விஜய் மால்யா உட்பட கடன் மோசடியாளர்களின் ரூ.68,607 கோடி கடன்கள் நீக்கப்பட்டன –


இன்று வெளிவந்துள்ள தினமணி செய்தி –

முன்னணி தொழிலதிபா்களின் ரூ.68,607 கோடி கடன்கள் நீக்கம்

https://www.dinamani.com/india/2020/apr/29/rs-68607-crore-debt-disbursements-of-leading-employers-3409226.html

மத்திய ரிசர்வ் வங்கி

வங்கிக் கடன் மோசடியாளா்களாக அறிவிக்கப்பட்ட
விஜய் மல்லையா, மெஹுல் சோக்ஸி உள்ளிட்ட முன்னணி
தொழிலதிபா்கள் தங்களது நிறுவனங்களின் மீது பெற்ற
ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்களின் கணக்குகள்
நீக்கப்பட்டதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ)
தெரிவித்துள்ளது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இத்தகவல்
பெறப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி வரை
வங்கிகளில் கடன்பெற்று திருப்பிச் செலுத்தாத முன்னணி
தொழிலதிபா்களின் விவரங்களை வழங்குமாறு தகவலறியும்
உரிமைச் சட்டத்தின் கீழ் ஆா்வலா் சாகேத் கோகலே
கோரியிருந்தார்.

அதற்கு ஆா்பிஐ பதில் அளித்துள்ளது.
அதில் கடந்த ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி,
நீக்கப்பட்ட 50 தொழிலதிபா்களின் கடன் கணக்கு விவரங்கள்
வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி வைர வியாபாரி மெஹுல் சோக்ஸிக்கு
சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் பெற்ற
ரூ.5,492 கோடி கடன் கணக்கியல் ரீதியில் நீக்கப்பட்டுள்ளது.
அவருக்குச் சொந்தமான மற்ற இரு நிறுவனங்கள் பெற்ற
ரூ.1,447 கோடி, ரூ.1,109 கோடி கடன்களும் நீக்கப்பட்டன.

ஜுன்ஜுன்வாலா சகோதரா்களுக்குச் சொந்தமான ஆா்இஐ
அக்ரோ நிறுவனம் வங்கிகளில் பெற்ற ரூ.4,314 கோடி
மதிப்பிலான கடன்களின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும்
ஆா்பிஐ தெரிவித்துள்ளது.

விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான விமான நிறுவனம்
பெற்ற ரூ.1,943 கோடி கடன் கணக்கியல் ரீதியாக
நீக்கப்பட்டுள்ளது. தொழிலதிபா் விக்ரம் கோத்தாரிக்குச்
சொந்தமான ரோடோமேக் குளோபல் நிறுவனத்தின்
ரூ.2,850 கோடி கடன் நீக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக
50 தொழிலதிபா்கள் பெற்ற ரூ.68,607 கோடி கடன்கள்
கணக்கியல் ரீதியில் நீக்கப்பட்டதாக ஆா்பிஐ தனது
பதிலில் தெரிவித்துள்ளது.

கணக்கியல் ரீதியில் கடன்களை நீக்குவது என்பது
ஒட்டுமொத்தமாக கடன்களைத் தள்ளுபடி செய்வது அல்ல.
வரவு செலவு கணக்குகளைப் புதுப்பிக்கும் நோக்கில்
இந்த நடவடிக்கையை வங்கிகள் மேற்கொள்கின்றன.
அதே வேளையில் கடன் பெற்றவா்களிடமிருந்து அதைத்
திரும்பப் பெறுவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை
வங்கிகள் தொடா்ந்து மேற்கொள்ளும்.

காங்கிரஸ் கண்டனம்:
ஆா்பிஐ அளித்துள்ள பதில் தொடா்பாக காங்கிரஸ்
முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தனது சுட்டுரைப்
பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில்,

‘வங்கிகளில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட
தொழிலதிபா்களின் பெயா்களை வெளியிடுமாறு
நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தேன். ஆனால்,
அதற்கு மத்திய நிதியமைச்சா் பதிலளிக்கவில்லை.
தற்போது ஆா்பிஐ அந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் பாஜக-வின் நண்பா்களான மெஹுல் சோக்ஸி,
நீரவ் மோடி உள்ளிட்டோரின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன.
அதன் காரணமாகவே , நாடாளுமன்றத்தில் அத்தகவலை
வெளியிட மத்திய பாஜக அரசு மறுத்திருந்தது’
என்று தெரிவித்துள்ளார்.

‘பிரதமா் பதிலளிக்க வேண்டும்’:
காங்கிரஸின் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப்
சுா்ஜேவாலா காணொலிக் காட்சி வாயிலாக
செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘பிரதமா் நரேந்திர
மோடி அரசின் தவறான கொள்கைகளை இந்த விவகாரம்
பிரதிபலிக்கிறது. தொழிலதிபா்களின் கடன்கள் நீக்கப்பட்டது
ஏன் என்பது தொடா்பாக பிரதமா் மோடி விளக்கமளிக்க
வேண்டும்’’ என்றார்.

.
————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to விஜய் மால்யா உட்பட கடன் மோசடியாளர்களின் ரூ.68,607 கோடி கடன்கள் நீக்கப்பட்டன –

 1. Geetha Sambasivam சொல்கிறார்:

  right off /waiving இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை மன்மோகன் சிங் சொல்ல வேண்டும். ஆனால் அவர் சொல்ல மாட்டார்.

 2. Gopi சொல்கிறார்:

  பாஜகாவில் லொட லொடாக்களுக்கென்ன பஞ்சம் ?
  அவர்களில் யாராவது சொன்னால் போச்சு 🙂

 3. புவியரசு சொல்கிறார்:

  நிறையவே “லொட லொடத்தி’ருக்கிறார்கள்.
  ஆனால் பாராளுமன்றத்தில் லிஸ்ட் கேட்டபோது
  ஏன் கொடுக்கவில்லை என்பதற்கு யாரிடமும்
  விளக்கம் இல்லை.
  கேட்டபோதே கொடுத்திருந்தால், பின்னர் RTI
  கேள்வி கேட்டு பதில் வாங்க வேண்டிய
  கட்டாயமும், அதனால் ஏற்பட்ட
  இந்த விளம்பரமும் வந்தே இருக்காதே.
  மடியில் கனம் இல்லையென்றால்
  லிஸ்ட் கொடுப்பதில் எதற்கு பயம் ?

 4. shan சொல்கிறார்:

  எனக்கு தெரிந்த வரையில் இது போன்ற write-off வருட வருடமும் நடப்பது தானே.
  திடீரென்று இதற்க்கு ஏன் இத்தனை விஷம தனமான விளம்பரம்.
  தயவு செய்து முன் வருடங்களின் write off விவரங்களை புரட்டி பாருங்கள். வாயடைத்து போவீர்கள்.

 5. khan சொல்கிறார்:

  எனக்கு தெரிந்த வரையில் இது போன்ற write-off வருட வருடமும் நடப்பது தானே.
  திடீரென்று இதற்க்கு ஏன் இத்தனை விஷம தனமான விளம்பரம்.
  தயவு செய்து முன் வருடங்களின் write off விவரங்களை புரட்டி பாருங்கள். வாயடைத்து போவீர்கள்.

 6. புவியரசு சொல்கிறார்:

  shan – khan இரட்டைப்பிறவிக்கு,

  என் பின்னூட்டத்தில் நான்
  கேட்டிருந்தது ;
  //பாராளுமன்றத்தில் லிஸ்ட் கேட்டபோது
  ஏன் கொடுக்கவில்லை ?
  கேட்டபோதே கொடுத்திருந்தால், பின்னர் RTI
  கேள்வி கேட்டு பதில் வாங்க வேண்டிய
  கட்டாயமும், அதனால் ஏற்பட்ட
  இந்த விளம்பரமும் வந்தே இருக்காதே.
  மடியில் கனம் இல்லையென்றால்
  லிஸ்ட் கொடுப்பதில் எதற்கு பயம் ?//

  இதற்கு இரட்டையரான உங்கள் பதில்
  என்ன ?

  • shan சொல்கிறார்:

   i think, all the governments are fearing that ordinary people cannot differentiate between write off and waiver.
   I hope so….
   thats why only, even my guru rahul gandhi, during his tenure, havent ever declared the write off amounts in his periods.

 7. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  write off என்றால் பேங்க் கடன்களை அந்த வருடம்
  நட்ட கணக்கில் ஏற்றி விடும் .
  பேங்க் லாபத்தில் இந்த write off ஐ கழித்து விடுவார்கள் .
  இதனால் கட்ட வேண்டிய வருமான வரி குறையும் .
  ரிசெர்வ் வங்கி , வருமான வரி துறை போன்றவை
  இதை சரி பார்க்கும் .

  இந்த கடனை வசூலிக்க பாங்க் சட்டப்படி எல்லா வித
  நடவடிக்கை எடுக்கும் .
  கோர்ட் மூலமாக ஆர்டர் வந்தால் மட்டுமே கடன்
  தீரும் . அது வரை தலைவலி தீராது .
  கோர்ட் ஆர்டர் வந்த பிறகு பாங்கும்
  பதில் சொல்ல வேண்டியது இல்லை .

  இந்தியாவில் BIFR என்ற தீர்ப்பாயம் உள்ளது .
  உண்மையில் இது ஒரு கோர்ட் . இங்கு தீர்ப்பு வர
  வருடக்கணக்கில் ஆவதால் IBC என்ற அமைப்பும்
  இப்போது வந்துள்ளது .
  எஸ்ஸார் IBC முடித்து வைத்த ஒரு வழக்கு .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.