…
…
…
…..
இளம்பெண்கள் பலர் கூடியிருக்கும் ஒரு அரங்கம்.
வாழ்க்கையின் பல உண்மைகளைப் பற்றி,
கொஞ்சம் கூட கூச்சப்படாமல், பட படவென்று
பொரிந்து தள்ளுகிறார்…
வயதுக்கு வந்துவிட்ட பிள்ளைகளுடன், இன்றைய
பெற்றோர்கள் பேச தயங்கும் பல உண்மைகள்…
இவர் தயங்காமல் பேசுகிறார்.
மற்றவர்களுக்கு உபதேசம் செய்பவர் வார்த்தைகளுக்கு
எப்போது மரியாதை கிடைக்கிறது….?
தான் பிறருக்கு செய்யும் உபதேசங்களை –
தானே கடைபிடிக்கும் ஒருவர் பேசும் வார்த்தைகளுக்கு தான்
மரியாதையும், பலமும் உண்டு.
சிவகுமார், திரைத்துறையிலேயே 50 ஆண்டுகளுக்கு மேலாக
வாழ்ந்தாலும், மிக மிக கட்டுப்பாடுடனும்,
ஒழுக்கமாகவும், எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்தவர்…
நடிப்புலகிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும்,
தன்னாலியன்ற வகையில், சமூகப்பணிகள் பலவற்றிலும்
ஈடுபட்டு வருகிறார் திரு.சிவகுமார். அவர் பணி
பாராட்டத்தக்கது; பெற்றோர்கள், பிள்ளைகளிடம்
பேசத்தயங்கும் இந்த காலங்களில், இத்தகைய பேச்சுகள்
மிக மிக அவசியம்.
( நான் கூட என்னுடன் மனம் விட்டுப் பழகும் உறவு,
நட்புக் கூட்டத்தினிடையே –
சில இளைஞர், இளைஞிகளிடம் இந்த மாதிரி
விஷயங்களை எல்லாம் பேசுவது உண்டு. ஆனால்,
அது என்னை நன்றாகப் புரிந்தவர்களிடையே
மட்டும் தான்… )
வாழ்த்துகள் சிவகுமார் சார்; உங்கள் பணி இனிதே தொடரட்டும்.
……
……
.
————————————————————————————————————————————————-
சிவகுமார், கல்விக்கட்டளை அமைத்து
ஏழை மாணவர்களுக்கு உதவுவதும்,
இம்மாதிரி கல்லூரி விழாக்கள் மற்றூம்
பொது நிகழ்ச்சிகள் பலவற்றில்
கலந்துகொண்டு சமூகத்திற்கு மிகவும்
அவசியமான விஷயங்களை பேசுவதுமாக
மிகவும் பயனுள்ள வகையில்
செயல்படுகிறார். அவரது சிறப்பான உரையை
இங்கு பதிவு செய்திருக்கிறீர்கள். நன்றி.