…
…
…
யாரும் சீரியசாகி விடாதீர்கள்.
மணிரத்னம் என் favourite director.
எனக்கு மிகவும் பிடித்தவர்.
திரையுலகில் அவரைப்பற்றி எந்த கிசு கிசுவுக்கும்
இடம் கொடுக்காமல், மிகவும் டிசிப்ளினோடு
வாழும் ஒரு கண்ணியமான மனிதர்.
இது சும்மா நகைச்சுவையாக
கொடுக்கப்பட்ட தலைப்பு ….!!!
டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு
நடிகை அதிதி பூங்கொத்து அளித்து
அன்பை வேண்டுவது போலவும்,
அவர் சிரித்துக்கொண்டே,
அதிதியின் கன்னத்தைக் கிள்ளுவது போலவும்
ஒரு புகைப்படம்.
மணிரத்னம் அவர்களின் காற்று வெளியிடை
படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரிகிறது.
இதை எடுத்தது யார் …? – தெரியவில்லை…!!
டைரக்டர் ராம்கோபால் வர்மா தற்போது போட்டுள்ள
ஒரு ட்விட்டரின் மூலம் இந்த புகைப்படம்
பெரும் பரபரப்பைக் கிளப்பி விட்டது.
………….
…………..
மணிரத்னம் போலவே அதிதியும் எப்போதும் சீரியசான
தோற்றத்துடனேயே இருப்பார்.
உண்மையில் அதிதி எவ்வளவு குறும்புக்காரர் என்பது
இந்த புகைப்படத்தைப் பார்த்த பின் தான் தெரிகிறது…
இரண்டு சீரியசான நபர்களை
இந்தக் கோலத்தில் பார்ப்பது –
சிரிப்பை வரவழைக்கிறது.
யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ள முடியாத,
அவுட்டுச் சிரிப்பைக் கிளப்பும் –
ஒரு சுவாரஸ்யமான புகைப்படம்…!!!
—————
பின் குறிப்பு –
என்ன கே.எம்.சார்…என்ன ஆச்சு உங்களுக்கு
என்று சிலருக்கு கேட்கத்தோன்றும்…!!!
வேறு வழியில்லை; கொரோனா காலத்தில்,
என்னால் முடிந்த வரையில் entertaining ஆக
எதாவது செய்து கொண்டிருக்க வேண்டும்
என்று நினைக்கிறேன்…
மற்றவர்களுக்கு மகிழ்ச்சியான பொழுதுபோக்கைத்
தருவது மட்டுமே இப்போதைய நோக்கம்.
.
————————————————————————————————————————————————–
ஒரு தவறும் தெரியவில்லை.
நீங்கள் என்றைக்கும் ஆபாசத்தை தொடமாட்டீர்கள்
என்பது எமக்குத் தெரியும்.
சுவாரஸ்யமாக தேடித்தேடி தருகிறீர்கள்.
தொடருங்கள்: நன்றி.
உங்கள் தலைப்பில் கொப்புளிக்கும் குறும்பு
அதிதி ராவ் குறும்பை விஞ்சி விட்டது
போலிருக்கிறதே கே.எம்.சார் 🙂