திரு.ஜெயரஞ்சனின் அடிப்படைக் கேள்விகள்… யார் பதில் சொல்லப்போகிறார்கள்…?


.
——————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to திரு.ஜெயரஞ்சனின் அடிப்படைக் கேள்விகள்… யார் பதில் சொல்லப்போகிறார்கள்…?

  1. shan சொல்கிறார்:

    So country has two options in front of it
    a) save economy
    or
    b) save people

    People have two option
    a) Die with Corona
    or
    b) Die with hunger

  2. புதியவன் சொல்கிறார்:

    ஜெயரஞ்சன் கேள்வி கேட்டதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை. அவரே பாஜகவில் இருந்தால் தோசையைத் திருப்பிப்போட்டிருப்பார். அவ்வளவுதான் விஷயம்.

    நம்ம நாடு ஜனநாயக நாடு. இங்க, ஏழைகள் என்பதற்கு சரியான definition வைத்து அவங்களுக்கு மட்டும்தான் அரசின் உதவி சென்று சேரவேண்டும். அவங்க மட்டும்தான் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளும் நிலைமையில் இருப்பவர்கள் (அதாவது நாளைக்கு என்று பணத்தைச் சேர்த்து வைத்திராதவர்கள்). ஆனால் அவங்களுக்கு மட்டும் அரசு உதவினால், அது வாக்கு வங்கிக்கான பிரச்சனையாகப் போய்விடும். அதனால் அரசாங்கம், ரேஷன் கார்டுகளை வைத்து உதவுகிறது. 20 சதவிகிதத்துக்கு மேல் உள்ள கடுமையான ஏழைகளுக்கு நல உதவிகள் இந்த மாதிரி போர்க்காலத்தில் போய்ச்சேருவதே இல்லை.

    இவங்களே (கம்யூனிஸ்டுகள், தொழிற்சங்கங்கள்), வேலை பார்க்காமல் வெட்டியாக சம்பளம் வாங்கிக்கொண்டு இருக்கும் தொழிலாளர்களைப் பற்றி எப்போவும் பேச மாட்டாங்க. இவங்க, ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்’ என்று சொன்னால் அது போர்க்குரல், மாரல் கிளாஸ் இல்லை. இதனை மக்கள் ஆதரவு பெற்ற அரசு சொன்னால், வயிற்றெரிச்சல்.

    ஜெயரஞ்சன், சீனாவைப் பற்றியோ அல்லது அவங்க பொருட்கள் இந்தியாவின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் பாதிப்பைப் பற்றியே கேள்வி கேட்க மாட்டார். ஏன் இந்தியப் பொருட்களை மட்டும் நாம் வாங்கவேண்டும், இந்தியத் தொழிலாளர்களை மட்டும் ஆதரிக்கவேண்டும் என்றெல்லாம் இவர் பேசவே மாட்டார். ஏனென்றால் அவர் மற்றும் அவர் கட்சியின் தலைமை சீனாவிடம் அடகு போயுள்ளது.

    அரசு, 20ம் தேதிக்கு மேல், நிறைய கட்டுப்பாடுகளைத் தளர்வு செய்துள்ளது. இதுவரை அரசு நடந்துகொண்டது, எனக்குச் சரி என்றே மனதில் படுகிறது.

  3. புதியவன் சொல்கிறார்:

    நாம், கிழக்கத்தைய நாடுகளை கம்பேர் செய்யவே கூடாது. (சீனா உட்பட). அவங்களுடைய தனிப்பட்ட டிசிப்பிளினில், இந்தியர்கள் 10 சதவிகிதம் கூட தேற மாட்டார்கள். சும்மா நாம நம்மையே பாராட்டிக்கொண்டால் போதாது.

    ஜப்பானியர்கள், அரசு வெளிநாட்டுப் பொருட்களை வாங்குங்கள் என்று சொன்னாலும், மக்கள் ஜப்பானியப் பொருட்களைத்தான் வாங்குவார்கள் (பெரும்பாலும்). சீனா, தாய்வான் போன்ற நாடுகளில் மக்கள் அரசு சொல்வதை அப்படியே பின்பற்றுவார்கள் (ஜப்பானைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்).

    வெளியில் வரக்கூடாது என்று அரசு சொன்னால், கல்ஃப் தேசங்களில் நம்மவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள், அவர்களே இந்தியா வந்தபிறகு எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று நாம்தான் பார்க்கிறோமே.

    நாம அப்படி இருக்கிறோமா என்று நினைத்துப் பார்த்துவிட்டு, மற்ற தேசங்களை கம்பேர் செய்யட்டும்.

  4. Ramnath சொல்கிறார்:

    ஜெயரஞ்சன் எழுப்பியுள்ள கேள்விகளுக்கும்,
    புள்ளி விவரங்களுக்கும் நீங்கள் பதில் சொல்லி
    இருந்தால் நன்றாக இருக்கும்.
    கட்சிப் பின்னணியைச் சொல்லி பாஜகவை
    தப்புவிக்கப் பார்க்கிறீர்கள்.

    • புதியவன் சொல்கிறார்:

      ராம்னாத் சார்… கேள்வி கேட்பது மாதிரி சுலபமான வேலை. ஏன் பிரதமர் இடதுபுற வாயில் வழியாகச் சென்றார், நிதியமைச்சரை முந்திக்கொண்டு செல்லவேண்டிய காரணம் என்ன என்று கேள்விகளுக்குப் பஞ்சமே இல்லை. ஒவ்வொரு நாடும், அந்த நாட்டு மக்களுடைய நேச்சரும் வெவ்வேறு. அரசு தன்னால் இயன்ற அளவு செயல்படுவதாகத்தான் நான் நினைக்கிறேன். பொருளாதாரத்தை ஃபோகஸ் செய்தால், பிரதமர், மக்களின் உயிரை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை, வைரஸ் பிரச்சனை தீர்ந்தால் மக்களே உழைத்து பொருளாதாரத்தை மேம்படுத்துவார்கள், உயிர் போனால் யார் மேம்படுத்த முடியும், சீனாவைப் பார், ரஷ்யாவைப் பார் என்று இதே ஜெயரஞ்சன் கேள்வி எழுப்புவார். செயல்படுபவர்கள், தங்கள் வேலையைப் பார்ப்பார்கள், வேலை இல்லாதவர்கள் கேள்வியை எழுப்புவார்கள். அவ்ளோதான்.

  5. shan சொல்கிறார்:

    பிஜேபியின் மீது பகை குரல் எழுப்ப நிச்சயம் இது சரியான நேரம் அன்று.இப்பொழுது நமது அணைத்து நாட்டு மக்களுக்கும் தேவையானது ஒற்றுமை மட்டுமே. இந்த நேரத்தில் நாம் தேசத்துடன் இணைந்து இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அவர்களின் வழிகாட்டுதலை ஏற்று நடக்க வேண்டியது இன்றியமையாதது. இல்லை என்றால் முடிவில் நஷ்டமடைய போவது குடிமக்களாகிய நாம் தான். அதனால் தேவையற்ற அரசாங்க காழ்ப்புணர்ச்சியை கைவிட்டுவிட்டு அரசாங்கத்திற்கு இந்த இக்கட்டான நேரத்தில் நமது ஆதரவை வழங்கலாம்.
    இந்த நோய் பிரச்சினை எல்லாம் முடிவுக்கு வந்த பிறகு, நிச்சயம் அந்த சமயம் நமது தேசம்(ஏன் அணைத்து உலக நாடுகளும் கூட) பொருளாதார சீரழிவின் விளிம்பு நிலையில் இருக்கும். அப்பொழுது நமது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தலாம். அப்பொழுது அரசாங்கத்திற்கு ஆதரவை தெரிவித்து போராடும் பொருளாதார வலிமை, பிஜேபி கட்சியை சார்தவர்களிடம் க்கூட நிச்சயம் இருக்காது. அது வரை பொறுமை காப்போம்.
    காங்கிரசை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  6. மெய்ப்பொருள் சொல்கிறார்:

    இந்த கேள்விகளுக்கு பா ஜ க விடம் பதில் இல்லை .

    ஏழைகள் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள் ?
    நாளைக்கு வேலை இருக்குமா ?
    பிழைப்பிற்கு என்ன செய்ய போகிறார்கள் ?

    மோடி யோசிக்காமல் செய்த வேலை .
    இது ஒன்றுதான் பதில் :
    மோடி தேச பக்தர் – அதனால் கேள்வி கேட்க கூடாது .

    • shan சொல்கிறார்:

      அய்யா,
      ஏப்ரல் 20 க்கு பிறகு, ஊரடங்கு படிப்படியாக தளர்த்த படும். ஆகையால் நாம் பொறுமை காப்போம்.
      ஏப்ரல் 20 க்கு பிறகு, இப்படி ஊர் அடங்கை , கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் தளர்த்தி , நாட்டு மக்களுக்கு மிக பெரிய துரோகத்தை இழைத்து விட்டார், என்று அவரை தூற்றுவோம்.

      தேவை பொறுமை மட்டுமே.
      அவர் எங்கேயும் போய் விட மாட்டார்.

    • புதியவன் சொல்கிறார்:

      @ மெய்ப்பொருள் – எப்படி இப்படி யோசிக்காம எழுதறீங்க? நாட்டுல என்ன நடக்குது, நாம மற்ற நாடுகளை ஒப்பிடும்போது எந்த இடத்துல இருக்கோம், இதுக்கு யார் காரணம், இடையில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமானதற்கு யார் காரணம் என்றெல்லாம் எத்தனை செய்திகள் வருகின்றன.

      யோசிக்காமல் செய்த வேலை என்று எழுதுவதற்குப் பதில், இன்ன செய்திருக்கலாம் என்று எழுதியிருக்கலாம்.

      இது ஒரு நாடு, சில மனிதர்கள், மனித குலத்திற்கு, அதிலும் குறிப்பாக இந்தியர்களுக்கு எதிராகச் செய்த செயல். அதிலிருந்து நாடு எப்படி மீண்டு வரவேண்டும் என்று யோசித்தே அரசாங்கம் செயல்படுகிறது. யுத்தம் என்று வரும்போது நஷ்டம் என்று ஒன்று வரத்தான் செய்யும். நம் யாவருக்கும் நஷ்டம் உண்டு. அளவுதான் மாறுபடும்.

      //ஏழைகள் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள் ?// – இந்த ‘ஏழைகள்’ என்பவர்களை define செய்யுங்க. அவங்களுக்கு மட்டும் அரசு எப்படி உதவ முடியும் என்பதையும் நீங்க எழுதணும்னு கேட்டுக்கறேன். தமிழர்களிடம் கேட்டால், எல்லோரும் ஏழைகள் என்றுதான் சொல்வார்கள், ஸ்டாலின் உட்பட.

      இங்கு சிலர், எதையோ எழுதணும் என்பதற்காக, அரசாங்கம் செய்வது சரி என்று சொன்னால், உடனே ‘உங்களுக்கெல்லாம் அரசாங்கம் வேலை செய்யாமலேயே மாதச் சம்பளம் வழங்குகிறது’ என்று லாவணி பாடுகிறார்கள். தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி வைத்திருப்பவங்களுக்கு எதுக்கு 1000 ரூ 2000 ரூ அரசு தரணும், வியாதியால் இறந்தவர்களுக்கு ஒரு கோடி தரணும் என்று உளருபவர்கள் நமக்கு அரசியல்வியாதியாக இருக்கிறார்களே என்ற கேள்விகளெல்லாம் அவர்களுக்கு உதிப்பதில்லை.

      எத்தனை மனிதர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. அவர்களைப் பற்றி நாடு இத்தனை வருடங்கள் கவலைப்பட்டிருக்கிறதா? ஏன் அரசு வேலைக்கு மட்டும் ஓய்வூதியம், மற்றவர்கள் மனிதர்கள் இல்லையா என்பதையும் நாம் கேட்டிருக்கணும், இனியாவது கேட்போம்.

  7. Subramanian சொல்கிறார்:

    புதியவன் //இதுவரை அரசு நடந்துகொண்டது,
    எனக்குச் சரி என்றே மனதில் படுகிறது.//

    லாக் டவுன் பீரியடில், வேலையே செய்யாமல்
    மாத சம்பளம் மட்டும் தவறாமல் வாங்கிக்
    கொண்டு, அடுக்குமாடி வீட்டில் குடும்பத்துடன்
    டிவி பார்த்துக் கொண்டு ஆனந்தமாக காலம்
    கழித்துக் கொண்டிருப்பவர்கள் மோ ச டி
    சர்க்காரை இப்படி பாராட்டிக்கொண்டிருப்பதில்
    அதிசயம் ஏதுமில்லை. ராத்திரி சாப்பாட்டுக்கு,
    அடுத்த வேளை மளிகைக்கு என்ன செய்வது
    யாரைக் கேட்பது என்று பதறிக்கொண்டிருக்கும்
    ஏழை தினக்கூலி குடும்பத்தானுக்கு ஏற்படும்
    பதட்டங்களைப்பற்றி இவர்களுக்கென்ன கவலை?
    ஆனாலும், வயிறு காலியாக, குடும்பத்தை
    பதட்டத்துடன், வேதனையுடன் பார்க்க வேண்டிய
    அவலத்தில் இருப்பவர்களின் சாபம்
    உதவிசெய்யாத அரசையும், அதனை
    முட்டுக்கொடுத்து ஆதரிப்பவர்களையும் சேர்த்து
    நிச்சயம் ஒரு நாள் பாதிக்கும்.

  8. Ramnath சொல்கிறார்:

    மெய்ப்பொருள் சார் கூறும்
    உஜ்ஜவலா என்ற மத்திய அரசின் திட்டம் பற்றி
    CAG ரிப்போர்ட் summary;

    அடிப்பொடிகளின் பார்வைக்கு:

    https://cag.gov.in/content/report-no14-2019-performance-audit-pradhan-mantri-ujjwala-yojana-ministry-petroleum-and

    the Report highlights various deficiencies like the issuance of LPG connections by the LPG distributors to unintended beneficiaries, deficiencies in the LPG software of the OMCs in identification of intended beneficiaries and deficiencies in de-duplication process. The Report also covers the departure from safety norms by the LPG distributors and unsafe LPG practices adopted by PMUY beneficiaries. Inadequate efforts by OMCs were observed in commissioning the targeted number of LPG distributorships compelling the LPG distributors to supply cylinders for long distances, delivery of cylinders at godown or designated points instead of door-step delivery and considerable delays in supply of cylinders. Inadequacy was also noticed in providing 5 kg cylinders to PMUY consumers facing affordability issue.

    Encouraging the sustained usage of LPG remains a big challenge as the annual average refill consumption of PMUY consumers on 31 December 2018 was only 3.21. Low consumption of refills by 0.92 crore loanee consumers had hind
    ered recovery of outstanding loan of Rs1234.71 crore.

  9. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    ஒவ்வொருவருக்கும்
    ஒவ்வொரு கருத்து இருக்கலாம்….

    என் பார்வையில் –

    மாநில அரசு, தன்னால் இயன்றதனைத்தையும் செய்கிறது.
    ஓரளவு நன்றாகவே செய்கிறது.

    மத்திய அரசு – தனது அதிகாரத்தை மட்டுமே பிரயோகிக்கிறது.
    மாநிலங்களுக்கோ, பொதுமக்களுக்கோ – அது செய்யக்கூடிய
    உதவிகளை போதுமான அளவு செய்யவில்லை;

    மத்திய அரசின், தானியக் கிடங்குகளில்
    நாடு முழுவதுக்கும், ஒரு வருடத்திற்குத்
    தேவையான அளவிற்கு தானியங்கள்
    இருப்பதாகத் தெரிகிறது; தாராளமாக
    திறந்து விடலாம். குறைந்த பட்சம்
    2 மாத ரேஷன் பொருட்களை அனைத்து
    மக்களுக்கும் (வருமான வரி செலுத்தக்கூடிய
    நிலையில் இருப்பவர்களை தவிர்த்து விட்டு )
    இலவசமாக கொடுக்கலாம்.

    ஏழைகளின் கணக்கில் இரண்டு மாதங்களுக்கு
    மாதம் 5000 ரூபாய் போடலாம்.

    பண வசதி …? என்று கேட்பவர்களுக்கு –
    கச்சா எண்ணை உலக மார்க்கெட்டில்
    70 சதவீதம் குறைந்த பிறகும்,
    இந்தியாவில் அதே விலைக்கு விற்பதன் மூலம்,
    கடந்த 3 மாதங்களில் மத்திய அரசுக்கு குவிந்த பணம்
    மட்டுமே கூட இதற்கு போதுமானதாக இருக்கக்கூடும்.

    மற்றும் – மனம் இருந்தால் – மார்க்கமா இல்லை;
    நிறைய வழிகள் இருக்கின்றன.

    அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு –
    மனதில் கருணையும், பிறர் குறை உணர்ந்து,
    அதனைத் தீர்க்கும் மனோபாவமும்,
    இரக்க குணமும் வர பிரார்த்திப்போம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.