…
…
…
பழைய ஹிந்தி பாடல்களில் பரிச்சயம் உள்ளவர்கள்
ஆஷா போன்ஸ்லே பற்றி நன்கு அறிந்திருப்பார்கள்.
லதா மங்கேஷ்கரின் சொந்த தங்கை ஆஷா.
ஆனாலும், அக்கா, தன் தங்கை வளர்வதைப் பிடிக்காதவர்.
எரிச்சலுடன் அவர் வளர்ச்சியைப் பார்த்தவர்.
( இவர்கள் இருந்தது திரையுலகமாயிற்றே…!!!)
சொந்த சகோதரியே ஆனாலும், ஆஷாவை தன்
தொழில் எதிரியாகவே கருதினார் லதா மங்கேஷ்கர்.
ஆஷாவின் ஸ்பெஷாலிடியே அவரது குழைவான
குரல் தான்… முக்கியமாக ஹம்மிங் பாடல்களுக்கு, அவரது
குரல் மிக பிரமாதமாக ஒத்துழைக்கும். லதா மங்கேஷ்கரையும்
மீறி, ஆஷா பிரபலம் பெறுவதற்கு முக்கியமாக இருந்தவர்
பிரபல ஹிந்தி இசையமைப்பாளர் O.P.Nayyar அவர்கள்.
(பின்னாளில் ஆஷாவிற்கு பெரிதும் உதவியவர் ஆர்.டி.பர்மன்…)
ஆஷாவின் குரலை எந்த மாதிரி பாடல்களுக்கு பயன்படுத்தினால்
நன்றாக வரும் என்று உணர்ந்து அதற்கேற்ற மாதிரியே
ட்யூன் அமைப்பார்……
அந்தக் காலத்தில், O.P.நய்யார், ஆஷா போன்ஸ்லே
காம்பினேஷன் என்றால் ட்யூனும் சரி, ஆர்க்கெஸ்டிரேஷனும் சரி –
பிரமாதமாக அமையும்.
அதற்கு உதாரணமாக ஒரே ஒரு பாடலை கொடுத்து விட்டு,
தலைப்பிற்கு வருகிறேன்….
(ஆஷா போன்ஸ்லே பாட்டிற்கு, ஆஷா பரேக் -அபிநயம்…!!! )
Jaaiye Aap Kahan Jayenge – Mere Sanam (1965)
…
…..
…..
ஹிந்தியில் ஆஷா போன்ஸ்லே புகழின் உச்சத்தில் இருந்த
சமயத்தில், இளையராஜா, அவரைத் தமிழில் பாட வைக்க
விரும்பினார்…. செண்பகமே.. செண்பகமே பாடலை
ஆஷாஜியைக் கொண்டு பாட வைக்க அவர் சிரமேற்கொண்ட
சிரமங்களை தமாஷாக விளக்குகிறார் –
இந்த காணொளியில் .. 🙂 🙂
….
….
.
—————————————————————————————————————–
Sir, pl. upload the song tere mere sapne from the film Guide acted by Dev anand, if possible
கோபாலகிருஷ்ணன்,
இது உங்கள் விருப்பம் …
…
….
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்