ஜப்பான் தரும் சிக்னல் ….


உலகத்தையே நாசமாக்கி தன்னை முன்நிலைப்படுத்திக்
கொள்ள முயலும் சீனாவின் கோர தந்திரம் –

நோயை இலவசமாக –
அனைத்து உலக நாடுகளுக்கும்
முதலில் சப்ளை செய்துவிட்டு –

அதை எதிர்கொள்ள தேவையான அத்தனை
உபகரணங்களையும், கருவிகளையும் லட்சக்கணக்கில்
தயாரித்து வைத்துக்கொண்டு,

உலகம் பூராவும் நோயை எதிர்கொள்ள முடியாமல்
மக்கள் கொத்து கொத்தாக செத்து விழும்போது,
அந்த உபகரணங்களை வைத்து
பணம் செய்யும் சீனத்தின் சதி….

நிச்சயமாக அனைத்து நாடுகளுக்கும்
புரியவே செய்கிறது.

ஆனால், கொரோனாவின் சாவு வேட்டையிலிருந்து
ஒவ்வொரு நாடும் முற்றிலுமாக விடுபடும் வரை –

அவற்றின் உடனைத் தேவைகளுக்கு, சீனாவின்
தயவே தேவைப்படுகிறது.. அவர்களுக்கு வேறு வழியில்லை.

கொரோனாவிற்கான மருத்துவ உபகரணங்கள்,
பாதுகாப்பு உடைகள், முகக்கவசங்கள், மருந்துகள் என்று
அனைத்தையும் மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யக்கூடிய
திறன் இன்று சீனாவில் மட்டுமே இருக்கிறது.

எனவே, இந்த மாபெரும் சிக்கலிலிருந்து, அழிவிலிருந்து –
மீளும் வரை – எந்த நாடும் (அமெரிக்கா உட்பட )
வெளிப்படையாக சீனாவை பழித்துப் பேசவோ, முறைத்துக்
கொள்ளவோ செய்யாது.

இருந்தாலும், எதிர்காலத்தை எண்ணி அனைத்து நாடுகளும்
அச்சத்தில் ஆழ்ந்திருக்கின்றன.

கொரோனா பிரச்னையால் உலகப்பொருளாதாரம் பெரும்
சிக்கலில் மாட்டி இருக்கிறது. நியூயார்க் மும்பை, டோக்கியோ
உள்பட பல்வேறு பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை
சந்தித்திருக்கின்றன. ஆஸ்திரேலியாவின் வீழ்ந்து விட்ட
சந்தையை சீனா வெளிப்படையாகவே ஆக்கிரமிக்கிறது.

சீனாவின் பல முன்னணி நிறுவனங்கள், உலகம் முழுவதும்
உள்ள மற்ற நாட்டு நிறுவனங்களின் பங்குகளை அதிகம்
வாங்கி குவிக்கின்றன. இதனால் அந்த நிறுவனங்கள் சீனாவின்
கட்டுப்பாட்டுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் – முதல் நாடாக ஜப்பான் தைரியமாக
ஓரளவு வெளியே வந்துள்ளது.

இனி எந்த விஷயத்திற்கும் சீனாவை நம்பி இருக்கக்கூடாது.
சீனாவிலிருந்து பொருளாதார விலகலைத் துவக்குவதே
இதற்கான முதல் கட்டமாக இருக்கும் என்று நினைக்கிறது
ஜப்பானிய அரசு.

சீனாவை விட்டு தங்கள் நாட்டின் பெரிய நிறுவனங்கள்
வெளியேறுவதற்கு ஜப்பான் அரசு வெளிப்படையாகவே
உதவி செய்ய முற்பட்டிருக்கிறது.

பெரிய நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுவதற்கு
நிவாரண நிதி தருவதற்காக, சுமார் 2.2 பில்லியன் டாலர்களை
ஜப்பான் அரசு ஒதுக்கி இருக்கிறது. இது ஜப்பானின் மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20 சதவிகிதம்.

சீனாவை விட்டு வெளியேறி தங்கள் பொருட்களை
தயாரிக்க நிறுவனங்களுக்கு 215 மில்லியன் டாலர்களையும்
உதவியாகத் தர ஜப்பான் அரசு தீர்மானித்திருக்கிறது…

இதிலிருந்து உலகுக்கு ஜப்பான் கொடுக்கும் சிக்னல் –
உலக முதலீட்டாளர்களே அனைவரும் சீனாவை விட்டு
வெளியேறுங்கள் – என்பதே.

கொரோனா அழிவுகள் முடிவிற்கு வந்ததும்,
நிச்சயமாக – இதர நாடுகளும்
இதே வழியில் செல்லும் என்று தோன்றுகிறது..

இந்தியா மிக அவசரமாக மூன்று விதங்களில்
செயல்பட வேண்டும்…

1) அப்படி சீனாவிலிருந்து வெளியேறும் பிற நாட்டு தொழில்
நிறுவனங்களை இந்தியாவிற்கு வரவழைக்க தீவிர
முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்…

2) நம்முடைய நாட்டின் எதிர்கால நலன் கருதி –
சீனாவிலிருந்து நமது இறக்குமதிகளை கொஞ்சம் கொஞ்சமாக

குறைத்துக்கொள்ள வேண்டும். தற்போது, உதிரிபாகங்களுக்கும்,
மூலப்பொருட்களுக்கும் சீனாவை நம்பியிருப்பதை
கைவிட்டு விட்டு, அவற்றை இந்தியாவிலேயே தயாரிக்க
தீவிர முயற்சிகளை துவங்க வேண்டும்.

ரெடிமேட் சாதனங்கள் – எலெக்ட்ரானிக்,
ஸ்போர்ட்ஸ், கிச்சன், சாமான்களை சகட்டுமேனிக்கு
ஆயிரக்கணக்கில் கண்டெயினர்களில் இறக்குமதி செய்து,
இந்திய சந்தைகளில் விற்கப்படும், மலிவு விலை சாமான்களை
தடை செய்யும் வழிவகைகளை கண்டறிய வேண்டும்…

இவற்றைத் தயாரிக்க தேவையான தொழில் நுட்பம்
அனைத்தும் நிச்சயம் இந்தியாவிலேயே இருக்கிறது.
இத்தகைய பொருட்களை இந்தியாவில் நாமே நிச்சயம்
தயாரிக்க முடியும்…

என்ன -துவக்கத்தில் தயாரிப்பு செலவு கொஞ்சம்
கூடுதலாக இருக்கும்… எனவே விலை அதிகமாக இருக்கும்.

இருந்தாலும், விற்பனை கூடும்போது,
இயல்பாகவே விலைகள் குறையும்.
லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு இதன் மூலம்
வேலை வாய்ப்பும் உருவாகும். அந்நிய நாட்டை
நம்பியிருக்கும் அவலமும் தீரும்.

எந்தெந்த துறைகளில் உடனடியாக இது சாத்தியப்படும்
என்பது குறித்து, இந்திய உற்பத்தி நிறுவனங்களும்,
இந்திய வர்த்தக அமைப்புகளும் ஒன்று சேர்ந்து –
தீர ஆலோசித்து, ஒரு செயல்திட்டத்துடன் மத்திய அரசை
அணுகி, உடனடியாக செயலில் இறங்க வேண்டும்.

உடனே விழித்துக் கொண்டால் – பிழைத்துக் கொள்வோம்.

இல்லையேல், உலகப் பொருளாதாரமே
சீனாவின் பிடியில் சிக்கி விடும்.

மூன்றாவதாக ஒன்றிருக்கிறது.
அது நம் மக்கள் செய்ய வேண்டியது –
மிக மிக முக்கியமானது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட எந்த பொருளையும்,
அது எவ்வளவு மலிவாக இருந்தாலும் –
வாங்குவதில்லை என்று நம் மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

உலக வர்த்தக ஒப்பந்தம் ( World Trade Agreement )
நாடுகளைத்த்தான் கட்டுப்படுத்தும்… மக்களை அல்ல.

வாங்குவதில்லை என்று –
மக்கள் உறுதியாக தீர்மானித்து விட்டால், பிறகு
ஒப்பந்தத்தை வைத்துக்கொண்டு, நாக்கை
வழித்துக் கொள்ள வேண்டியது தான். அதற்கு,
வேறு எந்த பிரயோஜனமும் இல்லை.

.
—————————————————————————————————————–

.
—————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to ஜப்பான் தரும் சிக்னல் ….

 1. tamilmani சொல்கிறார்:

  உயிரை கொல்லும் வைரஸை உருவாக்கி விட்டு தன் நாட்டு மக்களை
  ஏராளமாக பலி வாங்கி உலகம் முழுதும் பரப்பி அந்த நோய்க்கு
  தானே சோதனை கிட் ,மாஸ்க் , body suit , ஆகியவற்றை உற்பத்தி செய்து
  வணிகம் செய்து வரும் சீனாவை உலக நாடுகள் அனைத்தும் புறக்கணிக்க
  வேண்டும். தனது பொருளாதாரத்தை வளப்படுத்த இந்த பயோலொஜிக்கல் வார்
  நடத்தும் கம்யூனிஸ்ட்கள் உலக அமைதிக்கு ஒரு எதிரி , இந்திய அரசு என்ன
  செய்தது என்று கேட்கும் கம்யூனிஸ்ட்கள் இந்த நோயை உற்பத்தி செய்த
  சீனா ஏன் இப்படி செய்கிறது என்றுகேட்பதற்கு திராணி இல்லை . உலக
  பொருளாதரத்தினை சீர்குலைத்த சீனாவை உலகநாடுகள் கண்டிக்கவேண்டும் .

 2. Gopi சொல்கிறார்:

  YES. கண்டிப்பதோடு நில்லாமல்,
  கடுமையாக தண்டிக்கவும் வேண்டும்.
  இழந்த இத்தனை ஆயிரம் உயிர்களுக்கு
  எப்பேற்பட்ட தண்டனையும் ஈடாகாது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.