ஹரித்வாரில் … யாரும் நினைத்திருக்க முடியாத ஒரு காட்சி…


ஹரித்வார் பயணம் சென்றிருந்த அனைவரும்
அவசியம் இந்தக் காட்சியை பார்த்திருப்பார்கள்.

தினமும் மாலை அந்தி சாயும் நேரத்தில்
கங்கைக்கு இந்த “மங்கள ஆரத்தி” பூஜை நடைபெறும்.

பல நூற்றாண்டுகளாக நடைபெறும் ஒரு நிகழ்வு.

கங்கைக்கரையின் இந்தப் பக்கத்தில், பூஜை,
பாடல்களுடன் அமர்க்களமாக “ஆரத்தி” வைபவம்
நடைபெரும்.

இங்கேயும், எதிர்க்கரையிலும் – ஆயிரக்கணக்கில்
மக்கள் கூடி, ஆனந்த பரவசத்துடன் கங்கை ஆரத்தியை
கண்டு களிப்பார்கள்.

துரதிருஷ்டவசமாக, உலகையே பீடித்து,
ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், இன்று
ஹரித்வாரின் சரித்திரத்தையும் மாற்றி எழுதி
இருக்கிறது.

விரல்விட்டு எண்ணும்படியான பூஜாரிகளுடன்,
இப்போது ஹரித்வாரில் நடக்கும் ஆரத்தி நிகழ்வின்
காணொளிக் காட்சி கீழே –

ஆயிரக்கணக்கில் முட்டிமோதிக்கொண்டு மக்கள்
கூடும் கங்கையின் எதிர்க்கரை –
முற்றிலும் காலியாக, ஆள் அரவமே இன்றி
வெறுமையாக காட்சியளிக்கிறது.

….


….

.
——————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to ஹரித்வாரில் … யாரும் நினைத்திருக்க முடியாத ஒரு காட்சி…

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இடுகையின் கடைசியில் ஒரு வார்த்தை
  சொல்ல நினைத்திருந்தேன்…

  முதலில், நிலைமையின் தீவிரத்தை உணர்த்தி விட்டு,
  பிறகு தனியே சொல்லலாமென்று தோன்றியது….

  எனவே, இங்கே சொல்கிறேன்….

  “கவலை வேண்டாம்…. இதுவும் கடந்து போகும்…”

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.