நண்பன் …யார் … ?


சுவாரஸ்யமான பழைய தகவலைத்தரும்
செய்தி ஒன்றைப் படித்தேன்….

எடுத்துக்கொண்ட விரதத்திற்கு ( 🙂 🙂 ) பங்கமின்றி
அதில், சில பகுதிகளை மட்டும் கீழே தருகிறேன்.

————–
நேரு.. “புரட்சித் தலைவருடன்” சந்திப்பு.. 60ல் ஒரு அதிரடி…

பழைய சம்பவம் ஒன்று பலரால் நினைவுகூர்ந்து வரப்பட்டு
வருகிறது.. பிளாஷ்பேக்தான்.. ஆனால் இந்த சமயத்தில்
அதி முக்கியமானது.. இளைய தலைமுறையினர்
தெரிந்து கொள்ள வேண்டியது!

வல்லரசு அமெரிக்காவை அன்று முதல் இப்போதுவரை
எதிர்த்து நிற்கும் குட்டி தீவு கியூபா..
சின்ன நாடுதானே என்று அமெரிக்கா பார்ப்பதே இல்லை..
நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதை கொட்டி கொண்டே
இருக்க.. அதை கியூப மக்களும் துளியும் பயமில்லாமல்
எதிர்கொண்டு வருகின்றனர்.. இதற்கெல்லாம் காரணம்
அவர்களின் எவர் கிரீன் ஹீரோ ஃபிடல் காஸ்ட்ரோ!!

காஸ்ட்ரோ 1960-ம் ஆண்டு… நியூயார்க் நகரில் ஐநா சபை
கூட்டம் நடக்கிறது.. அதில் கலந்து கொள்ள உலக தலைவர்கள்

ஒவ்வொருவராக வர தொடங்கினர்.. அங்கு கியூபா நாட்டின்
தலைவரான ஃபிடல் காஸ்ட்ரோவும் நியூயார்க் வந்து சேர்கிறார்…
உலகின் எதிரி அமெரிக்கா என்று அறைகூவல்
விடுத்த நிலையில்தான், காஸ்ட்ரோ அங்கே வந்திருந்தார்..
செம கடுப்பில் இருந்தது அமெரிக்கா.. இதை ஒரு பொருட்டாக
கூட காஸ்ட்ரோ மதிக்கவில்லை!!

நியூயார்க் மிட்டவுன்- பகுதியில் ஷெல்பர்ன் என்ற 5 ஸ்டார்
ஓட்டலில் தங்கினார்.. ஆனாலும் ஹோட்டலில் பல
தொல்லைகள் காஸ்ட்ரோவுக்கு தரப்பட்டன.. ஓவர் குடைச்சலால்
அந்த ஹோட்டலை காலி செய்ய முடிவு செய்தார்…
ஆனால் வேறு ஹோட்டலுக்கு போகலாம் என்றால் யாரும்
காஸ்ட்ரோவுக்கு ரூம் தரவில்லை..

இடமில்லை என்று சாக்கு சொல்லி மறுக்கிறார்கள். உடனே
ஐநா அதிகாரிகளை சந்தித்தார் காஸ்ட்ரோ.. “எனக்கு இங்கே
இடம் தர மறுக்கிறார்கள்.. அதனால் ஐநா அலுவலக
வளாகத்தில் கொட்டகை போட்டு தங்க போகிறேன்” என்றார்.

இதை கேட்டு ஆடிப்போயிவிட்டனர் அதிகாரிகள்… பிறகு
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஒரு சிலர்
உதவியால் தெரசா என்ற பழைய ஹோட்டல் ஒன்றில் தங்க
வைக்கப்பட்டார். கறுப்பின மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி
அது!

தெரசா ஓட்டல் ஓனருக்கு காஸ்ட்ரோ மீது ஒரு தனி மரியாதை..
அவரது பாசத்துக்கு கட்டுப்பட்டு அந்த ஹோட்டலில் தங்க
சம்மதிக்கிறார் காஸ்ட்ரோ..

அப்போது உலக தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் மதிய
விருந்து வைத்தார்.. ஆனால் காஸ்ட்ரோவை சாப்பிட
கூப்பிடவில்லை.. ஆனால் தெரசா ஹோட்டலோ வெறிச்சோடி
இருந்தது.. தன்னை விருந்துக்கு அழைக்காதவர்களுக்கு பதிலடி
தர எண்ணினார் காஸ்ட்ரோ..

தெரசா ஹோட்டல் ஊழியர்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்தார்.
காஸ்ட்ரோ இப்படி ஒரு விருந்து நடத்தி கொண்டிருப்பதை
உலக தலைவர்களுக்கு தெரியாமல் இல்லை.. தெரிந்தும்கூட
அந்த விருந்து நடக்கும் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை..
காரணம் தேவையில்லாமல் அமெரிக்காவை பகைத்து கொள்ள
வேண்டியிருக்கும் என்ற பயம்தான்!

அப்போதுதான் திடீரென காஸ்ட்ரோ தங்கியிருக்கும்
ஹோட்டலுக்குள் பிரதமர் நேரு நுழைந்தார்.. “காஸ்ட்ரோவை
சந்திப்பதால் என்ன நடந்துவிடும்? நான் அமெரிக்காவை
சாராதவன்… ரஷ்யாவையும் சாராதவன்.. எனக்கென்ன பயம்
என்று சொல்லிதான் அங்கிருந்து காஸ்ட்ரோவை பார்க்க
கிளம்பி வந்தார் நேரு.

இப்படி திடுதிப்பென்று ரூமுக்குள் நேரு நுழைவார் என்று
காஸ்ட்ரோ எதிர்பார்க்கவே இல்லை.. ஒரு பெரிய ஜனநாயக
நாட்டை ஆளக்கூடியவர், தன்னை போய் சந்திக்க வந்திருக்கிறாரே
என்று காஸ்ட்ரோ பதறினார்..

அந்த பதட்டத்தை நேரு புரிந்து கொண்டு அவரை அரவணைத்து
பேச ஆரம்பித்தார்.. நேரு – காஸ்ட்ரோவின் நெருக்கம் அந்த
நொடியில் இருந்தே நிகழ்ந்தது என்று சொல்லலாம். காரணம்,
இந்த சம்பவத்தை காஸ்ட்ரோ மறக்காமல் அடிக்கடி பின்னாளில்
சொல்லி கொண்டே இருந்தார்.

“எனக்கு அப்போ 34 வயசுதான்.. என்னை அவ்வளவா
யாருக்கும் தெரியாது.. திடீரென பிரகாசமான, ஆஜானுபாகுவான
உயரமுடைய நேரு உள்ளே வந்துவிட்டார்.. அவரை பார்த்ததும்
நான் பதறிவிட்டேன்.. தவைவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து
கொண்டால் கடைபிடிக்கப்படும் சர்வதேச சம்பிரதாயங்கள்
என்னவென்று கூட எனக்கு தெரியாது.

என்னை பற்றி என் நாட்டு மக்களுக்குத்தான் தெரியுமே தவிர
பிற நாட்டினருக்கு அவ்வளவு அறிமுகம் அப்போது கிடையாது.

அமெரிக்காவின் எதிர்ப்பு வேறு.. அப்படி இருக்கும் போது
என்னை யாரும் சந்திக்க முன்வராத சூழ்நிலையில் நேரு போன்ற
மாபெரும் தலைவர் வந்து சந்தித்தது எனக்கு ஒரு வித
பதற்றத்தை தந்துவிட்டது..

ஆனால் என்னை பற்றி உணர்ந்து கொண்டவர் நேரு…
நான் அடைந்த இலக்கை பற்றி உயர்வாக சொல்லி என்னை

உற்சாகமூட்டினார்.. பெருமைப்படுத்தி பேசினார்..
அதுக்கப்புறம்தான் எனக்கு பதற்றம் கொஞ்சம் தணிந்தது..
சர்வதேச அளவில் என்னை கௌரவபடுத்திய தலைவர் நேரு!
என்னை பற்றி வெகுவாக பாராட்டி பேசியதை மறக்கவே
முடியாது” என்கிறார்.

கியூபா மீது இந்தியாவுக்கு ஒரு பிடித்தம் இப்போதும் இருக்க
இதுதான் காரணமாக இருக்கக்கூடும்.. அமெரிக்காவின்
நேர் எதிரி நாடு என்று தெரிந்தும் பல இந்தியத் தலைவர்கள்
கியூபாவுடன் உறவு வைத்திருந்ததும் வரலாற்று உண்மை!
அதனால்தான் எத்தனையோ பொருளாதார தடைகளை
அமெரிக்கா கியூபா மீது திணித்தாலும் இந்தியா ஓடோடி
சென்று தன் உதவிக்கரத்தை மறக்காமல் நீட்டும்!

இந்த நன்றியை கியூபா இப்போதுவரை மறக்கவில்லை!
செல்வசெழிப்பில் புரண்ட நேருதான், அதிக காலங்கள்
ஜெயிலில் இருந்த தலைவரும்கூட.. விடாத போராட்ட
குணம், தியாகம், மதச்சார்பில்லாமல் வாழ்ந்த நேருவால்தான்
அன்றைய அமெரிக்காவின் அடக்குமுறைக்கு அடிபணியாமல்
இருக்க முடிந்தது… வல்லரசுக்கு தண்ணி காட்டவும் முடிந்தது!!

( நன்றி – https://tamil.oneindia.com/news/ )

.
———————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to நண்பன் …யார் … ?

  1. Gopi சொல்கிறார்:

    ” எடுத்துக்கொண்ட விரதத்திற்கு ( 🙂 🙂 ) பங்கமின்றி ”

    இதே போல் “பங்கமின்றியே” நிறைய எழுதுங்கள் சார். 🙂

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.