…
…
…
…
விமரிசனம் வலைத்தளத்தில் – கொரோனா வைரஸ்
மூலம், உலகம் பூராவும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த
சீனா செயல்படுத்திவரும் மிகப்பெரிய சதித்திட்டத்தை
பற்றி கடந்த சில நாட்களாக எழுதி இருந்தோம்.
இப்போது தினமலர் நாளிதழ் வெளியிட்டிருக்கும்
காணொளி ஒன்று அதை ஆதாரங்களுடன் உறுதிப்படுத்துகிறது.
வீடியோ கீழே –
…
….
.
————————————————————————————————————————————————
அனைவருக்கும் சேர்த்தே –
இப்போது தான் ஒரு செய்தி படித்தேன்…
இதைப்படிக்க – மனதுக்கு மிகவும்
நிறைவாக இருக்கிறது.
————————————————–
அம்மா உணவகம் வந்த தொடக்க காலத்தில்
மிகவும் சிறப்பாக இயங்கி வந்தது. ஆனால்
இடையில் கொஞ்சம் இதில் சுணக்கம் ஏற்பட்டது.
தற்போது ஊரடங்கு இருக்கும் நிலையில் மிகவும்
தரமாக அம்மா உணவகம் இயங்கி வருகிறது.
மிகவும் தூய்மையான முறையில், அதே சமயம்
நல்ல சுவையுடன் உணவுகள் தயாரிக்கப்பட்டு
மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பாதுகாப்பாக உள்ளது இதெல்லாம் போக
கொரோனா பரவி வருவதால் தற்போது அனைத்து
ஊழியர்களும் முக கவசம் அணிந்துள்ளனர்.
பரிமாறுபவர்கள் கையுறை அணிந்துள்ளனர்.
அதேபோல் அங்கு உணவு சமைக்கும் இடம் மிக
சிறப்பாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது. எல்லோரும்
இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வைக்கப்பட்டு
உணவு வழங்கப்படுகிறது. சென்னையில் இருக்கும்
அனைத்து அம்மா உணவகங்களும் தற்போது
இயங்கி வருகிறது.
எத்தனை இட்லிக்கள் தமிழக அரசு வெளியிட்ட
கணக்குப்படி கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து
நேற்று வரை தமிழகத்தில் அம்மா உணவகங்கள்
407 சென்னையில் மட்டும் இயங்கி உள்ளது.
மொத்தம் 26.23 லட்சம் இட்லிக்கள் மக்களுக்காக
தயார் செய்யப்பட்டுள்ளது. 8 லட்சம் வெரைட்டி ரைஸ்
உணவுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது போக
15 லட்சம் பேருக்கு சப்பாத்தி தயார் செய்யப்பட்டுள்ளது.
15 லட்சம் பேர் லாக் டவுனுக்கு பிறகு வந்து சாப்பிட்டு
இருக்கிறார்கள்.
உணவின்றி இந்திய தலைநகர் டெல்லியில் மக்கள்
சொந்த ஊர்களுக்கு அகதி போல செல்லும் போது..
சென்னை மட்டும் யாருக்கும் இல்லை என்று
சொல்லாமல் அனைவருக்கும் உணவளித்து வருகிறது.
( https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-tamilnadu-government-s-own-amma-mess-helps-people-pandemic-time/articlecontent-pf447687-381779.html )
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
தமிழக அரசு மிகவும் சிறப்பாக கொரோனா விஷயத்தில் செயல்பட்டுவருகிறது. அவங்களுக்கு பிரச்சனையான விஷயம் தில்லியிலிருந்து திரும்பியவர்கள் மட்டுமே. மற்றபடி எல்லா விஷயங்களிலும் பாராட்டும்படி செயல்படுவது, எடப்பாடி, ஜெ. வெற்றி பெற்றுக்கொடுத்த அதிமுக அரசை நன்றாகவே கொண்டுசெல்வதாக மனதுக்குப் படுகிறது.
அம்மா உணவகத்தில் வேலைபார்ப்பவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.