ஒரு நல்ல கணிப்பு – நல்ல செய்தி….


விமரிசனம் தள வாசக நண்பர்கள் அனைவருக்கும்,
அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் –
உளமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை
நம்பிக்கை தரும் ஒரு நல்ல செய்தியுடன் சேர்த்து
தெரிவித்துக் கொள்கிறேன்…. 🙂 🙂

திரு.வி.கே.டி.பாலன் அவர்களை
நான் நன்கறிவேன்…
அவரது கணிப்பை நான் முற்றிலுமாக ஏற்கிறேன்…
நம்பிக்கையுடன் வழிமொழிகிறேன்.

——————————————————————————
வெளிநாட்டவர் இந்தியாவில் குவியப் போகிறார்கள்..

மதுரா டிராவல்ஸ் வி.கே.டி.பாலன் கணிப்பு :

கொரோனா பதற்றம் தணிந்தபின்னர் வெளிநாட்டினரின்
சுற்றுலா தேர்வாக இந்தியா முதலிடத்தில் இருக்கும் என
மதுரா டிராவல்ஸ் அதிபரும், தமிழக சுற்றுலா பயணம்
மற்றும் விருந்தோம்பல் சங்கத் தலைவருமான
வி.கே.டி. பாலன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலான நாடுகள்
லாக்டவுனில் உள்ளதால் சுற்றுலாத்துறை சந்திக்கும்
பொருளாதார நெருக்கடிகள் பற்றி அவரிடம் பேசியபோது
அவர் தெரிவித்த கருத்துகள் :

கேள்வி: கொரோனாவால் சுற்றுலாத்துறை அடைந்துள்ள
வீழ்ச்சியை எப்படி கருதுகிறிர்கள்..?

பதில்: சுற்றுலாத்துறைக்கு வீழ்ச்சி என்பதே கிடையாது,
இது ஒரு தற்காலிக இடைவெளி
தானே தவிர மற்றபடி ஒன்றுமில்லை. பறவைகளை கூண்டில்
இருந்து திறந்துவிடுவதை போல் லாக்டவுன் முடிந்த பிறகு
மனிதர்கள் நினைத்த இடங்களுக்கு பறக்கத்தான் போகிறார்கள்.

மனிதனின் உளவியல் படி ஒரே இடத்தில் யாராலும் இருக்க
முடியாது. இப்போது கூட எங்கள் நிறுவன ஊழியர்களை
தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்கள் லாக்டவுன் முடிந்த
பிறகு மைசூரு செல்ல வேண்டும், திருக்கடையூர் செல்ல
வேண்டும் என ஏற்பாடு செய்யக்கூறுகிறார்கள்.
விமானசேவைகள் இல்லாததால் வெளிநாட்டு பயண
முன்பதிவு சேவைகள் மட்டும் தற்போதைக்கு இல்லை.

கேள்வி: லாக்டவுனுக்கு பிறகு சுற்றுலாத்துறையின் பாதை
எதை நோக்கி இருக்கும்?

பதில்: லாக்டவுன் முடிந்த பிறகு, இன்னும் சொல்லப்போனால்
கொரோனா பதற்றம் எல்லாம் தணிந்த பின்னர்
பெரும்பான்மையான வெளிநாட்டினர் இந்தியாவுக்கு
படையெடுப்பார்கள். இது எனது அனுபவத்தின் அடிப்படையில்
கூறுகிறேன். ஏனென்றால் ஐரோப்பிய நாடுகளுக்கோ,
அமெரிக்காவுக்கு செல்ல அடுத்த 6 மாத காலத்திற்கு யாரும்
முன்வரமாட்டார்கள். ஆனால் அதே வேளையில் கொரோனா
விவகாரத்தில் அதிக பாதிப்பு ஏற்படாத இந்தியாவை இப்போதே
பல நாட்டினரும் டிக் அடித்து வைத்துள்ளார்கள்.

மற்ற நாடுகளுக்கு எப்படியோ தெரியவில்லை இந்தியாவில்
சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும், 3 மாதத்தில் நிலைமை
மாறும்.

கேள்வி: இந்தியாவில் இருந்து வெளிநாட்டு பயணங்கள்
செல்வோர் எண்ணிக்கை எப்படி இருக்கும்..?

பதில்: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோர்
எண்ணிக்கை அடுத்த 6 மாதங்களுக்கு கணிசமாக குறையும்.
காரணம் இன்று இந்தியர்கள் அதிகம் செல்லக்கூடிய பிரான்ஸ்,
இத்தாலி, ஸ்பெயின், ஐரோப்பிய நாடுகள் எல்லாம்
கொரோனாவால் அதிக பாதிப்புகளையும், சேதத்தையும்
சந்தித்துள்ளன. இதனால் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு
செல்வோர் எண்ணிக்கை குறையும், ஆனால் அங்கிருந்து
இந்தியாவுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

.
——————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.