முட்டாள் ஆஃபீசர்ஸ்….!!!யாருக்கு அட்வைஸ் கொடுப்பது…
அதுவும் எந்த மாதிரி அட்வைஸ் கொடுப்பது
என்று கொஞ்சமாவது தெரிய வேண்டாமா… ?
அதுவும் அரசின் முக்கிய இலாகாவில்
அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு…?

கொரோனா பாதிப்புகளை சமாளிக்க –

கொழுத்த கோடீஸ்வரர்களுக்கு கூடுதலாக
10 % வருமான வரி போடலாம்…

5 கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்களுக்கு,
சொத்து வரி போடலாம் என்றெல்லாம்

அரசுக்கு புத்தி சொல்ல இவர்கள் யார்…?
அரசாங்கத்திற்கு தெரியாதா…
யாருக்கு போடுவது, எப்படிப் போடுவது என்று…?

அதான் – சார்ஜ் ஷீட்டையும், ஒழுங்கு நடவடிக்கையையும்
எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்து விட்டார்கள்…!!!

இப்படி மொட்டையாகச் சொன்னால்
எப்படிப் புரியும் என்று கேட்கிறீர்களா…?
அதற்கென்ன – கீழேயுள்ள செய்தியைப் பார்த்தால்
தன்னால் புரிகிறது….!!!

————————————————————–

கோடீஸ்வரர்களுக்கு கூடுதல் வரிவிதிக்க
பரிந்துரை செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை –

https://www.hindutamil.in/news/india/551589-cbdt-initiates-inquiry-on-irs-officers-for-unsolicited-report-on-funding-covid-relief-work.html

பெரும் கோடீஸ்வரர்களுக்கு கூடுதல் வரிவிதிக்க
பரிந்துரை செய்த 50 இளம் ஐஆர்எஸ் அதிகாரிகள் மீது
நடவடிக்கை? -விசாரணையை தொடங்கியது சிபிடிடி

—–

பெரும் கோடீஸ்வரர்களுக்கு 40 சதவீதம் வருமானவரி
விதிக்கலாம், கோவிட்-19 செஸ் வரியாக 4 சதவீதம்
விதிக்கலாம் என்று அரசுக்கு வருவாயை உயர்த்த பரி்ந்துரை
செய்த 50 இந்திய வருவாய் பணி(ஐஆர்எஸ்) அதிகாரிகளுக்கு
எதிராக விசாரணையைத் தொடங்கியுள்ளது மத்திய
நேரடி வரிகள் வாரியம்(சிபிடிடி).

நிதியமைச்சகத்தின் கீழ் வரும் மத்திய நேரடி வரிகள் வாரியம்,
இதுபோன்ற பரிந்துரையை நாங்கள் கேட்கவில்லை. அவர்களாக
தயாரித்து அளித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத்
தெரிவித்துள்ளது

ஃபோர்ஸ் என்ற தலைப்பிலான (நிதி திரட்டும் ஆதார வழிகள்
மற்றும் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கை)இந்த கொள்கைக்
குறிப்பில் பல்வேறு பரிந்துரைகள் தரப்பட்டுள்ளன. கரோனா
வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை அரசு
ஈடுகட்ட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய கடமை பெரும்
பணக்காரர்களுக்கு உள்ளது என்றும் இத்தகைய பிரிவினருக்கு
இரண்டு வழிகளில் வரி விதிக்கலாம். அதன்படி குறிப்பிட்ட
காலத்துக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வரியாக விதிக்கலாம்.

ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு தற்போது
30 சதவீத வரியை 40 சதவீதம் வரை உயர்த்தலாம். அதேபோல
ரூ.5 கோடிக்கு மேலான நிகர சொத்து மதிப்பு உள்ளவர்களுக்கு
சொத்து வரி விதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வரி விதிப்பு மூலம் அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடி
வருமானம் கூடுதலாகக் கிடைக்கும். இது தவிர அரசு முக்கிய
5 முதல் 10 திட்டங்களை கண்டறிய வேண்டும். இது
பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையாக அமையும்.
இந்தத் திட்டங்களுக்கான செலவு மதிப்பை கணக்கிட்டு அதை
அரசு இணையதளங்களில் வெளியிட வேண்டும்.

மக்களிடம் இருந்து கூடுதலாக திரட்டப்படும் நிதி ஆதாரம்
முழுக்க முழுக்க இந்த 5 முதல் 10 திட்டங்களை செயல்படுத்த

பயன்படுத்தப்படும் என்பதை உறுதியாக தெரிவிக்க வேண்டும்.
இந்தத் திட்டங்களுக்கு இதுநாள் வரை செலவிட்ட
தொகையையும் அரசு தெரிவிக்க வேண்டும் என அந்த
பரிந்துரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் கூடுதலாக கோவிட்-19 நிவாரண செஸ் என 4 சதவீதம்
விதிக்கலாம். இதன் மூலம் ரூ.15 ஆயிரம் கோடியில் இருந்து
ரூ.18 ஆயிரம் கோடி வரை கிடைக்கும் என கணக்கிட்டுள்ளது.
ரூ.10 லட்சத்துக்கு அதிகமான வருமானம் ஈட்டுவோருக்கு
மட்டும் விதிக்கலாம்.

ஏற்கெனவே கரோனா தொற்று பரவாமல் இருக்க எடுக்கப்பட்ட
ஊரடங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான
பொதுமக்களை மேலும் வதைக்காமல் இத்தகைய
நடவடிக்கை மூலம் வருமானம் ஈட்டலாம் என அதில்
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து உஷாரான மத்திய நேரடி வரிகள் வாரியம்
இதுபோன்ற பரி்ந்துரைகளை நாங்கள் தயார் செய்யக்கோரி
50 ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடவில்லை. அவர்களும்
தலைமையின் அனுமதியின்றி இதை செய்துள்ளார்கள்
என்று தெரிவித்தது.

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று இரவில்
வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

இந்திய வருவாய் பணித்துறை அதிகாரிகள் அமைப்பிடம்
இருந்து இதுபோன்ற அறிக்கையை நாங்கள் கேட்கவில்லை.

இந்த அறிக்கையை தயாரிக்கக் கோரி நாங்கள் கேட்கவும்
இல்லை, இதை பொதுவெளியில் வெளியிடும் முன் எங்களிடம்
அனுமதியும் கோரவில்லை

இதுபோன்ற அரசு அலுவல்சார்ந்த செய்திகளை மக்களுக்கு
தெரிவிக்கம் போது அனுமதி பெற வேண்டும் அதையும்
அவர்கள் கோரவில்லை.

இந்த அறிக்கை தயாரித்ததில்
இது ஒழுக்க நெறிமுறைகளை மீறிய செயல் என்பதால்,
இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்”
எனத் தெரிவித்துள்ளது

முன்னதாக நிதியமைச்சக வட்டராகங்கள் இந்த அறிக்கை
குறித்து கூறுகையில் “ தவறான நோக்கத்துடன் அறிக்கை
தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஒழுக்கக்கேடானது, அவர்களின்
பணி விதிகளை மீறிய செயலாகும். இதுபோன்ற அறிக்கை
தயாரிப்பது அவர்களின் பணியின் ஒரு பகுதி கூட இல்லை.

உண்மையில் இந்த அறிக்கையை கடந்த 23-ம் தேதி மத்திய
நேரடி வரிகள் வாரியத்தின் தலைவரிடம் ஐஆர்எஸ் அதிகாரிகள்
கூட்டமைப்பு தாக்கல் செய்துள்ளது. ஆனால், இ்ந்த அறிக்கையை
ஊடகங்களிடமும், ட்விட்டரிலும் வெளியிட்டதுதான் சர்ச்சையாக
மாறியுள்ளது.

இதற்கு இந்திய வருவாய் அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில்
என்ன பதில்அளிக்கப்போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பாக
இருக்கிறது.

.
————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to முட்டாள் ஆஃபீசர்ஸ்….!!!

 1. ஜெகன் சொல்கிறார்:

  மீடியாக்களும், எதிர்க்கட்சிகளும்,
  அறிவுஜீவுகளுமே கைய்யது கொண்டு
  மெய்யது பொத்தி அடங்கிக் கிடக்கும்போது
  இந்த சுண்டைக்காய்களுக்கு ஏன் இந்த
  வீண் வம்பு ?

 2. shan சொல்கிறார்:

  இந்தியாவில் கோடீஸ்வரர்களாக பிறப்பது தப்பில்லை. ஆனால், தாங்கள் ஏதோ கட்டுப்பாடான குடிமகன்களை போன்று, தங்களது வருமான விவரங்களை தெரியப்படுத்தி கொண்டு, அதற்க்கு முறையாக வரி செலுத்த ஆரம்பிப்பதுதான் மோசமான செயலாகவும். மற்ற எல்ல ரியல் எஸ்டேட் முதலாளிகளையும், அரசில்வாதிகளையும் போல கோடிகளை சம்பாதித்தாலும் , அமைதியாக இருந்து விட வேண்டியதுதானே.
  இப்போ பாருங்கள்.
  இங்கே வரி கட்டும் முட்டாள்கள் மட்டுமே, எந்நேரமும், அரசாங்கத்திற்கு இரை யாகி கொண்டே இருப்பார்கள்.
  இதற்க்கு அடுத்து அணைத்து வருமான வரி கட்டுபவர்களுக்கும் வருமான வரியை உயர்த்தி விடப்போகிறார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.