…
…
இந்தத் தொடரின் அடுத்தடுத்த பகுதிகளில், பொருத்தமான
ஒரு இடத்தில் – டைரக்டர் கே.சுப்ரமணியம் அவர்களைப்பற்றியும்,
அவர் தயாரித்த கல்கி’யின் “தியாகபூமி” பற்றியும் விரிவாக
எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன்.
————————————————————–
இதற்கு முந்தைய ( பகுதி -10 ) .. நினைக்கத் தெரிந்த மனமே…பார்க்க ..
————————————————————–
அதற்கிடையில், ஏப்ரல் 7-ந்தேதி டைரக்டர் கே.சுப்ரமணியம்
அவர்களின் நினைவுநாள் என்பது திரு.எஸ்.பசுபதி அவர்களின்
பதிவின் மூலம் தெரியவந்தது. (நன்றி – திரு.எஸ்.பசுபதி’யின்
பக்கங்கள்…).
தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத ஒரு அற்புதமான
மனிதர் திரு.கே.சுப்ரமணியம் அவர்கள். இவரைப்பற்றி நிறைய
எழுத வேண்டும். எனவே அடுத்த பகுதியிலும் இவர் தொடர்ந்து
வரக்கூடும்.
கே.சுப்ரமணியத்தின் பின்னணி பற்றி சுருக்கமாக –
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில், பிரபல வழக்குரைஞர்
கிருஷ்ணசுவாமி ஐயருக்கு மகனாக 20.4.1904-இல் பிறந்தார்.
சட்டம் படித்த இவர், கும்பகோணத்தில் வழக்குரைஞராகச்
சிலகாலம் பணியாற்றினார். பின்னர், திரைப்படத் துறையின்
மீதுள்ள ஈடுபாட்டால் சென்னைக்கு வந்தார்.
1930-களில் பிரபலமாக இருந்த இயக்குநர் ராஜா சாண்டோவிடம்
உதவி இயக்குநராகச் சேர்ந்து கதை, லேப் எடிட்டிங், தயாரிப்பு
நிர்வாகம், வெளியீடு என்று அடிப்படைப் பயிற்சிகளைப்
பெற்றார். பின்னர், தனியாக பல படங்களை இயக்கினார்.
சிலவற்றை சொந்தமாக தயாரிக்கவும் செய்தார்.
1939-ஆம் ஆண்டுவாக்கில், ஆனந்த விகடன் வார இதழில்
ஆசிரியர் “கல்கி” ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்
சுதந்திரப்போராட்ட கால பின்னணியை கதைக்களனாகக்
கொண்டு “தியாக பூமி” என்கிற பெயரில் ஒரு தொடர்கதையை
எழுதத் துவங்கினார்.
கே.சுப்ரமணியம் அவர்கள் அதை திரை வடிவில் கொண்டு வர
விரும்பினார். கல்கியும், கே.சுப்ரமணியமும் நெருங்கிய
நண்பர்களாக இருந்ததால், கலந்து பேசி ஒரு புதுமையை
அறிமுகப்படுத்தினர். தியாக பூமி தொடர்கதையாக வெளிவந்து
கொண்டிருந்த சமகாலத்திலேயே, திரைப்படமாகவும்
உருவாகத் தொடங்கியது. தொடர்கதைக்கான சித்திரங்களாக
தியாகபூமி திரைப்படத்தின் காட்சிகளே வெளியாகத் துவங்கின.
இந்த யுத்தி பெரும் பரபரப்பினை உண்டாக்கியது.
ஒரே சமயத்தில், தொடர்கதை, திரைப்படம் இரண்டும்
பரபரப்பாக பேசப்படத் துவங்கின.
…
…
பிற்காலத்தில், டைரக்டர் கே.சுப்ரமணியம் அவர்களின்
நூற்றாண்டு விழா -2004-ல் கொண்டாடப்பட்ட சமயத்தில்
“கல்கி” வார இதழில் வெளிவந்த கட்டுரையை இங்கே
வெளியிடுவது, சிறப்பாகவும்-பொருத்தமாகவும் இருக்குமென்று
நினைக்கிறேன்.
….
…
…
….
இடுகை தொடர்கிறது….
.
———————————————————————————————————————————————
Pingback: தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி….!!! ( பகுதி -12 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… | வி ம ரி ச ன ம் – கா
Pingback: தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி….!!! ( பகுதி -12 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… | வி ம ரி ச ன ம் – கா
Pingback: தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி….!!! ( பகுதி -12 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… | வி ம ரி ச ன ம் – கா