…
…
…
பொறுப்பில்லாத அப்பன்களால்,
தண்ணீர் தெளித்து விடப்பட்டு விட்ட
பெண் குழந்தைகள் என்ன ஆவார்கள்
என்பதற்கான ஒரு உதாரண புருஷி
பற்றிய ஒரு செய்தி கீழே –
……………….
…
……
இந்த உபதேசங்கள், போதையில் இருக்கும்போது
சொன்னதா அல்லது
அதை விட்ட பிறகு சொன்னதா…? தெரியவில்லை —
– “ஆண் குடித்தால், அதை யாரும் கண்டுகொள்வதில்லை;
மாறாக ஒரு பெண் குடித்தால், அது சர்ச்சையாவது
மோசமானது….”
– “கிராமத்துப் பெண்கள் சிலர் வழக்கமாக குடிக்கிறார்கள்…
அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை…”
.
————————————————————————————————————————–
திருமணத்திற்கு பொறுப்பேற்கத் தயாராக
இல்லாமல், பிள்ளைகளை மட்டும் பெற்றுப் போடும்
பணக்காரத் தடியன்கள் இருக்கும் வரை,
இத்தகைய குலமகளிர்’களை நாம் அதிகம்
சந்திக்கத்தான் வேண்டியிருக்கும்.
வடக்கே அதிகம் உண்டு. தமிழகத்தில் இது தான்
முதல் உதாரணம்,
இது கமல் மகளே சொன்னதா இல்லை
அவருக்காக நிருபர் திரித்த சரடா ?
தன் பெயர் வெளியே பேசப்பட வேண்டி
காண்ட்ரோவர்சியை கிளப்புவது வழக்கம் .
கமல் மகள் மேஜர் ; கையில் காசு இருக்கிறது .
எது வேண்டுமானாலும் செய்யலாம் .
ஆனால் தமிழ்நாட்டில் இன்று பெண்கள் குடிப்பது
அதிகரித்து வருகிறது .
இன்று படித்தவர்கள் நடுவில் விவாகரத்து அதிகரிக்க
குடிப்பழக்கமும் ஒரு காரணம் .
///பொறுப்பில்லாத அப்பன்களால், தண்ணீர் தெளித்து விடப்பட்டு விட்ட பெண் குழந்தைகள் என்ன ஆவார்கள் என்பதற்கான//
கா.மை. சார்… வாழ்க்கையில் எதையாவது பெறவேண்டும் என்று நினைத்தால் எதையாவது இழந்துதான் ஆகவேண்டும். கமலஹாசன் தேர்ந்தெடுத்த துறை அப்படி.
அதுசரி..கமலஹாசனுக்கு தன் மகள்களுக்கு புத்திமதி சொல்லும் யோக்கியதை எப்படி இருக்க முடியும்? தன்னைப் போலவே, அவங்களையும் சுதந்திரமாக வாழ விட்டிருக்கிறார். அவங்களே வாழ்க்கையில் பட்டுத் திருந்தட்டும் என்று நினைத்திருக்கிறார். அதில் தவறில்லை. (ஆனால், தான் உலகமகா யோக்கியன்போல் அரசியல்வாதியாகி தமிழகத்தைத் திருத்தப்போகிறேன் என்று வந்திருக்கிறாரே… அதுதான் ஆத்திரத்தைக் கிளப்புகிறது…. சொந்த வீட்டைச் சரியாகப் பார்த்துக்கொள்ளாதவர், நாட்டைப் பார்த்துக்கொள்ளப் போகிறாராம்)
கெளதமியின் அப்பாவும் சீட்டாடி காசைக் கரைத்தவர்தாம். இதுபோல பல நடிகைகளின் தந்தைகளைச் சொல்லலாம். ஆனால் கமலஹாசன் தன் மகளின் சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்தவில்லை. அதுவரையில் கமல் உதாரண புருஷர்தான்.
ஆண்கள் மட்டும் குடிக்கலாம், பெண்கள் யோக்கிய சிகாமணிகளாக இருக்கணும் என்று நினைக்கும் எண்ணமே தவறு என நான் நினைக்கிறேன். அதிலும் அம்மணி சினிமாத் துறையில் இருப்பவர். அங்கு எம்ஜிஆர், நம்பியார், வீரப்பா, சிவகுமார் என்று கையில் எண்ணும் அளவில்தான் குடிக்காதவர்கள் இருக்கிறார்கள்.
”ஆண்கள் மட்டும் குடிக்கலாம், பெண்கள் யோக்கிய
சிகாமணிகளாக இருக்கணும் என்று நினைக்கும்
எண்ணமே தவறு என நான் நினைக்கிறேன். ”
பெரிய முற்போக்குவாதி என்று எண்ணமா ?
உங்கள் குடும்பத்தில் நடக்க அனுமதிப்பீர்களா ?
குடும்பத்தைப் பேணி பாதுகாக்கும் முக்கியப்பொறுப்பு
பெண்களுக்கு இல்லை என்பது உங்கள் அபிப்பிராயமா ?
“இல்லத்தரசி ” உண்டு.
“இல்லத்தரசன்” உண்டா ?
குடிகாரப் பயலுகளுக்கு வெட்கமில்லை. இதில் பெண் மட்டும் உத்தமமாக இருக்கணும் என்ற ஆணாதிக்க மனப்பான்மை உடையவர்களை நான் வெறுக்கிறேன். வெட்கமில்லாமல் டாஸ்மாக்கில் தவம் இருக்கும் பயலுகளுக்கு, தங்கள் வீட்டுப் பெண் குடிப்பதில் மட்டும் ஆட்சேபணையா? (உங்கள் அகராதிப்படியே.. குடிகாரப் பெரிய மனிதர் என்ற வார்த்தை கிடையாது..குடிகாரப் பயலுகள் என்ற வார்த்தை மட்டுமே உண்டு)
குடிக்கும் ஆண்கள் குடும்பத்தைப் பேணிக் காக்கத் தெரியாத தடிப்பயல்கள் என்ற அர்த்தம் வருமாறு புவியரசு கூறுவது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இதைத்தான் இந்த அரசியல்வியாதிகளும் சொல்கிறார்கள். நாங்கள் கொள்ளையடிப்போம், ஆனா வாக்காளர்கள் உத்தமர்களாக இருக்கணும் என்று.
//உங்கள் குடும்பத்தில் நடக்க// – வெட்கமில்லாமல் அறிவை அடகுவைத்து குடிகாரப் பயலாக நான் ஆனால், என் வீட்டுப் பெண்கள் குடிக்கக்கூடாது என்று சொல்லும் யோக்கியதை எங்கிருந்து எனக்கு வரும்? இதில் முற்போக்கு என்ன பிற்போக்கு என்ன?
”ஆண்கள் மட்டும் குடிக்கலாம், பெண்கள் யோக்கிய
சிகாமணிகளாக இருக்கணும் என்று நினைக்கும்
எண்ணமே தவறு என நான் நினைக்கிறேன். ”
பெரிய முற்போக்குவாதி என்று எண்ணமா ?
உங்கள் குடும்பத்தில் நடக்க அனுமதிப்பீர்களா ?
குடும்பத்தைப் பேணி பாதுகாக்கும் தனிப்பொறுப்பும்,
கடமையும் பாரம்பரியமாகவே நமது பெண்களுக்கு
உண்டு என்பதை நீங்கள் ஏற்பதில்லையோ ?
“இல்லத்தரசி ” உண்டு.
ஆண்களை “இல்லத்தரசன்” என்று எவராவது
சொன்னது உண்டா ?
”கமலஹாசன் தன் மகளின் சம்பாத்தியத்தில்
வாழ்க்கை நடத்தவில்லை. அதுவரையில்
கமல் உதாரண புருஷர்தான் ”
கூட வாழும் பெண்ணுக்கோ,
பெற்ற குழந்தைகளுக்கோ பொறுப்பேற்றுக்
கொள்ள பயந்து ஓடும் -ஒரு கோழையை,
சுயநலவாதியை, உதாரண புருஷர் என்று
மெச்சுவது உங்களையும் ரசிகர் கூட்டத்தில்
ஒருவராகவே எண்ணத்தோன்றுகிறது.
//பொறுப்பேற்றுக் கொள்ள பயந்து ஓடும்// – கமலஹாசன் மேல் எனக்கு விமர்சனங்கள் உண்டு. ஆனால் ஒன்றை நீங்கள் தெரிந்துகொள்ளணும். யாரையும் கமலஹாசன் போய், என்னைத் திருமணம் செய்துகொண்டால் நான் உனக்கும், நமக்குப் பிறக்கும் குழந்தைக்கும் உத்தரவாதமாக இருப்பேன் என்று சொன்னதே கிடையாது. கமலஹாசன் திரைத் துறையிலேயே ஊறியவர். அவர் ஆர்வம் குடும்பத்தில் கிடையாது. அவர் யாரையுமே கம்பேனியனாகத்தான் கருதுகிறார். (அவர் அண்ணன் சாருஹாசன் இதைப்பற்றி எழுதியிருக்கிறார்) இந்த ‘உதாரண புருஷர்’ என்பது satire. நீங்கள் இன்னும் வாசித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.
கமலஹாசன் தன் சம்பாத்தியத்தை திரைத்துறையில்தான் விடுகிறார். அது அவரது தைரியத்தைக் காட்டுகிறது என்று நினைக்கிறேன். எல்லா வரவையும் வீடு நிலம், பதுக்குவது என்று செய்பவர்கள்தாம் கோழைகளாக இருக்கமுடியும்.
தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக்
கொள்ளும் மேதாவியே,
// எல்லா வரவையும்
வீடு நிலம், பதுக்குவது என்று செய்பவர்கள்தாம்
கோழைகளாக இருக்கமுடியும்.//
என்று எழுதுகிறீர்களே; அவர் எங்கெங்கே
முதலீடு செய்திருக்கிறார் என்று உங்களுக்கென்ன
தெரியும் ?முதலில் அரை உண்மைகளை வைத்துக்கொண்டு,
அர்த்தமில்லாமல் ரசிகர் கூட்டம் போல் பேசுவதை
நிறுத்திக் கொள்ளுங்கள்; பிறகு என் போன்றவர்களுக்கு
புத்தி சொல்லலாம். கொடைக்கானலில் 290 ஏக்கர் நிலம்
வைத்திருப்பது தெரியுமா ? சும்மா ஊடகங்களில்
பேசுவதை வைத்துக்கொண்டு, திரைத்துறையிலேயே
செலவழிக்கிறார் என்று எழுதுகிறீர்கள்.
//ஆனால் ஒன்றை நீங்கள் தெரிந்துகொள்ளணும்.
யாரையும் கமலஹாசன் போய், என்னைத் திருமணம்
செய்துகொண்டால் நான் உனக்கும், நமக்குப் பிறக்கும்
குழந்தைக்கும் உத்தரவாதமாக இருப்பேன் என்று
சொன்னதே கிடையாது.// படித்த, சமூகப்பொறுப்புள்ள
ஒரு மனிதராக உம்மை கருதியிருந்தேன்.
வாக்குறுதி கொடுக்காமல்,
பெத்த பிள்ளைக்கு அவர் பொறுப்பு இல்லை என்று
சொல்லும் உம்மைப் போன்றவர்களை எப்படி
எடுத்துக் கொள்வது என்றே புரியவில்லை;
மூன்றாந்தர ரசிகர் போல் வக்காலத்து வாங்குகிறீர்.