்பர் டூப்பர் ஹிட். அதைப்பற்றி, அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.
——————
நல்லதம்பி’யிலிருந்து ஒரு சின்ன சாம்பிள் கீழே –
( முழுவதும் பார்த்து விட்டு என்னைத் திட்டாதீர்கள்…
NSK-யை ஹீரோ காஸ்ட்யூமில் பார்க்க வேண்டுமென்றால்,
கடைசி ஒரு நிமிடம் மட்டும் பாருங்கள்..போதும்….!!!)
….
மலர்களில் ஒரு அழகு மயில் நான் –
பானுமதி-கண்டசாலா….
….
இதற்கு மேலும் படத்தைப் பார்க்கும் விருப்பமும்,
தைரியமும் – உள்ளவர்களுக்கு – 🙂 🙂
இந்தப்படம் யூ-ட்யூபில் பார்க்கக் கிடைக்கிறது….
….
….
.
——————————————————————————————————————————-
// இதற்கு மேலும் படத்தைப் பார்க்கும் விருப்பமும்,
தைரியமும் – உள்ளவர்களுக்கு – 🙂 🙂//
Interesting comments 🙂
பிங்குபாக்: அண்ணாவின் புரட்சிப் படைப்பு – “வேலைக்காரி” …!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… | வி ம ர
ஏ.வி.எம். ஸ்டூடியோஸுக்காக அண்ணா, ஒரே இரவில் கதை வசனம் எழுதித்தந்த படம் வேலைக்காரியா இல்லை ஓர் இரவா? ரொம்ப திறமை சாலி.
பிங்குபாக்: அண்ணாவின் புரட்சிப் படைப்பு – “வேலைக்காரி” …!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… | வி ம ர
வேலைக்காரி நாடகம் நடத்த கே ஆர் ராமசாமி ஏற்பாடு செய்து
கொண்டிருந்தார் . அதை நடத்த நாளாகும் என்று இருந்தது
அதிக செலவு இல்லாமல் வேறு எதுவும் நாடகம் போடலாமே
என்று யோசனை செய்து அண்ணாவிடம் பேசினார் .
அண்ணா ‘ஓர் இரவு’ நாடகத்தை ஒரே நாளில் எழுதினார் .
இது நடிப்பிசை புலவர் கே ஆர் ராமசாமியின் கம்பெனிக்காக எழுதியது .
பின்னால் அதை திரைப்படம் ஆன பொழுது ஏவிஎம்
நிறுவனத்திற்கு கதை வசனம் எழுதினார் .