…
…
…
…
…
…
————————————————————-
பின் சேர்க்கை –
இப்போது கிடைத்த ஒரு வீடியோவை இணைத்திருக்கிறேன்.
ரொம்ப பாவமாக இருக்கிறது – இவர்களை நினைத்தால்…
…
…
இவர்கள் நிலை விரைவில் மாறவேண்டும்
என்று வேண்டும் என்று வேண்டுவோம்.
.
-காவிரிமைந்தன்
.
——————————————————————————————————————————
…
இந்தியர்களுக்கு (பொதுவாக) உள்ள குணம் சேமிப்பு. தங்கத்திலும் சேமிப்பு. இவைதான் நமக்கு ஆபத்துக்காலத்தில் உதவும். அமெரிக்கர்களுக்கு சேமிப்பு பழக்கம் அவ்வளவு இல்லை. அதனால் எமெர்ஜென்சி, வேலை போய்விட்டது என்றால் பெரும் கஷ்டத்தைச் சந்திக்கிறார்கள்.
அதிபருக்கு போதாத காலம்தான்.
இப்போது கிடைத்த ஒரு வீடியோவை இணைத்திருக்கிறேன்.
ரொம்ப பாவமாக இருக்கிறது – இவர்களை நினைத்தால்…
…
…
இவர்கள் நிலை விரைவில் மாறவேண்டும்
என்று வேண்டும் என்று வேண்டுவோம்.
.
-காவிரிமைந்தன்
இது இந்த சமயத்தில் நடக்கும் நிகழ்வு அல்ல. பொதுவா இந்த மாதிரி இருட்டுப் பக்கங்கள் இல்லாத நாடுகளே கிடையாது. நானும் பாரிஸில், குப்பைகள் வழியும் (ஏகப்பட்டது. அப்புறம் அங்கேயே பழைய கோட்டுகள் போன்றவற்றை தெருவில் வைத்து விற்பனை செய்யறாங்க. கிட்டத்தட்ட நம்ம ஊர் நரிக்குறவங்க வைக்கும் கடைபோல தரையிலேயே வச்சிருக்காங்க) இடங்களும், தெருவுக்கு 2 பப்ளிக் பாத்/டாய்லட்டுகள் (ஒவ்வொன்றிலும் பல இருக்கும்) இருந்தாலும், தெருவிலேயே பைப் அடிப்பவர்களையும் கண்டிருக்கிறேன். என் போட்டோ எடுக்கும் புத்தி அப்போ டக்குனு வேலை செய்யலை. ஃபிலிப்பைன்ஸ்ல அனேகமா எல்லோரும் மாடர்ன் டிரெஸ் அணிந்திருந்தாலும், அங்கேயும் ஏழ்மைப் பக்கங்கள் நிறையவே உண்டு.
அமெரிக்காவில் பெரும்பாலான இடங்கள் நல்ல நிலையில் இருக்கும். ஆனா என் ஒபினியனில், நம் இந்திய (தென் இந்திய) எகானமிதான், அதாவது குடும்ப எகானமிதான் பெட்டர்னு தோணுது. ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதேனும் சொத்து இருக்கும்.