…
…
…
கொஞ்ச நாட்களுக்கு முன்னதாக, மகாபாரதம் நிஜமான
வரலாறாக இருக்க வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து
கொஞ்சம் ஆழமாகத் தேடி, சில விரிவானஆராய்ச்சித்
தகவல்களை இணையத்தில் தேடிக்கண்டு பிடித்தேன்.
அப்போதே, இது குறித்து, இன்னும் மேற்கொண்டு
கொஞ்சம் தகவல்களைத் திரட்டி, என்னுடைய
அனுமானங்களையும் சேர்த்து, விரிவாக ஒரு இடுகை
எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன்.
துரதிருஷ்டவசமாக, அந்த லிங்க்’கை எங்கே சேமித்து வைத்தேன்
என்பது நினைவிற்கு வர மறுக்கிறது… எப்படியும் கண்டுபிடித்து
விடுவேன் என்று நம்புகிறேன்… கிடைத்தவுடன் அந்த \
ஆராய்ச்சியின் முடிவுகளைப்பற்றி நிச்சயம் விவரமாக
எழுதுகிறேன்.
இடையில், இப்படி ஒரு காணொளியை இணையத்தில்
பார்த்தேன்…இது எனக்கு திருப்தியாக இல்லை தான்.
இருந்தாலும் – ஒரு இடைக்கால ஏற்பாடாக இதையும்
பகிர்ந்துகொள்ள – கீழே பதிப்பிக்கிறேன்….
……
……
.
—————————————————————————————————————-
மஹாபாரதம், இராமாயணம் போன்றவை, நடந்ததை நடந்தவிதமாக எழுதப்பட்ட இதிஹாசங்கள். அதில் குறிப்பிட்டுள்ள இடங்கள் பாரத தேசத்தில் எங்கும் பரவி இருப்பதே அவற்றிர்க்குச் சான்று.
சமீபத்தில் இறந்த ராஜீவ் காந்தி முதல், தேசத்தந்தை காந்தி வரை, அவர்களது குண விசேஷம், வரலாற்று நிகழ்வுகள் போன்றவைகளை 100% சரியானது என்று எல்லோரும் ஒப்புக்கொள்வதில்லை. சரி, தவறு என்று குறைந்த பட்சம் 70-30 அல்லது 60-40 என கருத்துகள் பிரியும். அமெரிக்கா ஈராக்கை ஏன் தாக்கியது என்பதற்கும் இதுபோன்ற கருத்து வேற்றுமை உண்டு. 75 வருட நிகழ்வுகளிலேயே இவ்வளவு கருத்து வேற்றுமை இருக்கும்போது கிட்டத்தட்ட 5500 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தவற்றில் எவ்வளவு கருத்து வேற்றுமை இருக்கும்? ஆனால் இதிகாசம் சிதைவுறாமல் இருந்ததால், நமக்கு நடந்த வரலாறு தெரிகிறது.
ஒரு நாவல் என்றால் அதில் கதாநாயகன், வில்லன் மற்றும் பல சம்பவங்கள் இருக்கும். கதாநாயகனின் குண நலன்களும் வில்லனின் கோர முகமும் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதிஹாசத்தில் அப்படி அல்ல. கதை மாந்தர்களின் எல்லாவித முகமும் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களும் நம்மைப்போல மனிதர்களே. அவர்களிடமும் நல்லது கெட்டது இருந்தது, அதன் % தான் மாறியிருந்தது என்று உள்ளதை உள்ளபடியே சொல்கின்றன.
அவற்றில் பல இடங்களுக்கு சமீபத்தில் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் அவை ரிலீஜியஸ் பிரயாணம் என்பதால், மக்களின் உணர்வும் இடங்களையும் பார்க்க நேர்ந்ததே அன்றி வரலாற்றைத் தேடிச் சென்ற பயணம் அல்ல அது.
உங்கள் இடுகையை எதிர்பார்க்கிறேன்