சில விசித்திர சிந்தனைகளைப் – படித்தேன்….!!!


யாரோ எழுதி, யாரோ பிறகு சுற்றுக்கு விட்டிருக்கிறார்கள் …!
ஆனால் பல விசித்திரமான உண்மைகளை அது சுட்டிக்காட்டுகிறது.

( நான் அதைக் கொஞ்சம் எடிட் செய்து
இங்கே பதிவிட்டிருக்கிறேன் …!!! )

———–

உலகம் எப்பொழுதும் ஒரு ஆட்டத்தை ஆடும், அது அந்த நகரம்
அல்லது நாடு செய்யும் காரியங்களை பொறுத்தது

மாபெரும் வல்லமையுடன் விளங்கும் அந்நகரங்கள் ஆடாத
ஆட்டமெல்லாம் ஆடும், பின் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு
கோபத்தின் வெளிப்பாட்டில் பெரிதாக அடிவாங்கி கொண்டிருக்கும்

பாபிலோன், எகிப்தின் நகரங்கள், டமாஸ்கஸ், தாஷ்கண்ட்,
காபூல், உலன்பட்டார் (மங்கோலியா) என் ஆசிய நகரங்களாகட்டும்.
பாரீஸ், ரோம் உட்பட ஐரோப்பிய நகரங்களாகட்டும்
எவ்வளவு உயர்ந்து ஒளிவீசுமோ அந்த அளவு
அழிவுகளையும் சந்திக்கும்

அப்படி 400 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட நியூயார்க்
முதல் முறையாக பேரழிவினை சந்திக்கின்றது, கண்ணுக்கு
தெரியாத சக்தி அதை நொறுக்கி தள்ளுகின்றது.பாபிலோன்(மெசபோதேமியா…) போன்ற பெரு நகரங்களின்
வீழ்ச்சியினை அது சந்திக்கின்றது

நன்றாக நினைவிருக்கின்றது, பண்டைய பெருமையான
பாபிலோனை மறுபடியும் கட்டி எழுப்பினான் சதாம்.
தன் பாரம்பரியத்தை மீட்கும் அவன் ஆர்வம் அப்படி இருந்தது

யூதன் ஜெருசலேமினை எழுப்பினால் கர்த்தரின் ஆசீர்வாதம்,
ஆனால் சதாம் பாபிலோனை எழுப்பினால் அது இறுமாப்பு
என்பது ஒரு அழிச்சாட்டிய கும்பலின் வாதம்.

வளைகுடா போர் மற்றும் 2004ல் நடந்த போரில் அமெரிக்கா
சதாமின் கனவான பாபிலோனை நொறுக்க்கி தள்ளியது.“பார்த்தீர்களா , பாபிலோன் கடவுளின் சாபமிக்க நகரம்,
4 ஆயிரம் ஆண்டுக்கு முன்பே கடவுள் சபித்தார், அற்ப சதாம்
அதை நீக்க முடியுமா?, பாபிலோனை தொட்டதே
சதாமின் அழிவு” என அவர்கள் உரக்க கத்தினார்கள்

நியூயார்க்கின் அழிவு பாபிலோனில் அவர்கள் செய்ய
ஆரம்பித்த சில காரியங்களின் வெளிப்பாடாக இருக்கலாம்
என்கின்றது இந்த பிரமீடு கோஷ்டி ஆய்வுகள்

ஆம் அலெக்ஸாண்டரும் நெப்போலியனும் எகிப்து பிரமீடில்
கைவைத்த பின்பே பெரும் அழிவுகளை சந்தித்தார்கள் ,
அப்படி பாபிலோன் எனும் ஈராக்கின் பூமியில் கைவைத்த
சில சூட்சும சக்திகளின் சாபம் அமெரிக்காவினை
மிரட்டுகின்றது என கிளம்புகின்றது ஒரு கோஷ்டி

காசி எனும் மகா புண்ணிய நகரில் கைவைத்ததாலும்,
சோமநாத் புரி போன்ற ஆலயங்களை இடித்து கொண்டு
செல்லப்பட்ட கொள்ளை செல்வத்தால் வாழ நினைத்த
ஆப்கானிஸ்தான் இன்று தரித்திர தேசமாய் – அனுதினமும்
ரத்தத்தில் குளிக்கும் தேசமாய் அலைபாய்கின்றது,
என்கின்றன நம்ம ஊர் குழுக்கள் சில….

.
——————————————————————————————————-…………..——-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to சில விசித்திர சிந்தனைகளைப் – படித்தேன்….!!!

 1. bandhu சொல்கிறார்:

  இவை அனைத்திலுமே நிறைய உண்மையாக இருக்கும் போலத்தான் தெரிகிறது. நம் ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலுக்கும் ஆள்பவர்களுக்கும் உள்ள விசித்திர சாபம் கூட உண்மை மாதிரி தான் தெரிகிறது. மைசூர் அரச குடும்பங்களுக்கு வாரிசு கிடையாது என்று பல வருடங்களுக்கு முன் (1612) அலமேலம்மா கொடுத்த சாபம் நானூறு வருடங்களுக்கு பிறகு இப்போது தான் ஒரு வாரிசு உருவாகியிருக்கிறது! அலமேலம்மாவை பல வருடங்களாக வேண்டிய பின் !

  காலம் நிகழ்வுகளின் தொடர்புகளை மறைக்கிறது!

 2. Ramnath சொல்கிறார்:

  விசித்திரமான சிந்தனைகள் தான்.
  ஆனால், நிறைய உண்மைகளை உள்ளடக்கி
  இருக்கின்றன.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.